Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 61

Thread: புதிய தமிழ் ரைட்டர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up புதிய தமிழ் ரைட்டர்

    புதிய தமிழ் ரைட்டர்
    -----------------------------------------------------------------------------

    இந்த ஆங்கிலப்புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்களுக்கு ஓர் இனிக்கும் செய்தி.

    இ-கலப்பையைப் போன்று, ஆனால் அதனினும் மேம்பட்ட செயலியை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்று கிட்டியது. நியூ ஹாரிஜன் மீடீயா [New Horizon Media] நிறுவனம் வெளியிட்டிருக்கும் ரைட்டர் [Writer] மென்பொருள்தான் அது.

    வெறும் 850Kb அளவுள்ள இந்த இலவச மென்பொருளின் உதவி கொண்டு தமிழ்99, தமிழ் ஃபோனெடிக், தமிழ் டைப்ரைட்டர், பாமினி ஆகிய முறைகளில் தட்டச்சு செய்யலாம். பாமினி,டையகிரிடிக்ட்,ஸ்ரீலிபி,சாஃப்ட்வியூ, டேப், டேம், திஸ்கி, யுனிக்கோடு மற்றும் வானவில் ஆகிய என்கோடிங்குகளை ஒத்தியங்குகிறது. இனி தனித்தனி செயலிகளை தேட வேண்டிய வேலை பெரும்பாலான தமிழ்மன்ற உறவுகளுக்கு இருக்காது என்று எண்ணுகிறேன்.

    இந்த செயலி விண்டோஸ் 2003, எக்ஸ்-பி, விஸ்டா ஆகிய இயங்குதளங்குகளில் இயங்கக்கூடியது. விண்டோஸ் சி.டி இல்லாமலே "Regional Language Support" ஐ இயங்க வைக்கிறது.

    நிறுவியதும் கீழ்க்கண்ட முறைகளில் தட்டச்சு செய்ய இயலும். மேலும் பல முறைகளில் தட்டச்சும் முறையை மேற்கொள்ள டாஸ்க்பாரில் வரும் ஐகானை, வலது புறமாக சொடுக்கி, செட்டிங்குகளில் தேவையான மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

    Alt+0 = OFF
    Alt+1 = tamil 99
    Alt+2 = tamil phonetic
    Alt+3 = tamil old type writer
    Alt+4 = tamil Bamini

    பலவிதப்பட்ட கீபோர்ட் வடிவங்களும் தட்டச்சும் போது சந்தேகம் ஏற்படின் எந்த விசையை தட்ட வேண்டும் என்ற விளக்கத்துடனும் மிக மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இப்போது பீட்டா வடிவில் இருக்கிறது. பதிவிறக்கி இந்த பதிவை அதில்தான் பதிவு செய்கிறேன். அனைவருக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.

    இந்த அருமையான மென்பொருளை தயாரித்துள்ள நியூ ஹாரிஜன் மீடீயா - உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை மகிச்சியுடன் தெரிவிக்கிறேன்.

    பதிவிறக்க கீழ்க்கண்ட சுட்டியைத் தட்டுங்கள்.
    http://software.nhm.in/sites/default...rSetup1511.exe
    Last edited by பாரதி; 09-11-2009 at 02:26 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மிக்க நன்றி அண்ணா...! புத்தாண்டில் மிகவும் பயனுள்ள செய்தி..தமிழ் நெஞ்சங்களுக்கு...! அதை தந்தமைக்கு தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தரவிறக்கிப் பயன்படுத்திப்பார்த்தேன் அண்ணா.. நன்றாக இயங்குகின்றது. என்னால் தொடர்ந்து பயன்படுத்த இயலாதது கவலை தருகின்றது. எனது விசைப்பலகை விசைகளின் இருப்பிட வேறுபாடு ஒத்துழைக்கவில்லை. பயனுள்ள தகவல்களை கண்டெடுத்து எம்முடன் பகிரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    Last edited by அமரன்; 03-01-2008 at 07:53 AM.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    சிறப்பான தகல் புதிய ஆண்டில் பரிசு தந்த பாரதி அண்ணாவிற்கு மிக்க நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by அமரன் View Post
    என்னால் தொடர்ந்து பயன்படுத்த இயலாதது கவலை தருகின்றது. எனது விசைப்பலகை விசைகளின் இருப்பிட வேறுபாடு ஒத்துழைக்கவில்லை.

    அன்பு அமரன்,
    விசைகளின் இடம் எது என்பதையும், எந்த என்கோடிங்கில் எப்படித்தட்டச்சுவது என்றும் இந்த செயலியின் உதவியில் காண இயலுமே..? பார்த்தீர்களா..? ஒரு வேளை கணினி சம்பந்தப்பட்டது என்றால், இயங்குதளத்தில் விசைகளை UK முறையிலிருந்து US முறைக்கு மாற்றிப்பார்த்தீர்களா..?
    Last edited by பாரதி; 03-01-2008 at 09:00 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அண்ணா எனது விசைப்பலகை பிரெஞ்சு முறையினாலானது. வழக்கமாக z இருக்கும் இடத்தில் w இருக்கும். a இருக்குமிடத்தில் q இருக்கும். கீழ்வரிசையில் இருக்கவேண்டிய m நடுவரிசையில் இருக்கும். தேவைப்படின் என் விசைப்பலகையில் உள்ள m ஐ அழுத்தமுடியாது.. அழுத்தினால் ; கிடைக்கும். இப்படி சில சிக்கல்கள். தொடர்ந்து பழகினால் சரியாகும் என நினைக்கின்றேன்..

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by அமரன் View Post
    அண்ணா எனது விசைப்பலகை பிரெஞ்சு முறையினாலானது. வழக்கமாக z இருக்கும் இடத்தில் w இருக்கும். a இருக்குமிடத்தில் q இருக்கும். கீழ்வரிசையில் இருக்கவேண்டிய m நடுவரிசையில் இருக்கும். தேவைப்படின் என் விசைப்பலகையில் உள்ள m ஐ அழுத்தமுடியாது.. அழுத்தினால் ; கிடைக்கும். இப்படி சில சிக்கல்கள்.
    அன்பு அமரன்,

    அந்த விசைப்பலகை பிரெஞ்சு முறையில் அமைந்தது என்றாலும் நீங்கள் அமெரிக்க விசைப்பலகையை உபயோகிப்பதில் வழக்கமுள்ளவர் எனில் அதை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

    Start - Control Panel - Regional and language options - Launguages - Details - Settings - Default Input Language என்பதில் English (United states) - United states international என்பதை தேர்வு செய்து பாருங்களேன். கணினியின் விசைப்பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை பாராமல் வழக்கமான முறையில் தட்டச்சிப்பாருங்கள். வாழ்த்துக்கள்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அப்படியே செய்கின்றேன் அண்ணா. இப்போது வெளியில் தட்டச்சு செய்து, பிரதி எடுத்து ஒட்டுகின்றேன். உங்கள் உதவியுடன் நேரடி தட்டச்சுதலை மேற்கொள்ளலாம் என நம்புகின்றேன். மிக்க நன்றி அண்ணா..

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி சுகந்தப்பீரிதன், மனோஜ்.

    அன்பு அமரன், உங்கள் பிரச்சினை தீர்ந்தால் அறியத்தாருங்கள். நன்றி.

  10. #10
    இளையவர் பண்பட்டவர் thangasi's Avatar
    Join Date
    15 Dec 2007
    Location
    அரபு வளைகுடா
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    8,983
    Downloads
    0
    Uploads
    0
    தற்போது இ-கலப்பை கொண்டு நேரடியாகத் தட்டச்சு செய்துவருகிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே போதுமானதாகப்படுகிறது. இருந்தாலும் இதையும் முயற்சி செய்துபார்க்கிறேன்...

    நல்ல தகவலுக்கு நன்றிகள் பலப்பல...

  11. #11
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மிகவும் பயனான செயலி. எனக்கு இ-கலப்பை பல இடையூறு தந்தது. இது மிகவும் நன்றாக வேலைசெய்கிறது. நேரடியாகவே உள்ளீடு செய்ய முடிகிறது. அமரா... முயன்றுபாருங்கள். நிச்சயம் வெற்றிபெறும்.

    பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    பாரதி, இ கலப்பையை விட எனக்கு இந்த விசை பலகை அதிகம் பிடித்து இருக்கின்றது. உங்களின் இந்த உதவிக்கு மிக்க நன்றி...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •