Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 54

Thread: தீபாவளியில் ஒரு தீபாவளி.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0

    தீபாவளியில் ஒரு தீபாவளி.

    தீபாவளிக்கு என்னோட கட்டுரை இல்லாட்டி எப்படி? வந்துட்டேன்.....

    இதுவரை வந்த இருபத்தி இரண்டு தீபாவளிகளிலும் இது ரொம்ப வித்தியாசமான தீவாளிங்கோ... எப்பவுமே வீட்டில் எண்ணைக் குளியல்
    தடாபுடா பிரியாணி சமையல் உறவினர்களின் வருகை என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். இந்த முறை சற்று வரண்ட தீபாவளி எங்கள்
    வீட்டில்... எனக்கு இல்லை.

    காலை எழுந்ததும் வாக்கிங் செல்லலாம் என்று நினைத்தேன். அப்பறமாக ஒரு யோசனை. நான் எப்பவுமே லுங்கி கட்டிக் கொண்டு
    செல்வதால் யாராவது செல்லும் பாதையில் ஆட்டம்பாம் வைத்து விட்டால்... சரி சரி,, காலையில எழுந்தவுடனே பெரியம்மா வீட்டுக்குப்
    போய் கறி" அறிஞ்சுட்டு எங்க அக்கா ஊர்ல இருந்து வரதை வரவேற்த்துட்டு, மணி ஒன்பதாய்டுச்சு.... இன்னும் பல்லு விலக்கலை.
    எல்லாரும் கோவிலுக்குப் போகலாம்னு சொன்னாங்க. சரி நானும் வரேன் (வேறெதுக்கு சைட் அடிக்கத்தான்) சொல்லி மேக்கப்
    போட்டேன்... அட அப்பக் கூட பல்லு விலக்கலை. இருந்தாலும் என் பல்லு சுத்தமாத்தான் இருக்கும்.. நேரா கிளம்பி கோவிலுக்குப் போற
    வழியில....

    அடப்பாவமே எங்க ஏரியாவில இத்தனை பெண்களா? அதுவும் அழகழகா.... அய்யோ அய்யோ. மிஸ் பண்ணீட்டேனே.. எல்லாருமே
    சுடிதார், தாவணி அப்படின்னு கலக்கிட்டாங்க.. (அன்னிக்கு மட்டும்தான் குளிச்சிருப்பாங்க. ) கோவிலுக்குப் போய் சேர்ந்தாச்சு. அங்கே
    ஒரே கூட்டம். எல்லாமே தாவணிங்களும் சேலைகளும் தான். என்னை உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லீட்டாங்க... அவங்க என்ன
    சொல்றது? நானே உள்ளே போய் தனியா நின்னுகிட்டேன். எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்தாலும் அந்த கோவில்ல இருக்கறது எந்த
    கடவுள்னே தெரியாததால எட்டி எட்டி பார்த்தேன். அட உண்மையாகவே சிலையைத்தான் பார்த்தேன். என்னவோ நான் பெண்ணுங்கள
    எட்டிப் பார்க்கறதுக்குன்னு நினைச்சுடாதீங்க... (சில சமயத்தில பொய் பேசுவேன். சாக்கிரதை) எட்டிப் பார்த்தா ... அட! நம்ம விநாயகர்..

    ஒரு பிரம்மச்சாரிக்கு இத்தனை பெண்கள் கூட்டமா? அட விநாயகா! உமக்கு லக்குய்யா! இத்தனை பேர் முன்னாடி நின்னும் அசராம
    இருக்கிறாயே! நீ கிரேட் அப்படின்னு ஒரு சலாம் போட்டுட்டு. பக்கத்தில இருந்தவங்களை அப்படியே நோட்டம் வுட்டேன். அடாடா!!
    இனிமே தினமும் எட்டு எட்டரைக்கு கோவில்ல ஆதவன் ஆஜர்... எங்க அக்கா மாருங்க வேற ஒரு பக்கம் நின்னுட்டு என்னைத் தேடிட்டு
    இருக்க, நானோ ஏதாவது வலையில மாட்டுமான்னு தேடிட்டு இருந்தேன். ஆங்க்.... மாட்டிடுச்சு..

    பொதுவா பொண்ணுங்ககிட்ட பேசறதுக்கு கூச்சம் இல்லை இப்பல்லாம்.. அதனால நானே ஆரம்பிச்சேன். கேளுங்க சம்பாஷனை

    " ஏங்க, கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. " இது நான். அப்படி ஒண்ணும் அந்தப் பொண்ணூ முட்டிட்டு நிக்கலை

    " ம்ம் " இவ்வளவுதான் அந்த பொண்ணூ....

    " தினமும் கோவிலுக்கு வரேன், ஆனா உங்களைப் பார்த்ததில்லை " கடலை ஆரம்பிச்சுட்டது..

    " ஓ! நானும்தான் உங்களைப் பார்த்ததேயில்லை " ஹி ஹி நம்ம முகத்தை அப்ப யாரும் போட்டா புடிக்கலை...

    " இதுதான் உங்க தீவாளி ட்ரெஸ்ஸா? வெரி நைஸ்"

    " தேங்க்ஸ். இந்த ஊர்லயே உங்க தீபாவளி ட்ரெஸ் தான் சூப்பர். " வழிக்கு வந்திடுச்சு..

    அசடு வழிய நான்... பின்னே. தீபாவளிக்கு லுங்கிய கட்டிட்டு கோவிலுக்குப் போனா...

    " அது சரி. நீங்க மட்டும் என்னவாம் தோ பாரு, அந்தப் பொண்ணு, நைட்டி போட்டுட்டு வந்து நின்னு சாமி கும்பிடுது... தலைகூட சீவலை."
    ஒரு பொண்ணைப் பார்த்து சொன்னேன்.

    " ம்கும், அது புது ட்ரெஸ்தான், நைட்டி இல்ல. (அதுக்கு என்னவோ பேர்... ஆனா நைட்டி இல்ல. மன்ற மகளிரணியே! என்ன
    பேருங்கம்மா?) இப்பத்தான் குளிச்சுட்டு வந்து நிக்குது. அதான் தலை சீவலை. "

    இப்படி சொன்னதுமே கொஞ்சம் விலகி நின்னுட்டேன். இன்னும் பல்லுகூட விலக்கலைன்னு தெரிஞ்சா பாவம் அந்தப் பொண்ணு ரொம்ப
    வருத்தப்படும். கருமம் கருமம்.. முதல்ல போய் பல்லு விலக்கனும்...

    விலக்கிட்டு, என்னோட தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன்.

    அங்க என்னடான்னா ஒரே நர்ஸுங்க கூட்டம். மலையாளிங்க வேற.. தங்கச்சிய சாக்கா வெச்சு நர்ஸுங்ககிட்ட பேசலாம்னு பார்த்தா
    எல்லாருமே கூட்டம் கூட்டமா வராங்க, அப்படியோ போய்டறாங்க... ஒரு மனுசன் உட்கார்ந்துட்டு இருக்கறதைப் பார்த்துட்டு,
    அடப்பாவமே அவன்கூட கடலை போடலாமேன்னு ஒரு எண்ணம் வந்ததா அவங்களுக்கு... சே! என்ன உலகமிது.... (ஏற்கனவே ஒருமுறை
    நர்ஸுங்ககிட்ட கடலை போட்ட அனுபவமுண்டு..)

    அப்பறமா நம்ம மன்ற நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா, சிலபேருக்கு போன் பண்ணலாம்னு பார்த்தா, நாட் ரீச்சபள்.

    ஒரே ஒருத்தர் மட்டும் போன் எடுக்கவே இல்லை. ஏதோ தலை தீபாவளி பிஸியா இருக்கும்..

    அப்பறம்??

    ஊட்டுக்கு வந்து கவுந்தடிச்சு தூங்கிட்டேன். இதுக்கு அப்பறமும் எங்கிட்ட நீங்க கேள்வி கேட்க ஒரு கேள்வி இருக்கு? என்ன தெரியுமா?

    (தெரிஞ்சவங்க சொல்லக்கூடாது. )
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    யோவ் எப்ப தான்யா பல்லு விளக்குனீரு..?
    தீபாவளி அதுவுமா லுங்கியோட பொண்ணுகிட்ட கடலை... ஹ்ம்ம்..
    அப்புறம் சத்தியமா எனக்கு போன் வரவில்லை.. வந்திருந்தா எடுத்திருப்பேனே.. ஹிஹி..

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    யோவ் எப்ப தான்யா பல்லு விளக்குனீரு..?
    தீபாவளி அதுவுமா லுங்கியோட பொண்ணுகிட்ட கடலை... ஹ்ம்ம்..
    அப்புறம் சத்தியமா எனக்கு போன் வரவில்லை.. வந்திருந்தா எடுத்திருப்பேனே.. ஹிஹி..
    அட.. போன் பண்ணினேங்க... போகலை. நிசமா...

    அதுசரி/... உங்களுக்கு எப்படி தலைதீபாவளி ஆகும்? ஒருவேளை.....
    Last edited by ஆதவா; 09-11-2007 at 09:11 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    அட.. போன் பண்ணினேங்க... போகலை. நிசமா...

    அதுசரி/... உங்களுக்கு எப்படி தலைதீபாவளி ஆகும்? ஒருவேளை.....
    அட கால்கட்டு போட்டாச்சுங்க..
    2 வாரமாகுமாம்..

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    9,587
    Downloads
    94
    Uploads
    13
    நீங்கள் அவருடைய இரண்டு கேள்விகளில், ஒரு கேள்விக்குதான் பதில் சொன்னிர்கள்,

    முதல் கேள்வி.. நீங்கள் எப்பொழுதுதான் பல்விளக்கினீர்கள்?
    எங்க சார் பதிலையே காணோம்?
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    63,987
    Downloads
    89
    Uploads
    1
    ஆதவா....
    நீ சொன்னதிலிருந்து இவை புரிஞ்சுது...!

    1. தீபாவளி அன்று முழுதும் நீ பல்லு விலக்கலை..!

    2. குளிக்கலை... அழுக்கு லுங்கியோடு கோவிலில் லூட்டி..! (இங்க இடிக்குது பா.... ஏன்னா... லுங்கி கட்டினா கோவிலுக்குள் விடமாட்டார்கள் என்று தான் அறிவேன்... உங்க ஊரில் விடுறாங்களா?? )

    3. கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!!

    4. தீபாவளி அன்னிக்கி... ஊரு சுத்திட்டு தூக்கம்...! கனவு...! etc..etc..!!

    ஆக மொத்தம் தீபாவளி அன்று
    ஆதவா...!! அழுக்கு ஆழி பா..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அட கால்கட்டு போட்டாச்சுங்க..
    2 வாரமாகுமாம்..
    சொல்லவேயில்லை.....

    வாழ்த்துகள்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by xavier_raja View Post
    நீங்கள் அவருடைய இரண்டு கேள்விகளில், ஒரு கேள்விக்குதான் பதில் சொன்னிர்கள்,

    முதல் கேள்வி.. நீங்கள் எப்பொழுதுதான் பல்விளக்கினீர்கள்?
    எங்க சார் பதிலையே காணோம்?
    அட உண்மையிலேயே பல்லு விலக்கிட்டேங்க..... டைம் கணக்கெல்லாம் நோட் பண்ணலை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    சொல்லவேயில்லை.....

    வாழ்த்துகள்..
    ஹிஹி..டாங்க்ஸ்..
    Last edited by மதி; 09-11-2007 at 11:07 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    ஆதவா....
    நீ சொன்னதிலிருந்து இவை புரிஞ்சுது...!

    1. தீபாவளி அன்று முழுதும் நீ பல்லு விலக்கலை..!

    2. குளிக்கலை... அழுக்கு லுங்கியோடு கோவிலில் லூட்டி..! (இங்க இடிக்குது பா.... ஏன்னா... லுங்கி கட்டினா கோவிலுக்குள் விடமாட்டார்கள் என்று தான் அறிவேன்... உங்க ஊரில் விடுறாங்களா?? )

    3. கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!!

    4. தீபாவளி அன்னிக்கி... ஊரு சுத்திட்டு தூக்கம்...! கனவு...! etc..etc..!!

    ஆக மொத்தம் தீபாவளி அன்று ஆதவா...!! அழுக்கு ஆழி பா..!!

    ஹி ஹி.... நாந்தான் சொன்னேனே அந்தளவுக்கு பிஸி...

    பல்லு விலக்காம சாப்பிடமாட்டேன்.... சோ.... இது ஓகே.

    எங்க ஊர் கோவில்ல பூசாரிங்களே இருக்கமாட்டாங்க.. இதுல லுங்கி கட்டிட்டு வரக்கூடாதுன்னு கட்டுப்பாடு வேறையா....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    131,906
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    ஹிஹி..டாங்க்ஸ்..
    வேணா போட்டோ அனுப்பவா...
    நல்ல பிங்க் கலர்.. இப்பவே ரொம்ப இறுக்கம்..
    அனுப்புங்கோ அனுப்புங்கோ
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,950
    Downloads
    151
    Uploads
    9
    கடலை வறுத்து அது தீஞ்சிருச்சி...! ஆனா விடலை நீ....!!
    பூமகள்...!
    விடலை ஆதவா..விடலை கடலை என்கின்றீர்களா...
    Last edited by அமரன்; 09-11-2007 at 10:14 AM.

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •