Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 113

Thread: ஓ(ஆ)வியும் அன்புரசிகனும்....!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2

    ஓ(ஆ)வியும் அன்புரசிகனும்....!!

    நேற்று மன்றத்திலே சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுத் திரிக்கு அனிச்சைச் செயலாக சென்ற போது அங்கே "மலர்" அடுத்த பாடலுக்காக "தேவதை" என்ற சொல்லை விட்டுச் செல்ல அந்த சொல்லில் தொடங்கும் பாடல் ஒன்றைத் தேடுகையில் "தேவதை இளந் தேவி" என்ற பாடல் என் ஞாபக அலைக்குள் சிக்கியது. அந்த பாடல் ஒரு சுவையான சம்பவத்தையும் தூண்டில் போட்டு மேலே தூக்கி விடவே இதோ இந்தப் பதிவு. இந்தப் பதிவினை படிக்கும் முன்னர் "ஆயிரம் நிலவே வா" என்ற திரைப் படத்தில் வந்த இந்தப் பாடலை இதுவரை கேட்டு, பார்த்திராதவர்கள் ஒரு தடவை பார்த்து இரசித்தால் சம்பவக் கருவுடன் ஒன்றித்துப் போவது இலகுவாகியிருக்கும்.
    இதுவரை பார்க்காதவர்களும் பார்த்து இரசிக்கவும் ஏற்கனவே பார்த்தவர்கள் மீள பார்த்து இரசிக்கவும் இதோ அந்த பாடலின் சுட்டி..!!

    [MEDIA]http://youtube.com/watch?v=65AYebuJfOs[/MEDIA]

    அது இரண்டாயிரத்து மூன்றாமாண்டின் நடுப்பகுதி, நான் இலங்கையில் தென்பகுதி மாவட்டமான கொழும்பிலே எனது பல்கலைப் படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய சொந்த கிராமம் இலங்கையின் வடபகுதியிலிருந்தமையால் படிப்பு நிமித்தம் நான் படித்த பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலிருந்த ஒரு சிறு நகரத்தில் ஒரு தொடர்மாடிக் குடியிருப்பு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கே நான்கு நண்பர்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். பல்கலைக் கழக நாட்களில் இந்த நான்கு நண்பர்களும் இணைபிரியாதவர்கள். நம் நான்கு பேரின் சிறப்பியல்பு என்னவெனின் நான்கு பேரும் எந்த நேரமும் நமக்குள் முட்டி மோதிக் கொண்டே இருப்போம், பார்ப்பவர்கள் இவர்களும் ஒரு நண்பர்களா என்று நினைப்பார்கள். ஆனால் வெளியே இருந்து ஒருவர் இந்த நால்வரிடை ஏதும் குளப்பம் பண்ண வந்தால் அதோ கதிதான். நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து பிச்சு உதறிவிடுவோம்.
    நாம் எப்போது சேர்கிறோம் எப்போது சண்டை பிடிப்போம் என்பது நமகே தெரியாது ஆனால் மிக ஆழம் கொண்ட நட்பு நமக்குள் வியாபித்திருந்தமையால் எதனைப் பற்றியும் நாம் கவலைப் பட்டதில்லை. இந்த நான்கு நண்பரில் மூவரை மன்ற நண்பர்கள் நன்றே அறிவார்கள். ஆமாம் ஒன்று அடியேன் தான்(இது சொல்லவும் வேண்டுமா என யாரோ முணு முணுப்பது கேட்கிறது; மலராகத் தானிருக்கும்), அடுத்தது விராடன் மூன்றாவது அன்புரசிகன்.

    நாமிருந்த அந்த வீடு இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு விருந்தினர் வரவேற்பறை கொண்ட மிக அடக்கமான வீடு. ஆகவே இரண்டு அறைகளிலும் இரண்டிரண்டு நண்பர்களாகத் தங்கியிருந்தோம். நானும் அன்புரசிகனும் ஒரே அறையில் தங்கியிருந்தோம், இது இவ்வாறிருக்க ஒரு விடுமுறை நாள் விராடனும் மற்றைய நண்பரும் தம் வீடுகளுக்கு சென்று விட நானும் அன்புரசிகனும் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்தோம். அன்றைய இரவு அன்புரசிகன் புட்டு அவித்து மீன் குழம்புக்கறியும் (அன்பு நல்லா சமைப்பாருங்க..!!, நான் அன்பு சமைக்கும் போது எடு பிடி வேலை மட்டும் செய்து கொடுப்பேன்) வைத்துத் தர ஒரு கட்டுக் கட்டிவிட்டு நித்திரை கொள்ளத் தயாரானேன். அந்தக் காலங்களில் நான் நேரத்திற்கு நித்திரையாகிவிடுவேன், அன்பு மட்டும் விழித்திருந்து ஒன்றில் இணையத்தில் அரட்டையடிப்பார் அல்லது கொம்பியூட்டர் கேம் விளையாடுவார். அத்துடன் நாம் தூங்கும் போது கூட அன்புரசிகனின் குறுவட்டு இயக்கி (சிடி பிளேயர்) தூங்காது விடியும் வரை இடைக் காலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பது வழமை. அன்றும் அப்படித்தான் எதோ ஒரு குறுவட்டை ஒலிக்கச் செய்து விட்டு நான் நித்திரையாகிவிட்டேன் அன்பு விழித்திருந்தார்.

    காலையில் வழமை போல கண் விழித்தேன், அன்பு உறங்காமல் கணினி இருக்கும் மேசைக்கு அருகில் இருந்து கொண்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
    "என்னடா, என்ன பிரச்சினை ஏன் இப்படி முளிசி முளிசிப் பார்கிறாய்...???"
    "இல்லைடா, ஒன்றுமில்லை..!!"
    "இல்லை சொல்லு, என்ன பிரச்சினை..?, நீ நோர்மலாக இல்லையென்று விளங்குது..!!"
    "ம்ம்,ம்ம்..!!"
    "அப்ப சொல்லித் தொலையேனடா... "
    அப்போது அன்பு திருவாய்மலர்ந்தருளினார்...!
    "இரவு எதாவது கனவு கண்டனியே....??"
    "இல்லையே ஏன்...?"
    "இல்லை..."
    "என்ன இல்லை, ஓமெண்டு கொண்டு..., சொல்லுறதை ஒழுங்காச் சொல்லு(எனக்குத் தெரியுமே அவர் என்னை ஆவிபோல பார்த்துக் கொண்டிருக்கிறாரென்று..?")..!!"
    "இல்லை இரவு சிடிபிளேயரிலே "தேவதை இளந்தேவி" என்ற பாட்டுப் படிக்கும் போது நீ திடீரென்று ஒரு வித்தியாசமான சத்தம் போட்டுக் கொண்டு கட்டிலிலே எழும்பி இருந்து காலினை மடித்து வைத்துக் கொண்டிருந்தாய் என்றார்..!!"
    "என்னது, பேந்து என்ன நடந்தது..??"
    "நான் ஓவி, ஓவி என்று கூப்பிட்டுப் பார்த்தேன், பதிலில்லை..!!"
    "ம்ம்,ம்ம்...!!"
    "கட்டிலுக்கு அருகில் வந்து பார்த்தால் உன்ர ரெண்டு கண்ணும் மூடி இருந்திச்சு, சிடிபிளேயரிலே பாட்டு வேற பேய் வாற மாதிரி சத்தம் போட்டுக் கொண்டிருந்தது, நீ என்னைப் புரிந்து கொள்ளவேயில்லை கட்டிலில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தாய். நான் பயந்து போய் உன்னை தள்ளிப் படுக்க வைத்தேன். அப்போதும் நீ கண்ணைத் திறக்கவில்லை அப்படியே கட்டிலில் மடித்த காலைக் கூட நீட்டாமல் கண்களை மூடிய படியே இருந்தாய். மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன் பதிலில்லை. எனக்கு ஒரே பயம் பிடித்துக் கொண்டது ஓவிக்கு என்னவோ நடந்திட்டுது என்று உடனே சிடிபிளேயரை நிறுத்திவிட்டு அறையைவிட்டு வெளியே ஓடி விட்டேன் "
    என்றார்.
    என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, ஏனென்றால் எனக்கு இது தொடர்பாக எந்த நினைவும் இல்லை. வழமையாக கூப்பிட்டால் உடனே விழித்தெழும்பும் நான் அன்று ஏன் விழிக்கவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. அன்புவைப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருந்தது இரவெல்லாம் பயத்தால் தூங்காமல் கந்தசஸ்டி கவசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருப்பார் போல..!! , அந்த விழி விழித்தார். ஒருவாறாக அவரைத் தேற்றி வழமைக்கு கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது .

    இதுவரை விடை தெரியாத அந்த சம்பவம் கிட்டத் தட்ட மறந்தே போய்விட்டது எப்போதாவது நாங்கள் நான்கு நண்பர்களும் சேந்து இருக்கையில் இந்த "தேவதை இளந்த தேவி" பாடல் ஞாபகத்துக்கு வந்தால் அது பற்றிப் பேசிச் சிரித்துக் கொள்வோம். அவ்வாறே நீண்ட நாட்களின் பின் நேற்று ஞாபகத்துக்கு வரவே இந்த பதிவைப் பதித்தேன்...!!

    தேவதை இளம் தேவி
    உன்னைச்சுற்றும் ஆவி
    காதலான கண்ணீர் காணவில்லையா
    ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா...???


    நன்றி..!!
    Last edited by ஓவியன்; 26-11-2007 at 02:28 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,142
    Downloads
    84
    Uploads
    0
    மீட்டிப் பார்க்கும்போது இன்றும் இனிக்கும் நினைவுகளாக தித்திக்கின்றன.
    அப்படி ஒரு காலம் இனியும் மலராதோ என்று எண்ணுகையில் கண் இரண்டும் நீரில் மூழ்கிறது.
    --------
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இரவெல்லாம் பயத்தால் தூங்காமல் கந்தசஸ்டி கவசம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்திருப்பார் போல..!! , அந்த விழி விழித்தார். ஒருவாறாக அவரைத் தேற்றி வழமைக்கு கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது .
    அடப்பாவிங்களா.
    இப்பதானே விளங்குகிறது அந்த திருநீறு டப்பா திடீரென்று எப்படி முடிந்தது என்று.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,456
    Downloads
    39
    Uploads
    0
    எல்லாம் சொன்ன நீங்க முக்கியமான ஒன்றை சொல்லவில்லையே.நீங்க ஏதோ ஆவி பின்னால சுத்தியிருக்கனும் இல்ல அந்த ஆவி உங்களை சுத்தியிருக்கனும்.அதுதான் அந்த ஆவியோட டூயட் பாடறதா நினைத்து கட்டில்ல உட்கார்ந்து கொண்டே தூங்கியிருக்கீங்க.நல்ல வேளை அன்பு யாரையாவது மந்திரவாதியை கூட்டி வந்து வேப்பிலை அடிக்காமல் விட்டாரே.எது எப்படியோ இனி இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் நீங்கள் \"குத்தவெச்சு\" உட்கார்ந்திருந்ததுதான் நினைவுக்கு வரும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    உண்மைதான் விராடன் இன்னும் எத்தனையோ இனிய சம்பவங்கள் உள்ளன, நேரம் கிடைக்கையில் பதிவுகளாக்கினால் அடிக்கடி மீட்டிக் கொள்ளலாம்.

    ம்,ம்...!!!

    அந்த திருநீற்று டப்பா கூட நம் அறையில் இருக்கவில்லை வெளியே தான் இருந்தது, வெளியே ஓடிப் போயயத்அனை எடுத்து வந்து கையிலேயே வைத்துக் கொண்டிருந்திருப்பார் போல...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எல்லாம் சொன்ன நீங்க முக்கியமான ஒன்றை சொல்லவில்லையே.நீங்க ஏதோ ஆவி பின்னால சுத்தியிருக்கனும் இல்ல அந்த ஆவி உங்களை சுத்தியிருக்கனும்.
    ஆவி பின்னே நான் சுத்தினேனா...!!
    அப்படி ஞாபகம் இல்லையே, ஆவி வேணா என் பின்னே சுத்தியிருக்கும்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    54,965
    Downloads
    72
    Uploads
    2
    ஓவியம் வரைவதில் வல்லவர் என்பதால், இவருக்குள் ஒரு ஓவியன் மட்டும் தான் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவருக்குள் ஒரு ஆவியும் இருந்திருப்பது இப்போதான் புரியுது..! இப்படி ஆவி அவதாரம் எடுத்து, அன்பை வம்பாக மிரட்டியிருக்கிறீர்களே... இது எந்த வகையில் நியாயம்..? பாவம்.. அன்றிலிருந்து அவர் பேய்ப்படங்கள் பார்ப்பதை கூட விட்டுவிட்டார் என்பது எனக்கு கிடைத்த செவிவழிச்செய்தி..! உண்மையிலேயே உங்களுக்குள் ஆவி வந்ததா, அல்லது உங்களை நிம்மதியாக தூங்கவிடாமல் டிவி பார்த்து சத்தத்தாலும், ஒளியாலும் தூக்கத்தை தொந்தரவு செய்த அன்பை அடக்க நீங்கள் திட்டமிட்டு செய்த சதியா..? அதற்கு அடுத்து வந்த நாட்களில் அன்பு ரொம்ப நல்ல பிள்ளையாக நேரத்துடன் தூங்கியிருப்பாரே..?!!!

    எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..? ஆவிக்கிட்ட அட்வைஸ் கேட்ருப்பாங்களோ..?!!
    அன்புடன்,
    இதயம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,142
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    பாவம்.. அன்றிலிருந்து அவர் பேய்ப்படங்கள் பார்ப்பதை கூட விட்டுவிட்டார் என்பது எனக்கு கிடைத்த செவிவழிச்செய்தி..!

    தவறான செய்தி இதயம்.
    அதற்கு பிறகு அன்பு பேய்ப்படங்கள் பயமின்றி பார்க்க தொடங்கிவிட்டார். கேட்டால் "ஓவியனிற்கு முன்னால் இதெல்லாம் ஜிஜிப்பி என்று கூறுவார்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    54,965
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    ஓவியனிற்கு முன்னால் இதெல்லாம் ஜிஜிப்பி என்று கூறுவார்.
    ஓ.. கதை அப்படி போகுதா..? அதான் ஓவி அடிக்கடி என்னிடம் நான் யாருக்கும் பயப்படமாட்டேன், பயப்படமாட்டேன்னு சொல்றாரா..? உண்மை தான்..! அவரைப்பார்த்து தான் நாமெல்லாம் பயப்படணும்..!!
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இதயம் View Post
    எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..? ஆவிக்கிட்ட அட்வைஸ் கேட்ருப்பாங்களோ..?!!
    என்னமா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறாங்கப்பா....
    வாயைத் திறந்தது தப்போ, இனி யோசித்து என்னவாகப் போகுது....
    நடக்கிறதைப் பார்ப்போம்....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    63,987
    Downloads
    89
    Uploads
    1
    ஹா ஹா ஹா..!
    ஓவியன் அண்ணா...! இப்படி நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், அன்பு அண்ணா ஒருவேளை உங்களை ஓட்டி பயங்காட்ட இப்படி உங்களை காலையில் சொல்லி பயமுறுத்தியிருக்கலாமோ??(எப்படி பூவு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு நீங்க கேட்பது புரியுது..!!)
    ஏன்னா, எங்க ஓவியன் அண்ணா... இப்படியெல்லாம் செஞ்சிருக்கவே மாட்டாரு...!!

    அப்படி செய்திருந்தாலும் ஓவியண்ணாவுக்கு ஆவி நினைப்பு வந்திருக்காது......... அந்த தெய்வம் தான் வந்து ஆவியை ஓட்டியிருக்கும்.. இங்கு கவனிக்க... ஓவியன் அண்ணா... கட்டிலில் கால்களை மடக்கி, கண்கள் மூடி அமர்ந்திருந்ததாக அன்பு அண்ணா சொல்லியிருக்கிறார். அப்படியெனில் என் அனுமானத்தின் படி, ஓவியன் அண்ணா, பத்மாசனத்தில் அமர்ந்து கடவுள் போல் தியானம் செய்து அன்பு அண்ணாவை ஆவியிடமிருந்து காப்பாற்ற முயன்றிருப்பார் என்று தோன்றுகிறது..!!

    எப்படி என் மூளை??? அன்புரசிகன் அண்ணா, என்னை மூளையில்லை என்று சொல்லி கிண்டல் பண்ணினீங்கல்ல... இப்ப என்ன சொல்றீங்க???
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by பூமகள் View Post
    ஹா ஹா ஹா..!
    ஓவியன் அண்ணா...! இப்படி நிகழ்ந்ததை என்னால் நம்ப முடியவில்லை. காரணம், அன்பு அண்ணா ஒருவேளை உங்களை ஓட்டி பயங்காட்ட இப்படி உங்களை காலையில் சொல்லி பயமுறுத்தியிருக்கலாமோ??
    அடடே அப்படியும் இருக்குமோ..??
    இவ்வளவு நாளும் அன்பு விட்ட ரீலை நம்பிட்டேனோ...???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,950
    Downloads
    151
    Uploads
    9
    நாமிருந்த அந்த வீடு இரண்டு அறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு விருத்தினர் வரவேற்பறை கொண்ட மிக அடக்கமான வீடு.
    அடக்கமான வீட்டில இருப்பவர்களை ஆவி எங்காமல் வேறெப்படி சொல்றதாம்..

    இரண்டு+ஒன்று+ஒன்று=நான்கு----கணக்குச்சரியாத்தேனே இருக்கு..
    அன்பு,ஓவி,விராட்,விருந்தினர் யாருப்பா..
    Last edited by அமரன்; 26-11-2007 at 02:37 PM.

Page 1 of 10 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •