Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: பல்லில் கறை நீக்க

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
  Join Date
  15 Jun 2006
  Location
  கோயமுத்தூர்
  Posts
  1,500
  Post Thanks / Like
  iCash Credits
  16,464
  Downloads
  114
  Uploads
  0

  பல்லில் கறை நீக்க

  என் இரண்டு வயது பெண்குழந்தைக்கு, பல்லில் கறை படிகிறது. அதுவும் கருப்பாக இருக்கிறது. தினமும் பல் துலக்கி விட்டாலும் கறை படிவது நிற்கவில்லை. இரண்டு டானிக் சாப்பிடுகிறாள். மட்டன், சிக்கன், மீன், நண்டு, காய்கறிகள், பால், பழம் அனைத்தும் சாப்பிடுவார்கள். எதையும் தள்ளுபடி செய்வது இல்லை. பல் கறை நீங்குவதற்க்கு என்ன செய்யனும் ? தெரிந்தவர்கள் உதவுங்கள்... டாக்டரிடம் செல்ல விருப்பம் இல்லை. நாட்டு வைத்தியமாக இருந்தால் பரவாயில்லை.
  :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

  => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

  http://thangavelmanickadevar.blogspot.com/

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  13,998
  Downloads
  37
  Uploads
  0
  எலுமிச்சை பழத்தோட சாறை எடுத்து அது கூட உப்பை மிக்ஸ் பல்லுல தேய்ச்சா மஞ்சள் கறை போகுமின்னு எங்கேயோ படிச்சேன்...
  ம்ம் இல்லாட்டி சித்தவைத்திய கடையில் ஒரு ஆயில் கிடைக்கும் அதை பல்பொடியோட மிக்ஸ் பண்ணி தேய்க்கணும்..
  அப்பிடி தேய்ச்சாலும் பல்லுள்ள கறை போகும்....

  தங்கவேல் அண்ணா
  சரியான பதிலுக்கு நம் மன்ற மக்கள் உதவுவார்கள்,,,,,
  Last edited by மலர்; 30-01-2008 at 05:01 AM.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  56,165
  Downloads
  72
  Uploads
  2
  பல்லோட இயல்பான நிறம் வெண்மை. அது வேறு நிறத்துக்கு மாறிச்சின்னா அதுக்கு உபயோகப்படுத்துற தண்ணீர், சரி வர பல் துலக்காமை, தேவையான உடல் சத்துப்பொருள் குறைவு, ஏதேனும் நோய்னு பல காரணங்கள் இருக்கும். இது ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய விஷயமென்பதால் உறுப்பினர்கள் சொல்லும் பதில் இதற்கு சரி வராது. அது மட்டுமல்லாமல் குழந்தை தொடர்புடைய பிரச்சினை (அதுவும் பெண் குழந்தை) என்பதால் செலவை பார்க்காமல் மருத்துவரை நாடுறது தான் நல்லது தங்கவேல்.!
  அன்புடன்,
  இதயம்

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,553
  Post Thanks / Like
  iCash Credits
  43,408
  Downloads
  290
  Uploads
  27
  இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  68,231
  Downloads
  18
  Uploads
  2
  Quote Originally Posted by sarcharan View Post
  இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...
  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

 6. #6
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,756
  Downloads
  39
  Uploads
  0
  சரவணனும் ஆரெனும் சொன்னதுதான் சரி.விழுந்து முளைக்கும் பல்லை சரியானபடி பராமரித்தால் கறை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  68,231
  Downloads
  18
  Uploads
  2
  வாயில் கை போட்டு சூப்பாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் பின்னாளில் வீண் செலவாகும் பல்லை வரிசைப்படுத்த.

 8. #8
  புதியவர் பண்பட்டவர் தமிழ்ச்சூரியன்'s Avatar
  Join Date
  17 Sep 2007
  Posts
  44
  Post Thanks / Like
  iCash Credits
  24,834
  Downloads
  5
  Uploads
  0
  Quote Originally Posted by sarcharan View Post
  இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...
  Quote Originally Posted by aren View Post
  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
  நண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல, அனைவருமே ஆமோதிப்பார்கள் என நினைக்கிறேன்.
  வணக்கங்களுடன்
  தமிழ்ச்சூரியன்

  "தமிழுக்கு நிகர் தமிழே"

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
  Join Date
  15 Jun 2006
  Location
  கோயமுத்தூர்
  Posts
  1,500
  Post Thanks / Like
  iCash Credits
  16,464
  Downloads
  114
  Uploads
  0
  மலர், ஆரென், தமிழ், சரன் , இதயம் அனைவருக்கும் நன்றி... உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்கின்றேன்.
  :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

  => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

  http://thangavelmanickadevar.blogspot.com/

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
  Join Date
  24 Jan 2008
  Location
  சிங்கப்பூர்
  Posts
  5,009
  Post Thanks / Like
  iCash Credits
  31,453
  Downloads
  25
  Uploads
  3
  பல் சொத்தை, பயோரியா (பற்புறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்.) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

  காலையிலும் இரவு படுக்கப் போகும் முன்பும் நவீன நார்த் துலக்கிகள் (BRUSH) கொண்டு பல் துலக்க வேண்டும்.
  பற்பசை - புளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது.

  குறிப்பாக குழந்தைகளுக்கு புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.
  பற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் - சாக்லெட் - ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்து விடும்.

  காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக் கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கும்.

  சாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்*ரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்தத் தண்*ரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும் (Swish and Swallow). துப்பக் கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.

  -அனு
  என்றும் அன்புடன்
  அச்சலா

  ..................................................................................
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  ..................................................................................

 11. #11
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  06 Jan 2008
  Location
  புதுக்கோட்டை
  Age
  63
  Posts
  540
  Post Thanks / Like
  iCash Credits
  18,212
  Downloads
  49
  Uploads
  0
  யாரும் என்னை அடிக்க வராதீங்க, கொஞ்சம் கடுமையான முறையாக இருக்கலாம். பழகினால் தெரியும் பலன் என்னவென்று.

  நான் வழக்கமாகச் செய்வது. வேப்ப இலையுடன் கொய்யா இலையை நன்றாகக் காயவைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அயாடைசடு உப்பு பொடி சேர்த்து இகரில் படாதவாறு மெதுவாகத் தேய்க்கவேண்டும், பின் உப்பு கரைந்து சொரசொரப்பு மாறியவுடன் பிரஷ் கொண்டு நன்றாகத் துலக்கி வாயிலுள்ள கரைசலைத் துப்பியோ அல்லது முழுங்கியோவிடாமல் சிறிது தண்ணீரை விட்டுக்கொண்டு நல்லமுறையில் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாகவும், கூச்சம் ஏற்படாமலும் எனாமல் கெடாமலும் இருக்கும்.

 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
  Join Date
  28 Sep 2007
  Location
  கோவை
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  6,083
  Downloads
  25
  Uploads
  0
  Quote Originally Posted by தங்கவேல் View Post
  என் இரண்டு வயது பெண்குழந்தைக்கு, பல்லில் கறை படிகிறது. அதுவும் கருப்பாக இருக்கிறது. தினமும் பல் துலக்கி விட்டாலும் கறை படிவது நிற்கவில்லை. இரண்டு டானிக் சாப்பிடுகிறாள். மட்டன், சிக்கன், மீன், நண்டு, காய்கறிகள், பால், பழம் அனைத்தும் சாப்பிடுவார்கள். எதையும் தள்ளுபடி செய்வது இல்லை. பல் கறை நீங்குவதற்க்கு என்ன செய்யனும் ? தெரிந்தவர்கள் உதவுங்கள்... டாக்டரிடம் செல்ல விருப்பம் இல்லை. நாட்டு வைத்தியமாக இருந்தால் பரவாயில்லை.
  உங்க மகள் சாப்பிடும் டானிக்கில் இரண்டில் ஒன்று iron டானிக் என்று நினைக்கிறேன். சாதாரணமாக குழந்தைகளுக்கு பசி எடுக்கத்தான் டானிக் வாங்கிக் கொடுப்போம். அந்த மாதிரி டானிக்குகளில் ஒன்று தான் iron இருக்கும் டானிக். இது அதிகப்படியாக கொடுப்பதும் நல்லதல்ல. இம்மாதிரி iron டானிக்கால் பல் கருப்பாகும் வாய்ப்புள்ளது.
  காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •