Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 83

Thread: உறைந்த நிமிடம்..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    உறைந்த நிமிடம்..!

    அன்பு உறவுகளே..!

    நண்பர் ஷீ-நிசியின் உயிர் (அற்ற) எழுத்து! குறுங்கவிதையின் தாக்கத்தில் எழுத நினைத்து கணநேரத்தில் உதித்தது இக்கவி..!


    உறைந்த நிமிடம்..!

    வெயில் பொழுது
    துயில் கொள்ள

    சாய்வுநாற்காலி தேடி

    தோய்ந்து இருந்தது

    கடலின் அருகில்..!


    தூரத்து வானின்

    கருத்த சீலையால்
    மறைக்காத இடங்கள்
    சிவந்த மேனியாய்
    சித்திரம் காட்டியது!

    எப்போது வேண்டுமானாலும்
    விடைபெற காத்திருக்கும்

    கொடியில் மாட்டிய பட்டம் போல்

    நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!


    சிறுத்தையின் வேகத்தில்
    சீறி வந்தாய் என் முன்..!
    சிருங்கார பார்வையில்லை..!

    சிரிப்பூட்டும் இதழில்லை..!

    புரியாமல் பார்க்கின்றேன்..!
    புரிந்தே நீ காண மறுக்கும்

    என் விழியோர நேர்பார்வை..!

    புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!


    "
    விலகிப்போ...மறந்துபோ..."
    வார்த்தை சொல்லி
    விலகி நின்றாய்..!

    இரு வார்த்தையில் மரணம் வருமோ?
    இதயத் துடிப்பு நின்று போனது..!

    உள்ளம் உடைந்து, விழி வெடித்து

    வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

    மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
    முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!


    என் உயிர் பிய்த்து
    உடல் மட்டும் சவமாய்
    உறைய வைத்து
    விட்டுச் சென்றாய்..!


    சிதறிய கண்ணீர் மழைநீரோடு

    மெல்ல உரையாடியது..!

    வெகு நேரம் நின்று மழையோடு
    விவரம் சொன்னேன்..!

    வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்

    இதயத்து வலியோடு..!

    சாலைகள் புதிதாய்..!
    மழை மட்டும் என்னோடு

    மருளாமல் துணையாய்..!

    யாருமில்லை.. எவருமில்லை..!
    இருட்டத் துவங்கும் தூரம் வரை

    இரு காலும் இலக்கின்றி

    நடந்து சோர்ந்தது..!


    ஏதோ ஒரு கடை..!

    உள்ளும் புறமும்

    ஈரத்தோடு நுழைகிறேன்..!


    உள்ளே அழுதாலும்

    வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..

    "நக வெட்டி" வேண்டுமென்றேன்..!

    வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

    மனம் கேட்டது!
    உன் "நினைவு வெட்டி"
    கருவி!

    வானம் வாஞ்சையோடு
    வன்மழை மள்கி

    மெல்லிய தூறலாக்கி

    மனம் லேசாக்கியது..!


    தூறலோடே திரும்பி

    வந்தேன்..!

    வெடித்து அழுதேன்..!

    இப்போது கனமழை

    என் வீட்டில்..!
    Last edited by பூமகள்; 22-12-2019 at 01:25 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அழகான கவிதை. மொத்தக் காதலையும், குப்பைக் காகிதமாய் இறுதியில் கசக்கி எறிபவர்களும் இருக்கிறார்கள் தானே!

    "நினைவு வெட்டிக் கருவி" ஒன்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். அது இல்லாததால் தான் தற்காலிக "நினைவு மறப்புப் பானத்தில் "தஞ்சம் புகுகிறார்கள் தேவதாசர்கள்.
    புயலாக அவள், இதயத்தைக் கரை கடந்து சென்றதால் தான் கனமழை அவன் கண்களில்.
    காதலின் முடிவில் கவிதை பிறக்கிறது. கூடவே தாடியும்.

    காதலை வார்த்தைகளில் சிறைப் பிடித்து...சோகத்தை சுகமான வரிகளில் தந்த பூவுக்கு வாழ்த்துக்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நகக்கூர்மை-நினைவன்மை
    முகக்கீறல்-அகக்கீறல்
    அழியும்வடு-அழியாவடு

    வெட்டவெட்ட வளர்கிறது நகம்..
    அல்லது
    கலங்கள் இறக்கின்றன நிதம்..
    அதனால் இருக்கிறது நகவெட்டி..

    நகங்கள் தேவை அற்ற ஒன்று..!

    வெட்டவே முடியாதது நினைவு
    மண்வெட்டியே அதன் முடிவு..
    அதனால் இல்லை நினைவுவெட்டி..

    நினைவுகளே பலருக்கு வழிகாட்டி

    மண்வெட்டி
    காலம்தந்தால் அதுபெருமை
    வருந்தி அழைத்தால் சிறுமை..

    சிறுமையின் போது
    உனக்குள் வெட்டபடலாம் நினைவுகள்
    உன் குடும்ப உறவுகளின் கனவுகள்?????
    ==============================
    அந்திவானம்
    காட்டுவதுமழகு காட்டியதுமழகு..
    ஆதிமுதல் அந்தம்வரை அழகு
    மலைபோல குவிந்து கிடக்கு...!

    துணை விலகும் நேரம்
    திரைபோட்ட கருமுகில் வெளுக்க
    திரைபோடும் நீர் விழியோரம்
    சடுதியான முரண்..!கனதியான பரண்..!

    மழைக்காலம் குறுகிய காலத்தில்-இம்
    'மழை' நீண்டநேரம் பொழியுமாதலால்
    மெலியவில்லையோ உறைந்த நிமிடம்.
    நலிந்துபோகட்டும் உறையும் நிமிடங்கள்.

    பாராட்டுக்கள் பூமகள்..!
    Last edited by அமரன்; 17-11-2007 at 08:30 AM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அழியா வடு..
    நகத்தின் கீறலல்ல..
    அகநினைவின் கீறல்..!

    மண்வெட்டி தேடி போவது
    மடையர்கள் செயல்..!
    மண்வெட்டி வரும் திசையறியா
    வாழ்வு மையல்..!

    புரிய வைத்த வரிகள்..!
    புரிந்தால் பலர் பரிகள்..!

    _____________________
    அந்திவானில் அழகில்
    அர்த்தம் பொதிந்த
    நினைவலைகள்
    அழியாத நிஜச்சுவடாய்..!

    நிழலும் நிஜமும்
    சந்திக்கும் போது
    கவி பிரசவிக்கும்
    கவிஞர் மனத்தில்..!

    இங்கே கவியின்
    முரண் சொல்லி
    நலியும் நிமிடங்கள்
    நாடிப்பாடும் மாண்பு
    நல்லிதயத்திற்கு தெம்பு..!

    பின்னூட்டம் அபாரம்..!

    மிக மிக நன்றிகள் அமரன் அண்ணா.
    Last edited by பூமகள்; 19-11-2007 at 08:35 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    அழகான கவிதை. மொத்தக் காதலையும், குப்பைக் காகிதமாய் இறுதியில் கசக்கி எறிபவர்களும் இருக்கிறார்கள் தானே!
    "நினைவு வெட்டிக் கருவி" ஒன்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். காதலை வார்த்தைகளில் சிறைப் பிடித்து...சோகத்தை சுகமான வரிகளில் தந்த பூவுக்கு வாழ்த்துக்கள்.
    முதல் பின்னூட்டமே என் அருமை யவனி அக்காவிடமிருந்து வந்தது கண்டு ஆனந்தம்.
    ரொம்ப நன்றிகள் யவனி அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இப்படி ஒரு நல்ல கவிதைக்கு ஊக்கியாய் இருந்த ஷீயின் உயிர்த்துடிப்பான கவிதைக்கு முதல் பாராட்டுகள்!

    கடற்புரம்.... வரப்போகும் சோகத்துக்குப் பின்புலம்.
    இருண்ட வானம் இடியாய் இறங்கப்போகும் துயரக் கட்டியம்..

    வெட்டவெளியில் அழும்போதும்போது
    கொட்டும் மழை பெய்தால் வசதி.
    மறைக்கும்.. கழுவும்... தணிக்கும்!

    விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு
    நகங்களை நாமும் நறுக்குவதுண்டு...

    வாலி சொன்ன வரிகளை '' மறுபடியும்'' நினைக்கவைத்த
    குறியீட்டு இறுதிக் காட்சி!

    கவிதையைக் '' காண'' வைத்த பாமகளின் எழுத்துவன்மை
    அசரவைக்கிறது!

    காலில் செருப்பின்றி குடையோடு ஓடும் படப்பெண் பதறவைக்கிறாள்.

    அமரனின் அசத்தல் பின்னூட்டம் மயங்கவைக்கிறது..

    நல்ல படைப்பு.. நல்ல திரி.. நன்றி அனைவருக்கும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிகுந்த நன்றிகள் இளசு அண்ணா.

    அழுவது நஷ்டமா?
    கொட்டும் மழையில்
    அழுவது லாபம்..!
    கண்ணீரும் தூரலும் வித்தியாசமின்றி
    காண்பதால்..!

    குடையில்லா கவிதை..!
    குடை பிடித்த படம்
    முரண் தான்..!

    மனத்தின் பாரத்தை
    மழை வந்து குறைக்குமோ?


    எப்போதுமே இளசு அண்ணாவின் பின்னூட்டம்... ஒரு தனி முத்திரையைப் பதிக்கும்..! அவ்வண்ணம் இந்த கவிதைக்கும் அப்பேறு கிடைத்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..!

    நன்றிகள் இளசு அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by பூமகள் View Post


    உள்ளே அழுதாலும்

    வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..

    "நக வெட்டி" வேண்டுமென்றேன்..!

    வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

    மனம் கேட்டது!
    உன் "நினைவு வெட்டி"
    கருவி!

    வானம் வாஞ்சையோடு
    வன்மழை மள்கி

    மெல்லிய தூரலாக்கி

    மனம் லேசாக்கியது..!


    தூரலோடே திரும்பி

    வந்தேன்..!

    வெடித்து அழுதேன்..!

    இப்போது கனமழை

    என் வீட்டில்..!
    அருமையான சோக கீதம்....
    ஒவ்வொருத்தரின்... பின்னூட்டங்களால் கவிதை இன்னும் அழகு பெறுகிறது...
    வாழ்த்துக்கள் பூமகளே..

    ஷீ-நிசி... ஆதவா இன்னும் சிலரின் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
    Last edited by அறிஞர்; 19-11-2007 at 04:49 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா.
    பின்னுட்ட ஊக்கம் கொடுத்து வாழ்த்தியமை கண்டு மட்டற்ற ஆனந்தம்.
    இன்னமும் பலரது கண்களுக்கு இக்கவி தட்டுப்படவில்லையோ??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கொதித்து வழிந்து
    இதயத்தின் அடிவாரத்தில்
    தேங்கிய உணர்ச்சி சுனையில்
    இன்னும்
    வெடிக்கிறது வெப்ப குமிழிகள்..

    ஞாபக தளத்தில்
    அடிமண் கூட்
    கனன்று சிவக்கிறது..

    உதிரும் மேக
    நீர்மங்களில் ஆற்றாமையின்
    நிறமிழந்த வர்ணங்கள்..

    வலிகளின்
    பிழிசாறு விழிகளில்..

    விழுகிற
    மழையால் மண்மணக்கும்
    இந்த விழிகளின்
    துளியால்
    மழையும் கண்ணீராய்
    உறைந்த நிமிடமோ
    இக்கவிதை பிறந்த நிமிடம் ?

    வாழ்த்துகள்.. பாரட்டுக்கள்.. பூமகள்

    -ஆதி
    Last edited by ஆதி; 19-11-2007 at 05:38 PM.
    அன்புடன் ஆதி



  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    கொதித்து வழிந்து
    இதயத்தின் அடிவாரத்தில்
    தேங்கிய உணர்ச்சி சுனையில்
    இன்னும்
    வெடிக்கிறது வெப்ப குமிழிகள்..
    வெப்ப வெடிகள் வெடித்து
    வெந்த இதயத்தில்
    துடிப்பு தணிக்கைசெய்தது..!

    ஞாபக தளத்தில்
    அடிமண் கூட்
    கனன்று சிவக்கிறது..
    நினைவுப்பரணில்
    தூசுமண்டிய
    துடித்த கணங்கள்..!

    உதிரும் மேக
    நீர்மங்களில் ஆற்றாமையின்
    நிறமிழந்த வர்ணங்கள்..
    முகிலுக்கும் நீருக்குமான
    விவாகரத்து மோதல்..!

    வலிகளின்
    பிழிசாறு விழிகளில்..

    வென்றது பிரிவு..!
    அழுதது பரிவு..!

    விழுகிற
    மழையால் மண்மணக்கும்
    இந்த விழிகளின்
    துளியால்
    மழையே மணந்தது
    கண்ணீராய்..
    மணக்கும் காலம்
    மடைதிறந்து வரும்
    மகிழ்ச்சி வெள்ளமாய்..!
    மாண்புடன் காப்பது
    மங்கா தமிழ்ப்பாங்கு..!

    வாழ்த்துகள்.. பாரட்டுக்கள்.. பூமகள்
    ஆதியின் பின்னூட்டகவி அருமையோ அருமை..!
    அழகான கவிதை..! மிக மிக நன்றிகள் ஆதி..!!
    Last edited by பூமகள்; 19-11-2007 at 05:45 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காதல் சொல்லும் போது,
    மழை..,
    சிலிர்க்கும் பன்னீர்த்துளிகள்...
    காதல் கொல்லும் போது,
    மழை..,
    துடைக்கும் கண்ணீர்த்துளிகள்...

    வானவில் வர்ணம் தொலைத்து,
    என்மேல்
    ரணம் தொடுக்கும் வில்லானது...

    காதலித்து காத்திருந்தால்,
    காதல் அழித்து இடித்தாய்.
    இடிந்தேன் நான்.
    இதயம் இடிதாங்கி... தாங்கியது...
    சோகம் சுமக்க தந்தாய்.
    சுமந்தேன் நான்.
    மனம் சுமைதாங்கி... தங்கியது...

    ஈரலிப்பாய் இருந்தாலும்,
    எரிகிறது.., உள்ளும் புறமும்...
    புரிகிறது.., கண்ணீரின் எரிசக்தி...

    வலிக்கிறது உயிர்வரை...
    உயிருள்ளவரை வலிக்கும்,
    இந்த..,
    காதல் கருக்கலைப்பு...

    பூமகளின் கவிதை, நெஞ்சைத் துஞ்ச வைக்கின்றது...
    வரிகளிலும் நிகழக்கூடாத சோகம்... எவர் வாழ்விலும் நிழலிடவும் கூடாது...

    அனைவர் பின்னூட்டங்களும் உணர்ச்சிக் குவியல்...
    Last edited by அக்னி; 20-11-2007 at 02:04 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •