Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Unhappy கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!

    கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!


    அப்போது நான் இறுதி ஆண்டின் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என் அதிர்ஷ்டம்(??)மட்டுமல்ல என்னோடு படித்த அனைவருக்கும் கிடைத்த நல்ல(??) வாய்ப்பு என்னவெனில் அப்போது முதல் செட் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களான எங்களுக்கு மொத்தமாக ஆஃப் கேம்பஸ் என்ற முறையில் தான் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் தேர்வுகள் நடைபெறும்.

    எல்லா கல்லூரியிலிருந்தும் குறிப்பாக நிறுவனம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்த கல்லூரிக்கு சென்று (சுமார் 1500 முதல் 2000 பேர் ஒரே நேரத்தில்)இண்டர்வியூக்களில் பங்குபெறுவதற்கு பெயர் தான் ஆஃப் கேம்பஸ். என்று சொல்வாங்க. பல சுற்றுகள் கொண்டு நடத்தப்படும். முதல் சுற்று எழுத்துத் தேர்வு(ஆப்டிட்டியூட் டெஸ்ட்), இரண்டாவது சுற்று கலந்துரையாடல்(க்ரூப் டிஸ்கசன்), மூன்றாவது சுற்று நேரடி இண்டர்வியூ(டெக்னிகல்), நான்காவது(இறுதி) சுற்று ஹெச்.ஆர் (மனித வள திறன் ஆய்வு).

    இந்த மாதிரியே, எல்கியூப் என்ற ஒரு பிரபல நிறுவனத்தின் இண்டர்வியூவுக்காக கேரளாவின் எல்லையில் அமைந்த ஒரு பிரபல கல்லூரிக்கு எங்கள் கல்லூரி பேருந்து புறப்பட்டது. வகுப்பில் டாப்பர்கள் என்ற முறையில் நானும் அதில் இருந்தேன்.(அட நிசமா தான் சொல்றேங்க.. நம்புங்க மக்களே..! )

    நான், என் தோழிகள் புடைசூழ அங்கு சென்று பெரிய ஹாலில் அமர்ந்து, அவர்கள் கம்பெனி பற்றி சொல்லச் சொல்ல வாய் திறந்து கேட்டு வியந்து கொண்டு இருந்தோம்.

    அதே ஹாலிலேயே அமர வைத்து எங்களுக்கு முதல் சுற்றுக்கான கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டது.

    அந்த முதல் சுற்று, முதல் 40 நிமிடம் ஆப்டிட்டியூட் தேர்வாகவும், அடுத்த 1 மணி நேரம் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேர்வாகவும் இருந்தது.

    எனக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேவுக்கானது.

    மணி ஒலிக்க, எல்லாரும் எழுத ஆரம்பிக்க, பூவும் எழுதினேன்.. எழுதினேன். ஓரக் கண்ணால் மற்றவரைப் பார்த்தால் வேறு ஏதோ கிறுக்கிட்டு இருக்காங்க கொடுத்த தாளில்.. எனக்கு லேசா சந்தேகம் மேலோங்க, யாரைக் கேட்பதுன்னு புரியாம, சரி பக்கத்துல பக்கத்துல இருப்பதால , வேறு வேறு கேள்வித் தாள் கொடுத்திருப்பாங்கன்னு சமாதானம் படித்தி, சுத்தும் முத்தும் பார்த்துட்டு, இதுக்கு மேல் முழிச்சா அப்புறம்.. காப்பி அடிக்கிறேன்னு நினைச்சுப்பாங்கன்னு பூவு அமைதியா குழப்பத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.

    நாற்பது நிமிடம் முடிந்ததும், தேர்வு வைத்தவர்கள் வந்து விடைத்தாளையும், கேள்வித்தாளையும் வாங்க, என் விடைத்தாளைப் பார்த்து அவங்க அதிர்ந்தார்கள். காரணம், அடுத்த ரவுண்டுக்கான கேள்வித்தாள் நான் எழுதியது. நான் எனக்கு கொடுத்ததைத் தானே எழுத முடியும் என்று வாதாட, அதே போல் எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் பத்து பேருக்கும் மேல் தேறினார்கள். (பூவுக்கு இப்ப தான் மனசுக்குள் சந்தோசம். நான் மட்டும் முட்டாள் இல்லை.. ஹீ ஹீ கூட இத்தனை பேரு முட்டாளாகிட்டாங்களே.. துணைக்கு ஆள் இருக்கு அப்படின்னு உள்ளுக்குள்ள சந்தோசம் )

    இந்த களேபரம் முடிய, எல்லாருக்கும் மறுபடியும் அடுத்த தேர்வுக்கான கேள்வித்தாள் வழங்க, நான் வாங்கி மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். தேர்வு முடிந்து விடைத்தாள் வாங்கினார்கள். எங்களை சிறப்பாக கவனிக்க தனியாக முன்னுக்கு அழைத்தார்கள். நான் என் உயிர்த்தோழியிடம்(தோழியே உனக்காக கவிதை பாருங்க..!-) வெயிட் பண்ணு.. சீக்கிரமா எழுதிட்டு வருகிறேன் என்று சொல்ல, அவளும் சரி என்று தலையாட்டி செல்ல,

    பின்பு, முதல் சுற்றுக்கான ஆப்டிட்டியூட் டெஸ்ட் எங்களுக்கு (அதாவது என்னோடு சேர்ந்து அறிவாளியான 10 பேருக்கு மட்டும் ) தனியாக அமர்த்தி டெஸ்ட் வைத்தார்கள். 40 நிமிடம் கழித்து, முன்வரிசையில் அமர்ந்து எழுதி பேப்பர் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம், பின்னால் இருந்த ஒருவரையும் காணலை. என் கல்லூரியைச் சேர்ந்த என் தோழிகளையும் காணலை. எனது காலேஜ் பேக் மட்டும் அனாதையாக்கபட்டு கிடந்தது. எடுத்துவிட்டு, அவசர அவசரமாக வெளியில் வந்தால், என் கல்லூரி பேருந்தையே காணலை!! ஒரு கல்லூரி பேருந்தையும் காணலை.

    இரு தினங்கள் கழித்து, கல்லூரிக்கு ஷாட் லிஸ்ட் பற்றி தகவல் வரும் என்று சொல்லியதாக தகவல் கொடுக்கப்பட்டது.

    இதற்குள் மதியம் 1 மணி ஆகிவிட்டிருந்தது. என்னிடம் அலைப்பேசி இருந்தாலும், அங்கு சிக்னல் இல்லை. பல மைல் கொண்ட கல்லூரி வளாகம் எனக்கு மிகவும் புதிது. இதற்கு முன் ஒருமுறை மட்டுமே வந்த பரிச்சயம் இருந்தது. அங்கு தெரிந்தது கல்லூரி கேண்டின், மற்றும் பெண்கள் விடுதி. அங்கு இருக்கும் ஒரு டெலிபோன் பூத்.

    வெயில் தீய்க்கத் துவங்க, வெளிவந்தால் திக்கு தெரியவில்லை. சரி கேண்டினாவது செல்வோம் என்று நடந்தால் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. துவண்டு போய், அழுகை அழுகையாய் வர, கண்கள் கலங்க, அம்மா கொடுத்தனுப்பிய டிபன் பாக்ஸ் திறந்து கேண்டினில் தனியாய் அமர்ந்து சாப்பிட்டேன். அப்புறம் தான் கொஞ்சம் தெம்பு வந்தது.

    எங்கள் கல்லூரியில் வேலை செய்து பின்பு இங்கு வேலைக்கு வந்த பெண் பேராசிரியர்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததால், அவர்கள் எதேச்சையாய் என்னைப் பார்க்க, நான் சிரித்த படியே பேசி சமாளித்து கிளம்பும் வழி கேட்டு அறிய அங்கு ஆட்டோ அல்லது ட்ரைன் பிடிச்சி தான் கோவை செல்ல இயலும் என்று ஒரு பெரிய குண்டை இந்தப் பூ தலையில் போட்டார்கள்.

    இதற்கிடையில் என் வகுப்பின் பேக் பென்ச் பையன் ஒருவன் வர, எனக்கு அப்பாடா என்று இருந்தது. ஆனால், நாம தான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல புள்ளையாச்சே(யார தேடுறீங்க என்னைத்தான் சொன்னேங்க..!) எப்படி உதவி கேட்பது என்று யோசித்து அவன் எப்படி போவே? அப்படின்னு கேட்க, நான் அப்பா வருவார் என்று தைரியமாக நடித்துச் சொல்லி வைத்தேன்.

    சரி.. இனி நேரே போன் செய்ய வேண்டியது தான் என்று புரிந்து, பெண்கள் விடுதியில் இருக்கும் தொலைப்பேசி அழைப்பகத்துக்கு சென்றேன். அப்பாவுக்கு கூப்பிட்டு, போனிலேயே முழுக்கதையையும் சொல்லி மூக்கு சிந்த, அப்பா, இருமா.. நான் உடனே வருகிறேன்.. வர 1 மணி நேரம் ஆகும்.. அதுவரை அங்கையே அமைதியா உட்காந்து இரு..! அப்படின்னு சொல்லி வைத்தார்.

    அந்தக் கல்லூரியின் முகப்புக்கு நடந்து வரவே, கிட்டத்தட்ட அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி கால்குலேட் செய்து, மீண்டும் கேண்டின் சென்று, அமைதியாய் உட்காந்து துவண்ட மனதை தைரியம் சொல்லி சமாதானப்படுத்தினேன். விட்டுச் சென்ற தோழி பற்றி கோபத்திலும் இருந்தேன்.

    அடுத்து கொஞ்ச நேரத்தில் அப்பா வரவும், நான் முகப்பைச் சென்று அடையவும் சரியாக இருந்தது.

    வாடிய முகத்தோடு அப்பாவிடம் முறையிட, அப்பா, என் தோழி பெயர் சொல்லி, கால் பண்ணியிருந்தா.. பஸ் கிளம்பிட்டது அங்கிள். நான் வந்துட்டேன். பூ எப்பவுமே அப்பா வந்து கூப்பிட்டுப்பாரு.. பிரச்சனை இல்லைனு சொல்லுவா.... அதான் உங்களை கூப்பிட்டேன் அப்படின்னு சொன்னதாக சொன்னார்.

    எனக்கு கோபம் கொஞ்சம் தணிந்தாலும், சரி ஏன் விட்டு போகனும், வெயிட் பண்ணியிருந்தா, என் அப்பாவே என் வீடு செல்லும் வழியில் இருக்கும் அவள் வீட்டுக்கும் அவளை டிராப் செய்திருப்பாரே என்று ஒரு ஆதங்கம் மேலோங்க, அவளுக்கு கால் பண்ணினேன்.

    நான், ஏன் எனக்கு வெயிட் பண்ணலை? ஏதும் அவசர வேலையா வீட்டில்? என்று கேட்க, அவள், பஸ் கிளம்பிட்டது. சாரி.. நீ தான் அப்பா வருவார்னு எப்பவும் சொல்லுவியே.. அதனால் நீயே வந்துடுவேன்னு வந்துட்டேன். அதுவுமில்லாம எனக்கு மதியம் தூங்கனும் வீட்டில்.. அதான் சீக்கிரமா வந்தேன் என்று சொன்னாளே பார்க்கனும். எனக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது. நட்புகளிடையே இப்படியும் நடக்குமா?? நாம் அப்படி இல்லையே என்று யோசித்து வருந்தினேன்.

    வெகு நாட்கள் ஏனோ, இந்த சம்பவத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

    நான் அவள் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால், அவள் அப்படிச் செய்தது எனக்கு பல நாட்கள் வருத்தமளித்தது என்பது அவளுக்கு இன்று வரை தெரியாது.

    அப்புறம் அந்த தேர்வில் நான் செலக்ட் ஆகி, இண்டர்வியூவுக்கு செல்லாமல் விட்டதெல்லாம் வேறு கதை. என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது. இந்த தேர்வில் என் தோழி ஷாட் லிஸ்ட் ஆகலை.

    பூவு நினைச்சி...கண்ணு கலங்கிடுச்சி தானே..! எனக்கும் இப்பவும் இதை நெனச்சா கண்ணு கலங்கிடுது..!

    சரி சரி.. அழுவாதீங்க..
    நான் பத்திரமா மதியம் 3.45க்கு வீட்டுக்கு வந்துட்டேன்..!

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    Last edited by பூமகள்; 04-01-2008 at 09:56 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உள்ளூரிலேயே இந்த கலாட்டாவா...?

    ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் - சில விசயங்கள் மிகச்சிறியவையாக இருந்தாலும் எளிதாக எடுத்துக்கொள்ள மனம் வருவதில்லை. புத்தரின் வார்த்தைகளை கடைபிடிப்பதே இதற்கு ஒரே மருந்து.

    அசை போட ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா..! இனி எல்லாம் இன்பமயம்தான். வாழ்த்துக்கள் பூ.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அடடா...கல்லூரி நாட்களின் கண்ணீர்க் கதை...இதுவே நானாய் இருந்தா அந்த ப்ரண்டோட காதே கருகிப் போற மாதிரி கத்தித் தீத்திருப்பேன்...
    கல்லூரிப் பருவம் முடிந்தாலும் அதன் நினைவுகள் வசந்தம் தான்...இல்லையா பூவு...அப்போது வேதனை தந்த நினைவுகளாய் இருந்தாலும்...இப்போது நினைக்கையில் அவை சிறுபிள்ளைத்தனமாயும்,சில நேரங்களில் சிரிப்பை வரவழைப்பதாயும் இருக்கிறது.

    ஒரு சமயம் இருக்கிற காசுக்கெல்லாம் கேண்டீனில் மெது பக்கோடாவும்,ஆமை வடையும் தின்று தீர்த்து விட்டு...நானும் என் தோழி மஞ்சுவும் பஸ் ஏறினோம்.வழக்கமாக செல்லும் பஸ் கூட இல்லை.கன்டக்டர் பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிகிறது. ரெண்டு பேரிடமும் சேர்த்து 3 ரூபாய் தான் இருக்கிறது.மொத்தம் 5 ரூபாய் வேணும்...வீடு போய் சேர. அப்புறம் இருந்த காசுக்கு டிக்கெட் எடுத்து பாதி தூரம் இறங்கி ந*டராசா சர்வீஸ் தான் 6 கிலோ மீட்டர்.நடந்தது கூட பெரிதாகத் தெரியவில்லை.

    போற வழியில்....உண்ணி மாயா என்று ஒரு பானி பூரிக் கடை. எங்களிருவருக்கும் பானிபூரி பிடித்த அயிட்டம்.மஞ்சு, பானி பூரி சாப்பிட்டே ஆகணும்னு ஒரே பிடிவாதம்....தெரிந்த கடையாதலால் வாடி கணக்கு சொல்லிக்கலாம்னு...பஸ்ஸுக்கே காசில்ல...எருமை மாடு...கொட்டிக்கிட்ட மெதுவடைக்கி நடந்தாச்சு...இதில பானிபூரி வேறயான்னு நான் சொன்னதெல்லாம் அவ காதில எங்க ஏறிச்சு....பானிபூரி ஒரு பிளேட்...பேல் பூரி ஒரு பிளேட்...கணக்கு வெச்சு கலந்து கட்டினோம்.இடுக்கண் வருங்கால் நகுக...பழைய கதை...இடுக்கண் வருங்கால் உண்க....இது புதிய கதை

    இன்னைக்கும் என்னோட நல்ல தோழி அவ...வருடத்துக்கொருமுறை பாத்துக்குவோம்...கல்யாணம் வேண்டாம்...அந்த சடங்கில நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு இருக்கா...பாக்கலாம்...எதாவது பானி பூரி கடைக்காரன் மாட்டுவானான்னு....

    பூ...உன்னோட பதிப்புகள் எப்பவுமே எங்களுடைய ஞாபகங்களையும் சேர்த்துக் கிளறி விட்டுடுது...அப்புறம் அந்த தோழி கூட இன்னும் தொடர்பு இருக்கா?இல்லை அந்த இன்சிடென்டோட நட்பூ வாடிருச்சா?
    Last edited by யவனிகா; 04-01-2008 at 10:16 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    பூ...உன்னோட பதிப்புகள் எப்பவுமே எங்களுடைய ஞாபகங்களையும் சேர்த்துக் கிளறி விட்டுடுது...அப்புறம் அந்த தோழி கூட இன்னும் தொடர்பு இருக்கா?இல்லை அந்த இன்சிடென்டோட நட்பூ வாடிருச்சா?
    உண்மை தான் யவனி அக்கா.
    கல்லூரி என்றாலே பல நினைவுகள் எல்லார் மனத்திலும் வரும். இப்படி செய்தது என் உயிர் தோழி இன்று வரை.
    அவள் தான் என் ஒரே சிறந்த நட்பாக நான் கருதுவது. இந்த சம்பவம் ஒரு சின்ன நெருடல் என் மனத்தில். ஆயினும், அவள் அப்போதைய மனநிலை எப்படி இருந்தது என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாட்டியும், அவள் வேண்டுமென்று செய்திருக்க மாட்டாள் என்று என்றோ மன்னித்து விட்டேன்.

    தீபாவளிக்கு வந்தவள், எனக்காக ஒரு செட் சுடிதாரும் பரிசளித்து தான் சென்றாள். மிக நல்ல தோழி அவள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    ஐயோ பூவு தன்னந்தனி காட்டுக்குள்ள தனிமரமா ஆயிடுச்சா..

    முதல் பகுதி வரிகளை படிக்கும்போது,
    காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப் புளி (மரம்) வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    அண்ணன் மம்முட்டியன் பேரச் சொன்னா... அப்படினு பாடி

    நீ சொன்ன அ. மாதா பொறியியல் கல்லூரிக்கே படை திரட்டி வரலாம்ணு நினைக்கறதுக்குள்ளே, எங்க அண்ணனே வந்து உன்னை கூட்டிட்டுப் போயிட்டார்னு சொல்லி என் மனசில பாலை வார்த்தியே....
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் - சில விசயங்கள் மிகச்சிறியவையாக இருந்தாலும் எளிதாக எடுத்துக்கொள்ள மனம் வருவதில்லை. புத்தரின் வார்த்தைகளை கடைபிடிப்பதே இதற்கு ஒரே மருந்து.
    உண்மை தான் பாரதி அண்ணா.
    இச்சம்பவத்துக்கு பிறகு என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் உருவாகவில்லை.
    இன்பமயமாகத்தான் இருக்கிறது.

    நன்றிகள் பாரதி அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by S. ராஜா View Post
    முதல் பகுதி வரிகளை படிக்கும்போது,
    காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே
    காட்டுப் புளி (மரம்) வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
    அண்ணன் மம்முட்டியன் பேரச் சொன்னா... அப்படினு பாடி
    அண்ணா.. பாட்டெல்லாம் ஜோராத் தான் கீது..!
    உங்க பேர நம்ம நைனா எப்போ மம்முட்டியன்னு மாத்தினாக....??!!

    பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் ராஜா அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    தப்பு உங்க மேலதான் பூவு.

    1. முதலிலேயே ஆங்கிலத் திறனாய்வு, பசில் தேர்வு எழுதியாச்சி இல்லையா.. அப்ப மத்தவங்க அந்தத் தேர்வை எழுதும் பொழுது அப்டிடியூட் டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் வாங்கி பதில் எழுத ஆரம்பிச்சிருக்கனும்.. டெஸ்ட் என்ன இம்போசிஸனா திரும்பத் திரும்ப எழுத..

    2. கொஸ்டின் பேப்பரை லீக் அவுட் பண்ணி பணம் பார்த்திருக்கலாம்.. பஸ்சார்ஜூக்காவது ஆகியிருக்கும்

    3. ஆனா பாருங்க காணாம போனாலும், கால்நடையா போனாலும் வயிற்றுப் பூசை மட்டும் சரியா செஞ்சிடுறீங்க..


    ஆனால் பூவு.. அனுபவிச்சு எழுதற.. சின்ன விஷயம்னாலும் சொல்ற விதம் இருக்கே.. இவ்வளவு பில்டப் அந்த வாட்ச் கடைக்காரர் கூட கொடுக்கலை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    தப்பு உங்க மேலதான் பூவு.

    1. முதலிலேயே ஆங்கிலத் திறனாய்வு, பசில் தேர்வு எழுதியாச்சி இல்லையா.. அப்ப மத்தவங்க அந்தத் தேர்வை எழுதும் பொழுது அப்டிடியூட் டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் வாங்கி பதில் எழுத ஆரம்பிச்சிருக்கனும்.. டெஸ்ட் என்ன இம்போசிஸனா திரும்பத் திரும்ப எழுத..

    2. கொஸ்டின் பேப்பரை லீக் அவுட் பண்ணி பணம் பார்த்திருக்கலாம்.. பஸ்சார்ஜூக்காவது ஆகியிருக்கும்

    3. ஆனா பாருங்க காணாம போனாலும், கால்நடையா போனாலும் வயிற்றுப் பூசை மட்டும் சரியா செஞ்சிடுறீங்க..


    ஆனால் பூவு.. அனுபவிச்சு எழுதற.. சின்ன விஷயம்னாலும் சொல்ற விதம் இருக்கே.. இவ்வளவு பில்டப் அந்த வாட்ச் கடைக்காரர் கூட கொடுக்கலை.
    என்ன ஒரு வேறுபட்ட...மாறுபட்ட...தனிப்பட்ட....சிந்தனை.
    Last edited by யவனிகா; 04-01-2008 at 12:23 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பூவு! சொல்ற விதம் மிக அருமை... கடந்த கால நினைவுகள் எப்பவுமே மனதுக்கு சுகம்தானே....
    _______________________________

    யவனிகா...

    இன்னைக்கும் என்னோட நல்ல தோழி அவ...வருடத்துக்கொருமுறை பாத்துக்குவோம்...கல்யாணம் வேண்டாம்...அந்த சடங்கில நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு இருக்கா...பாக்கலாம்...எதாவது பானி பூரி கடைக்காரன் மாட்டுவானான்னு....
    ஆனாலும் உங்க பதிவுகள் செம நகைச்சுவையா எழுதறீங்க.... நெஜாமாவே சத்தமிட்டு சிரித்தேன்....

    உங்க கதைகளையும் கொஞ்சம் போடுங்க.. நல்லா வாய்விட்டு சிரிக்கிறோம்..

    அன்புடன்

    ஷீ-நிசி
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    கேரளா பக்கம் என்று சொன்னதும் எனக்கு ஞாபகத்தில் வந்தது நம்ம பென்ஸ் படிச்ச நூருல் இஸ்லாம் காலேஜ்தான். கோயம்புத்தூர் பக்கத்தில் இருக்கிற இதுக்கு இத்துணை களேபரமா! ச்ச்சும்மா சொன்னேன். அனுபவத்தை அழகா பதிந்ததற்கு பாராட்டுக்கள்.

    ஆமா யார் அந்த வாட்சு கடைக்காரர்???????

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •