Results 1 to 2 of 2

Thread: இடநெருக்கடிக்கு ஏற்ப மடிப்பு கார் வடிவமை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    இடநெருக்கடிக்கு ஏற்ப மடிப்பு கார் வடிவமை

    இடநெருக்கடிக்கு ஏற்ப மடிப்பு கார் வடிவமைப்பு

    வாஷிங்டன் : போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இயக்கிய பின் மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் வித்தியாசமான குட்டிக் கார் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    வாகனப் பெருக்கத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, நெரிசல், இடப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பிரச்னையை சமாளிக்க அமெரிக்காவில் "ஸ்மார்ட் சிடி ரிசர்ச் குரூப்' நிறுவன ஊழியர்கள் புதுமையான காரை வடிவமைத்துள்ளனர். மடக்கும் வசதி கொண்ட எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. மடக்கும் வசதி கொண்ட எலக்ட்ரானிக் காரும் அறிமுகப்படுத்த உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இது இயங்கும். இந்த காரைப் பயன்படுத்திய பின், குடையைப் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அலமாரிக்குள்ளும் வைத்துக் கொள்ள முடியும். இந்த காருக்கு" சிடி' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த கார் பெருமளவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அடடா பார்கிங் பிரச்சினை கூட குறையும்...
    பாவித்து முடிந்ததும் மடக்கி, தூக்கிக் கொண்டு சென்று வீட்டினுள்ளே வைத்தும் விடலாம், பாதுகாப்பாகவும் இருக்கும்...

    தகவலுக்கு நன்றி காந்தி அண்ணா..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •