Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 57

Thread: இலக்கியச்சோலை.....!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தெரு முனையில் நுழையும் போதே பலகார வாசனை மூக்கை துளைத்தது. யாரு வீட்டுலப்பா இப்படி ஒரு விசேட சமையல்! எதும் பண்டிகை கூட இல்லியே? என்று மனதுக்குள் எண்ணியபடி நன்றாக வாசம் பிடித்தேன். ஹ்ம்ம் என் வீட்டுலயும் தான் ஒருத்தி இருக்காளே புருசன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ருசியா சமயல் பண்ணி குடுக்கணுமே ம்ம்ம் அதுக்கெல்லாம் கொடுத்து வச்சுருக்கணும். இனிமே அடுத்த பிறவில தான் இந்த ஆசை எல்லாம் நிறைவேறும் போலருக்கு.. என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தேன். அடடே என்ன அதிசயம் இது! .. இந்த வாசனை என்னோட வீட்டுலருந்துதான் வருது.. வீடுதவறி வந்துட்டனா? சுற்நும் முற்றும் பார்த்து ஒருதடவை உறுதிப்படுத்திக் கொண்டேன். மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தேன் எனக்கு முதுகு காட்டிக்கொண்டு என் மனைவி வேலையில் மும்முரமாக இருந்தாள். அடுப்பில் நெய் காய்ந்து கொண்டிருந்தது. நெய்யில் முந்திரியை போட்டுக்கொண்டிருந்தவள் என் வருகையை உணர்ந்து திரும்பி வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றாள்.
    வந்துட்டீங்களா வாங்க தண்ணி எடுத்து வச்சிருக்கேன் போய் கை; கால் கழுவிட்டு போய் திண்ணைல உக்காந்துருங்க தோ ரெடியாயிடும்
    ஆச்சரியம் தாளாமல்! என்;னடா என்ன விசேசம்? சமையல் எல்லாம் பலமாருக்கு. என்று கேட்டேன். அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது போய் தயாரா உக்காருங்க வந்து சொல்றன் முகத்தை தீவிர மாக வைத்துக் கொண்டு சொன்னாள்.
    சரி என்னமோ விசேசம் போலருக்கு . என்று கை கால் கழுவ சென்றேன். திடீரென்று மனதுக்குள் ஒரு கவலை அழுத்தமாய் வந்து அமர்ந்து கொண்டது. அய்யய்யோ இன்னிக்கி எதாவது விசேசமா? நான் மறந்துட்டனா? அப்புறம் அதுக்கு வேற ஒரு மூச்சு பாட்டு வாங்கி கட்டிக்கணும். மனதிற்குள் ஒவ்வொரு முக்கிய நாள்களாக வந்து போனது.. கல்யாண நாள் .. இல்லை காதலை சொன்ன நாள்? அதுவும் இல்லை .. வேற என்னோட பிறந்த நாள்? இல்லியே அது செப்டம்பர் 5 தானே ஒரு வேளை அவளோட பிறந்த நாளோ? இல்லியே மனதுக்குள் பல நினைவுகள் வந்து போனது சரி வருவது வரட்டும் சமாளிக்கலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு.. போய் சோபாவில் அமர்ந்தேன்.. சன்னலுக்கு வெளியே எதிர் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்கள் நான்கு பேராக சேர்ந்து சுவாரசியமாக பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் குதூகலப்பேச்சு கலகலப்பாக என் காதுவரை கேட்டுக் கொண்டிருந்தது.
    சட்டென்று மூக்குக்கு பக்கத்தில் வாசம் வீசியது தலை அதுவாக திரும்பியது விழிகள் வியப்பால் விரிந்தன.. எனக்கு முன்னால் தட்டு தெரிந்தது அதில் கேசரி, லட்டு, மைசூர் பாகு போன்ற இனிப்புகள் நிறைந்திருந்தது தட்டை ஒரு கரம் பற்றியிருந்தது. இன்னொரு கரத்தில் ஒரு துண்டு மைசூர் பாகு இருந்தது அதுவும் என் வாய்க்கு அருகில் நீண்டிருந்தது.
    இந்தாங்க சாப்பிடுங்க அட காதுகளுக்கு கூட சுவையறியும் தன்மை வந்துவிட்டதே என் காதில் தேன் பாய்கிறதே.. காது இனித்தது தலை நிமிர்ந்தது ஆகா மஞ்சளில் குளித்த வெள்ளை ரோசாவுக்கு கண், காது, மூக்கு வாய் படைத்தது யாhர்.. வெட்கம் தோய்ந்த என் மனைவியின் முகம் தெரிந்தது.
    ஆகா செல்வா.. ரொம்ப நாளக்கி அப்புறமா அதிர்ஷ்டம் உன்பக்கம் வீசுதுடா கப்புனு புடிச்சுக்க. உள்ளுணர்வு எச்சரிக்க வேகமாக கரத்திலிருந்த பாகை விழுங்கிவிட்டு அவள் கரம் பற்றி தட்டை வாங்கி வைத்துவிட்டு இழுத்து பக்கத்தில் அமர்த்தினேன். இடது கையால் அவள் தோளை அணைத்துக் கொண்டு வலக்கரத்தால் அவள் முகத்தில் வந்து படர்ந்த முடிக்கற்றைகளை விலக்கியபடி அவள் கன்னங்களை வருடிக்கொண்டே என்னடா செல்லம் என்ன விசேசம் இனிப்பு எல்லாம் தூள்பறக்குது.. இன்னிக்கி யாரோடவும் பிறந்தநாள் கூட இல்லியே..
    சட்டென்று என் கரத்தைப் பற்றி தன் கரங்களுக்குள் சிறைவைத்துக் கொண்டாள். மெதுவாக என் விரல்களை நீவியபடி சொல்லத்தொடங்கினாள்.
    என்ன மன்னிச்சுருமா? உன்ன மன்னிக்கணுமா எதுக்கு? இல்லமா உனக்கு தமிழ் ரொம்ப புடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் இப்பல்லாம் நீ கதை, கவிதை, கட்டுரைண்ணு பேசும்போது நான் காது குடுத்து கேக்குறது இல்ல. உன்ன உற்சாகப் படுத்துறது இல்ல.. ஆனா நான் தப்பு பணறண்ணு தோணுது. முன்னால காதலிக்கும் போது பாராட்டுன அளவுக்கு அப்புறமா உனக்கு நான் காது குடுக்குறதே இல்ல..
    நான் மௌனமாக அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. அவள் தலைகுனிந்தபடியே தொடர்ந்தாள்
    நேத்திக்கு அம்மாவீட்டுக்கு போனப்ப என் பழைய தோழி சுசிலாவ பார்த்தேன். ஆவ உன்னபத்தி நெறய சொல்றா.. நீ எதோ சைட்ல எழுதுறியாமே அது நல்;லாருக்குண்ணு சொன்னா. அடுத்ததா நீ என்ன எழுதப்போற, என்கிட்ட படிச்சு காட்டுனியாண்ணு கேட்டா. முதல்ல நீதானே வாசிப்ப எதாவது விமர்சனம் பண்ணுவியா?ண்ணு என்கிட்டயே கேட்டா எனக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியல.. அப்போதான் உன்னவிட்டு ரொம்ப விலகி வந்துட்டனோண்ணு தோணுச்சு உன்ன பத்தி மத்தவங்க சொல்லி கேக்க வேண்டியிருக்கேணு கஷ்டமாருந்துச்சு
    என்னோட நிலைய வர்ணிக்க தமிழ்ல வார்த்தைகளே இல்லீங்க உண்மையிலே எந்தவொரு மனுசனுக்கும் தன்னோட மனைவிகிட்டருந்து பாரட்டு கேக்குறதவிட சந்தோசமான விசயம் வேற இல்லீங்க. மத்தவங்க கிட்டருந்து பாராட்டு வாங்குறது பெரிய விசயமே இல்ல. தன் மனைவியே மனசார பாரட்டறது எவ்ளோ பெரிய விசயம். அதுவும் என் மனைவி மன்னிப்பே கேக்குறா அப்படிண்ணா என் நிலமை எப்படிருக்கும்ணு நீங்களே நெனச்சுக்குங்க. கொஞ்சம் தலைக்கனம் கூடிப்போனதென்னவோ உண்மைதான்.
    அதுனால இனிமே நான்தான் உங்களோட எழுத்துக்கள முதல்ல படிப்பேன். சுரி சொல்லுங்க அடுத்ததா இலக்கிய சோலைல என்ன எழுதப்போறீங்க
    எனக்கு அப்படியே தூக்கி தலைக்குமேல வச்சாப்புல இருந்துச்சு என்னமோ பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுனமாதிரி மெதப்புல தொண்டைய செருமிக்கிட்டே பேச ஆரம்பிச்சேன் வரக்கூடிய பின்விளைவுகள் எதப்பத்தியும் யோசிக்காம







    அதோ வெளிய பந்தடிக்குறாங்களே அவங்கள பாத்தா உனக்கு என்ன தோணுது
    எனக்கு பந்து விளையாடுறாங்கண்ணு தோணுது ஏன் உனக்கு வேற ஏதும் தோணுதா? (அவள் குரலில் தொனத்த சிறிய மாற்றம் அப்போது எனக்கு தெரியவே இல்லை)
    எனக்கு குற்றால குறவஞ்சில சில பாடல்கள் ஞாபகம் வருது.

    கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
    முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
    சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
    பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்திலானே


    (பூமுடிந்த கூந்தல் கலைந்து விழ முன்னும் பின்னுமாக மூன்று நான்கு அடிகள் நடந்து தனது தோழிப்பெண்களுடன் சேர்ந்து சந்தோசமாக களித்துப் பேசியபடி வசந்தவல்லி பந்தடிக்கும் காட்சியைக் காண கண்கள் ஆயிரம் எனக்கு இல்லையே)

    பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தையாகவே
    மந்தர முலைக ளேசலாட மகரக் குழைகளுசலாடச்
    சுந்தர விழிகள் பூசலாடத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்)

    பொன்னி னொளிவில் வந்துதாவிய மின்னினொளிவு போலவே
    சொன்ன யத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக் கூடி
    நன்ன கர்த்திரி கூடம் பாடி நகுர்தத் திகுர்தத் திகுர்தத் தொம்மெனப் (பந்)


    (காதிலணிந்த மீன்வடிவம் கொண்ட கம்மல்கள் ஊஞ்சல் போல ஆட
    அழகான கண்கள் இரண்டும் தங்களுக்குள் சண்டையிட
    பெரிதாக மூச்சு விடுவதால் மார்புக்கூடு ஏறிஇறங்க
    பொன்னிலிருந்து தெறித்து வரும் மின்னல்போல
    பறந்துவரும் பந்தினைத் தேடி தேடி தோழியருடன் சேர்ந்து பந்தடித்தாள்)

    ஏதோ பெரிய கதாகாலட்சேபம் முடித்த பாவனையோடு சிறிது கேசரி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தேன்

    (இந்த கதய இதோடே நிறுத்திருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும் .. ஆனா விதி யாரை விட்டது?)










    அதோ கைல பந்து வச்சுகிட்டு பொண்ணு ஒரு பொண்ணு வராளே அவகிட்ட எத்தன பந்திருக்கு சொல்லு?
    இதென்ன கேள்வி ஒண்ணு தான்
    இல்லை ஐந்து
    ஐந்தா? கேள்விக் குரலில் சந்தேகம் தொனித்தது எனக்கோ அது இனித்தது.

    வருசங்க வீதி தன்னில் வசந்தபூங்கோதை காலில்
    இருபந்து குதிகொண்டாட இருபந்து முலைகொண்டாட
    ஒருபந்து கைகொண்டாட ஒரு செப்பி லைந்து பந்துந்
    தெரிகொண்டு வித்தை.


    வெளியே பார்த்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்த என் மனதுக்கு ஏதோ விபரீதம் என்று தோன்ற விருட்டென்று திரும்பினேன். பத்திரகாளி அவதாரமாய் என்னவள் என்முன்னால் நின்று கொண்டிருந்தாள். அப்போது தான் என் புத்திக்கு உறைத்தது.. இடுப்பில் கைவைத்து நின்று கொண்டு முறைத்துப் பார்த்தவள். ஏதும் பேசாமல் விடுவிடென்று உள்ளே சென்றாள்.
    கொஞ்ச நேரத்துக்கு உள்ளிருந்து மேசை இழுபடும் சத்தமும் புத்தகங்கள் கிழிபடும் சத்தமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஏதோ எரியும் வாசம் வந்தது. மனதிறகுள் நினைத்துக் கொண்டேன் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு மீண்டும் புத்தகங்கள் வாங்க பணம் சேமிக்க வேண்டியது தான் என்று.

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    தேவை தான் செல்வாவுக்கு இது தேவை தான்...
    எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம வெறும் பேப்பரை மட்டும்
    கிழிச்சி எறிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு செல்வா...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by மலர் View Post
    தேவை தான் செல்வாவுக்கு இது தேவை தான்...
    எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம

    வெறும் பேப்பரை மட்டும்
    கிழிச்சி எறிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு செல்வா...
    ஹி...ஹி.... கைய கால .. உடச்சிட்டு கடினப்படுறது .. மறுபடியும் அவங்க தானுங்களே..... ஒருதடவ பட்ட அனுபவம் போதுமே...ஹி..ஹி....

    ஆனாலும் உங்களுக்கு எவ்ளோ... நல்லமனசு....... புல்லரிக்குதுங்க....

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமை செல்வா அருமை மிக அருமை, மனைவி இனிப்பு பரிமாரிய அனுபவத்தை சூப்பராக விளக்கி இருந்தீர்கள். கடைசியில ஓவரா இலக்கிய குனத்தை காட்டி அடிவாங்கி விட்டிர்களா.

    Quote Originally Posted by செல்வா View Post
    உண்மையிலே எந்தவொரு மனுசனுக்கும் தன்னோட மனைவிகிட்டருந்து பாரட்டு கேக்குறதவிட சந்தோசமான விசயம் வேற இல்லீங்க.
    உன்மைதானுங்க, ஏதோ நீங்க எல்லாம் கவிதை டேலன்டு வச்சிருக்கீங்க, இலக்கனம் அப்படி இப்படினு பேசி பாராட்டு வாங்கிக்குவீங்க (மிஸ்பையர் ஆச்சுனா அடியும் வாங்கிக்குவீங்க).
    நான் எப்படீங்க பாராட்டு வாங்கரது, எனக்கு இந்த கவிதை கதை எல்லாம் வராதுங்க, விவாத தான் பன்னுவேன், அத அங்க சொல்ல ஆரம்பிச்சாலே அடிதான் விழுது. ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க.

    Quote Originally Posted by மலர் View Post
    எழுதின கையை பேசின வாயை எல்லாம் உடைக்காம
    மலர் ஏன் இந்த கொலைவெறி பாவம் அப்பாவி தமிழ் மொழி பற்றுடைய இலக்கியவாதியா இப்படியா சொல்லரது. இரு உனக்கு லொள்ளபுரி வரலாற்றில் வக்கறேன் ஆப்பு

    எனக்கு பள்ளியில் படித்த இந்த ஒரு பாட்டு மட்டுமே நினைவில் எப்பவுமே நினைவில் இருக்கிற*து, இதை தான் மனைவியிடம் அடிகடி பாடிகாட்டுவேன் ராகத்துடன்.

    பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்
    குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட
    இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட
    மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.


    ஆனா இதன் முழு அர்த்தத்தை கேட்டு எனக்கு நோஸ் கட் கொடுத்து விட்டாள் என் மனைவி, இதன் விளக்கு உரையை தந்து உதவ வேண்டும். எனக்கு இலக்கிய அறிவு இருக்குனு போய் இன்னிக்கே பந்தா விடலாம்னு தான்
    Last edited by lolluvathiyar; 15-12-2007 at 06:02 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    இந்தத் திரியவே நான் லேட்டாத்தான் பாத்தேன்...நல்ல விசயம்...கண்டிப்பாக செல்வாவை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

    மலரு சந்தடி சாக்கில என்ன வாறாதே..பின்னால வருத்தப்படுவே.....
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    இந்தத் திரியவே நான் லேட்டாத்தான் பாத்தேன்...நல்ல விசயம்...கண்டிப்பாக செல்வாவை பாராட்டித்தான் ஆகவேண்டும்.
    எதுக்குங்க அக்கா..... எவ்வளவு அடி வாங்குனாலும் மறைக்காம... சொல்லிடறேண்ணா..... ஹி...ஹி... சும்மா சொன்னேன்..
    நன்றி அக்கா..

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    உன்மைதானுங்க, ஏதோ நீங்க எல்லாம் கவிதை டேலன்டு வச்சிருக்கீங்க, இலக்கனம் அப்படி இப்படினு பேசி பாராட்டு வாங்கிக்குவீங்க (மிஸ்பையர் ஆச்சுனா அடியும் வாங்கிக்குவீங்க).
    பெரும்பாலான நேரம் இதுதாங்க நடக்கும்.....

    மலர் ஏன் இந்த கொலைவெறி பாவம் அப்பாவி தமிழ் மொழி பற்றுடைய இலக்கியவாதியா இப்படியா சொல்லரது. இரு உனக்கு லொள்ளபுரி வரலாற்றில் வக்கறேன் ஆப்பு
    அப்படி கேளுங்க வாத்தியார்....

    மிக்க நன்றி..... வாத்தியாரய்யா.. உங்க பாராட்டுக்களுக்கு...

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஆச்சு கடைசியா நான் கவிதை கதைண்ணு பேனா எடுத்து ஒரு மாசமாச்சு. என்னங்க பண்றது நடந்து முடிஞ்ச உள்நாட்டு கலவரத்தோட பாதிப்பு இன்னும் அடங்குன பாடில்ல. மேல நடந்த நிகழ்ச்சிக்கு அப்புறமா அலுவலகம் போகும் போது தவிர மத்த நேரத்துல பேனாஇ பேப்பர் போன்ற பொருள எல்லாம் தொடுறதுக்கே அனுமதி இல்ல. செய்தித்தாள் கூட வெப்சைட்லதான் போய் படிக்குறன்னா பாத்துக்குங்க.

    ஒரு நாள் இராத்திரி தூங்க ரொம்ப நேரமாயிருச்சு.. போய் படுத்தா தூக்கம் வரல (நீங்க நெனைக்குறது தப்பு கொசுத்தொல்லை இல்லீங்க என் பொண்டாட்டியோட குறட்டை தொல்லை தான்)

    எதாவது எழுதியே ஆகணுமுண்ணு மூளை எல்லாம் பரபரக்குது.(அட உனக்கு மூள எல்லாம் இருக்கா? ஷ்ஷ் சத்தம் போடாதீங்கப்பா என் பொண்டாட்டி முழிச்சுக்கப் போறா அப்புறம் எங்கிட்ட இல்லாதது எப்படி உங்கிட்ட இருக்கலாம்ணு புடுங்கிப்பா).
    கணிணிக்கு உயிர்கொடுத்து.. மன்றத்துல நுழைஞ்சு... என்ன சொல்லாம்ணு யோசிக்கும் போது. ஒண்ணுமே உதயமாகல.... என்னடா ராமா இது எனக்கு வந்த சோதனை அப்படிண்ணு வாய்விட்டே சொல்லிட்டன்.... என்னடா ராமா? அட ராமா?... அட இராமனே... வழிகாமிச்சுட்டான்... இராமயணத்திலருந்து சில பாடல்கள்..உடனே... மூளையின் சேமிக்கப்பட்ட செல்களிலிருந்து விடுபட்டு மனதில் படமமாய் விரிந்தன...

    விதியினை நகுவன அயில் விழி பிடியின்
    கதியினை நகுவன அவர் நடை கமலப்
    பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ்
    மதியினை நகுவன வனிதையர் வதனம்.


    (விதியைப் பார்த்து சிரிக்கிறது அவள் கண்கள்இ யானையின் நடையைப்பார்த்து சிரிக்கிறது அவள் நடைஇ
    குளத்தில் குவிந்திருக்கும் தாமரை மொக்குகளைப் பார்த்து சிரிக்கிறது அவளுடைய கொங்கைகள்இ
    வுhனில் உலாவும் வெண்ணிலவினை பார்த்து சிரிக்கிறது அவள் முகம். அதாவது அவற்றின் அழகு எதுவும் அவள் அங்கங்களின் அழகுக்கு இணையாகவில்லையாம்)

    பகலினோடு இகலுவ படர் மணி மடவார்
    நகிலினோடு இகலுவ நளி வளர் இளநீர்
    துகிலினோடு இகலுவ சுதை புரை நுரை கார்
    முகிலினோடு இகலுவ கடி மண முரசம்


    (பகலைப் போல் ஒளிர்கிறது அவள் அணிந்துள்ள ஆபரணங்கள் இ நன்கு வளர்ந்த இளநீரைப் போலுள்ளது அவள் மார்புகள்இ நுரையைப் போலுள்ளது அவள் அணிந்துள்ள ஆடைஇ அவள் மணம் புரிவதற்கென முழங்கப்படும் முரசத்தின் ஒலியானது கார்மேகத்தின் இடியொலியை ஒத்துள்ளது)
    .
    ஒருவாறு..... மனஅமைதி கிடைத்தார்போல் உணர.. கைகளிரண்டையும்.. தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்தேன்.... உயர்த்திய கரங்கள் மறுபடி கீழே வரமறுக்க.. என்னாயிற்று என்று திருமபிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி.... இரண்டு வளைக்கரங்கள்.. வலுவாகப் பிடித்துக்கொள்ள...

    மனதிற்குள்..(மாட்டுனாண்டா..மானஸ்தன்..)

    "ஏன்யா.... எனக்கா மூளை இல்ல....? உமக்கு மட்டும் ரொம்பவே மூளை இருக்கா.. பாரும் போய் நீரு வாங்கிப்போட்டுருக்குற.. காய்கறிகள போய் பாரும் அதுசொல்லும்.... உம்ம மூளையோட இலட்சணத்த........................
    ( ஏன் இவ்வளவு நீளத்துக்கு புள்ளிகள்னு பாக்குறீங்களா? அதுக்கு மேல அவங்க பேசுனதெல்லாம் எங்களுக்குள்ள மட்டும்.ஹிஹி?) "

    மன்றத்து உறுப்பினர் ஒருத்தர் புலம்புறது கேட்குது
    "அடபாவமே. அப்புறமும் ஏண்டா இப்படி நீயும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டத்துக்குள்ளாக்குற?"

    என்னங்க பண்ணுறது..
    ஆடிய காலும் பாடுன வாயும் சும்மாருக்காதுண்ணு கேட்டுருப்பீங்க அதோடு கூட எழுதுன கையும் சேர்த்துக்கோங்க ...!

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    எப்பவும் பொண்ணுங்களப் பத்திதான் எழுதுவியாடா?
    வேற எதும் எழுதமாட்டியா?
    அப்டிண்ணு நெறய பேரு நெனச்சதால.(ஹி..ஹி.. இந்த தடவ அடிகொஞ்சம் அதிகமாயிடுச்சு.. அது சரியாகுற வர நல்லபுள்ளயா இருக்கலாம்ணு தான்..)
    கொஞ்சம் வித்தியாசமா சில பதிவுகள் கம்பராமாயணப் பாட்டு எழுதுனதால அதோட தெடர்ச்சியா சில கம்பரின் கவிதைகள்

    என்னப்பொறுத்தவரை திருக்குறள், சிலப்பதிகாரத்துக்கு அடுத்தபடியா தமிழோட சிறந்த புத்தகம் கம்பராமாயணம்தான். ஆனா கவிநயம் பாக்கும்போது கம்பர் மத்த எல்லாரயும் விட முதல்ல இருக்காரு. கவிச்சக்கரவர்த்திண்ணு சொல்ல சரியான ஆள் தான்.
    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்ணு சொல்லுவங்க அது ரொம்ப சரி. (இப்படி ஒரு கவிஞன் வீட்டுலருந்தா நானே கவிதைல கலக்குவேன் அப்படி இருக்கும்போது கட்டுத்தறி கவிபாடுறது பெரியவிசயமா என்ன.)
    வைரமுத்து ஒரு கேள்வி பதில்ல உங்களைக் கவர்ந்த சங்ககாலக் கவிஞர் யாருண்ணு கேட்டதுக்கு
    சந்தேகமே இல்லாம கம்பர் தான். முக்கி முக்கி மூன்று எதுகை எழுதிகிட்டு நாலாவது எதுகைக்கு நாக்கு தள்ளுகிற கவிஞர்கள் மத்தில அனாயாசமா எதுகைகள் எழுதித்தள்ளியிருக்கும் கம்பன் காவிச்சக்கரவர்த்திதான்;. அப்டிண்ணு சொன்னாரு.

    கம்பரோட கவிதைகள்ள எனக்கு ரொம்ப புடிச்ச கவிதை இது. இந்த கவிதைகளில் கம்பருடைய சொல்லாற்றலைப் பார்க்கலாம்

    கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
    ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
    சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயநடக்கும்
    பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே


    (கார்மேகம் கூடி மழை பொழிந்து உழவர் பெருமக்களுடைய ஏர் ஒழுங்காக நடக்குமெனில் உலகில் இயல் இசை நாடகங்கள் குறைவின்றி நடக்கும் திருமுறைகள் கூறுவது போன்று அறம் சீர்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும் படைவீரர்கள் தொய்வின்றி வாழ்வார்கள் இந்த உலகில் நடக்கவேண்டிய நல்லவை அனைத்தும் குறைவின்றி நடக்க உயிர்களுக்கு பசி மட்டும் நடக்காது அதாவது இருக்காது.)

    அதுமட்டும் இல்லை அடுத்த பாட்ட பாருங்க

    இப்பொழுதுஇ எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
    செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
    ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
    அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!


    நீ காட்டுக்கு போணும்ணு சொன்னதும் இராமனின் முகத்தோற்றம் அப்போது தான் மலர்ந்த தாமரைப் பூவை ஒத்திருந்ததாக கூறும் கம்பர்

    ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த
    பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்
    காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்
    மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே


    இராமன் காட்டுக்கு செல்வதை கேட்டு பசுக்கள அழ அதைப்பார்த்து கன்றுகள் அழ அன்று பூத்த பூக்கள் எல்லாம்அழ நீர் வாழ் பறவைகள் அழ கள்ளுண்டவர்களும் சோகம் தாழாமல் அழ யானைகள் அழ போர்குதிரைகள் கூட அழுகின்றன.

    ஆகா கம்பர் கம்பர் தாங்க
    இப்படிப்பட்ட பெருங்கவிஞர்கள் கிடைத்தது தமிழின் பாக்கியம் - ஆனால் இத்தனை சிறப்புடைய கவிகள் இருந்தும்
    தமிழின் சிறப்பு உலகமுழுதும் உணரப்படாதது
    தமிழன்னையின் துரதிர்ஷ்டம்......
    வேற என்ன சொல்ல
    Last edited by செல்வா; 19-12-2007 at 10:09 AM. Reason: சொற்பிழை...

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    இத்தனை சிறப்புடைய கவிகள் இருந்தும் தமிழின் சிறப்பு உலகமுழுதும் உணரப்படாதது தமிழன்னையின் துரதிர்ஷ்டம்.
    ஆமா செல்வா காரனம் தமிழில் பழைய சிறந்த கவிதைகள படைப்புகள் அனைத்தும் இரைநம்பிக்கையை சார்ந்து வருவது, நம் மக்களுக்கு பக்தி குரைந்து விட்டது, அதன் விளைவு மொழியின் சிறுப்பும் குரைய துவங்குகிறது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஆமா செல்வா காரனம் தமிழில் பழைய சிறந்த கவிதைகள படைப்புகள் அனைத்தும் இரைநம்பிக்கையை சார்ந்து வருவது, நம் மக்களுக்கு பக்தி குரைந்து விட்டது, அதன் விளைவு மொழியின் சிறுப்பும் குரைய துவங்குகிறது
    என்னோட சிற்றறிவுக்கு.... என்ன தோன்றுகிறது என்றால்..... திருக்குறளை உலகமறியச் செய்த அளவுக்கு மற்ற இலக்கியங்கள் போகாததிற்கு காரணமும் இந்த மதம் தானோ எனத் தோன்றுகிறது.... மதம் சார்ந்த படைப்புக்களின் வட்டம் குறுகியது தானே....?

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    செல்வா தமிழ் இலக்கியத்த கரைச்சுக் குடிச்சவங்க போல நீங்க...மேற்கோள்களுடன் அழகிய நடையில் அசத்தலாய் எழுதுகிறீர்கள்...

    சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? அதில் வரும் "மாசறு பொன்னே...வலம்புரி முத்தே...காசறு விரையே...கனியே...தேனே...."தெரியுமா...தெரிந்தால், உங்கள் பாணியில் கலக்குங்கள் பார்க்கலாம்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •