Results 1 to 6 of 6

Thread: நிறுத்தக் கூடாதா?

                  
   
   
  1. #1
    புதியவர் achunara's Avatar
    Join Date
    11 Jan 2008
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    Cool நிறுத்தக் கூடாதா?

    அலுவலகம் செல்ல ஒப்பந்த ஊர்தியின் வருகைக்காகக் காத்திருந்தபோது அந்த ஸ்டாப்பில் வழக்கமாய் எங்களுடன் வரும் சம்பந்தத்தைக் காணவில்லை.

    "என்ன மணி.. உங்க பக்கத்து வீட்டுக்காரரை ரொம்ப நாளாக் காணோம்" என்றேன்.

    "அவர் இப்ப சொந்த கன்யன்ஸுக்கு மாறிட்டார்ல"

    "என்ன இருந்தாலும் இந்த வசதி வருமா.. பஸ்ஸுல ஏறினமா.. நேரா ஆபீஸ் போனோமான்னு.."

    "அது சரி. உனக்கு பயண சுகம்.. அவருக்கு பண சுகம். சுளையா மாசம் ரெண்டாயிரம் வருதே.. டிக்கட் செலவு முன்னூறு ரூபா போனாலும் மிச்சம் கணிசமா நிக்குதே.. மாசம் ரெண்டு நாளு ஆபீஸுக்கு சொந்த வண்டில வந்தாப் போதுமே."

    அதற்குள் எங்கள் ஆபீஸ் பஸ் வந்து விட ஏறிக் கொண்டோம். அரசாங்க பேருந்துக்கு கம்பெனியே மொத்தமாய் பணம் கட்டி காலை, மாலை இரு வேளைகளிலும் அவரவர் ஏரியாவிலிருந்து அழைத்துப் போவதற்கும், திரும்பக் கொண்டு வந்து விடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொந்த வண்டியில் வருபவர்களுக்கு ஸ்கூட்டர், கார் என்று வண்டிக்கு ஏற்ப அலவன்ஸ் கிடைக்கும். அப்படி வருபவர்கள் இந்த ஒப்பந்த ஊர்தியில் ஏறக்கூடாது. அலவன்ஸ் வாங்காதவர்களுக்கான சலுகை ஒப்பந்த ஊர்திப் பயணம்.

    யாரோ கத்தினார்கள். "பஸ்ஸை நிறுத்துங்க.. நம்ம ஸ்டாப் ஓடி வரார்"

    எட்டிப் பார்த்தால் சம்பந்தம்! அட இவரா.. இவர் எப்படி இந்த பஸ்ஸுல..

    "வுடுங்க வண்டியை.. நிறுத்த வேணாம்." என்று ஒரு சாரார் கத்தினார்கள்.

    டிரைவர் குழம்பிய நேரத்தில் சம்பந்தம் மூச்சிரைக்க வந்து வண்டியில் தொற்றிக் கொண்டார்.

    "ஏம்பா. ஓடி வரேன்ல.. கொஞ்சம் நிறுத்தக் கூடாதா" என்றார்.

    பதில் சொல்ல முனைவதற்குள் கைப்பையைத் திறந்து ஒவ்வொருவராய் நீட்டினார்.

    "இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்.. இந்த மாசத்தோட ஓய்வு பெறப் போறேன்.. அதான் ரொம்ப நாளாப் பழகின உங்க எல்லாருக்கும் இனிப்பு கொடுக்கலாம்னு.."

    கையில் எடுத்த லட்டு கனத்தது.







    Code:
    நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது




    அச்சுநார

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சின்ன சம்பவம்.. ஆனா மனம் கனக்க வைக்கும் நிகழ்வு.
    அச்சுநாரா அன்பருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    தொடர்ந்து எழுதுங்க..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மனம் கனக்கச்செய்யும் சம்பவம்..கதையாய் வாசிக்கும்போது உணர முடிகிறது.நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துகள் அச்சுநாரா.
    Last edited by சிவா.ஜி; 13-01-2008 at 10:21 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    குட்டிக் கதை...பெரிய விசயம்...வாழ்த்துக்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சொல்ல வந்ததை திறம்பட சொல்லிடிருக்கிறீர்..
    வாழ்த்துகள் அச்சு நாரா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •