Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 51

Thread: சாமக் கோடங்கி!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    Question சாமக் கோடங்கி!!!

    1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..

    நான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.

    வீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக் குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண் சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.

    வாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை தான்.


    இதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு நேரெதிரே சுடுகாடு.

    தொடரும்.
    Last edited by தாமரை; 24-07-2008 at 04:21 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காற்று பலமாக வீசினாலே சுடுகாடு தெரியும்... அப்படித்தானே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது, 100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப் புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு வருமாம். இந்த இடத்தில் வந்த உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால் இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.

    எங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..

    ஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச் சொல்ல வில்லை.

    அப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள் என்னையும் என் அண்ணனையும் எழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...

    கலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு உடுக்கை ஒலி..

    தொடரும்.
    Last edited by தாமரை; 24-07-2008 at 04:22 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வந்துட்டாருய்யா சாமக்கோடங்கி...

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆஹா ஆரம்பிச்சாச்சா..!
    இன்னிக்கு நான் தூங்கணும்.. காலையில படிச்சுக்கறேன்..

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இதையே சொந்த நாட்டில் இருந்து படிச்சிருந்தா முதுகுத்தண்டு சில்லிட்டு இருக்கும். தூக்கம் கெட்டு இருக்கும். கந்தர்சஷ்டி கவசம் கையில் அடைக்கலமாக நான் அதனுள் அடைக்கலாமாகி இருப்பேன். பில்டப்புக்காக இதை சொல்லல. எங்க வீட்டில் இருந்து பார்த்தால் குறிபிட்ட தூரத்துக்கு ஒருபக்கமாக தென்னந்தோப்புத்தான் தெரியும்..மறுபக்கம் வாழைத்தோட்டம் தெரியும். இராப்பொழுது வண்டுகள் சங்கீதத்தில் துணிவு என்னிலிரா..இப்போ பரவாயில்லை.. ஆரம்பமே திகிலுக்கு காரன்டி தருகின்றது..

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    முதல் பதிவு படிச்சிட்டேன்..
    இரண்டாம் பதிவு... படிக்க ஆரம்பிச்சதும், பார்த்து... பயந்து...
    நாளை படிக்க முடிவெடுத்துட்டேன்.
    கோடாங்கி இரவில் வந்தாலும் குறி சரியாய் சொன்னால் சரி தான்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி கொண்டுபோய் போட,

    பஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா
    பசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா
    தஞ்சம் நீயம்மா

    அப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..


    அடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம். எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு குறிசொல்லுவாராம்.

    என்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..

    (இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச் சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)

    பஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக் கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி வந்தது..

    அது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை.. ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்டர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை வரைதான்..

    அமாவாசை நாள் 11:00 மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...

    தொடரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நான் மட்டுமே விட்டில் இரவில் தனியே அறையில் அமர்ந்து இன்று முழுதும் இதை படித்து முடித்து விடவேண்டும் என்று ஆரம்பித்தால், அடடா!!!!!!!!!!!!!!!!!! எனக்கு நாமம்.

    கதையாசிரியர் இரவாச்சி நான் பேய் கதை எழுத மாட்டேன் என்று உறங்கச்சென்று விட்டார்.


    அந்த பழைய பங்களா கதைப்போல் ஆகாமால் இருக்கட்டும்.
    Last edited by அக்னி; 30-11-2007 at 10:48 PM. Reason: பதிவர் விருப்பத்திற்கிணங்க
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    திகில் பயணம் ஆரம்பிச்சிடிச்சி,அந்த ஆறடி உயரமும்,நீள அங்கியும்,நடுசாமமும் என்னவோ பண்ணுதே....இதுல காளி பூசையை வேற நடத்தப்போறாராம்.....சீட்டு நுனிக்கு வந்தாச்சு....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    ஆஹா.. பிளாஷ்பேக்கில் பேய் கதையா.. பயமுறுத்தாம சொல்லுங்க..

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    முதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக் காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுகிட்டது..

    இதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம் அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார் கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண் கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில் உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)

    நாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்.. உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப் பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும் பார்த்திடக் கூடாதாம்..

    பூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது.. என்னமோ சரியில்லை..

    அரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும் சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க

    வியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை அங்கியை நீட்டி வாங்கியவர்..

    அகோர பிணம் விழுது ஊரில
    அடங்காத ஆட்டம் ஆடப்போகுது
    ஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு
    ஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...

    எங்களுக்கோ வயிரெல்லாம் கலங்கிருச்ச்சி.,..

    தொடரும்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •