Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 47

Thread: அவசரகாதல் பாகம் 2 - ஜெஸிகாவின் விபரீத ஆசை.

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0

  Talking அவசரகாதல் பாகம் 2 - ஜெஸிகாவின் விபரீத ஆசை.

  " ஹேய் மிஸ்டர், ஏன் என்னையே பார்த்துட்டு இருக்கீங்க? "

  " உன்னையே பார்த்தேனா? அப்படின்னு யார் சொன்னா? "

  " நான் தான் உங்களையே பார்த்துட்டு இருந்தேனே? "

  " நீங்க ஏன் என்னையே பார்க்கறீங்க ? "

  " என்ன? என்னை மடக்கறதா நினைப்பா? "

  " நீ என்ன பொட்டியா? மடக்கறதுக்கு? வலிய ஒரு பொண்ணு வந்து என்னோட பேசுதுன்னா அதுக்கு காதல்னுதானே அர்த்தம்? "

  " யூ ஸ்டுபிட், உன்னைப் போய் எவளாவது லவ் பண்ணுவாளா? "

  " அப்பறம் எதுக்கு என்னையே பார்க்கிறீங்க? என்கூட பேசறீங்க? நான் உங்ககிட்ட இதுவரைக்கும் பேசியிருக்கேனா? "

  " அப்படீன்னா? "

  " அப்படீன்னா இது காதல்தான்!!"

  " காதல்னா சினிமா பார்க் பீச் இங்கெல்லாம் போகணும்.. இப்படி பஸ் ஸ்டாப்பில நின்னுட்டு கிண்டல் பண்ற?/ யூ மேன்... எனக்கு பஸ்

  வந்துடுச்சு, நாளைக்கு வந்து உன்னை வச்சுக்கறேன். "

  " ஏன்? இன்னைக்கே வெச்சுக்க வேண்டியதுதானே? "

  " ஸ்டுபிட் "

  " தேங்க் யூ "

  கதிர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஜெஸியை விடாமல் துரத்தும் பேர்வழி. நக்கல் நாகசுந்தரம் என்று பசங்கள் எல்லாம் கூப்பிடுவார்கள்

  அவனை. கதிர் ஒரு ரோமியோ மாதிரி. அப்படின்னு அவனாகவே நினைத்துக் கொள்வான். அவன் முகத்திற்குப் பொருந்தாத மூக்குக்

  கண்ணாடி, லிப்ஸ்டிக் வேறு. ஃபேர் அண்ட் ஹேண்ட்ஸம் இவனுக்கான தயாரிப்பு. ஷார்ட் ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்ஸ். அவ்வளவுதான். தினமும்

  நின்று கொண்டு ஜெஸியை சைட் அடிக்காமல் போனால் அன்று அவனுக்கு சோறு இறங்காது.

  ஜெஸி இவனுக்கு நேர் மாறு. இருவருமே சோம்பேறிகள் என்பது வேறு விசயம். பார்க்க சுமாராக இருப்பாள். பொண்ணுக்குரிய அத்தனை

  லட்சணங்களும் அப்படியே!! குணம் மட்டும் முரட்டு குணம்.

  அடுத்தநாள் ஒரு முடிவோடுதான் ஜெஸி கதிரை சந்தித்தாள்.

  " ஹேய் மிஸ்டர், நேத்திக்கு மாதிரி நான் பேசமாட்டேன். என்னோட செருப்புதான் பேசும். "

  " டெக்னாலஜி அவ்வளவு முன்னேறிடுச்சா? "

  " என்ன உளர்ற? "

  " செருப்புகூட பேச ஆரம்பிச்சுடுச்சே! அதைத்தான் சொன்னேன். "

  " மிஸ்டர்" கோபமாய் பார்த்தாள்.

  " இந்த மிஸ்டருக்கு கதிர்" னு பேர் இருக்கு மிஸ் "

  " மிஸ்டர் கதிர், என் பேரு மிஸ் இல்லை. ஜெஸிகா னு சொல்லவும் மாட்டேன், "

  " சரி ஜெஸி, "

  " ஷிட் "

  " நேத்திக்கு ஏதோ காதல் கீதல் னு பேசின? இன்னிக்கு என்ன முடிவோட வந்திருக்கே? "

  " மிஸ்டர் கதிர், நான் ஒண்ணூம் அந்த மாதிரி பொண்ணு இல்ல./ "

  " காதல் பண்ண எதுக்கு ஒரு மாதிரி பொண்ணூ வேணும்? "

  " ஹேய், யூ, "

  " யெஸ்... மீ... !! "

  " சரி, காதல் பண்றதுக்கு உன்கிட்ட அப்படி என்ன தகுதி இருக்கு?"

  " என்ன இப்படி கேட்டுட்ட? கண்ணாடி போட்டிருக்கேன்! பாக்கெட்ல பணம் வெச்சுருக்கேன், ஹீரோ ஹாண்டா நிக்குது. நோக்கியாவுல

  லேட்டஸ்ட் போன் மாடல் வெச்சுருக்கேன்.... இதெல்லாத்தையும் விட, கிரடிட் கார்ட் இருக்கு. "

  " ஓ ஹோ! இதுக்கெல்லாம் நான் மயங்கிடுவேன்னு பார்த்தியா? "

  " சே சே! இத்தனை சொல்லியும் அசராம நிக்கிறியே! நீயாவது மயங்கி விழுகிறதாவது?"

  " ஓகே! நான் உன்னை காதல் பண்றேன். "

  " நன்றி "

  " ஆனா, காதலர்கள் சுத்தறமாதிரி, சினிமா, பார்க், பீச் னு கூட்டிட்டு போகணும். அப்பத்தான் நான் ஒத்துக்குவேன். "

  " சரி "

  இருவரும் அப்போதுதான் சந்தோசமாக சிரித்துப் பேசினார்கள்.

  ஒருநாள் காலை.. கதிர் வீட்டுக்குப் போன்..

  செய்தது ஜெஸிகா, போன் எடுத்தது கதிரின் அம்மா.

  " ஹலோ, கதிர் இருக்கிறாருங்களா? "

  " அப்படி யாரும் இல்லையே! நீங்க யாருங்க மேடம். "

  " நான் அவரோட வுட்பி, கதிர் இந்த நம்பர் தான் கொடுத்தார்.. "

  " கதிரா? காதரா? சரியா சொல்லுங்க மேடம்.. "

  " யாரா இருந்தாலும் பரவாயில்லை கூப்பிட்டுங்க மேடம். "

  காதர்................... உனக்குப் போன்...... சொல்லிவிட்டு அம்மா உள்ளே சென்றார்..

  " ஹலோ " இது காதர்.

  " என்ன ஹலோ? உன் பேரு காதராமே? "

  " காதராமே இல்லை. காதர் தான். அதிலென்ன சந்தேகம் ?

  " நீ எங்கிட்ட கதிர்னுதானே சொன்னே? "

  " நீ அப்படி கேட்டிருப்பே "

  " அப்படீன்னா நீ முஸ்லீமா ? "

  " இல்லையே! "

  " அப்போ? "

  " இண்டோ முஸ்லீம் "

  " இதென்ன ஆங்கிலோ இண்டியன் மாதிரி இண்டோ முஸ்லீம்? "

  " அது இந்து முஸ்லீம் கலவை.. உனக்குப் புரியாது. எதுக்கு போன் பண்ணின ?"

  " இன்னிக்கு "அழகிய தமிழ் மகன்னு ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆகியிருக்கு "

  " அழகிய தமிழ் படம்னு தெலுங்கு படமா ரிலீஸ் ஆகும் ? விசயம் என்ன? "

  " ரெண்டு பேரும் போலாமா? "

  " யார் ரெண்டு பேர்? "

  " மடையா. நாம ரெண்டு பேரும் தான். "

  " ஓ. தாராளமா போலாமே! செகண்ட் ஷோவா?

  " இல்ல, மேட்னி, நீ உடனே தியேட்டருக்குப் போய் போன் பண்ணி ரெண்டு டிக்கெட் புக் பண்ணு.."

  " அதுக்கு எதுக்கு தியேட்டருக்குப் போய் போன் பண்ணனும் ? "

  " சரி எப்படியோ போன் பண்ணு "

  " காலை கட் பண்ணிடவா? "

  " டேய் காதலா...!! உன்னை பார்க் பீச் சினிமான்னு தான் கூட்டிட்டு போகச் சொன்னேன். ஆஸ்பத்திரிக்கில்லை. "

  " என்ன உளர்ற மிஸ்? "

  " காலை கட் பண்றேன்னு சொன்னியே! "

  " அது போன் காலை "

  " போனுக்கு ஏது கால்? "

  " நீ நேத்திக்கு ஓட்கா அடிச்சியா? "

  " எங்கம்மா செருப்பால அடிப்பாங்க. ஒழுங்கா வந்து சேரு. "

  டொக்.

  நம்ம நக்கல் நாகசுந்தரம் வண்டிய உசுப்பிட்டு நேரா தியேட்டருக்குப் போனான். அங்கே ஜெஸி மாதிரியே ஒரு பொண்ணு நின்னுட்டு

  இருந்தது. கிட்ட போய் பார்த்தா, அட .. நம்ம ஜெஸி!!

  இங்க எதுக்கு வந்தா?

  " ஜெஸி, இங்க எதுக்கு வந்தே ? "

  " உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இருந்தது. அதை செக் பண்ணத்தான் வந்தேன். "

  " இப்படி காதலன் மேலயே நம்பிக்கை இல்லாம இருக்கலாமா?

  " சரி சரி. சீக்கிரம் போய் டிக்கெட் எடுத்துட்டு வாங்க. ஷோ ஆரம்பிச்சுடுவாங்க. "

  " ம்.. சரி..."

  ரெண்டு பேரும் சினிமா பார்க்கற படலத்தை முடிச்சுட்டாங்க... அப்பறம்?

  " காதிர், உனக்கு சிகரெட் குடிக்கிற பழக்கம் இருக்கா? "

  " சுத்தமா இல்லை "

  " ஓ காட், எவ்வளவு நல்லவரா இருக்கீங்க. "

  " சுத்தமா இல்லைன்னுதானே சொன்னேன், ஆனா அசுத்தமா சிகரெட் குடிப்பேன். "

  "சீ "

  " என்ன 'சீ? இப்பல்லாம் பொண்ணுங்களே சீக்ரெட்டா சிகரெட் பிடிக்கிறாங்க தெரியுமா? "

  " உண்மையாவா ? "

  " ஆமா, சிகரெட் பிடிக்கிறாங்க. கையால.. ஆனா அடிக்கறதில்லை. ஹி ஹி "

  " ரொம்ப கடிக்காதேடா... நாம கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா? "

  " மனசை விட்டுட்டா, அப்பறம் எப்படி பேசறது...

  " அய்யோ!!!!! "
  சரி அப்பறமா நான் எழுதறேன். பை..
  Last edited by ஆதவா; 01-12-2007 at 02:45 PM.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  94,191
  Downloads
  10
  Uploads
  0
  இது கதையா அல்லது அனுபவமா அல்லது புலம்பலா, எதுவா இருந்தாலும் சரி நன்றாக நகைசுவையாக ரசிக்கும் படி இருந்தது. 007 க்கு வேலை வந்துருச்சு
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  இது கதையா அல்லது அனுபவமா அல்லது புலம்பலா, எதுவா இருந்தாலும் சரி நன்றாக நகைசுவையாக ரசிக்கும் படி இருந்தது. 007 க்கு வேலை வந்துருச்சு
  எல்லாமே சேர்ந்த கலவை வாத்தியாரே!!
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2
  டேய் ஓவியன் இனி இந்த பக்கம் வருவியா, வருவியா..??

  அப்படி மன சாட்சி திட்டினாலும் அடுத்த தடவையும் வருவேன்...!!
  ஆதவன், ஜெசி ரொம்பவே பாவம்ங்க...
  இப்படி ஒருத்தர் கிட்ட மாட்டி அவஸ்தைப் படுறாங்களே..!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ஓவியன் View Post
  டேய் ஓவியன் இனி இந்த பக்கம் வருவியா, வருவியா..??

  அப்படி மன சாட்சி திட்டினாலும் அடுத்த தடவையும் வருவேன்...!!
  ஆதவன், ஜெசி ரொம்பவே பாவம்ங்க...
  இப்படி ஒருத்தர் கிட்ட மாட்டி அவஸ்தைப் படுறாங்களே..!!
  ஹி ஹி..... வாங்க வாங்க... நல்லா எழுதி வைக்கறேன்... படிச்சுட்டு ரத்தம் சொட்ட போங்க..

  ஹி ஹி....

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  25,577
  Downloads
  17
  Uploads
  0
  கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by மன்மதன் View Post
  கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..
  அது இனிமே தாங்க....

  (வசனகர்த்தா ஆகும் முயற்சி. )

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  79,611
  Downloads
  97
  Uploads
  2
  Quote Originally Posted by ஆதவா View Post
  ஹி ஹி..... வாங்க வாங்க... நல்லா எழுதி வைக்கறேன்... படிச்சுட்டு ரத்தம் சொட்ட போங்க..
  ஹி ஹி....
  ஏற்கனவே சொட்டிய இரத்தத்தை ஈடுகட்ட பல மாதங்கள் தேவையாக இருக்கிறதே..!!

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
  Join Date
  28 Dec 2005
  Location
  Bangalore
  Posts
  11,827
  Post Thanks / Like
  iCash Credits
  21,520
  Downloads
  183
  Uploads
  12
  Quote Originally Posted by மன்மதன் View Post
  கதைல வசனம் மட்டுமே இருக்கு.. கதை எங்கே..
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369

  இந்த ஸ்டைல்தானே ஆதவா..(ஆரம்ப பதிவுகள் மட்டும்) இது 1987 -ல் நான் தொடங்கிய முயற்சி.. வசனத்தில் மட்டுமே கதை சொல்லுவது.. பட்டுகோட்டை பிரபாகர் 90 கள்ளின் ஆரம்பத்தில் ஒரு நாவலே இப்படி எழுதி இருக்கிறார்
  தாமரை செல்வன்
  -------------------------------------------
  கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
  கூறுடனேக் கூராக்கிக் கூறு.


  -------------------------------------------
  வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
  தாமரை பதில்கள்
  தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

 10. #10
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  15,770
  Downloads
  62
  Uploads
  3
  Quote Originally Posted by ஆதவா View Post
  அது இனிமே தாங்க....

  (வசனகர்த்தா ஆகும் முயற்சி. )
  மன்மதனுக்கு உதவும் முயற்சியா..? விரைவில் வெற்றி கிட்டட்டும்.
  தலைப்பு சரிதானா ஆதவா..?

  Quote Originally Posted by தாமரை View Post
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369

  இந்த ஸ்டைல்தானே ஆதவா..(ஆரம்ப பதிவுகள் மட்டும்) இது 1987 -ல் நான் தொடங்கிய முயற்சி.. வசனத்தில் மட்டுமே கதை சொல்லுவது.. பட்டுகோட்டை பிரபாகர் 90 கள்ளின் ஆரம்பத்தில் ஒரு நாவலே இப்படி எழுதி இருக்கிறார்
  !! தாமரை..எனது மனதில் பல வருடங்களாகவே இருக்கும் ஒரு எண்ணம் − ஒரு கதை எழுத வேண்டும் − வசனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும் − கதாபாத்திரங்களின் பெயரும் கூட இருக்கக்கூடாது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு கரு உருவானது; ஆனால் எழுதும் போது பிடிபடவில்லை. ஆகவே விட்டு விட்டேன். இங்கு இதைக்கண்டதும் சற்று வியப்புதான். (ஷீ − கவிதை போல!)
  Last edited by பாரதி; 23-11-2007 at 04:20 PM.

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  39
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  51,497
  Downloads
  100
  Uploads
  0
  அப்போ அறுவை இன்னும் முடியலையா... சரியான மொட்டைக் கத்தி காதர்...
  சரி சரி பாப்பம் எங்க போய் முடியுதுன்னு...
  உஸ்ஸ்... அப்பாடா... இப்பவே, கண்ணக்கட்டுதே...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  25,577
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by பாரதி View Post
  ஒரு கதை எழுத வேண்டும் − வசனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும் − கதாபாத்திரங்களின் பெயரும் கூட இருக்கக்கூடாது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு கரு உருவானது; ஆனால் எழுதும் போது பிடிபடவில்லை. ஆகவே விட்டு விட்டேன்.

  விட்டு விடாதீங்க.. எழுதுங்க பாரதி..

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •