Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0

    சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்...

    சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான இடைவெளி

    ஓர் ஞானி கடவுளுடன் கதைக்கும் வல்லமை பெற்றிருந்தார். ஒரு தடவை கடவுளுடன் பேச்சிலீடுபட்டிருக்கும்போது தான் "சொர்க்கத்திற்கும்", "நரகத்திற்கும்" இடையிலான வித்தியாசத்தை/ வேறுபாட்டை அறிய விருப்பப்படுவதாக கூறினார்.

    உடனே கடவுள் இரண்டு கதவுகளை அவர் முன் வருவித்து அவற்றினுள் சென்று பார்க்க அனுமதித்தார்.

    ஞானி முதலாவது கதவை திறந்தார்...
    அறையின் மையத்திலே ஒரு பெரிய வட்ட மேசை,மேசையின் மையத்திலே பெரிய வட்ட வடிவிலான சூடான உணவுப் பண்டம் மிக்க நல்ல வாசத்தை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது. அதன் வாசனை இந்த ஞானியின் வாயை உமிழ்நீரால் நிரப்பிவிட்டது.

    அந்த உணவுப் பண்டங்களை சூழ்ந்திருந்தோர் மிகவும் மெலிந்தோராகவும் வறுமையில் வாடியோராகவும் காணப்பட்டதுடன் பசியுடனும் இருந்தனர். அவர்கள் கையில் பற்றியிருந்த கரண்டி, கைபிடி மிகவும் நீண்டதாக, அவர்கள் கைகளின் நீளத்திலும் சற்று அதிகமானதாகவும் காணப்பட்டது.அவற்றின் உதவியால் பாத்திரத்திலிருக்கும் உணவினை தாராளமாக அள்ளிக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் கையின் நீளத்திலும் அதிகமாக இருப்பதால் எடுத்த உணவு அவர்களுடைய வாயை இட முடியாத நிலையில் காணப்பட்டனர்.

    இதனைக்கண்ட ஞானி மிகவும் கவலையுற்ற நிலையில் சோர்ந்து காணப்பட்டார்.

    கடவுள் குறிக்கிட்டு, "இப்போது நீ பார்த்தது நரகம், சொர்க்கத்தையும் பார்" என்று சொல்லி, சொர்க்கத்தை பார்க்க அனுமதித்தார்...

    அடுத்த கதவை திறந்த ஞானி, அங்கேயும் நரகத்தில் பார்த்த மேசை ஒழுங்குமுறை, உணவுவகை, மற்றும் கரண்டி போன்றவற்றை பார்த்தார். ஆனால் அந்த அறையிலிருந்த மனிதர்கள் மிகவும் சந்தோஷமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் தங்களுக்கிடையே சிரித்து கதைத்துக் கொண்டுமிருந்தனர்.

    இவற்றை கவனித்த குழம்பி நின்ற ஞானி, "எனக்கு ஒன்றுமே விளங்கவில்லயே" என்று கடவுளிடம் விளக்கம் கேட்டார்.

    "மிகவும் எளிதான ஒன்று" என்று கடவுள் விளக்கத்தை அளிக்க ஆரம்பித்தார்.
    சொர்க்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரு இயல்பு அதிகமாக காணப்படுகிறது,அவர்கள் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த தெரிந்தவர்கள். அடுத்தவன் தேவைகளை பூர்த்திசெய்யும் மனப் பக்குவம் அடைந்தவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.


    பி.கு: மின்னஞ்சலில் கிடைத்தது. படித்துவிட்டு அதன் சாராம்சத்தை எழுதியுள்ளேன்.

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக மிக அற்புதமான உண்மை விராடன்.அடுத்தவரை சந்தோஷப்படுத்திப்பார்ப்பதில்தான் உண்மையான சந்தோஷமிருக்கிறது.அதுதான் சொர்க்கம்.எளிய வரிகளில் இணையற்ற கருத்து.பகிர்தலுக்கு நன்றி விராடன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நல்ல கருத்து விராடன் மற்றவருக்கு ஊட்டி விட மனமில்லாமல் பசி பட்டினியுடன் நரகத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார்களே அவர்கள் நரகத்தில் தான் இருக்க வேண்டும். தப்பித் தவறி சொர்க்கத்தினுள் வந்தால் அதனையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள்.
    நல்லதோர் நீதிக்கதைக்கு நன்றிகள் பல நண்பரே...!!
    -------------------------------------------------------------------------------
    இப்போது நம் அமரன் வந்து ஏன் கையினால் அள்ளி சாப்பிட முடியாதா...?
    கரண்டியினால் தான் சாப்பிட வேண்டுமா என்று வினவுவார் பாருங்களேன்..!!
    Last edited by ஓவியன்; 22-11-2007 at 06:52 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    நன்றி சிவா.ஜி, ஓவியன்.
    -----------------------------------------
    அமரன் கேற்பார். அதற்கு கதையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திவிடவேண்டியதுதான். அதாவது அனைவரிற்கும் முழங்கை என்றொரு அங்கமில்லை. ஆதலால் கையை மடிக்க இயலாது என்று.

    சொர்க்கத்திலும் நரகத்திலும் எப்படி இருப்பர் என்று யாருக்கு தெரியும். ஆகையால் எப்படி சொன்னாலும் நம்பிவிடுவார் அமரன்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    [COLOR="DarkRed"][FONT="Latha"]மற்றவருக்கு ஊட்டி விட மனமில்லாமல் பசி பட்டினியுடன் நரகத்திலேயே உழன்று
    பொருள், அன்பு, அறிவு - என எல்லாவற்றுக்கும் பொருந்தும்!

    ''ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
    தன் பிள்ளை தானே வளரும்,,''


    பகிர்ந்தமைக்கு நன்றி விராடன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    வாழ்க்கையில் நாம் ஒவ்வொருத்தரை தான் சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை சொல்வது போல இருக்கிறது.
    ந்ல்ல நீதி கதையை பகிர்ந்து கொண்ட விராடனுக்கு நன்றி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆழ்ந்த கருத்துள்ள கதை..!! நானும் படித்த நியாபகம்.

    "மத்தவர்களை சந்தோசப்படுத்தினால் நீ சந்தோசமாய் இருப்பாய்" என்ற தத்துவத்தைச் சொல்லும் கதை..!!

    நரகத்தில்,
    சுவையான உணவு, நீண்ட கரண்டிகள்.. ஆயினும் பட்டினி.. பசி.. காரணம்.. அவரவர் மட்டும் சாப்பிடனும் என்ற எண்ணம். கரண்டி எட்டாமல் உணவு வாய்க்கு கிட்டவில்லை.


    சொர்க்கத்தில்,
    அதே சுவையான உணவு, நீண்ட கரண்டி... சந்தோசமாய் திடகாத்திரமாய் இருக்கிறார்கள். காரணம்.. நீண்ட கரண்டியில் அள்ளி எதிரில் அமர்ந்தவருக்கு ஊட்டும் பாங்கு..! அனைவரும் வயிறு முட்ட உண்டு மகிழ்ந்து இருக்கின்றனர்.

    பாராட்டுகள் விராடன் அண்ணா.
    தமிழாக்கம் அருமை.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது போல் தான் நம் வாழ்க்கையின் யதார்த்தம்.

    அழகான விபரிப்பு... நன்றி...

    இன்னெரு நகைச்சுவை கலந்த கதை கேட்டிருக்கிறேன்.

    பில்கேட்ஸ் சாவதற்கு முன்னர் சொர்க்கம் நரகம் பார்க்க ஆசை வந்ததாம். கடவுளிடம் அனுமதி வாங்கி முதலில் நரகத்தை பார்க்க சென்றாராம். அங்கு எல்லாம் பார்க்க சூப்பராக இருக்கவே இதுவே எனக்கு போதும். எனக்கு சொர்க்கம் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நான் இனி பூலோகம் செல்ல ஆசை இல்லை என்றாராம். சரி எதற்கும் யோசித்துவிட்டு சொல் என இறைவன் சொல்ல... அவரும் யோசிக்கவேண்டிய அவசியம் ஏது. இது நான் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தாலும் இப்படி ஒரு இடத்திற்கு போகமுடியாது இங்கே தான் இருக்கப்போகிறேன் என்று சொன்னாராம். சரி ஆகட்டும் என்று சொல்லிவிட்டு இறைவன் மறைந்து சில மணித்துளிகளில் அனைத்தும் மாறி படுமோசமாக தெரிந்ததாம் அந்த பிரதேசம். இவருக்கு கோபம் வர மீண்டும் இறைவனை அழைத்தாராம். என்ன இது என்று கேட்க்க... இது தான் நிஜம். முதலில் நீ பார்த்தது நரகத்தின் LATEST VERSION SCREEN SAVER என்றாராம் கடவுள்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சின்னவயதில் அடம்பிடிக்கும் குழந்தைக்கு அன்னை சோறூட்டுவாள். அன்னையுடன் குறும்பு புரிவதற்காகவே சில சிறார்கள் அடம்பிடிப்பது போல நடிப்பார்கள். அந்நிகழ்வு இருவருக்கும் சொர்க்கம். பார்த்துக்கொண்டு இருப்போருக்கும் சொர்க்கம்.

    குழந்தைகள் "இது என்னது " என்று சொந்தம்கொண்டாடினாலும் பகிர்ந்துண்ணவோ, சேர்ந்துவிளையாடவோ பின்நிற்பதில்லை. தமக்குத்தேவையான சந்தோசத்தைப்பெறவே இவ்வாறு செயல்படுகின்றார்கள். எல்லாரும் குழந்தைகளாகவே இருந்தால் இவ்வுலகம் சொர்க்கம். பாடப்பகிர்வுக்கு நன்றி விராடன்.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் வாழ்க்கை சொர்க்கம் என்பது தானே. எனது கையெழுத்தும் அது போலத்தான்.

    தமிழ்படுத்தி இங்கே அறிய தந்ததற்கு நன்றி விராடான்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான கருத்து முதலில் புரிய வில்லை ( நான் கொஞ்ச டியுப்லைட்னு நேசம் சொன்னதா நியாபகம்). பிறகு 1 நிமிடம் யோசித்து தான் புரிந்தது. இது போன்ற நல்ல தகவல்களை தரவும் கலபதி விராடன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நல்ல கதை.....ஒற்றுமையே வாழவைக்கும் என்ற நீதியை சொல்கிறது..... நன்றி விராடன்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •