Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: காளான் குழம்பு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    காளான் குழம்பு

    காளான் குழம்பு



    தேவையான பொருட்கள் :

    காளான் 200 கிராம்

    மிளகு 25 கிராம்

    ஏலக்காய் 5

    பட்டை சிறிய துண்டு

    கிராம்பு 4

    பூண்டு 1

    தேங்காய் 1 (துருவியது)

    தக்காளி 4

    பெரிய வெங்காயம் 2

    கறிவேப்பிலை சிறிதளவு

    மல்லித்தூள் 1 தேக்கரண்டி

    மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி

    உப்பு தேவையான அளவு


    செய்முறை :

    மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

    காளானை கழுவி அதை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, காளான், முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் ஆகியவற்றையுப் போட்டு நன்றாக வதக்கவும்.

    பிறகு அத்துடன் வெங்காயம், தக்காளியையும் சேர்த்துக் கிளர வேண்டும். தேங்காய்ப் பாலையும் அத்துடன் விட்டுக் கலக்கவும். இறுதியில் மல்லித்தூள், மிளகாயத் தூள் அதில் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    என் வாழ்த்துக்கள்
    -அனு
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!!

    சும்மா, லுலுவாயிக்கு.......
    பகிர்வுக்கு நன்றி அனு...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    ஆஹா... என்னது களானா? எனக்குப் பிடிக்குமே...! சும்மா லுலுவாயிக்கு இல்லங்க உண்மையாக காளன் சுவைக்கு நான் அடிமை. அதிலும் செயற்கையாய் விளைவித்த காளான்களை விட, இயற்கையான காளான்களின் சுவை அதிகம். முதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார். அதை அப்படியே முழு வெங்கயாத்துடன் சேர்த்து வறுத்து சாப்பிடும் சுவை... அப்பப்பா...... செத்துப்போன என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர்களே அனு.... !
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!!
    ஓவியண்ணா...அக்கம் பக்கம் திரும்பாம மூக்கு முட்ட புடிச்சது மறந்துபோச்சா...
    அனு அக்கா படிக்கிறப்போ ஈஸியா தான் இருக்கு...
    செய்து பாத்தால் தான் தெரியும்....
    பகிர்வுக்கு நன்றி,,,,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அனுவுக்கு வாழ்த்துக்கள். சமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!!

    சும்மா, லுலுவாயிக்கு.......
    பகிர்வுக்கு நன்றி அனு...!!
    ஒரு தடவ செய்து பாருங்கள் ஓவியன்..
    நாந்தான் செய்முறையே கொடுத்திருக்கிறேனே..
    அப்பரம் தெரியும் அதன் சுவை..
    ம்ம் லொள்ளுக்கு கூட இருக்கு..
    என் நன்றி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by ஜெயாஸ்தா View Post
    முதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார்.
    ஓ அப்படியா பாட்டி இல்லையினா பரவாயில்லை.
    நீங்களே செய்துபாத்துவிட்டு பதில் சொல்லுங்க ஜெயஸ்தா...
    ம்ம் என் நன்றி உங்களுக்கு
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    சமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...
    நண்பரே தங்கவேல் அவர்களே !!
    முதலில் என்ன எதிர் தாக்குதல் புரியலையே என்ன..??
    அப்பரம் ஒருதடவை சுவைத்து பாருங்க...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சுவையான குழம்பு.. மல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்.. இதுபோன்ற சமயல்குறிப்புகளை தொடர்ந்து கொடுங்கள் அனு.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....

    Quote Originally Posted by மலர் View Post
    செய்து பாத்தால் தான் தெரியும்....
    அதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்.....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by செல்வா View Post
    ஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....



    அதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்.....
    ஆமாம் செல்வா..
    நீங்கள் சொல்வது சரியே..
    செல்வா நீங்கள் செய்து பாருங்களேன்..
    இதை யாரும் செய்யலாம்..
    மிக எளிது.
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by அமரன் View Post
    மல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்..
    ம்ம் நல்ல அனுபவம் போல..
    வெளிநாடுகளில் ஆண்களும் தனியேதான் சமைக்கிறார்கள்..
    அதற்கு சுவை அதிகம்தான்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •