Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 46

Thread: இப்படியும் ஒரு வாழ்க்கை

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    இப்படியும் ஒரு வாழ்க்கை

    மார்க்கெட் பக்கம் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்குமந்த கடைக்கு அருகில் கூட்டமாக இருந்தது.கடைக்குப் போனவன் என்னவாகஇருக்குமென்ற ஆவலில் கூட்டத்தில் நுழைந்து பார்த்தேன்.முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணை நான்கைந்துபேர்
    அடித்துக்கொண்டிருந்தார்கள்.அவர்களைப் பார்த்தால் கட்டிடவேலை செய்பவர்கள்போல இருந்தார்கள்.வழக்கம்போல விலக்கிவிட
    நான்குபேர்.விலக்கிவிட யாராவது இருக்கும்போதுதான் அடிப்பவர்களுக்கு வீரம் பொங்கிக்கொண்டு வரும்.அவர்களும் அப்படியேதான் சின்னச் சின்ன இடைவெளிவிட்டு எகிறிக்கொண்டிருந்தார்கள்.அடிபடுபவன் முகத்தில் வழியும் ரத்தத்துடன் பரிதாபமாக இருந்தான்.சிறிது கறுப்பாக,மெலிதான சோகம் முகத்தில் தெரிய நம்ம ஊர் ஆளைப்போல இல்லாமல் இருந்தான்.
    பொறுக்க முடியாமல் அருகில் சென்று அடிப்பவர்களைத் தடுத்து\"ஏன்யா இந்த ஆளை அடிக்கிறீங்க ஏதாவது திருடிட்டானா?\" என்று கேட்டதற்கு அந்த ஆட்கள்\"எங்க பொழப்பையே திருடுறானுங்க இவனுங்க\"என்றதும் புரியாமல்\"என்னயா சொல்ற?\"
    \"ஆமா சார் இவனுங்க இலங்கை அகதிங்க.இங்க இருக்கற முகாம்லதான் தங்கியிருக்கானுங்க...நாங்கல்லாம் கட்டடவேலை
    செய்றவங்க.பாருங்க இந்த கடை கட்ற இடத்துலயும் நாங்கதான் வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம்..இப்ப அந்த மேஸ்திரி எங்களை
    வேனான்னு சொல்லிட்டு இவன் கூட இன்னும் மூணுபேர வெச்சிக்கிட்டாரு...கேட்டா உங்களவிட கூலி குறைவாக் கேக்குறாங்க
    நல்லாவும் வேலை செய்றாங்க அதனால இவங்களே போதும்ன்னு சொல்லிட்டாரு. இவங்க இப்படி கொறஞ்ச கூலிக்கு வேலை செஞ்சாநாங்கல்லாம் என்ன பன்றது?\"ஆத்திரமா கேட்டவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்,\"சரி
    விடுங்கய்யா...பாவம் சொந்த பந்தங்களையெல்லால் பறிகுடுத்துட்டு அவங்களே ஆதரவில்லாம் இங்கே வந்து பொழைக்குறாங்க
    அவங்களைபோய் அடிக்கிறீங்களே..நான் பேசிக்கிறேன்\" என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட ஆளை தனியாக கூட்டிக்கொண்டு
    வந்தேன்.அதே மார்க்கெட்டில் எனக்கும் நான்கு கடைகள் சொந்தமாக இருப்பதால் அவர்களுக்கு என்மேல் மரியாதை இருந்தது.அதனால் ஒன்றும்சொல்லாமல் போய்விட்டார்கள்.பிரச்சனை பெரியதுதான்.என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு அந்த ஆளைக் கூட்டிக்கொண்டுமுதலில் மருத்துவரிடம் சென்று முதலுதவி செய்துகொண்டு அவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அவரை அழைத்துச் சென்றேன்.

    அந்த முகாம் இதற்கு முன்பு அரசாங்க பண்டகசாலையாக இருந்தது.அங்கிருக்கும் பாதாம் மரங்களில் ஏறி சிவப்பாய் பால் வழியும்
    அந்த பாதாம் காய்களைப் பறித்து கல்லால் அதை உடைத்து பருப்பை சுவைப்பது என்னுடைய சின்ன வயது பொழுதுபோக்குகளில்
    ஒன்று.நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்ததும் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது.மூன்று நீண்ட பெரிய ஹால் போன்ற
    அந்தக் கட்டிடங்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்ப்ட்டிருந்தனர்.சிலர் குடும்பத்துடன் இருந்தனர்.சிலர் தனியாக.அங்கு
    அவர்களின் நிலையைப் பார்த்ததும் மனம் சங்கடப்பட்டது.எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரே ஹாலில் இவ்வளவு
    பேரையும் அடைத்து வைத்திருந்தார்கள்.

    ஒரு பாயும் அழுக்கான ஒரு தலையணையும் தரையில் இடப்பட்டு அதனருகே அவர்கள் நாடுவிட்டு வந்தபோது அவசரத்தில் கையோடுகொண்டுவந்திருந்த ட்ரங்குப் பெட்டிகளும் சில பாத்திரங்களும் வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பாயும் அதனருகில் இருந்த அவர்களின்உடமைகளும் வைக்கப்பட்டிருந்த பகுதி ஒரு குடும்பத்துக்கு என்றவிகிதத்தில் நிறைய குடும்பங்கள் இருந்தார்கள்.
    இதில் எத்தனை செல்வந்தர்கள் இருப்பார்கள்..எத்தனை குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு
    வந்திருப்பார்கள்...எத்தனைப் பெண்கள் இதுநாள்வரை வீட்டைவிட்டே அதிகம் வெளியில் போகாமல் சந்தோஷமாக
    இருந்திருப்பார்கள்..அனைவரும் இப்போது இந்த தேசத்தில்,ஆதரவுக்கு யாருமில்லாமல் அவர்களுக்கு அவர்கள்தான் சொந்தங்கள் என்ற நிலையில் அரசாங்கம் அளித்திருந்த அந்த தாற்காலிக தங்குமிடத்தில் துக்கத்தை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள்.
    அவன் பேசத் தொடங்கினான்.சமீபத்தில் தெனாலி படம் பார்த்திருந்ததால் அந்த தமிழ் நன்றாகவே புரிந்தது.புரியாத சொற்களையும்
    அனுமானித்துக்கொண்டேன்.\"எங்க தேசத்தில்...இப்ப அப்படி சொல்றதுக்கு அங்கே என்ன இருக்கு?\" என்று அவனை அவனே
    கேட்டுக்கொண்டு தொடர்ந்தான்...\"நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்துக்கிட்டிருந்தோம்.முதல் முறை யுத்தம் நடந்தபோதுகூட எங்கள்
    பகுதியில் அவ்வளவா பாதிப்பு இல்லை.ஆனால் இந்தமுறை சிங்களப் படைகளோட அக்கிரமம் ரொம்பவும் அதிகமாகிவிட்டது.இதோ
    இங்கே நிக்கற என்னோட மகள் இவ ஒருத்திதான் இப்ப எனக்குன்னு சொல்ல ஒரே சொந்தம்.அருகிலிருந்த எட்டுவயது சிறுமியை
    அனைத்துக்கொண்டே,என் மனைவி...\"என்று சொன்னவன்...அந்த நிகழ்வின் பாதிப்பு நினைவில் தோன்ற கண்கள் கலங்க சிறிது நேரம்அமைதி காத்து மகளையும் பார்த்தவாறே\"என்னன்னு சொல்றதுங்க...இந்த பிஞ்சு குழந்தையோட முன்னாலயே அத்தனையும்
    நிகழ்ந்தது.எல்லாத்தையும் இழந்துட்டு இனி அங்கே எனக்கு வாழ்க்கையில்லைங்கறதால அங்கேருந்து கிளம்பினவங்களோட நானும்
    என் மகளைக் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டேன்.அதுலருந்து கொஞ்ச பேரை இந்த ஊருல இருக்கிற இந்த முகாமுக்கு
    கொண்டுவந்தாங்க.வந்ததிலிலருந்து அரசாங்கம் கொடுக்கிற உதவியிலதான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தோம்.பிள்ளைங்களெல்லாம்
    நல்ல சோறுக்கு ஆசைப் பட்டதுங்க. படிக்கனுன்னு சொல்லுதுங்க.ஆனா அது முடியுமோ என்னவோ..நல்ல சோறாவது
    கொடுக்கலாமேங்கறதால வெளி வேலைக்குப் போக அனுமதி வாங்கிக்கிட்டு போக ஆரம்பிச்சோம்.எவ்வளவு கூலின்னாலும்
    பரவாயில்லை,வேலை எவ்வளவு கஷ்டமின்னாலும் பரவாயில்லைன்னு நெனைச்சுகிட்டு கிடைச்ச வேலையை
    செஞ்சுகிட்டிருக்கும்போதுதான் இன்னைக்கு என்னை அடிச்சவங்க தொடர்ந்து ரெண்டு மூனு நாளா ஓடிப் போய்டுங்கன்னு மிரட்டிகிட்டேஇருந்தாங்க.நாங்க சொல்றது அவங்களுக்குப் புரியல.எங்க வேதனையையும் அவங்க புரிஞ்சிக்கல.அதுவுமில்லாம இன்னைக்கு காலையில அவங்க வேலைக்கு வந்தபோது மேஸ்திரி அவங்களை வேண்டான்னு சொன்னப்ப ஆத்திரப்பட்டு என்னை
    அடிச்சிட்டாங்க.பாவம் அவங்களுக்கும் அவங்களோட வேலையைப் பத்தின பயம் வந்திருக்கும்.அவங்களை நான் குறை
    சொல்லல...எங்க விதியை நினைச்சுத்தான் நான் வேதனைப் படறேன்.\"தொண்டை அடைக்க கடைசியாய் சொன்ன சொற்கள் உடைந்து மெல்லியதாக விசும்பத் தொடங்கினார்.நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அந்த நாகரீகமான அழுகையில் தெரிந்தது.அவர்மேல் எனக்குப் பரிதாபமும்,மரியாதையும் ஒருங்கே வந்தது.

    அந்த கூடத்தில் இருந்த பெரும்பாலோர் எங்களை கூடியிருந்தனர்.நான் ஏதோ அரசாங்க அதிகாரி என்று நினைத்துவிட்டனர்.ஆனால்
    எங்கள் பேச்சைக் கேட்டதும் அவர்களின் சோகம் கேட்கும் ஒரு சாதாரன உள்ளூர்க்காரனென்று விளங்கிக்கொண்டு அவரவர்
    வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.எத்தனைப் பேரிடம் அவர்களின் சோகத்தை இறக்கிவைத்திருப்பார்களோ...இப்போது ஒருவித
    சலிப்பு மனநிலைக்கு வந்து விட்டிருந்தனர்.

    இந்தப் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியாது.ஆனால் எங்கள் இரண்டு பேரையுமே மாறி மாறி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த
    அந்த சின்னப் பெண்ணுக்காவது ஏதாவது செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டு.\"உங்க மகளை வேணுன்னா பள்ளிக்கூடத்துல
    சேர்க்கமுடியுமான்னு பாக்கலாமா?\"நான் கேட்டதும் எங்கிருந்துதான் அந்த ஒளி வந்ததோ அவருடைய கண்களில்...மிகப் பிரகாசமாகி ஒருவித பரபரப்புடன்\"உங்களால முடியுமாய்யா.?\'என்று கேட்டார்.
    \"முயற்சி செய்யலாம்.முதல்ல நான் தாசில்தார்கிட்ட பேசறேன்.அகதிகளுக்கு ஏதாவது அரசாங்க சட்டம் இருக்கும்.அதைப் பற்றி
    தெளிவாக தெரிந்துகொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்\" என்று சொல்லிவிட்டு விடைபெறும்போது தயக்கத்துடனே நான் கொடுத்தபணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

    அன்றே தாசில்தாரை சந்தித்து விவரம் சொன்னபோது அவர் என்னைப் பார்த்த பார்வையில் உங்களுக்கு ஏன் சார் இந்த வேண்டாத
    வேலை என்று நினைப்பது புரிந்தது.அதை சொல்லவும் செய்தார்.\'சார் இவனுங்களுக்கெல்லாம் சொந்தக்காரங்க கனடா,இத்தாலின்னு
    வெளிநாட்டுல இருக்காங்க,அதுல யாராவது ஒருத்தங்க கூட்டிகிட்டுப் போய்டுவாங்க..அப்புறம் நீங்க இவ்வளவு செஞ்சதெல்லாம்
    வீணாயிடும்\"என்று சொன்னவரிடம்.\"பரவாயில்லை சார்..அட்லீஸ்ட் இங்க இருக்கறவரைக்குமாவது
    படிச்சிக்கிட்டிருக்கட்டுமே\"என்றேன்.\"சரி உங்க இஷ்டம்.லோக்கல் கார்டியனா நீங்க கையெழுத்துப் போட்டு ஒரு விண்ணப்பம் குடுங்கபாக்கலாம்\"வேண்டாவெறுப்பாய் சொன்னவருக்கு நன்றி சொல்லிவிட்டு விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.நகரத்தில் ஒரு முக்கியமான நபர் என்பதால் அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.கையெழுத்துப் போட்டுவிட்டு அந்த துறை ஊழியர்களிடம் கொடுத்து ஆவன செய்யும்படி சொல்லிவிட்டார்.

    நகராட்சிபள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.புத்தகப்பையுடன் பள்ளிக்கு கிளம்பிய அந்த பிஞ்சு முகத்தில் சந்தோஷமும் பயமும்
    கலந்து தெரிந்தது.பள்ளியில் சேர்த்துவிட்டு கொஞ்ச நாள் என்னுடைய வேலையில் மூழ்கிவிட்டதால் அவர்களைச் சந்திக்க
    முடியவில்லை.20 நாட்களுக்குப் பிறகு அந்த முகாமுக்குப் போனபோது அந்த சிறுமி கட்டையில் தீக்குச்சி
    அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவளுடைய தந்தை நைந்துபோன ஒரு கைலியை உடுத்திக்கொண்டு அவரும் அதே வேலையில்
    ஈடுபட்டிருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது.
    \"நிரஞசன் ஏன் நிஷாந்தி ஸ்கூலுக்குப் போகலையா?நீங்க ஏன் இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கீங்க.\" என்று கேட்டதும்.அவசரமாய் எழுந்து என் அருகே வந்தவர்,மிகுந்த தயக்கத்துடனும்,லேசான குற்றவுணர்வுடனும்\"சார் இவ கதைக்கறது அந்த பள்ளிக்கூடத்துல இருக்கற பசங்களுக்குப் புரியலையாம்..அதிகமா கிண்டல் பண்ணியிருக்காங்க...பாவம் சின்னப் பிள்ளை பயந்துட்டா.பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு அடம் பிடிக்கறா...எனக்கும் வெளியில வேலைக்குப் போனா நிறைய பிரச்சனை அதனாலத்தான் இங்கே இருந்து செய்யறமாதிரி இந்த வேலையை செஞ்சிக்கிட்டிருக்கோம்.இப்ப கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட முடியுது.பார்க்கலாம் ஆண்டவன் இன்னும் எத்தனை நாளைக்கு எங்களை சோதிக்கறான்னு.நல்லநேரம்ன்னு ஒண்ணு வராமலா போய்டும்..?\"

    அந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை...ஆனால் அவருடைய எதிர்பார்ப்புகள் நிஜமாகவேண்டுமென்றும் அந்த நல்லநேரம் விரைவில்வரவேண்டுமென்றும் மனம் விரும்பியது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    எதார்த்தமான விவரிப்பு அண்ணா.
    இதே மாதிரியான முகாம்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.
    எங்களது பள்ளியில் அவர்களை இலங்கை அகதிகள் என்று அரசே தங்கவைத்திருந்தது. சிறு வயதில் பார்த்த நியாபகம், அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்று. நீங்கள் விவரித்த அதே நிலையில் தான் நானும் பார்த்து வருந்தியிருக்கிறேன்.
    கதையோட்டமும், விவரிப்பும் வாழ்வின் எதார்த்த பிரச்சனையை முன் வைத்திருந்தது.
    பாராட்டுகள் சிவா அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி பூமகள்.இந்தப் பிரச்சனை பெரிதாக நிகழ்ந்துகொண்டிருந்தபோது கவனித்திருக்கிறேன்.அதை எழுதினேன்.ஆனாலும் பூரணமாய் முடியவில்லை.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    எங்கள் ஊரில் நிறைய குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் என்று தெரிய வந்த போது,ஆச்சர்யமாவும்,மகிழ்ச்சியாவும் இருந்தது.அவர்களில் சிலர் என் நண்பர்கள்.எங்களோடு கலந்து,தங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களாகும்,சிலர் வசதியானவர்களாகும் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களது பேச்சு வழக்கு மறைந்து விட்டது.அதனால் பழைய ஆட்கள் சொல்லிதான் தெரிந்தது.
    இதை கொண்டு சென்ற விதம்,தமிழகம் அரவணைக்கும் என்று நம்பிக்கையில் வரும் நம் சகோதரர்கள் படும் பிரச்சனைகளை புரிய வைத்தது. நன்றியும்- பாரட்டுகளும் சிவா அண்ணா.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கன்னீரை வரவழைக்க வைத்த பதிப்பு, பாவம் இருபக்கமும் பிரச்சனை இருகிறது. அவர்களை அடித்த கூலிகாரர்களும் கூட ஒரு வேலை சோத்துக்கு லாட்டரி அடிப்பவர்கள்தான். குரைந்த கூலி என்று இவர்களுக்கு வேலை கொடுத்தால் பிரச்சனைஆகிறது. மாறாக நம்மூர்காரர்களுக்கும் இலங்கை அகதிகளுக்கும் ஒரே கூலி கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

    நான் சின்ன வயசாக இருக்கும் போது எனக்கு தெரிந்த அனைத்து பள்ளிகளிலும் இலங்கை அகதிகளை தங்க வைத்திருந்தார்கள் (எம் ஜி ஆர் காலம்). அப்ப எங்கப்பா தோடத்துல இருந்து காய்கறிகளை வெங்காய மூட்டை கட்டி என்னை அங்கு கூட்டி சென்றார். (இப்பொழுது அதிக முகாமகள் இல்லை).

    அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உதவி மட்டும் செய்யாமல் அரசாங்கம் தற்காலிக வேலை போட்டு தரலாம். அல்லது தனியார் நிறுவங்களில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரலாம். நிரைய பேர் வெளியில வேலை தேட தயங்கராங்க.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    மனதைத் தொடும் சம்பவம். நேரில் பார்ப்பது போன்ற எழுத்து நடை.
    மனதார உதவ முயன்றிருக்கிறீர்கள் அண்ணா, என்ன செய்வது...சில விசயங்களுக்கு யாரை நோவது?
    கோயமுத்தூரிலும் பூளுவாம்பட்டியில் ஒரு காட்டுக்குள் இதே போன்ற அகதி முகாமைப் பார்த்து அவர்களுடன் பேசியிருக்கிறேன்.ஏண்டா இங்க வந்தோம் என்று அலுத்துக் கொண்டார்கள்.உங்களின் இந்தப் பதிப்பைப் படிக்கும் போது அவர்களின் நினைவு தான் வருகிறது அண்ணா.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    ஆனால் அவர்களது பேச்சு வழக்கு மறைந்து விட்டது.அதனால் பழைய ஆட்கள் சொல்லிதான் தெரிந்தது.
    இதை கொண்டு சென்ற விதம்,தமிழகம் அரவணைக்கும் என்று நம்பிக்கையில் வரும் நம் சகோதரர்கள் படும் பிரச்சனைகளை புரிய வைத்தது. நன்றியும்- பாரட்டுகளும் சிவா அண்ணா.
    சரிதான் நேசம்.இன்று அவர்கள் நம்மைப்போல பேச தொடங்கிவிட்டார்கள்.ஆனால் இந்த கூலிப் பிரச்சனை பெரிதாக இருந்ததென்னவோ உண்மைதான்.நாளடைவில் அவர்களும் பல்வேறு தொழில் தொடங்கி சகஜமாய் வாழத்தொடங்கிவிட்டார்கள்.
    Last edited by சிவா.ஜி; 25-11-2007 at 10:50 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    பாவம் இருபக்கமும் பிரச்சனை இருகிறது. அவர்களை அடித்த கூலிகாரர்களும் கூட ஒரு வேலை சோத்துக்கு லாட்டரி அடிப்பவர்கள்தான். குரைந்த கூலி என்று இவர்களுக்கு வேலை கொடுத்தால் பிரச்சனைஆகிறது. மாறாக நம்மூர்காரர்களுக்கும் இலங்கை அகதிகளுக்கும் ஒரே கூலி கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

    அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உதவி மட்டும் செய்யாமல் அரசாங்கம் தற்காலிக வேலை போட்டு தரலாம். அல்லது தனியார் நிறுவங்களில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரலாம். நிரைய பேர் வெளியில வேலை தேட தயங்கராங்க.
    அதேதான் வாத்தியார்.கூலிப்பிரச்சனை இருவருக்கும்தான்.ஒரே கூலி கொடுத்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் இப்போது மாறிவிட்டது.முகாமும் இல்லை, அகதிகளும் இல்லை.அரசாங்கம் எதுவும் பெரிதாஅகச் செய்வதாகத் தெரியவில்லை.அவர்களாகவே தங்களின் தொலைத்த வாழ்வை மீட்க முயற்சித்து வெற்றியடைந்து வருகிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    மனதைத் தொடும் சம்பவம். நேரில் பார்ப்பது போன்ற எழுத்து நடை.
    ஏண்டா இங்க வந்தோம் என்று அலுத்துக் கொண்டார்கள்.உங்களின் இந்தப் பதிப்பைப் படிக்கும் போது அவர்களின் நினைவு தான் வருகிறது அண்ணா.
    என்ன செய்வது யவனிகா..அதுவரை வாழ்ந்த வாழ்க்கை கண்முன்னே காணாமல் போய்விட்டபிறகு கிடைத்ததை ஏற்றுக்கொள்லவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களானாலும்,தங்களின் பழைய வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் இருக்குமா.அதை நினைத்துதான் வருந்துவார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    படித்ததில் மனம் கனத்துப்போனது. தனக்கு உணவில்லை என்றாலும் நம்மிடம் அடைக்கலம் வந்தவர்களை உபசரித்து பாதுகாப்பது நம் குணம் என்று சொல்லிக்கொள்ளும் நம் தமிழகத்தில் இப்படி நடப்பது வேதனை தான். சிவா இதை கதையாக எழுதியிருந்தாலும் அவர் நேரில் உணர்ந்தவற்றின் பிரதிபலிப்பாக தான் இந்த கதையின் பெரும்பான்மையான சம்பவங்கள் தெரிகின்றன. தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்களின் எல்லோரின் நிலையும் இப்படி இருப்பதில்லை என்பதை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

    அதற்கு சாட்சியாக என் ஊரை சொல்லலாம். எங்கள் ஊர் கடற்கரையை ஒட்டிய ஊர் என்பதால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் அகதிகளாக வந்தவர்களில் முஸ்லீம்கள் மட்டும் பிரிந்து வந்து, நாங்கள் வாழும் பகுதிகளிலேயே கிடைத்த இடங்களில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள். சில ஆண்டுகளில் அவர்கள் எங்களோடு உறவுகளோடு உறவுகளாக கலந்து வாழும் நிலை வெகு இயல்பாக ஏற்பட்டது. அகதிகளாக வந்த முஸ்லீம்கள் உள்ளூர் முஸ்லீம்களுடன் திருமண தொடர்பும் வைத்துக்கொண்டனர். அந்த உறவு படர்ந்து வளர்ந்ததன் மூலம் வியாபாரம், வெளிநாடு போன்ற பொருளீட்டும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

    இன்று இலங்கை முஸ்லீம்கள் உறவிலும், செல்வத்திலும் எந்த குறையுமில்லாமல் மிகவும் சந்தோஷத்துடன் எங்கள் ஊரில் வசித்துவருகிறார்கள். அவர்களின் பேச்சு வழக்கு இங்கு வந்த பிறகு என்ன தான் மாறினாலும் ஒரு சில சொற்கள் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை சரியாக காட்டி விடும் (உதா: பேசுதல்-கதைத்தல், கெதி-வேகம் போன்றவை). அவர்களை நாங்கள் கொழும்புகாரர்கள் வீடு என்று தான் அழைப்போம். இதில் பெரும் வேதனை என்னவென்றால் இவர்களோடு ஒன்றாக வந்த மற்ற மதத்தவர் உள்ளூர் இந்துக்களுடன் ஒன்றமுடியாமல் அல்லது புறக்கணிக்கப்பட்டு ஒரு தனித்தீவாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இன்றும் வறுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    இப்போது இலங்கையை பொறுத்தவரை அரசுடன் முஸ்லீம்களுக்கான பிரச்சினை குறைவென்றாலும் அப்படி வந்தால் ஏற்று அவர்களுடன் சங்கமிக்கும் நிலை முஸ்லீம்களிடம் இருக்கிறது. இது ஏன் மற்றவர்களிடம் இல்லை என்பது விடை தெரியா வினா..! அதே போல் இந்துக்களையும் மற்றவர்களை போல் ஏற்று அரவணைக்கும் நிலை முஸ்லீம்களிடம் இல்லாததும் கசக்கும் உண்மை. தமிழ் என்றும் தமிழன் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. அந்த உணர்வை மனதில் இருத்தி அவர்கள் நல்வாழ்விற்கு அனைவரும் உதவவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்..!!
    அன்புடன்,
    இதயம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வாழ்த்துக்கள் சிவா அண்ணா..அருமையான தங்களின் பதிவிற்க்கு..!சில நிகழ்வுகளை படிக்கையில் தமிழன் என்று பெருமைபடக்கூட முடிவதில்லை என்னால்..!அப்படிதான் உங்கள் பதிவை பார்த்தாலும் எனக்குள்..! அம்மா அடித்ததென்று அப்பாவிடம் செல்லும் குழந்தையை அப்பாவும் அடித்தால் அந்த பிஞ்சு குழந்தை என்னவாகும் வேதனையால் வெம்பிபோகும்... அப்படிதான் இருக்கிறது அகதியாய் அயல்தேசத்துக்கு வந்து அவதிபடும் அப்பாவிகளின் நிலை...! ஆண்களின் நிலையையும் குழந்தைகளின் நிலையையும் கூறிவிட்டீர்கள்..அகதியாய் வரும் பெண்களின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது நம் தமிழ்நாட்டில்..! அவர்களின் வறுமையையும் இயலாமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக அவலங்கள் இயல்பாக நடக்கின்றன..ஒருவனுக்கு ஒருத்தி என்று பொய்யான தமிழ் பண்பாடுடைய இதே தமிழ்நாட்டில்..! ரமேஸ்வரம் மண்டபம் முகாம்களில் இந்த நிகழ்வுகள் எளிதாக காணக்கிடைப்பவை..! நன்றாக வாழ்ந்தவர்கள்தான்...என்னபாவம் செய்தார்கள்..இப்படிபட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கு இவர்களுக்கு...?வீட்டிற்க்கு அழைத்து விருந்து வைக்காவிட்டாலும் விரட்டியடிக்காமலாவது இருக்கலாம் அல்லவா...! யாரை குறை சொல்வதென்று தெரியவில்லை..யார்மீது கோவப்படுவதென்றும் புரியவில்லை..!வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம்..தன் தமயனை பற்றி மட்டும் இன்னும் சிந்திக்காமால் இருப்பது ஏனோ..? கூடியவிரைவில் எல்லாவற்றிர்க்கும் நல்லமுடிவு கிடைத்தால் நலம்..!
    Last edited by சுகந்தப்ரீதன்; 25-11-2007 at 11:51 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    உருக்கமாக இருந்தது. அடித்தவர்களை பிழைகூற முடியாது. காரணம் அன்றாடம் கூலிவாங்குபவர்களுக்கு ஒருநாள் இல்லை என்றாலும் வீடில் அடுப்பு எரியாது....

    இந்த விடையத்தில் எக்காரணத்திலும் இந்திய அரசை பிழைகூறிவிடமுடியாது... ஒரு முறை இந்தியா டுடே இல் வாசித்தது. ஒரு நாளுக்கு 10 20 என்ற கூலிக்கு செல்லும் இந்திய தமிழன் இருக்க ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்திற்கு அரிசி மற்றும் உணவுகளுடன் 50 ரூபா பணமும் வழங்குகிறது தமிழக அரசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.... பசிக்கும் போது அது இந்தியன் இலங்கயன் என்று அந்த பசி பார்க்காதே....

    சில உறவுகள் அங்கு உள்ளனர். தம் பிள்ளைகளை சென்னைப்பகுதியில் ஆங்கில மொழிமூலக்கல்வியில் விட்டிருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு பிரச்சனை இல்லை. இப்போது அவர்கள் கூட என் பேச்சை வினோதமாக பார்க்கிறார்கள் என்றால் பாருங்களேன். (1995 ல் அவர்களை வன்னியில் கண்டிருக்கிறேன் 12 வருடத்தில் எத்தனை மாற்றம்)

    இந்த திரியுடன் சம்பந்தம் அற்றது. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.

    இதயம்....

    இலங்கை முஸ்லீம்களுக்கு இலங்கை அரசால் பிரச்சனை இல்லை என்று கூறிவிட முடியவே முடியாது. ஆனால் மூடிமறைக்கப்படுகிறது. தம் அரசியல் நோக்கிற்காய் அரசுடன் சேர்ந்து நாடகம் ஆடும் சில முஸ்லீம் அமைச்சர்களால் தான் இந்த நிலை. தவிர கிழக்குமாகாண கிராமப்புற நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். புரியும்......

    தமிழர்களிலும் இவ்வகையான அமைச்சர்கள் உண்டு. ஆனால் அவர்களின் பருப்பு வேகவில்லை....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •