Results 1 to 6 of 6

Thread: பேயோட்ட உத்தரபிரதேச அரசு நடத்தும் பூஜை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் தேவிப்ரியா's Avatar
    Join Date
    08 Aug 2007
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    22
    Uploads
    0

    பேயோட்ட உத்தரபிரதேச அரசு நடத்தும் பூஜை

    பேயோட்ட உத்தரபிரதேச அரசு நடத்தும் பூஜை
    December 12th, 2007 (Satrumun)

    உத்தரபிரதேச அரசு அலகாபாத்தில் புதிதாய் கட்டப்பட்ட பாலத்திலிருந்து மக்கள் குதித்து தற்கொலை செய்வதைத் தடுக்க, காத்து கருப்பை விரட்ட, விசேட பூஜை மேற்கொள்ளவிருக்கிறது.

    5.5 கிமீ தூரமுள்ள இந்தப்பாலம் யமுனை ஆற்றின் குறுக்கே டென்மார்க் நிறுவனமொன்றால் ரூ.500 கோடிக்குக் கட்டப்பட்டது.

    கட்டிய நாள் முதல் 350 நபர்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இதனால் அரசு இத்தைகைய சடங்குகள் மூலம் கெட்டவற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக அலகாபாத் எஸ்டிஎம் ராஜேஷ் சிங் கூறினார். இதற்கு டென்மார்க் நிறுவன திட்ட மேலாளர் ராபர்ட் உத்வாத்தும் உடன்பட்டார். இந்தப்பாலம் இன்னும் அதிகாரபூர்வமாக திறக்கப்படாததும் சரியான சகுனம் இல்லை என்கிறார் அவர்.

    மேலும்.http://in.news.yahoo.com/071212/211/6oc7f.html//


    நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு தானே?

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சில நாட்களுக்கு முன் தொலைக் காட்சியில் செய்தியறிக்கையில் வாசிக்கப் பட்ட ஒரு செய்தி கேட்டு உள்ளம் பதை பதைத்தது. பிறந்து சில நாட்களேயான ஒரு பச்சிளங்குழந்தை நோயுற்றிருந்தமையால் அதற்கு பேய் பிடித்துவிட்டது என பழுக்க காச்சிய கம்பியால் பல இடங்களில் சூடு போட்டிருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த அந்த குழந்தை இறந்து விட்டது என்று இறந்த அந்த குழந்தையையும் காணொளிப் படுத்தினார்கள். அந்த பச்சைக் குழந்த உடலெல்லாம் நெருப்பாற் சுட்ட வடுக்கள். சிறு தீப்பொறி பட்டாலே தாங்க முடியாதுள்ளது நம் தடித்த தோலினால், பாவம் அந்த பிஞ்சு என்ன பாடு பட்டிருக்கும்....???

    அந்த குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவதையும் அந்த குழந்தையின் பெற்றோரின் அறியாமையை நினைத்து வருந்துவதையும் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    உண்மையான தெய்வ நம்பிக்கை இருந்தால்.. போதும்..

    இதற்கு அரசு பணம் செலவழிப்பது.. வருத்தப்படவேண்டிய விசயம்...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அரசாங்கமே இப்படி செய்கிறதா? அதுவும் மாயாவதி அரசா? ம் என்ன செய்ய சில சமயம் மக்களை திருப்திபடுத்த இப்படி கோமாளி வேசம் போடுகிறார்களோ என்னவோ.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர் View Post
    உண்மையான தெய்வ நம்பிக்கை இருந்தால்.. போதும்..
    இதற்கு அரசு பணம் செலவழிப்பது.. வருத்தப்படவேண்டிய விசயம்...
    தெய்வ நம்பிக்கைக்கும், பேய் நம்பிக்கைக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது. இவர்களெல்லாம் சேர்ந்து நம் தேசத்தை கற்காலத்திற்கு கொண்டு போய்விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

    இந்தியாவிலிருந்து ஓட்டப்படவேண்டியது பாலப்பேய் அல்ல.. வறுமைப்பேய், சாதிப்பேய், மதப்பேய், காமப்பேய், இலஞ்சப்பேய், ஊழல் பேய்-னு நிறைய பேய்கள் இருக்கு..!!
    Last edited by இதயம்; 13-12-2007 at 05:29 AM.
    அன்புடன்,
    இதயம்

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உத்தரப் பிரதேசமா...............................அவர்கள் அப்படித்தான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •