Results 1 to 4 of 4

Thread: அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்

    அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்' இலங்கைக்கு இந்தியா அறிவுரை

    கம்பாலா : தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

    உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலாவில் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கம்பாலா சென்றுள்ளார். அங்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொக்கலகாமாவை, பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். அதற்கு பொக்கலகாமா, "இந்த ஒப்பந்தத்தை தயாரிக்க அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டியை அதிபர் ராஜபக்சே ஏற்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வந்து விடும்' என்றார். இலங்கை பார்லிமென்ட்டில், சமீபத்தில், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆதரவு பெறாமலேயே பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தையும் இதே போல நிறைவேற்றலாம் என பிராணப்முகர்ஜி சுட்டிக் காட்டினார். மேலும், விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரணாப் எடுத்து கூறினார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மனிதாபிமான செயற்பாடுகளுக்காக அமைக்கப்பட்ட ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்பை ஸ்தாபித்து இன்றுடன் 882 நாட்கள் ஆகின்றன.
    அக்கட்டமைப்பில் தமிழர் தரப்பும் இணைக்கப்பட்டிருந்த ஒரே காரணத்தாலேயே, அது நீதிமன்றம் மூலம் முடக்கப்பட்டது.

    இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற ஒப்பந்தம் கூட, இரு தசாப்தங்களின் பின்னர், இலங்கையினால் சட்டத்திற்குப் புறம்பான ஒப்பந்தம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆக, இன்னும் ஏன் இலங்கை அரசில் நம்பிக்கை வைக்கின்றார்கள் என்றுதான் புரியவில்லை...
    Last edited by அக்னி; 22-11-2007 at 06:03 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    உலகத்திற்கா அதிகார பகிர்வு என்று வாய் கிழிய பேசும் இலங்கை அரசு ஒரு போதும் அதற்கான ஒப்பந்தங்களை நிறைவேற்றாது.அது தான் உண்மை.தமிழர்கள் போராடி பெறுவது தான் ஒரே வழி.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தையும் இதே போல நிறைவேற்றலாம் என பிராணப்முகர்ஜி சுட்டிக் காட்டினார்.

    ஹீ,ஹீ!!

    இந்த கூற்று இலங்கை அரசியலைத் தொடர்ந்து அவதானித்து வரும் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்....

    இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகள் தமக்குள் எதற்கெல்லாமோ முட்டி மோதினாலும் தமிழர் பிரச்சினையென்று வந்து விட்டால் எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள்...

    பிரச்சினை தீர்ந்துவிட்டால் அவர்கள் தாம் பிழைப்பதற்கும் வாக்குறுதியாக தேர்தலில் முன்வைக்கவும் வேறு என்ன விடயம் இருக்கிறது....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •