Results 1 to 5 of 5

Thread: தரையில் பூத்த தாமரை!!!.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    தரையில் பூத்த தாமரை!!!.

    மனிதர்கள் அத்தனை பேரும் பூமியை மிதிக்க
    நீ மட்டும் தானடி மிதித்த இடத்துக்கு ஒத்தடம் கொடுக்கிறாய்!

    அட என்ன இது!
    செடியும் காணவில்லை! கொடியும் காணவில்லை!
    ஆனால் வழி நெடுக கொட்டிக்கிடக்கின்றன பூக்கள்!
    ஓ! என்னவளின் காலடி தடங்களா?

    பூக்களுக்கு தேனீக்கள் மேல் கோபமாம்!
    தேன் குடிக்க தங்கள் மேல் உட்காராமல்
    உன் காலடி தடங்கள் மீது உட்காருவதால்!

    பூங்கொடிகள் அசைவதற்கு காரணம் காற்று என்றிருந்தேன்!
    உன் முகம் பார்த்து வெட்கி தலை குனிந்து
    உன் காலடி தடங்கள் பார்த்து மீண்டும் வெட்கி தலை நிமிர்ந்து
    மேலும் கீழும் தலையை ஆட்டுகிறதோ?

    உனது காலடி தடங்கள்
    பூமியின் கிரீட முத்துக்களா?
    தரையில் பூத்த தாமரைகளா?
    புதைந்திருந்து மேல் வந்த புதையல்களா?
    பருவ தரையின் கன்னப் பருக்களா?
    வழி நெடுக வீசப்பட்ட அழகின் விதைகளா?

    ஒருவேளை உனது காலடிகள்
    நிலவில் நின்று பார்க்கும் போது
    ஔவை பாட்டி போல தெரியாமல்
    அழகிய சிற்பமாக தெரியுமோ?

    அங்கே பார் எறும்புகளை!
    நீ போட்ட கோல(மாவு)த்தை திண்காமல்
    நீ விட்ட காலடி தடங்களை திண்கின்றன!

    நீ நடந்தும் காலடி தடங்கள் பதியாததால்
    பாறைகள் வடிக்கும் கண்ணீர் தான் அருவிகளோ?

    உன் காலடி பட்டால்
    புல்வெளி - பூங்காவனம்!
    5 ரூபாய் - 500 ரூபாய்!

    கடலோர உன் காலடி சுவடுகள்!
    சின்ன சின்ன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

    ஓ! சொற்குற்றம் உள்ளதே இந்த கவிதையில்!
    நக்கீரன் படிப்பதற்குள் மாற்றி விடுகிறேன்!
    மனிதர்கள் நடந்தால் அது "காலடி"!
    நீ நடந்தால் அது "பூவடி"!
    நீ நடந்த பின்பு தரையெல்லாம் பூவடி!

    .
    Last edited by lenram80; 23-01-2008 at 12:31 AM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by lenram80 View Post
    ஓ! சொற்குற்றம் உள்ளதே இந்த கவிதையில்!
    நக்கீரன் படிப்பதற்குள் மாற்றி விடுகிறேன்!
    மனிதர்கள் நடந்தால் அது "காலடி"!
    நீ நடந்தால் அது "பூவடி"!
    நீ நடந்த பின்பு தரையெல்லாம் பூவடி!
    காதலியின் காலடிக்கு இத்தனை வரிகளா.....
    எத்தனையாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்....

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by lenram80 View Post

    நீ நடந்தும் காலடி தடங்கள் பதியாததால்
    பாறைகள் வடிக்கும் கண்ணீர் தான் அருவிகளோ?
    காதலியின்
    காதுல பூ... !!
    ஆனாலும்
    அசத்தும் பூ.. !!!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பூவடி என்று சொல்லி
    குறைக்கலாமோ காதலி கால்தடத்தை...
    காலடி சொற்குற்றமல்ல. நக்கீரன் குறைபிடிக்க...
    ஒரு தடம் பூ...
    தடங்கள் பல பூக்கள்...
    பூக்களின் தொகுப்பு சோலை...
    சோலையடி உன் காலடி என்றால்,
    காலடி சரிதானே...
    கா, சோலை என்பதால்...

    Quote Originally Posted by lenram80 View Post
    ஒருவேளை உனது காலடிகள்
    நிலவில் நின்று பார்க்கும் போது
    ஔவை பாட்டி போல தெரியாமல்
    அழகிய சிற்பமாக தெரியுமோ?
    Quote Originally Posted by lenram80 View Post
    கடலோர உன் காலடி சுவடுகள்!
    சின்ன சின்ன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!
    கற்பனையின் உச்சவரிகள் மிளிரும் சொற்பதங்கள்...
    மிகவும் ரசித்தேன் விவரிப்புக்களை...
    பாராட்டுக்கள்...

    Quote Originally Posted by lenram80 View Post
    உனது காலடி தடங்கள்
    பூமியின் கீரிட முத்துக்களா?
    கிரீட முத்துக்கள் என்று வர வேண்டுமோ???
    Last edited by அக்னி; 22-01-2008 at 11:40 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    காலடி தடத்தின் மீது நடந்து பார்த்து சின்ன ஆனந்தம் கொண்ட அறிஞர், சாம்பவி, அக்னி-க்கு நன்றி. அக்னியாரே, மேலே உள்ள கவிதையில் எங்கெங்கெல்லாம் "காலடி" என்று வருகிறதோ அங்கங்கெல்லாம் "பூவடி" என்று எழுத வேண்டும் என்று கூற வந்தேன். உஙகளின் கற்பனையும் அருமை. 'கிரீட' எழுத்து பிழை மாற்றி விட்டேன். நன்றி
    Last edited by lenram80; 23-01-2008 at 12:39 AM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •