Results 1 to 5 of 5

Thread: உண்மையை உரைத்தால்..... - சின்னஞ் சிறுகதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    உண்மையை உரைத்தால்..... - சின்னஞ் சிறுகதை

    வர நாட்டுல பொண்ணுங்களுக்கு மதிப்பே இல்லாம போச்சு. பெத்த அம்மா அப்பா கூட எங்களை மதிக்க மாட்டேங்கிறாங்க, அப்பறம் எப்படிங்க நாட்டுல....??? பின்ன என்னங்க? எப்பப் பார்த்தாலும் என்னை திட்டிகிட்டே இருக்காங்க, தமிழ்ல இருக்கிற நல்ல கெட்டவார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வெச்சுக்குவாங்க போல இருக்கு. முண்டம், தடிமாடு, பைத்தியம் அப்படி இப்படின்னு சதா என்னை வார்த்தையாலெயே கொலை பண்றாங்க நீங்களே சொல்லுங்க, ஒரு பொண்ணு பாட்டு பாடினா தப்பா? அன்னிக்கி காலைல எழுந்ததும் ஒரு சினிமா பாட்டு பாடினேன். அது ரொம்ப தப்பா போச்சு.. எங்கம்மா கரண்டியை எடுத்துட்டு வந்து சாத்திராங்க. ஒரு வயசுக்கு வந்த பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி அநியாயம் பண்ற இவங்களுக்கு மகளா பொறந்ததைவிட பேசாம செத்துப் போயிருக்கலாம்.


    எனக்கு இருக்கிற ஒரே சப்போர்ட் பக்கத்துவிட்டு ராணிக்கா தான். எப்போ அம்மா அடிச்சாலும் எனக்கா வரிஞ்சுகிட்டு வருவாங்க. அந்த அக்கா மேல எனக்கு கொள்ளை பாசம். அன்னிக்கு அம்மா அடிச்சப்ப கூட அக்காதான் குறுக்கால வந்து " ஏம்மா ஒம் பொண்ணை டெய்லி அடிக்கிற? அவ குழந்தை மாதிரி" அப்படின்னு சொல்லிட்டு என்னைப் பார்த்து, " நீ வாடா கண்ணு " அப்படின்னு ரொம்ப செல்லமா கூப்பிட்டாங்க... எனக்கு அழுகை பொத்துகிட்டு வந்துச்சி. அம்மா அப்பா கொடுமையை எந்த கோர்டுல போய் சொல்றது?


    நீங்க இதுக்கே இப்படி ஷாக் ஆகுறீங்க... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நடந்த விசயத்தைக் கேள்விப் பட்டீங்கன்னா இன்னும் ஷாக் ஆகிடுவீங்க. அப்பாவோட ஆபீஸுக்குப் போயிருந்தேன். அங்க அப்பாகிட்ட வேலை செய்யற ஆள்தான் இருந்தான். என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகி ஸ்டன் ஆகி நின்னுட்டான். நான் நேரா மேசை மேல உட்கார்ந்து வரவங்க போறவங்க எல்லார்கிட்டயும் வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தேன். பாருங்க! எவ்வளவு நல்ல வேலை செய்றேன். கொஞ்ச நேரத்தில எங்கப்பா வந்து என்னைப் பின்னுபின்னுன்னு பின்னியெடுத்துட்டாரு. அக்கம்பக்கத்துக் கடையில இருக்கிற எல்லாரும் வந்து பார்த்தாங்க. எனக்கு ஒரே ஷேம் ஆயிடுச்சு. அழுதுகிட்டே ஓடினவளைப் புடிச்சு வண்டியில வெச்சு வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுட்டாரு. வந்ததும் அம்மாவோட ஒரே சண்டை. என்னை ஏன் வெளியே விட்டாங்கன்னுதான்... ஒரு பொட்டச்சி வீட்டை விட்டு வெளியே வந்தா அது தப்பா?


    இப்படித்தாங்க, எல்லாத்திலேயும் குத்தம் கண்டுபிடிச்சு என்னை மொத்து மொத்துனு மொத்திஎடுத்துகிட்டே இருக்காங்க. படிக்கறது வீணுன்னு சொல்லி அதில இருந்தும் நிப்பாட்டிட்டாங்க. ஏதோ ஒரு ஜெயில்ல மாட்டிட்டு இருக்கிற கைதி மாதிரி வீட்டுக்குள்ளயே என்னை வெச்சு பூட்டிட்டாங்க.


    இப்படிப்பட்ட அம்மாக்களும் அப்பாக்களும் இருக்கலாமா? சமூகத்தில இன்னிக்கு பெண்கள் போற வேகத்தைப் பார்த்தா ஒளியைக்கூட மிஞ்சிடுவாங்கன்னு சொல்றாங்க. ஆனா ஒரு பெண்ணையே பூட்டி வெச்சு கொடுமைபடுத்தறத எந்த நாதியும் எட்டிப் பார்க்கலை. இதுக்கு பக்கத்துவீட்டுக்காரனும் சப்போர்ட்டு. " ஒன் பொண்ணை வூட்டாண்ட வெச்சு பூட்டிவை. " அப்படீன்னு. ராணி அக்கா மட்டும் இல்லீனா என்னிக்கோ என்னைப் புதைச்சிருப்பாங்க...


    சே சே! இவங்களைப் பத்தி சொல்லி சொல்லியே எனக்கு அலுத்துப் போச்சு.. இப்பத்தான் கொஞ்சம் ரிலீப் ஆகி இங்க வந்து சேர்ந்தேன்... இங்க வந்ததுக்கப்பறம்தான் நிம்மதியே! அப்பா இல்லை அம்மா இல்லை. ஆனா நிறைய ப்ரண்ட்ஸ் உண்டு. ஜாலியா வெளையாடலாம்...


    சார்!! சார்!! ஏன் எந்திரிச்சுப் போறீங்க? முழுக்கதையும் கேளுங்க...


    வர வர நாட்டுல பொண்ணுங்களுக்கு மதிப்பே இல்லாம போச்சு......................
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சரி சரி சொல்லுங்க சொல்லுங்க
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    புலம்பல ஒரு வழியாய் முடிந்தது.. அப்பாடா..!
    அடுத்து எங்க இருக்கேமா??
    சீக்கிரம் சொல்லு.. என் அனுமானம் சரியான்னு பார்க்கனும்..!

    --------

    உண்மையை உரையுங்க சீக்கிரம்..!!
    பாராட்டுகள் ஆதவா.. எதார்த்தமாய் இருக்கு கதை.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நன்றி சரன் மற்றும் பூமகள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பொண்ணுங்களுக்கு மட்டுந்தானா???? இதுங்களுக்கு மட்டுந்தானா???

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •