Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: ஐந்து ரூபாய்க்கு ரெண்டு...

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  31,938
  Downloads
  29
  Uploads
  0

  ஐந்து ரூபாய்க்கு ரெண்டு...

  விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் வருடத்திற்கு ஒரு முறை, வாராது வந்த மாமணியாய் ...அந்த வருடம் கூடுதலாகவே இரண்டு மாதம் கிடைத்து. என் 4வயது மகனுடன் கோவை சென்று இறங்கினேன். அம்மா வீட்டில் தங்கை குடும்பம் மற்றும் அம்மாவுடன் ஜாகை. முதல் வாரம் பிரயாணக் களைப்பும்..பார்க்க வரும் உறவினர்களுக்கான விருந்தோம்பலுமாகக் கழிந்தது.

  இரண்டாவது வாரம் சற்றே ஆசுவாசமாக இருந்தது. வழக்கம் போல, நானும் என் தங்கையும், திண்ணையில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தோம். வீட்டின் முன் பக்கம் கதவின் இரு பக்கமும் உள்ள குதிரைத் திண்டில்...நாங்கள் அமர்ந்து விட்டோமென்றால், தெருவே களை கட்டப் போகிறது என்று அர்த்தம்.அந்தத் தெரு ஒரு கட் ரோடு. வசிக்கும் குடும்பங்கள் எல்லாருமே நல்ல பழக்கம். எனவே போக வருவோரை இழுத்து வைத்துப் ஊர்க்கதை பேசுவது. பூ, காய்கறிக் காரர்களிடம் பேரம் பேசி வாங்குவது என்று நேரம் போவதே தெரியாது.

  காலை 10 மணி வாக்கில், ஒரு சைக்கிள்காரன் தெருவில் நுழைந்தான்.பெரிய தட்டிக் கூடை சைக்கிள் கேரியரில் கட்டப்பட்டிருந்தது. அவன் பின்னால் ஜோவென்று சிறுவர் கூட்டம். அருகில் அவன் வந்தவுடன் கூடைக்குள் என்னவென்று ஆச்சர்யம் தாளாமல் எட்டிப் பார்த்தோம்.

  குட்டிக் குட்டியாய், பஞ்சடைத்த கலர் பந்துகள் போலக் கோழிக்குஞ்சுகள். கலர்க் கலராய்.., பொறித்து ஓரிரு நாட்கள் தான் ஆயிருக்கும் போல. மிளகுக் கண்ணும், கீச் கீச்சென்று சத்தமுமாக நெருக்கி அடித்துக் கொண்டிருந்தன. அத்தனை அழகு.

  என் மகன் ஆரம்பித்தான். "அம்மா கோழிக்குஞ்செல்லாம் ஏன் கூடைக்குள்ள இருக்கு?"

  "உன்னை மாதிரியே குறும்பு செஞ்சிருக்கும். புடிச்சி அடச்சி வெச்சிருப்பாங்க" என் தங்கை சொன்னாள்.

  "போ சித்தி...நீ பொய் சொல்ற..எல்லாரும் விளையாட வாங்கறாங்க பாரு...எனக்கும் வாங்கிக் குடு"

  இதற்குள் எதிர் வீட்டு பிரவீன் பச்சை ஒண்றும் சிவப்பு ஒன்றுமாக ரெண்டு கோழிகளை வாங்கி விட்டான். ஐந்து ரூபாய்க்கு ரெண்டு.

  என் தங்கையின் இரண்டு வயது மகளும் அனத்த ஆரம்பித்தாள். "பெரிம்மா எனக்கும் கோழி வாந்திக் குது"

  நான் சொன்னேன் ...�முதல்ல உங்கம்மாவை உன்ன நல்லா மேய்க்கச் சொல்லு...அப்புறம் கோழிய மேய்க்கலாம்.

  "என்னை ஏண்டி இழுக்கற?" என்றாள் என் தங்கை.

  இதற்குள் அண்ணன், தங்கை இருவரும் பாட்டியைப் பிடித்து, பணத்துடன் வெளியே இழுத்து வந்து விட்டார்கள்.
  அம்மாவும், "பசங்க கேட்டா வாங்கிக் குடுக்க வேண்டியது தானே" என்று சொல்லிக் கொண்டே ஆளுக்கு இரண்டாய் கோழிக் குஞ்சுகளையும் வாங்கிக் குடுத்தும் விட்டார்கள். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்ச் என்று கலர் கலராய் திசையொன்றுக்கு ஓடின கோழிகள்.

  குழந்தைகள் முகம் சந்தோசத்தில் பொங்கியது.

  "எதுக்கு பெரிம்மா கோழி வாங்கிருக்கோம்?"என்றாள் தங்கை மகள்.

  "ஆமா...நீ முட்டையா சாப்பிடறயல்ல அது தான் பெரிம்மா கோழி வாங்கி விட்டிருக்கா.. சுகுணா பிராய்லர்ஸ் மாதிரி பெரிய பண்ணையே ஆரம்பிக்கப் போறா பாரு, இந்த நாளு கோழிய வெச்சு..நீயும் கணக்கில்லாம முட்டை சாப்பிடலாம்." என்றாள் என் தங்கை.

  "ஏகத்தாளம் பேசாதடி..கோழிய நல்லாப் பாத்துக்கோ...எங்காவது ஓடப் போகுது...அப்புறம் நாம பெத்த முத்துக ரெண்டும் கத்தித் தொலைக்கும்." என்றேன்.

  "அம்மா கோழி கீச்சுக் கீச்சுன்னு கத்திட்டே இருக்கே...பசிக்குதாம்மா கோழிக்கு" கரிசனத்துடன் என் மகன்.

  �அடடே கோழிக்கு என்ன குடுக்க சாப்பிட?� முன்னப் பின்ன கோழி வளத்தாத் தான தெரியும்.

  அம்மா வேற, கோழி வாங்கிக் குடுத்த கையோட...ஸ்கூலுக்கு கிளம்பிப் போயிட்டாங்க, நான் வந்ததை காரணம் சொல்லி ஒரு மாதம் லீவ் போடுவதாக உத்தேசம். போயிட்டு சாயந்திரம் தான் வருவேன்னு வேற சொல்லிட்டுப் போனாங்க. அதுவரை கோழிய பட்டினி போடுவதா?

  "ஏண்டி, அரிசி போடலாமா கோழிக்கு...?" என்றேன் நான்.

  "அரிசி சாப்பிட்டா காமாலை வராது, போன வாரம் பக்கத்துத் தெருவில ஒரு ஆடு அரிசி சாப்பிட்டு செத்துப் போயிடுச்சாம்." என்றாள் எனதருமை தங்கை.

  இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சு வெச்சுக்கோ...ஆட்டுக்குத் தானடி காமாலை வந்திச்சு...கோழிக்கும் வருமா? " விசனத்துடன் நான்.

  "ஏண்டி நேத்துப் பண்ண கோழி பிரியாணி ஃப்ரிஜ்ஜில இருக்கே அதை எடுத்துப் போடுவமா?" என் புத்திசாலித் தங்கை.

  "உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? கோழி பிரியாணிய கோழிக்கே போடுறது பாவமில்ல, எப்பிடிடி உனக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது... இரு..இரு... கோழிக்கு மோரில வெங்காயத்தை வெட்டிப் போட்டுக் குடுத்தா நல்லதுன்னு படிச்ச ஞாபகம்" இது நான்.

  "நீ மனுசங்களுக்கான சாப்பாடு பத்தித்தான படிச்ச...கோழிக்கெல்லாம் எப்பப் படிச்ச?" எகத்தாளத்துடன் அவள்.

  "எருமமாடே.. எல்லாத்துக்கும் நக்கல் பண்ணிட்டிருந்தேன்னா கோழிமாச்சு..நீயுமாச்சுன்னு போயிட்டே இருப்பேன்... நீ பிரியாணியே போட்டுக்கோ..." கோபத்துடன் நான்.

  "சரி...இரு வெங்காயத்தை நறுக்கிட்டு வர்றேன்...சின்ன வெங்காயமா...பெரிய வெங்காயமா...வீட்டில சின்ன வெங்காயம் தான் இருக்கு. " வெங்காயத்துடன் வந்தாள் என் தங்கை.

  வெங்காயத்தைக் கோழிக்குப் போட்டதும் கோழிகள் கொத்தித் தின்ன ஆரம்பித்தன.

  �வெங்காயம் காரமடிக்காதா சித்தி கோழிக்கு" என்றான் என் மகன்.

  "அதுக்கு தான் சித்தி பக்கத்துல ஒரு கிண்ணத்தில சக்கரை வெச்சிருக்கேன்...காரமடிச்சா சக்கரை சாப்பிட்டா சரியாப் போயிடும்.
  எப்படி சித்தியோட அறிவு?" பெருமையுடன் என் தங்கை.

  "இதற்கிடையில் என் பாட்டி வந்தார்கள்.

  கோழி..வெங்காயம்.. எல்லாம் பாத்து பல்செட் வாயால் சிரித்து விட்டு... என்ன புள்ளைங்க நீங்க கோழிக்கு இத்தூண்டு குறுனையப் போடுவாங்களா? அத விட்டுட்டு தயிரு வெங்காயம்ன்னு வெட்டி வேலை பண்ணிட்டு இருக்கீங்க. அப்படியே செடி செத்தை பக்கத்தில மேய விட்டா அது பாட்டுக்கு புழு பூச்சியெல்லாம் கொத்தித் திங்கப் போகுது...வேண்டாத வேலை புள்ளைங்களா நீங்க பண்றது" என்றபடி தொடர்ந்தார்.

  "ஆளுக்கொண்ணாப் புள்ளையும் பெத்துப் போட்டாச்சி...அப்பவும் புத்தியில்லைன்னா எப்பத் தான் உங்க ரெண்டு பேருக்கும் புத்தி வரும்?அக்காக்காரியும் தங்கச்சியும் அப்படியே ஆத்தாவக் கொண்டிருக்கு..ஒண்ணாவது எம்மவன மாதிரி அறிவா இருக்கா....அவனுக்கென்ன விட்டுட்டுப் போயிட்டானே...தங்கமா பேரப்புள்ளைங்களப் பாக்கக் குடுப்பின இல்லையே...கிழவி, நான் இன்னும் இருக்கனே."அறிவுரையுடன் ஒப்பாரி வேற எப்பவும் போல இலவச இணைப்பு.

  "மேய விட்டா பூனை புடிக்காதா? இந்த வீதில தான் நெறையப் பூனை இருக்கே?" முன்னெச்சரிக்கை முத்தம்மாவாக என் தங்கை.

  "கண் பார்வையிலேயே மேய விடுங்க...புள்ளைங்களை பக்கத்திலிலேயே இருக்கச் சொல்லுங்க" இது பாட்டி.

  நாங்களும் கோழிக்குஞ்சுகளை மேய விட்டு...தண்ணி காட்டி...என்று அவற்றின் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தோம்.

  கோழிகளுக்கு சாப்பாடு போடும் மும்முரத்தில் எங்கள் பிள்ளைகளுக்குக் கூட வயிற்றுக்குத் தரவில்லை. ஒருவழியாக கோழிகளுக்கான சாப்பாட்டுப் பிரச்சினை முடிந்தாகி விட்டது.

  இப்போது தங்குமிடம். எங்கே அடைத்து வைப்பது...இதற்கும் பாட்டியைத்தான் நாடினோம்.

  "அட்டாலில பஞ்சாரமிருக்குது. சாயந்திரமா யாராவது பசங்களை விட்டு எடுக்கலாம். இப்போதைக்கு அட்டைப் பெட்டில போட்டு வைங்க." என்றார்.

  மிக்சி வாங்கிய போது வாங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அதற்குள் பேப்பர் விரித்து கோழிகளை விட்டு மூடினோம்.

  "அம்மா...மூடி வெச்சா கோழிக்கு மூச்சு முட்டாதா?" என் மகன்.

  "அடடா இது நமக்குத் தோணலையே...தெறந்து வெச்சா பூனை வந்து புடிக்குமே" இல்லாத மூளையைக் கசக்கி யோசித்தாள் என் தங்கை.

  சரிடி. ஜன்னல் வெச்சாப் போச்சி. பெட்டியில் ஒரு ஓட்டை போட்டு ஈர்க்கங் குச்சிகளைச் செருகினாள் ஆர்க்கிடெக்டாக என் தங்கை.

  இதற்குள் என் அம்மா வந்தார்கள். வந்தவுடன் அவர்களது கைப்பையைப் பிடுங்காக் குறையாய் வாங்கினோம். எப்போது வெளியே போனாலும் எங்களுக்கு எதாவது கொறிக்க வாங்கி வருவது அம்மாவின் வழக்கம். சூடாக உருளைக் கிழங்கு சிப்ஸ் இருந்தது கைப்பையில்.

  அக்காவும் தங்கையும் பிச்சுப் பிடுங்காத குறையாய் சாப்பிட்டு முடித்தோம். இடையிடையே கோழிக்குஞ்சுகளின் பராமரிப்பையும் சாப்பாட்டையும் பற்றிக் கூறியவாறு.

  மாலை மயங்கியாகி விட்டது. மதியம், குட்டித் தூக்கம் போட்டு எழுந்த எங்கள் பிள்ளைச் செல்வங்கள்...எழுந்தவுடன் கோழியை வெளியே எடுக்கச் சொல்லி அடம் பிடித்தார்கள். வெளியே எடுத்தவுடன் தெறித்து ஓடின கோழிகள்...சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில்.

  கோழிக் குஞ்சுகளை கையில் பிடித்து விளையாடுவதும், தலையில் வைத்து, அவை கால்களால் பிறாண்டும் போது எற்படும் குறு குரு உணர்வை ரசிப்பதுமாக பொழுது ஓடியது. கோழிகளுக்கு பேரும் வைத்தாயிற்று. என் கோழியின் பெயர் செரின் , என் தங்கை கோழியின் பெயர் டயானா, என் மகனின் கோழியின் பெயர் சச்சின், என் தங்கை மகளின் கோழி பிங்க்கி.

  பெயர் சூட்டி, ஆளாளுக்கு கத்திக்கத்தி அவரவர் கோழியின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்ட படி இருந்தோம். இதில் "உங்கோழி சோம்பேறி...போடி உங்கோழி தான் திண்ணிப் பண்டாரம்.."என்றெல்லாம் சண்டை வேறு. இரவும் வந்தாகி விட்டது. பிள்ளைகள் உறங்கி விட எனக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்ற அம்மாவின் பொறுப்பில் கோழிகளை விட்டு விட்டு அப்படியே உறங்கி விட்டேன்.

  அடுத்த நாள் கண்விழிக்கும் போதே வீட்டில் பேச்சுக் குரல். யாரோ வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன். அம்மா கொல்லையில் நின்றிருந்தார்கள். அம்மா காப்பி என்ற படியே அருகில் போனேன்.

  காற்றில் பறந்த படி, தரையெல்லாம் பச்சையும் சிவப்புமாய் இறகுகள். இரத்த தீற்றல்களுடன் கோழிக்குஞ்சுகளின் கால்கள் மட்டும் கிடந்தன. பார்க்கும் போதே என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

  "எல்லா அந்த நாசமாப் போற பூன பண்ணின வேலை. அட்டைப் பெட்டிய பெரட்டித்தள்ளி கோழிய எல்லாத்தையும் கொன்னு தின்னுட்டு, கால மட்டும் போட்டுட்டு போயிருச்சு...வரட்டும் சனியன்.. வெச்சுக்கறேன் அதுக்கு" இறக்கையை கூட்டி வாரிய படி அம்மா புலம்பிக் கொண்டிருந்தார்கள். என் தங்கை இன்னும் விழிக்கவில்லை போல.

  சச்சின்...சச்சின்� என் மகன் தூக்கம் விலகாத கண்களுடன் சச்சினை பார்க்கும் ஆவலுடன் எழுந்து வந்து கொண்டிருந்தான்.
  Last edited by அமரன்; 17-03-2008 at 01:28 PM.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  27,498
  Downloads
  183
  Uploads
  12
  ஓவியாவின் கல் நெஞ்சமடி உனக்கு (ஜிஞ்ஜர்) கதை நினைவிற்கு வருகிறது. செல்லப் பிராணிகளை வளர்க்கத் தெரியாமல் செல்ல அப்பிராணிகள் எதையெதையோ முயற்சி செய்வதும்.. கடைசியில் வரும் சோகங்களும் மனதில் ஆழமாய் எதையோ விட்டுச் சென்றுவிடுகின்றன..

  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8976
  Last edited by தாமரை; 23-11-2007 at 08:44 PM.
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  41
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  65,965
  Downloads
  100
  Uploads
  0
  சிறியதொரு நிகழ்விற்கு ஆரம்பம் கொடுத்து, மகிழ்வை இணைத்து, கலாய்ப்பு, சீண்டல், கோர்த்து, பிள்ளைகளோடு பிள்ளைகளாகி விளையாடி, ஆராய்ச்சி செய்து, பயந்து, கொஞ்சி, மகிழ்ந்து, விறுவிறுப்பைச் சேர்த்து, எதிர்பார்ப்பைக் கூட்டி, சோகமான ஒரு முடிவைக் காட்டுகையில், வாசிக்கும் மனங்களும் வேதனையில் ஆழவைக்கும் ஆழ்ந்த, எழுத்துநடை...

  உங்கள் சின்னச் சின்னச் சம்பவங்களின் மீளும் நினைவுகள் தொடரட்டும்...
  Last edited by அக்னி; 25-11-2007 at 08:05 AM.

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  அருமை யவனி! எத்தனை கனத்துடன் இதை எழுதியிருப்பீர்கள் என யூகிக்க முடிகிறது. எத்துனை ரூபாய் என்பது முக்கியமல்ல; எத்துனை அன்பு என்பதுதான் முக்கியம். நூற்றுக்கணக்கில் செலவழித்து வாங்கிய பொருட்களை விட சில ரூபாய்களில் வாங்கிய பொருட்கள் குழந்தைகளை எவ்வளவு தூரம் ஈர்க்கும் என்பதை நானும் அறிந்திருக்கிறேன். வெங்காயத்துண்டுகளை கோழிக்குஞ்சுகள் சாப்பிடவில்லை என்றெண்ணி அதை ஊட்டி விட்ட சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. மகனின் உள்ளம் புண்படுமே என்ற தாயின் வேதனையும் புரிகிறது.

 5. #5
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,419
  Downloads
  78
  Uploads
  2
  முடிவு உண்மையிலேயே மனத்தை கனத்துப் போக செய்கிறது.. கேலி கிண்டலுடன் ஆரம்பித்து கோழிக்குஞ்சுகளை வளர்க்கத் தெரியாமல்வாங்கி.அதற்கு நீங்க உணவளிக்க மேற்கொண்ட முயற்சிகள் சிரிப்பை வரவழைத்தது.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  5,143
  Downloads
  32
  Uploads
  0
  கோழி குஞ்சுவை வைத்தே குடும்பத்தின் கலகலப்பை காட்டி,முடிவில் மகனின் மனம் கஷ்டப்படுமோ என்று தாயின் கவலையுடன் முடித்து இருப்பது அருமை.நினைவுகளை கொண்டு செல்லும் விதமே படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  29,059
  Downloads
  53
  Uploads
  5
  சிறுவயதில் செல்லப்பிராணிகளின் மேல் ஈர்ப்பு வருவது இயல்பான விசயம்தான். குழந்தைகள் அறிந்து கொள்ள ஆர்வமாயிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகட்கு பதில் சொல்லி மாளாது. அந்தக் குழந்தைகளின் அந்த வயது ஆசைகளை கூடுமானவரை நிறைவேற்றி விட வேண்டும். அவ்வகையில் உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்தான். முடிந்தால் அக்குஞ்சுகளின் தாய் வந்து அழைத்துச் சென்று விட்டதாக பொய் சொல்லிப் பாருங்கள்.


  செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கோழிக்குஞ்சு மட்டுமல்ல, புறா, நாய், பூனை, மைனா, கிளி, மீன், முயல் என்று நான் வளர்த்த செல்லப் பிராணிகளின் வரிசை நீண்டு கொண்டே இருக்கும். கடைசியாக நான் வளர்த்தது காதல் குருவிகள் (ஃபட்ஜிஸ்). கூண்டில் வைத்திருக்கும் பானைக்குள் ஒவ்வொரு ஜோடியும் அழகாகக் குடும்பம் நடத்தி குட்டையிட்டு குஞ்சு பொறித்தன. இரண்டு ஜோடிகளாக வாங்கி வந்தது பத்து ஜோடிகளாகப் பல்கிப் பெருகின. நான் கனடா வந்த பிறகும் என் பெற்றோர்கள் அதைப் பேணி வந்தனர்.ஆனால் ஒரு நாள் அதிகமான குருவிகளின் எண்ணிக்கையால் கூண்டில் நெருக்கம் ஏற்பட்டு ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்த சோகக் கதையைக் கேட்டு கவலையில் ஆழ்ந்த சோகமும் நிகழ்ந்தது. அதன் பின்னர் இனி எந்தப் பிராணியையும் (மனிதப் பிராணியைத் தவிர்த்து ஹி!ஹி!!) வளர்க்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

 8. #8
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,726
  Downloads
  39
  Uploads
  0
  ஆஹா என்னவொரு எழுத்து வண்மை.படிக்கும்போதே அந்த கீச் கீச் சத்தம் காதில் கேட்கிறது. ஒரு கைப்பிடி குருனையை நாமும் அள்ளிப் போடலாமென்று கை பரபரக்கிறது.சின்ன பிள்ளைகளின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்,அதில் பெரியவர்களின் ஈடுபாடு,முதுமகளின் அனுபவ ஆலோசனை,அதிர்ச்சிதரும் சோக முடிவாக சம்பவத்தொகுப்பு சுவைக்கிறது.யவனிகாவின் எழுத்தைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை.அதிலும் அவரின் தங்கை வெங்காயத்தின் கூடவே சர்க்கரை வைத்த செயல் உண்மையிலேயே புன்முறுவலை வரவழைத்து விட்டது.மிகவும் அருமையான ஒரு அனுபவக் கட்டுரை.வாழ்த்துக்கள் தங்கையே.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
  Join Date
  28 Sep 2007
  Location
  கோவை
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  5,053
  Downloads
  25
  Uploads
  0
  நகைச்சுவையில் ஆரம்பித்து சோகத்தில் முடித்திருக்கிறீர்கள். டைரக்டர் பாலா போன்றவர்களின் ஆசீர்வாதமோ. கதை நல்லா இருக்கு.

  எப்படியோ உங்க வீட்டுக்காரருக்கு பத்து ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திவிட்டீர்கள். காசக்குடுத்து கோழிக்குஞ்சை வளர்த்து, அதை பூனை தின்று, அதனால் நமக்கு சோகம் வருவதற்குப் பதில், ரோட்டில் இலவசமாக கிடைக்கும் பூனைக் குட்டிகளை வாங்கி வளர்த்தால் இன்னும் நல்லா இருக்குமே யவனிகா.
  காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  5,143
  Downloads
  32
  Uploads
  0
  Quote Originally Posted by S. ராஜா View Post
  உங்க வீட்டுக்காரருக்கு பத்து ரூபாய் நஷ்டம்
  உங்களுக்கு வயதி விட்டதா ? அதனால் கொஞ்சம் மழுங்கி போச்சு.கோழி குஞ்சு வாங்கி கொடுத்தது யவனிகாவுடைய அம்மா(பிள்ளைகளின் பாட்டி)

 11. #11
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
  Join Date
  28 Sep 2007
  Location
  கோவை
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  5,053
  Downloads
  25
  Uploads
  0
  Quote Originally Posted by mukilan View Post
  இனி எந்தப் பிராணியையும் (மனிதப் பிராணியைத் தவிர்த்து ஹி!ஹி!!) வளர்க்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.
  மனிதப் பிராணியைத் தான் உங்கள் பெற்றோர் வளர்த்துவிட்டார்களே. அந்த மனிதப் பிராணியை வளர்த்து, வாலிபமாக்கி கடைசியில் கனடாவில் போய் செட்டிலாகி இருப்பது அவர்களுக்கு எவ்வளவு மனவருத்தைத் தரும் தெரியுமா? (கூண்டை விட்டு பறந்து போன கிளியைப் போன்றதொரு உணர்வு)

  என்ன செய்வது முகிலன், சில சமயம் கூண்டுக் கிளிகள் இரை தேடி தோலை தூரம் பறக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இரை தேடி தோலை தூரம் சென்ற கூண்டுக் கிளிகளின் குஞ்சுக் கிளிகளுக்கு, கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி கிளிகளின் உறைவிடம் தான் சொர்க்கலோகம். மனிதன் என்றுமே எதையுமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை (நானும் தான்).
  காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  31,938
  Downloads
  29
  Uploads
  0
  பின்னூட்டம் இட்ட அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றி. உண்மையில் கோழ்க்குஞ்சுகள் இறந்த அன்றைக்கு நாங்கள் பட்ட மனவேதனை சொல்லி மாளாது, அதன் பின் எத்தனையோ முறை கோழிக்குஞ்சுகள் விற்பவன் தெருவிற்கு வந்த போதும், என் மகன் வாங்கித் தரச் சொல்லி அழுதான். கண்டிப்பாக மறுத்து விட்டேன்.

  ராஜா உங்க ரவுசுக்கு அளவேயியில்லையா? சரி சரி என்ன செய்ய?
  Last edited by அமரன்; 24-11-2007 at 07:08 AM.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •