Results 1 to 12 of 12

Thread: ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் வடிவங்கள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0

    ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் வடிவங்கள்

    ஆரம்ப காலம் முதல் உள்ள தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள்


    தமிழனின் அறிவு உலகத்தாரால் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒன்றாகும். உலகநாடுகளின் விஞ்ஞான வாளர்ச்சிக்கு முன்பே சங்க கால தமிழன் இது நிலவுலகம் என்றும் மண், ஆகாயம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பூதங்களால் உண்டானது என்றான். வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியதை புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிருந்து பாடி தமிழனின் வானிவியல் அறிவை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள். நீரின் தன்மையை அறிந்தார்கள். அதன் ஆழத்தை பொறுத்து நீரின் அழுத்தம் அதிகாமாகும் என்றும், நீரை சுருக்க முடியாது என்றும் ஒளவையார் கூறி பல நூற்றாண்டுகள் பின்பே விஞ்ஞானம் இவ்வுண்மையை கண்டு பிடித்தது.

    பழங்கால தமிழரின் அறிவியல் அறிவு அளவிட முடியாது. தமிழன் வேளண்முறையிலும் அறிவுள்ள சிந்தனையை கொண்டிருந்தான். நிலத்தை பல முறை ஆழ உழுவதால் சூரியனிடம் நில சத்தை பெரும், அதனால் உரமின்றி செழிப்படையு ம் என்ற அறிவியல் செய்தி திருக்குறளில் உள்ளது. நிலத்தை மழை நீர் அரிப்பின்றி தடுப்பதில் தனித்திறமை பெற்றவர்கள் தமிழர்களே. கட்டிட கலையிலும், நீர்யியலும் தமிழர் மட்டுமே அறிந்திருந்தனர். நீரைதரை உரிஞ்சாமலும் சமதரையில் அணை கட்டும் திறனும் தமிழர்களுக்கே உரித்தானது. அதற்கு சான்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணையே ஆகும். எகிப்து நாட்டில் நைல் நதியில்அணைகளை கட்டியதும் தமிழ்நாட்டு நீரியல் கட்டுமான வல்லுநர்களே ஆவர்கள். சிற்பக்கலையிலும் தமிழர்கள் சிறந்தவர்கள். தமிழன் போற்றி வளர்த்த கலைகளில் போரியலும் ஒன்று. படையமைப்பு, போர் உத்தி, போரிடும் முறை இதில் அடங்கியவை ஆகும். தமிழன் தன்வாழ்க்கையின் இருகண்களாக காதலையும், வீரத்தையும் கருதினான்.

    தமிழ் மொழி

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் பெற்றோம். இயல் இசை, நாடகம் என முப்பிரிவை கொண்டும் தமிழை வளர்த்தோம். இலக்கிறதமிழ், சங்க இலக்கிய போக்கிலிருந்து மாறி சமய மொழியானது. பக்தி இயக்க காலத்தில் சித்தாந்த மொழியாகவும், தத்துவ விளக்க மொழியாகவும் போற்றப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட தேவாரம், சைவ இலக்கியங்கள், வைணவ காசுரங்கள் இசைப் பாடல்களாக உருவாக்கப்பட்டன. இதனால் இயற்றமிழாக இருந்த தமிழை சமய தமிழாகவும், இசைத் தமிழாகவும் மாற்றின. சங்க காலத்திற்கு பின்னால் செய்யுள் படிப்பது போல் இருந்த உரைநடையை ஐரோப்பாவில் இருந்து சமய தொண்டாற்றி வந்த தமிழறிந்த வீரமாமுனிவர் என்ற பெஸ்கி பாதிரியார் உரை நடையில் முதன் முதலாக நூல் எழுதி இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு வழிகாட்டினார்.

    தமிழ் வளர்ச்சிகும், இலக்கிய செழுமைக்கும் வழி வகுத்தார். சித்தமருத்துவம் எனும் மருத்துவ முறை தமிழில்தான் தோன்றியது. 1830-ஆம் ஆண்டிற்கு பிறகு தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்களுக்கு பாடம் புகட்டு தமிழ் பயிற்சி மொழித்திட்டம் தொடக்கப்பட்டது. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாக்கப்பட்டது. 1930/ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடுநிலைப்பள்ளி வரை இருந்த தமிழ் பயிற்சி மொழி திட்டம் பள்ளி இறுதி வரை நீடிக்க வழி வகுக்கப்பட்டது. 1931-ல் தமிழ் மேகஸின் என்ற முதல் தமிழ் மாத இதழ் வெளிவர தொடங்கியது. நம் உண்ணும் உணவை நமது குடல் நமது வயிற்றால் செறிப்பது போல நமது அறிவை நம் தாய் மொழியில்தான் பெற வேண்டும் என்ற தாகூரின் உணர்வு தமிழ் மட்டும் காலத்தை வென்ற மொழியாக நிலைத்து நிற்கும் திறன் படைத்துள்ளது. சங்க காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை தன் வளர்ச்சி பாதையில் பல மாற்றங்களை தமிழ் ஏற்றுக் கொண்டது. காலத்திற்கு ஏற்ப வளைற்து, நெளிந்து கொடுக்கும் மொழியே நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு தமிழ் மொழியே சான்று.

    தமிழ் எழுத்து வடிவங்கள்

    இந்தியா முழுவதும் கிடைக்கும் கல்வெட்டு எழுத்துக்களிலேளே காலத்தால் மிகவும் பழமையானதும் முன்னேடியானதுமாக தமிழகத்தின் குகைகளில் காணப்படும் எழுத்துக்களே ஆகும். கி.மு. 300 க்கும் முன்னதாக சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டது. தமிழ் எழுத்துக்களின் வரி வடிவில் மிக்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒழுங்கான வடிவமைப்பு கி.பி. 6-ஆம் நுற்றாண்டில் பலலவர்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. தமிழகம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நாடுகளில் தமிழே பயன்படுத்தப்பட்டது. இவர்களின் காலங்களில் அவரவர்கேற்ப எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டார்கள். சேரர்களால் உருவாக்கப்பட்டது வட்டெழுத்து வடிவம். பாண்யர்கள் ஆட்சி காலத்தில் கோல் எழுத்து முறை கடைப்பிடிக்கப்பட்டது. சோழ பேரரசு காலங்களில் வட்டடெழுத்தும் கோலெழுத்தும் கலந்த தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தினார்கள்.

    நன்றி : எங்கள் ஊர் தமிழ் அறிஞர்.
    Last edited by க.கமலக்கண்ணன்; 16-01-2008 at 01:50 PM.
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நம் தமிழ் மொழி கடுமையாக அபிவிருத்தி அடைந்துள்ளதாக படுகிறது. இன்னும் மாற்றங்கள் வருமா?

    பகிர்வுக்கு நன்றி.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    தமிழ் மொழியை பற்றி பெருமைபடும் தகவல்களை தந்திருகிறீர்கள் கமலக் மிக்க நன்றி.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    தமிழ் மொழியில் இவ்ளோ மாற்றங்களா....
    ஆச்சரியமா இருக்கு....
    இன்னும் நம் மொழியை பற்றி அறிந்து கொள்ள ஆசை.. தொடர்ந்து கொடுங்கள்....
    ம்ம் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்....
    வட்டெழுத்துக்கள்ன்னா என்ன....???

    என்னோட ஒண்ணாம் வகுப்பு புக்ல என்னோட எழுத்து கிபி 15லில் இருக்குற எழுத்து மாதிரி தான் இருக்கும்...
    இதை பாத்ததும் அந்த ஞாபகம் வந்துட்டு...

    எங்க அப்பாவோட எழுத்துக்கும் என் எழுத்துக்குமே நிறைய வித்தியாசம் உண்டு..
    எங்க அப்பா ணா... போடும் போது துணையெழுத்து போடாமல் சுளிச்சி போடுவாங்க..
    இப்போ வரை எங்க அப்பா கையெழுத்தை போட முடியலையேன்னு ஒரு கவலை எனக்கு உண்டு...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    அடஅட என்ன ஒரு அக்கரை அப்பவோட கையெழுத்தை போட
    Last edited by க.கமலக்கண்ணன்; 23-01-2008 at 05:47 AM.
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by kamalk023 View Post
    அடஅட என்ன ஒரு அக்கரை அப்பவோட கையெழுத்தை போட

    இப்போ இல்லை... ஆனா பள்ளி கல்லூரியில் படிக்கும் போது நிறைய இருந்திச்சி..........
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    ம்ம் ஏன் கடைசி ரேங்க் எடுத்ததினாலா?
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நல்ல முயற்சி கமல்க், வாழ்த்துக்கள் இம்மாதிரி அரிய தகவல்களை இன்னும் தாருங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி கமல்..
    தமிழுக்கு பெருமை கூடட்டும்..
    ம்ம் என் நன்றி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வாவ்... அருமை.. அருமை... பாராட்டப்படவேண்டிய பதிவு... பதித்து வைக்கவேண்டிய படம்... கட்டுரையும் பிரமாதம்... இம்மாதிரி பழைய சங்கதிகள் ஏதேனும் இருப்பின் அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது மனம்....

    வாழ்த்துகள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தமிழைப் பற்றிய நல்லதோர் கட்டுரைக்கு நன்றி, கமலகண்ணன்
    Last edited by நாகரா; 11-02-2008 at 04:02 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    அற்புதமான, ஆச்சரியமான செய்திகள் திரு கமலக்கண்ணன்.

    எழுத்துவடிவத்திற்கு முன்பே நம் மூதாதையர்களின் கூரிய நோக்கு எதிர்காலத்தை நோக்கி இருந்தற்கு சான்றாக தஞ்சைக் கோவிலின் கல்வெட்டுகள் எழுதி வைத்திருப்பது ஒரு உயர்ந்த நாகரீகத்தை பிற்காலச் சந்ததியருக்கு அறிவிக்கிறது. இன்னும் எத்தனையோ கல்வெட்டுக்கள் காணப்படாமலேயே இருக்கின்றன.

    பரிபாஷைச் சொற்களுக்கு எழுத்துவடிவம் கொண்டுவர நம் முன்னோர்கள் மிகுந்த பாடு எடுத்திருக்கிறார்கள். காகபுசுண்டர், திருமூலர் போன்ற பெரியோர்கள் எழுத்துவடிவத்தின் முன்னோடிகள்.

    புசுண்டரின் ஓலைச் சுவடிகள் லட்சக்கணக்கில் இன்றும் கும்பகோணம் அருகில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

    இதில் ஒரு ஆச்சரியம் புசுண்டருடைய பல பாடல்களில் ஆங்கிலப் சொற்கள் இருக்கிறது. அவர் காலத்தில் எழுதப்பட்ட பாடல் வரிகளில் ஆங்கிலப் பிரயோகம் இருப்பதால், ஆங்கில மொழிக்கு முன்னமே நமது மொழியின் பலத்தை அறிந்திருக்கிறார்கள் அந்நியர்கள் என்பது தெரியவருகிறது. பல சொற்கள் அப்படியே ஆங்கிலத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறது.

    உதாரணத்திற்கு "GOD IS NO WHERE" என்னும் சொல்லை "காடீஸ் நோவேரு நவு கியர்" என்று அப்படியே தமிழ்ப்படுத்திப் பாடியிருக்கிறார். அதாவது கடவுள் எங்கும் இல்லை என்று சொல்லப்பட்ட ஆங்கிலப் பதத்திற்கு வேரை புடுங்கினால் now here ஆகும் என்கிறார். இங்கு Where என்பது அப்படியே வேர் என்ற தமிழ் வார்த்தைக்கு ஒப்பாயிருக்கிறது என்பது ஆச்சரியம்.

    நாகரீகத்தின் முன்னோடிகள் நம்மவர்கள் என்றால் அது பொய்யுரை அல்ல. நல்ல செய்தி தந்ததற்கு நன்றிகள் பல.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •