Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  66
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  11,084
  Downloads
  9
  Uploads
  0

  மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

  மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

  மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
  ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

  மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

  அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

  எந்த நோய் வராது?

  * ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

  * கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

  * கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

  * இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

  எப்படி சாப்பிடணும்?
  மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

  வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

  உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

  பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

  மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


  நன்றி தினமலர்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  32,968
  Downloads
  29
  Uploads
  0
  அப்ப மீன் சாப்பிட ஆரம்பிச்சிட வேண்டியது தான்...தகவல் திரட்டி அளித்தமைக்கு நன்றி மோகன் அவர்களே!

  அத்தோடு இன்னொரு விசயமும் கூட.

  சரும அழகைப் பராமரிக்க மீன் அருமையான உணவு.பளபளக்கும் சருமம் வேண்டுமா? கண்டிப்பாக மீன் சாப்பிடவும்.தலை முடியும் உதிராது பளபளப்புடன் வளரும்.

  மீன் உணவு மட்டும்தான் கொழுப்பே இல்லாத புரதத்தையும் தரவல்லது(அசைவத்தில்)இறால்கள் விதி விலக்கு. மீன் மற்றும் நண்டு போன்றவற்றை அதிக நாட்கள் பதப்படுத்தி உண்பதால் அதிலுள்ள முழுமையான புரதச் சத்தை இழக்கிறோம்.

  சுறாமீன்கள், கருவாடுகள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான உணவில் சேர்த்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  6,173
  Downloads
  32
  Uploads
  0
  அருமையான தகவல்.பகரிதலுக்கு காந்தி அண்ணாவுக்கு நன்றி.
  சகோதரி யவனிகாக்கும் சேர்த்து தான்.

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,481
  Downloads
  10
  Uploads
  0
  ஆகா நாக்கில் எச்சில் ஊறவைத்து விட்டீர்களே (இன்னிக்கு ஞாயிற்று கிழமை) மீன் பற்றி பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி

  மீன் உணவு பற்றிய ஒரு எச்சரிகை
  1. தற்பொழுது ஆறு குளங்களில் சாக்கடை கலப்பதால் இந்த வகை மீன்களை தவிர்த்து விடுங்கள்
  2. மீன் கெட்டு போய் விட்டது என்பதை கண்டுபிடிப்பது மிக கஸ்டம், அதனால் தெரிந்த கடைகளில் மட்டுமே வாங்குகள்
  3. மீன் உணவு நல்லது ஆனால் பிஸ் பிரை செய்ய எக்கசக்க மசாலா பொருட்களை கலகிறோம், அந்த மசாலா பொருட்கள் கெடுதலானது. அடிகடி பிரை சாப்பிடுவதற்க்கு பதில் மீன் குழம்பு வைத்து சாப்பிடுங்கள்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,778
  Downloads
  89
  Uploads
  1
  மீனின் மகிமை புரியவைத்த காந்தி அண்ணாவுக்கு நன்றிகள்..!

  இனி அதிகம் மீன் தான் உணவாகும் வீட்டில்..!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  6,193
  Downloads
  3
  Uploads
  0
  ஆமா மீன் சாப்பிடுங்க மீன் சாப்பிடுங்க என்று சொல்லுறீங்களே, எப்படி சமைக்கிறதுனு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமாப் போகும்.
  Last edited by அக்னி; 20-11-2007 at 11:20 AM. Reason: தணிக்கை
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
  Join Date
  03 Feb 2007
  Location
  மலையும் மலை சார்ந்த இடமும்
  Posts
  16,080
  Post Thanks / Like
  iCash Credits
  97,396
  Downloads
  97
  Uploads
  2
  ஆகா எனக்கும் மீன் என்றால் நிரம்பவே பிடிக்கும், இனி இன்னும் நிறைய சாப்பிடலாம்...!!

  தகவல் பரிமாற்றத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா..!!

  ஹீ,ஹீ!!

  மன்றத்திலே மீன் என்றால் எனக்கு எப்பவும் இந்த திரி தான் ஞாபகத்துக்கு வரும்...!!

  அயிரை மீன் குழம்பு வைப்பது எப்படி?

  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
  முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
  -இயக்குனர் ராம்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  13 Apr 2007
  Location
  ஆஸ்திரேலியா
  Posts
  4,327
  Post Thanks / Like
  iCash Credits
  6,193
  Downloads
  3
  Uploads
  0
  இந்திய முறையில் மீன்கறி வைப்பதற்க்கு இங்கே அளுத்துங்கள்.

  வச்சு சாப்பிட்ட பின்னர் நீங்க எல்லாம் உயிரோட இருந்தா எனக்கும் மறக்காம அனுப்பிடுங்க
  Last edited by அமரன்; 18-11-2007 at 08:09 AM.
  விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,575
  Downloads
  151
  Uploads
  9
  அருமையான தகவல்கள்.. மன்றத்தின் சாப்பாட்டுப்பிரியர்களையும் அடையாளம்காட்டியுள்ளது இச்சுடர். நன்றி காந்தி அண்ணா..

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  6,173
  Downloads
  32
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  அருமையான தகவல்கள்.. மன்றத்தின் சாப்பாட்டுப்பிரியர்களையும் அடையாளம்காட்டியுள்ளது இச்சுடர். நன்றி காந்தி அண்ணா..

  சாப்பாட்டுபிரிய*ர்க*ளைதானே ! சாப்பாட்டுராம*ர்க*ள் இல்லையே !!

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,575
  Downloads
  151
  Uploads
  9
  Quote Originally Posted by நேசம் View Post
  சாப்பாட்டுபிரிய*ர்க*ளைதானே ! சாப்பாட்டுராம*ர்க*ள் இல்லையே !!
  சேச்சே..உங்களை சொல்வேனா நேசம்..

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  6,173
  Downloads
  32
  Uploads
  0

  சாப்பாட்டுராமர்கள்

  Quote Originally Posted by அமரன் View Post
  சேச்சே..உங்களை சொல்வேனா நேசம்..
  நான் சொன்னது சாப்பாட்டுராமர்கள்.அப்புறம் எப்படி உங்களை விட்டுட்டு சொல்வேன்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •