Quote Originally Posted by சுகந்தவாசன் View Post
அமரனுக்கு இருக்கும் அதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது ஆனால் வேறு வடிவில்..!! அதாவது இந்த செயலியை கொண்டு தட்டச்சும்போது ’தமிழ் பொனட்டிக்’ எனக்கு சரியாக வேலை செய்கிறது.. இப்போது அதை கொண்டுதான் தட்டச்சுகிறேன்..!! ஆனால் மற்ற எழுத்துருக்கள் ஏனோ எடக்குமுடக்காக ஏதேதோ வடிவில் வந்து விழுகிறது..!!
சுகந்தவாசனும் எழுத்துரு முறையையும் தமிழ் உள்ளீட்டு முறையையும் வித்தியாசம் காண முடியாமல் குழப்படைகிறார். உங்கள் குழப்பம் இன்னதென்று புரிய வைக்க இப்படி ஒரு உவமானத்தைக் கூறுகிறேன்.

உதாரணமாக நீங்கள் என்ன இயங்கு தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், ஒருவேளை ‘விண்டோஸ் எக்ஸ்பி‘, ‘விண்டோஸ் விஸ்தா’, அல்லது ‘விண்டோ 7’ என்று பதிலுறைக்க வேண்டும். ஆனால், நீங்கள் ‘ஆபிஸ் 2001’ என்று பதிலுரைத்தால், இயங்கு தளத்திற்கும் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்), செயலிக்கும் (சாஃப்ட்வேர்) வேறுபாடு தெரியவில்லை அர்த்தம். உங்களுக்கு இந்த உவமானம் புரிகிறது என்றால், நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனையையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று அர்த்தம்.

நீங்கள் எந்த எழுத்துருவைப் பயன்படுத்தினாலும் (TAM, TAB, TSC, TSCII, BAMINI, UNICODE) Phonetic முறையில் டைப் செய்யலாம். மணிச் சின்னத்தில் (என்.எச்.எம்) கிளிக் செய்து தேவையான தேர்வை எடுத்துக் கொள்வதோடு, எழுத்துருவைக் காண்பிக்கும் பெட்டியில் தேர்வுக்கேற்ற எழுத்துருவையும் தேர்வு செய்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் டைப் செய்யலாம். உதாரணமாக Phonetic + Bamiini என்று மணிச்சின்னத்தில் தேர்வு செய்து கொண்டு, எழுத்துரு பெட்டியில் Tamil Canadianஐ தேர்வு செய்து கொண்டால் பிரச்சனை இல்லாமல் டைப் செய்யலாம். அதே போல் Phonetic + Unicodeஐ தேர்வு செய்து கொண்டு, எழுத்துருப் பெட்டியில் TAU Elango Barathiஐ தேர்வு செய்தால் யுனிகோட் எழுத்துருக்களை பாமினி விசைப்பலகை முறைமையில் டைப் செய்யலாம்.

நான் தமிழில் டைப் செய்வதற்கு டைப்ரைட்டர் முறையைப் பயன்படுத்துகிறேன். என் கணினியில் நூற்றுக் கணக்கான (சுமார் 1000) தமிழ் எழுத்துருக்கள் இருக்கின்றன. TAM, TAB, TSCII, Bamini, Unicode என்று எல்லா எழுத்துருக்களையும் இணையத்தில் இருந்து பதிவிறக்கிப் பயன்படுத்துகிறேன். எதிலும் பிரச்சனை ஏற்படவில்லை. எனவே, நான் எழுதிய வழிமுறையைப் பயன்படுத்திப் பாருங்கள். பிரச்சனை ஏற்பட்டால் இங்கே எழுதுங்கள். முடிந்தால் மேலும் ஆலோசனை கூறுகிறேன்.