Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 49

Thread: அந்த ஏழு நாட்கள்! - நிறைவு!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,951
  Downloads
  183
  Uploads
  12

  அந்த ஏழு நாட்கள்! - நிறைவு!

  அந்த ஏழு நாட்கள்! - பாகம் 1

  எத்தனை நாட்கள்தான் இப்படியே போகப் போகிறது! ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமே..
  ?Every dog has it?s own day?

  ஒரு நாளாவது ஹீரோவா வாழ்ந்திடனும். அதுக்காகத்தான் எத்தனைச் சிரமப் பட்டாச்சு.. சனியன் சந்து முனையில எப்பவுமே காத்துகிட்டே இருப்பார் போல இருக்கு கவுக்கிறதுக்கு..

  அப்படித்தாங்க அன்னிக்குன்னு மனைவிகிட்ட சவால் விட்டாச்சு.. ஒரு வாரம்தானே! நான் எட்டு வருஷமா சமைச்சு சாப்பிட்டவனாக்கும். 30 பேர் வந்தாலும் முக்கா மணி நேரத்தில விருந்து பண்ணி அசத்திட மாட்டேன்.. நாலு அடுப்பில நாலு பாகங்கள் ஒரே சமயத்தில பண்ற கில்லாடியாக்கும்.. என்ன நினைச்ச நீ. ஒரு வாரம் தனியா இருக்க மாட்டனா என்ன? எனக்கு வேலை இருக்கு நீ போய்ட்டு வா! (அதுக்குள்ள எனக்குள்ள நான் தங்கமணி ஊருக்கு போயிட்டான்னு பத்து முறையாவது குதிச்சாச்சு).

  அந்த ஒரு மங்களகரமான புதன்கிழமை.. காலை 10:00 மணிக்கு அவளை ட்ரெய்ன்ல ஏத்தி விட்டாச்சு. ஆமாம் குழந்தைங்க சகிதமாத்தான். அப்பதான் பாசம் பெருக்கெடுக்க மினரல் வாட்டரென்ன, குர்குரே என்ன, வார மாத புத்தகம் என்ன? ஜாக்கிரதையா போகணும்.. அம்மா கூடவே இருக்கணும்.. எல்லாம் சொல்ல..

  பாத்துங்க.. வேளா வேளைக்குச் சாப்பிடுங்க.. கச்ச்ட்ஜ்வ்ட் வ்க்ஜ்ப் வ்ட்வ் ட்வ்ப்ஜ்பொ வ்fவ்ப்ன்fப்

  யாரு கேட்டா என்ன சொன்னாள்னு .. அப்படித்தான் எதோ கசமுசன்னு உளறிக்கிட்டிருந்தா! நான் தான் வேற உலகத்தில இருந்தனே!.. எவன் கேட்டான் இவள் உளறலையெல்லாம்.. இந்த ட்ரெய்ன் வேற ஒரு கழுத்தறுப்பு நேரத்துக்கு எடுக்க மாட்டானே.. பஸ் மாதிரி விசிலடிச்சனா எடுத்தனான்னு இல்லாம, ஹாரனாம், சிக்னலாம், பச்சைக் கொடியாம்.. விட்டா ஒவ்வொரு பொட்டியிலிருந்தும் சிக்னல் குடுப்பாங்க போல இருக்கு எடுத்துத் தொலைங்கடா! என் பொறுமையைச் சோதிக்கவே பொறப்பெடுத்திருக்கானுங்க..

  பின்ன என்னங்க.. வந்தமா ஏறனமா போனமான்னு இருக்கா ட்ரெய்னு.. ஒண்ணரை மணி நேரத்துக்கு முன்னால வீட்ல இருந்து புறப்பட்டு டிராஃபிக்ல புலம்பிகிட்டே ஹாரன் அடிச்சி, சிக்னலில் புலம்பி, கட் பண்ற பைக்காரன்களை திட்டி ஸ்டெஷனுக்கு வந்தா பார்க்கிங் லாட்ல சுத்தி கிடைச்ச ஒரு சந்தில காரைச் சொருகி நிறுத்திட்டு, லக்கேஜைத் தூக்கிகிட்டு லொங்கு லொங்குன்னு நடந்து பிரிட்ஜேறி இறங்கி, கம்பார்ட்மெண்ட் தேடி எல்லாத்தையும் ஏற்றி விட்டு, அப்புறம் என்ன வேணும்னு கேட்டு எல்லாத்தையும் வாங்கித் தந்து அந்தப் புலம்பலையெல்லாம் கேட்காமல் கேட்கற மாதிரி நடிச்சு.. இவ்வளவு கஷ்டமெல்லாம் எதுக்கு?

  அந்த ஒரு வாரச் சுதந்திரத்துக்குத் தானே!

  அதுலயும் இப்படி டிலே பண்ணினா எப்படி?

  ஒருவழியா ட்ரெய்ன் கிளம்பியாச்சு.. ட்ரெய்ன் வேகமெடுக்க வேகமெடுக்க மெதுவா போய்கிட்டு இருந்த காலமும் வேகமெடுத்திச்சு.. சந்தோஷம் வந்துட்டாத்தான் இந்த வாட்சுக்கு கூட புது எனர்ஜி வந்துரும் போல.. முள்ளுங்க ரெண்டும் குடுகுடுன்னு ஓடுதே!..

  ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் பர்மிஷன் போட்டிருக்கு. போனா கொஞ்ச நேரத்தில லஞ்ச் அவுட் போகணும்.. பின்ன கொண்டாட்டத்தோட தொடங்க வேணாமா?

  சரக்கென்று கார்பார்க்கிங்கில் இருந்து காரை உருவினேன்,, டங்கென்ற சத்தம்..

  தொடரும்.  அந்த ஏழு நாட்கள்! - பாகம் 2

  காரோட பின் பக்கம் பம்பர் அந்தப் பில்லரில் மோதி மூளியாகி இருந்தது.. என்னடா இது ஆரம்பமே அடிவிழுதே!
  ம்ம்ம்.. எல்லாம் அவளோட பொருமல்தான்னு நினைக்கிறேன்.. இதுக்கெல்லாம் அசருவமா? ஆனா திரும்பி வந்தா பின்னிப் பெடலெடுத்துடுவாளே! இன்னிக்கே ரிப்பேருக்கு விட்டா போச்சு, ரெகுலர் சர்வீஸ்னு மழுப்பிரலாம்

  மெல்ல வெளிய வந்தேன்.. மணி 11:00. ஆஃபீஸூக்கு போனா 12:00. அப்படி இப்படிச் சுத்தி எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு திரும்ப வந்தா கேங் ரெடி..

  எங்க போலாம்? சைனீஷ்? இடாலியன்? ஜெர்மன்? மெக்ஸிகன்? செட்டிநாடு? முகல்? பார்பேக்யூ? 30 நிமிஷ டிஸ்கஷனுக்கு பின்னால பார்பேக்யூ முடிவாச்சு.

  மூணு காரு.. எல்லாரும் துக்கம் விசாரிக்க, ஒரு டூ வீலர் சிக்னல்ல நிக்கும் போது இடிச்சுட்டான், பாவமா இருந்துச்சு மன்னிச்சு உட்டுட்டேன்னு சின்னதா சுத்திட்டு போனேன்.

  ஏதோ பார்பேக்யூன்னா கொஞ்சம் ஐட்டங்கள்தான் இருக்கும்னு போனா அதிர்ச்சி.. பஃபே 450 ரூபா.. 12 பேரு.. சர்வீஸ் டேக்ஸ் 12% பில் 6048.. டிப்ஸ் என்ன வைக்கலாம்னு யோசிச்சு (100க்கு கம்மியா வச்சா நம்ம மரியாதை என்னாறது) 6200 ரவுண்டா (தலையும்தான் ரவுண்டா மொட்டை).

  3 மணிக்கு ஆஃபீஸ் வந்தாச்சு. கொடுத்த காசுக்கு வஞ்சனியில்லாம தின்னதுக்கு தூக்கம் கண்னைக் கட்டுது.. இதில வேலை எங்க பாக்க.. எழுத்தெல்லாம் ஏரித்தண்ணி காத்திலாடற மாதிரி அலையலையா தெரியுது, அப்படியே அக்கம் பக்கத்தில அரட்டை அடிச்சு டயத்தை ஓட்டியாச்சு.. சரி சரி.. பொறு பொறு எழுமணிக்குத்தானே ஆரம்பம்.. அதையும் இதையும் மேஞ்சுட்டு 6:30 மணிக்கே கடையைச் சாத்தியச்சு!

  அவசராவசரமாக் காரைக் கிளப்பி அந்த பப்புக்கு போனேன். 8;00 மணி வரைக்கும்தானே ஹேப்பி ஹவர்.. ஒண்ணு வாங்கினா இன்னொன்னு ஃபிரீ. இதுக்குன்னு கம்பெனி குடுக்கறதுக்குத்தானே நம்ம கேங்கே இருக்கு. எல்லாரும் ஆஜர்.
  2000, 5000 என ஆரம்பித்தது. செக்கச் செவேல் என ஆடையுடுத்தி சிக்கன்கள் அணிவகுக்க, கேலியும் கூத்துமாய் கழிந்தது..

  ஸார், கிச்சன் இஸ் க்ளோசிங்.. ஃபுட் ஆர்டர்.. சர்வரின் கடைசிக் கெஞ்சலுக்கு நானும், சில ஐட்டங்களும் ஆர்டர் ஆக.. மணி 11:30 எட்டியபோது சிக்கன் எலும்புகள் வெளுத்துக் கிடக்க, காலிக் கோப்பைகளும், அவசரமாய் கொறிக்கப்பட்ட சில பல நான் துண்டுகளும் சிதறிக் கிடக்க.. எவ்வளவோ பில் கொடுத்து புறப்பட்டோம்

  வீட்டுக்கு வந்து, கதவைத் திறந்து உடை மாற்றிப் படுக்கையில் விழுந்தேன்.. எவ்வளவு நேரம்னு தெரியாது.. கண்கள் கூச, தலையில் சம்மட்டிக் கொண்டு யாரோ அடிக்க வலியுடன் கண் திறந்தேன்.. டி.வி. ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தது.. எழுந்து பார்த்தால் வாசல் கதவு அடையா நெடுங்கதவு மாதிரி திறந்து கிடந்தது.. காஃபி.. வாய்க்குள்ளே அந்த வார்த்தையை விழுங்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்

  தொடரும்.
  Last edited by தாமரை; 28-04-2008 at 04:07 PM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 2. #2
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  137,355
  Downloads
  39
  Uploads
  0
  ஊருக்குப் போன வீட்டம்மா வந்துட்டாகளா....ஒரு வார சுதந்திரம் ஒரே நாள்ல அம்பேலா.....எப்படி கதவு திறந்திருந்தது(ராத்திரி மப்புல திறந்த கதவை மூடவேயில்ல போலருக்கு) அடுத்த ஐந்து நாட்களையும் பாக்கனுமே சீகிரம் போடுங்க தாமரை.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,951
  Downloads
  183
  Uploads
  12
  அந்த 7 நாட்கள் - பாகம் 3


  பால் இல்லை.. அதானே டோக்கன் வச்சாதானே பால் போடுவான்.. எத்தனை முறை தட்டிப் பாத்தானோ, இல்ல உள்ள வந்து எதையாவது தூக்கிட்டுப் போனானோ தெரியலையே!

  தலைவலிக்க வறட்டீ (பிளாக் டீ) யாவது போடலாம்னு அடுப்பில பாத்திரம் வச்சு தண்ணீர் டீத்தூள் சர்க்கரைப் போட்டு வச்சிட்டு பல்லு விளக்க வந்தேன்.

  இந்த பல்லு விளக்கறது இருக்கே, சின்ன பிராஸஸ்தான். பிரஸ்ல கொஞ்சமாக்க பேஸ்ட் வச்சு மேலும் கீழும் அசைத்து சர்க்கிள் மோஷன் அப் அண்ட் டௌன் மோஷன், சைட்வைஸ் மோஷன்..

  இந்த கண்ணாடி பாத்துகிட்டே வாயைப் பலவிதங்களில் திறந்து பலகோணங்களில் முகத்தை அலசி, நேத்தைக்கும் இன்னிக்கும் மத்தியில முகத்தில் கொஞ்சம் மாறிய சுருக்கங்கள், மூக்குக்கு சைட்ல சூட்டில் எழுந்த சின்ன வெள்ளைக் கொப்புளம், திருத்திய மீசையில் ஒழுங்கில்லாம வளர்ந்த சின்ன முடி (ஷேவ் பண்ணும் போது இதை ஒதுக்கிரணும்) கண்ணில் ஓடிய செவ்வரி ரேகை, புன்னகைக்கிற போது கன்னத்தில் விழற சின்னக்குழி எல்லாம் சரிபார்த்து வாயில் தண்ணீர் விட்டுக் கொப்புளிக்கும் போது சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்தம் வந்தது..

  ஓடிப் போய் பார்த்தா வறட்டீ பாத்திரம் வறண்டு கருகி...

  போச்சுடா, சூட்டோட சூடா சுத்தம் பண்ணாட்டி மானத்தை வாங்கிடுமே..

  ஒரு துண்டு புளி போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டேன்..

  வறட்டீக்கும் வக்கில்லை.. சரின்னு தண்ணி சூடானதும்.. பாத்திரத்தை தேய்த்து விம் போட்டுக் கழுவ பளிச்...

  நேரம் ஆயிட்டே இருக்கே.. அவசர அவசரமா குளிச்சு ரெடியாக பசிச்சது..

  ரெண்டு முட்டையை அவிக்கப் போட்டேன்.. முட்டை அவிப்பதில் ஒரு சின்ன டிப்ஸ் இருக்குங்க.. முட்டை உடையாம இருக்கணும்னா தண்ணி ரேபிட் சூடு ஆகக் கூடாது.. முட்டை ஃப்ரிஜ்ல இருந்ததுன்னா எடுத்து தண்ணில போட்டு வச்சிரணும்.. கொஞ்ச நேரம் கழிச்சு, அடுப்பைப் பத்த வச்சு, முட்டைக்கு மேல ஒரு ஒண்ணரை இஞ்ச் தண்ணி இருக்கற மாதிரி தண்ணி ஊத்தணும்.. அதிகமா போச்சுன்னா முட்டை கொதிக்கற தண்ணில குதிச்சு உடைய சான்ஸ் இருக்கு,, கம்மியா போச்சுன்னா முட்டை அடிப்பாகத்தில் ஓவரா கட்டியாகி,, மேல கொழ கொழன்னு கொல்லும்..

  அதே மாதிரிதான்.. முட்டையை அவசரமா உரிக்கணும்னா அவிச்ச முட்டையை ஓடும் பச்சைத்தண்ணியில லைட்டா காட்டுணமின்னா, ஓடு குளிரும்.. அப்ப டக்குன்னு ஒரு ஓரமா தட்டி உரிக்க ஆரம்பிச்சா நல்லா உரிக்கலாம். சூடு ஆறும்னு காத்துகிட்டு இருந்தா காத்து கிட்டேதான் இருக்கணும்..

  சில பேர் முட்டைய வெட்டி, உப்பு , மிளகுத்தூள் போட்டு நிதானமா ரசிச்சுச் சாப்பிடுவாங்க சிலபேர் வெள்ளைதனியா பிச்சி எடுத்து சாப்டுட்டு அப்புறம் மஞ்சள் கருவை மட்டுமே தனியா மாவு மாதிரி ரசிச்சு சாப்பிடுவாங்க.. சிலபேர் அப்படியே சகட்டு மேனிக்கு கடிச்சு சாப்பிடுவாங்க..

  ஆனா, வெட்டி, உப்பு மிளகு போட்டு அழகுபடுத்தி, ரசிச்சு சாப்பிடனுங்க முட்டைய.. அப்பதானுங்க திருப்தி இருக்கும்..

  அப்படித்தான் சாப்பிட்டு விட்டு, ஆஃபீஸூக்கு கிளம்பினேன்..

  கதவுக்குப் பின்னால இருந்த ஷீ செல்ஃப்ல இருந்து ஷூ பாலிஷ் எடுக்க (அட ஷூதான் கதவு பக்கத்தில இருக்கே.. ) கதவை மூட

  கதவின் பின்னால அது இருந்தது...


  தொடரும்.
  Last edited by தாமரை; 05-01-2008 at 11:42 AM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  137,355
  Downloads
  39
  Uploads
  0
  பால் பாக்கெட்தானே...
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  32,906
  Downloads
  288
  Uploads
  27
  என்ன அது?? சீக்கிரம் சொல்லுங்க.. பால் பாக்கெட்டா? பாம்பா? பல்லியா? பாட்டிலா?
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
  Join Date
  20 Dec 2005
  Location
  மும்பை
  Posts
  3,551
  Post Thanks / Like
  iCash Credits
  32,906
  Downloads
  288
  Uploads
  27
  தாமரை(க்குள்) மறைந்(த்)த பொருள்???
  சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  11,708
  Downloads
  37
  Uploads
  0
  அப்போ தண்ணிக்குள்ள கொஞ்சம் புளி போட்டு கொதிக்கவைத்து
  விளக்கினால் கரை எல்லாம் போய் விடுமா...
  இது தெரியாம தண்ணிய பிடிச்சி அப்படியே ஒருநாள் பூரா ஊற வச்சிட்டு அப்புறமா விளக்குவேன்...

  ஹீ..ஹீ முட்டை அவிக்கும் போது இன்னும் கொடுமை..
  எனக்கு எவ்ளோ தண்ணி ஊத்தனுமின்னு தோணுதோ அவ்ளோ ஊத்துவேன்....

  இனிமே நீங்க சொன்னமாதிரி செய்து பாக்குறேன்
  ஒழுங்கா மட்டும் ஒர்க்அவுட் ஆகலையோ....
  சொல்வேந்தே... காரணம் சொல்வேந்தேன்னு
  கிளம்பி வந்துருவேன்..... பீ கேர் புல்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,951
  Downloads
  183
  Uploads
  12
  அந்த 7 நட்கள் - பாகம் 4  கதவுக்குப் பின்னால் தர்மபத்தினி கடமையாய் எழுதி வைத்த போஸ்ட் இட் நோட்டுகள்.

  1. கேஸை ஆஃப் செய்யவும்
  2. ஹீட்டரை ஆஃப் செய்யவும்
  3. பின் கதவு சரியாக சாத்தியிருக்கா கவனிக்கவும்
  4. அனைத்து ஃபேன்களையும் ஆஃப் செய்யவும்
  5. டெலிஃபோன் பில் கட்டவும்
  7. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவும்
  8. ஃபிரிட்ஜ் கதவை மூடி வைக்கவும்
  9. கதவு பூட்டி இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளவும்
  10. கரண்ட் பில் கட்டவும்
  11. செருப்பை வீட்டுக்கு வெளியே மட்டும் உபயோகிக்கவும்


  யோசிச்சி யோசிச்சு எழுதின மாதிரி நான் எதெதை மறப்பனோ அத்தனையும் எழுதி ஒரு இருபது அம்சத் திட்டமே போட்டு வச்சிருந்தாக..

  கடமையே கண்ணான நான் அதையெல்லாம்...

  கண்டுக்காம ஷூவை மாட்டிக் கொண்டு கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன்..


  டீ இல்லாததால் தலை விண் விண் எனத் தெரித்தது.. போகிற வழியில் ஒரு டீக்கடையில் டீ சாப்டு விட்டு ஆஃபீஸூக்குப் போயாச்சு..


  வியாழக் கிழமை எப்பவுமே பிஸி நாள்.. காலையில உள்ள போன உடனே மீட்டிங்...


  சின்ன சப்தமெல்லாம் தலை வலிக்கறப்ப பெரிய கூச்சலாத் தோணும்.. ஒண்ணுக்கு நாலு மடங்கா.. அதேதான் ஆச்சு,

  எப்பதான் மீட்டிங் முடியுமோ திரும்பத் திரும்ப அதே முட்டாள்தனமான சந்தேகங்கள் எங்கிருந்து தான் வருமே.. டேய் முடிங்கடா சீக்கிட்ரம் பசி வயித்தைக் கிள்ளுதுறா....

  எப்படியோ தப்பித்து 12:30 க்கு கேண்டீன்ல ஆஜர்.. ஃபுல் மீல் கட்டை முடிச்சு, தண்ணி குடிச்சு. காலாற ஒரு வாக்கிங் போய்ட்டு வந்தா..

  வியாழக் கிழமையாச்சே டீம் மீட்டிங். ..அப்புறம் மேனேஜ்மெண்ட் மீட்டிங்
  வரிசை கட்டி கான்ஃபெரன்ஸ் ரூம்ல இருந்து கன்ஃபெரன்ஸ் ரூமிற்கு ஓடிகிட்டே இருக்கேன்.

  எல்லாம் முடிஞ்சு மெயில்பாக்ஸை ஓபன் பண்ணினா அங்க ஒரு முன்னூறு மெயில் என்னப் பாரு என் அழகைப் பாருன்னு..

  எனக்கு ஒரு நல்லப் பழக்கம்.. மெயில் ஓபன் பண்ணினா ஒண்ணு பதில் எழுதிருவேன்.. இல்ல டெலீட் பண்ணிருவேன்.. இல்லைன்னா ஆக்சன் ஐடம் போட்டுடுவேன்.. பின்ன இத்தனை மெயிலை 2:00 மணி நேரத்தில சமாளிக்கிறது சும்மாவா?

  இன்னிக்குக் கொஞ்சம் அதிக மெயில்தான்.. படிச்சு முடிக்கவே மணி 8:00 ஆயிடுச்சி.. பசி வயித்தக் கிள்ள..

  கார் இன்றும் அதே பார் வாசலில் போய் நின்றது.


  தொடரும்.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,951
  Downloads
  183
  Uploads
  12
  அந்த ஏழு நாட்கள் - பாகம் 5


  பார் முன் கார் நின்றபோது லகலகலகலகலகலக லகலகலகலகலகலக என்று சத்தம் வர.. (அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க) எடுத்தேன்..

  பத்தினிதான்

  ஏங்க வீட்டுக்கு வந்தாச்சா? எப்படி இருக்கீங்க என்று ஆரம்பிக்க

  இல்லம்மா ஆஃபீஸ்ல இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு கான் கால் இருக்கு,, அது முடிய எப்படியும் இண்ணும் ஒண்ணரை மணி நேரம் ஆகும் அப்புறம் எங்கயாவது சாப்டுட்டு தான் வீட்டுக்குப் போகணும்...

  இது பொய்யா மெய்யான்னு கேட்கற உங்களுக்கே புரியலை இல்லை. அந்தப் பக்கம் இருக்கிற அம்மணியும் இது பொய்யா மெய்யாங்கற கன்ஃபியூசன்லியே போனைக் கட்பண்ண..

  தினம் தினம் இப்படி பாருக்கெல்லாம் போககூடாது.. .எனக்குள்ள இருந்த அவன் எனக்கு அறிவுரை சொல்ல பணிவுடன் கேட்டுக் கொண்டே உள்ளே போனேன்,

  வழக்கம் போலத்தான்....

  ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாச்சே.. இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்கு? 5 நாள்.. 5x120 = 620... ஆக

  பாத்தீங்களா பசங்க பக்குன்னு பத்திகிட்டானுக நீங்கதான் முழிக்கிறீக.. அதாங்க ஒரு நாளைக்கு ரெண்டு லார்ஜ்னா, 5 நாளைக்கு ஒரு ஃபுல்..

  இந்த கணக்கு கூடத் தெரியாதா?

  ஆமாம், ஹீரோ இருந்தா மட்டும் போதுமா, ஹீரோயின், வில்லன், காமெடியன், எல்லாம் வேணுமே! கடைசி நிமிடத்தில அந்த கடைக்குப் போய் சாஃப்ட் டிரிங்க்ஸ், கொறிக்க..

  அப்புறம், ஃப்ரோசன் சிக்கன் லாலிபாப்ஸ், ஹைதராபாத் பிரியாணி, அது இதுன்னு அஞ்சு நாளைக்குக் கால்குலேட் பண்ணி எல்லாம் வாங்கியாச்சி..

  இனிக் கவலையில்லை.. சாயங்காலம் ஆனா வீட்லயே எல்லாம் பண்ணிக்க்லாம்.. நல்ல பையனா காலா காலத்தில வீடு போய் நிம்மதியா சாப்டுகிட்டே சாப்பிடலாம்...

  இன்னிக்குக் கொஞ்சம் தெளிவாவே இருந்தேன்..

  தலைவலி இன்னும் லேசா இருந்து பால் கூப்பனை எடுத்து வைக்க நினவு செய்தது..

  வீட்டை பூட்டிக் கொண்டு, ஹாலில் உட்கார்ந்து டிவி யை ஆன் செய்தேன்..

  எல்லாச் சேனல்களையும் சுத்தி வந்து நல்ல தெலுங்கு பாடல் சேனலா செலக்ட் பண்ணி போட்டேன்,,


  --------------------------------------------

  எதோ கண்ணுக்கு முன்னால மின்மினிகள் சுத்தி வர்ரா மாதிரி வெளிச்சங்கள் அணைந்து அணைந்து எறிய எதையோ வாங்கச் சொல்லி யாரோ ஒரு பொண்ணு ரெகமெண்ட் பண்ணிகிட்டு இருந்தா...


  தொடரும்
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  15,770
  Downloads
  62
  Uploads
  3
  ம்ம்... அதென்ன கான்கால் தாமரை? எப்படித்தான் யோசித்துப் பார்க்கிறீர்களோ..?

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  30,678
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by தாமரை View Post
  அந்த 7 நாட்கள் - பாகம் 3


  [FONT="Arial Unicode MS"][COLOR="Green"][SIZE="3"]ரெண்டு முட்டையை அவிக்கப் போட்டேன்.. முட்டை அவிப்பதில் ஒரு சின்ன டிப்ஸ் இருக்குங்க.. முட்டை உடையாம இருக்கணும்னா தண்ணி ரேபிட் சூடு ஆகக் கூடாது.. முட்டை ஃப்ரிஜ்ல இருந்ததுன்னா எடுத்து தண்ணில போட்டு வச்சிரணும்.. கொஞ்ச நேரம் கழிச்சு, அடுப்பைப் பத்த வச்சு, முட்டைக்கு மேல ஒரு ஒண்ணரை இஞ்ச் தண்ணி இருக்கற மாதிரி தண்ணி ஊத்தணும்.. அதிகமா போச்சுன்னா முட்டை கொதிக்கற தண்ணில குதிச்சு உடைய சான்ஸ் இருக்கு,, கம்மியா போச்சுன்னா முட்டை அடிப்பாகத்தில் ஓவரா கட்டியாகி,, மேல கொழ கொழன்னு கொல்லும்..
  ஒரு டீ போட துப்பு இல்லை...எதில முட்ட வேக வைக்க டிப்ஸ் வேற...முட்டை வேக வைக்கும் போது முக்கியமா ஒண்ணு செய்யணும்...கோழிகிட்ட மன்னிப்பு கேக்கணும்...அதப் பண்ணனீங்களா?

  அது சரி "செவ்வரியோடிய கண்கள்" அப்படீன்னா இது தானா?

  ரொம்ம சுவாரஸியமா இருக்கு தாமரை...
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,951
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by யவனிகா View Post
  ஒரு டீ போட துப்பு இல்லை...எதில முட்ட வேக வைக்க டிப்ஸ் வேற...முட்டை வேக வைக்கும் போது முக்கியமா ஒண்ணு செய்யணும்...கோழிகிட்ட மன்னிப்பு கேக்கணும்...அதப் பண்ணனீங்களா?

  அது சரி "செவ்வரியோடிய கண்கள்" அப்படீன்னா இது தானா?

  ரொம்ம சுவாரஸியமா இருக்கு தாமரை...
  மன்னிச்சிடுங்க.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •