Page 1 of 31 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    உலகச்செய்திகள் 22-11-2008

    01.பெனசிரை தீர்த்து கட்ட பெண் மனித வெடிகுண்டு

    இஸ்லாமாபாத் :பெனசிரை தீர்த்துக் கட்ட, பெண் மனித வெடிகுண்டு அனுப்பப் பட்டுள்ளதாக அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


    02.பாதுகாப்பற்ற ஊசியால் 13 லட்சம் பேர் பலி
    ஜெனிவா :பாதுகாப்பற்ற ஊசிகளால், ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


    03.புலிகளுடன் பேச்சு நடத்த தயார் இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு

    கொழும்பு :விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதலில் ஈடுபட்டாலும், அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.



    04.பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்

    லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.



    05.இலங்கை விமான படைக்கு பெருத்த பின்னடைவு புலிகள் தாக்குதல் எதிரொலி

    கொழும்பு :இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால், விமானப் படைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    06.விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி

    கேப் கெனரவல் :அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, டிஸ்கவரி விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
    Last edited by mgandhi; 21-11-2008 at 04:37 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உடனே செயற்படுத்திவிட்டீர்களே...
    மிக்க நன்றி...
    விரல் நுனியில் செய்திகளைத் தொகுத்துத் தரும் உங்கள் சேவை என்றும் தொடர..,
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
    Last edited by அக்னி; 24-10-2007 at 06:18 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1.கலிபோர்னியாவில் காட்டுத்தீ

    சான் டியாகோ: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்ந்து நான்காவது நாளாக தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.



    2.அனுராதபுரம் விமான நிலையத் தாக்குதலை பெருமையாக கருதும் விடுதலைப்புலிகள்

    கொழும்பு: இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



    3.தேர்தலை ஒத்திவைக்க தேவையில்லை * சொல்கிறார் பெனசிர்

    இஸ்லாமாபாத்: பாக்.,கில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், பொதுத்தேர்தல் ரத்து செய்யப்படவோ அல்லது ஒத்திவைக்கவோ தேவையில்லை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசிர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


    4.விண்வெளியில் குஞ்சு பொரித்தது கரப்பான் பூச்சி

    மாஸ்கோ: நடேஸ்டா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ரஷ்ய கரப்பான் பூச்சி, விண்வெளியில் முதல் முறையாக குஞ்சு பொரித்துள்ளது.


    5.தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகள்: முன்னாள் ஜனாதிபதி கலாம் யோசனை

    லண்டன்: "அணுசக்தி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகளை அமைக்க வேண்டும்' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே அச்சுறுத்தல்: ஒப்புக் கொண்டார் அதிபர் முஷாரப்

    இஸ்லாமாபாத்: "பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்று அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.


    2. ராகுலுடன் சீனா சென்றார் சோனியா

    பீஜிங்: காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகனும், கட்சியின் பொதுச் செயலருமான ராகுல் காந்தியும் ஐந்து நாள் பயணமாக நேற்று சீனாவின் தலைநகர் பீஜிங் சென்றடைந்தனர்.


    3. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

    ஜகர்த்தா: இந்தோனேசியாவில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


    4. கலிபோர்னியாவில் ஐந்தாவது நாளாக காட்டுத்தீ நீடிப்பு

    சான் டியாகோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.


    5. கராச்சி குண்டு வெடிப்பு விசாரணை அதிகாரியை மாற்றியது பாக்., அரசு

    இஸ்லாமாபாத்: பெனசிரை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை தலைவராக, பாக்., போலீஸ் டி.ஜ.ஜி., சவுத் மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.


    6. புரோட்டா, தந்துரி விலை உயர்வு: எமிரேட் இந்தியர்கள் அதிருப்தி

    துபாய்: கோதுமை, பால் மற்றும் சமையல் எண்ணெயின் விலை உயர்வால் ஐக்கிய அரபு எமிரேட்டில் புரோட்டா, தந்துரி ரொட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Last edited by mgandhi; 26-10-2007 at 06:20 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நல்ல பணி தொடருங்கள் மோகன்காந்தி அண்ணா..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்ட 2 கோĩ

    விளையாட்டு பொம்மைகள் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது சீனாதான். விதவிதமான விளையாட்டு பொருட்களை தயாரித்து குறைந்த விலையில் விற்பதில் அவர்களை மிஞ்ச முடியாது. அனால் சமீப காலமாக அந்நாட்டு பொம்மைகள்தான் அதிக அளவில் அமெரிக்காவால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கின்றன. காரணம் என்னவென்றால், சீன தயாரிப்பு பொம்மைகளில் அடித்திருக்கும் பெயின்ட்டில் காரீயம் என்ற நஞ்சு பொருள் அதிக அளவில் கலந்திருப்பதாலும், பொம்மைகளில் வைக்கப்பட்டிருக்கும் காந்தத்தாலும், குழந்தைகளின் உடல் நலத்திற்கு அது கேடு விளைவிக்கும் என்கிறார்கள். சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பொம்மை தயாரிப்பாளர்களான அமெரிக்காவின் மெட்டல் கம்பெனி, மூன்று தடவைகளில் 2 கோடியே 10 லட்சம் சீன பொம்மைகளை வேண்டாம் என்று சீனாவிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறது.

    thanks: dinamalar
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    பயணிகள் தவிப்பு

    பிரான்சில் ஏர் பிரான்ஸ் விமான ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏராளமான ஏர் பிரான்ஸ் விமானங்கள், பாரீசில் உள்ள சார்லஸ் டி காலி மற்றும் ஆர்லி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. ஊதிய உயர்வு, வேலை செய்யும் இடத்தில் உள்ள சூழ்நிலை போன்றவைகளை முன்வைத்து ஏர் பிரான்ஸ் ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது பிரான்சில் விடுமுறை காலமாகவும் இருப்பதால் ஏராளமான பயணிகள் ஒழுங்கான விமான சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம், நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து விட்டது. இதனால் விமானத்தில் ஏற விமான நிலையம் வரும் பயணிகள் முன்கூட்டியே விமானம் இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு வருமாறு ஏர் பிரான்ஸ் நிர்வாகம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. 13 வயதில் ஆயுள் தண்டனை : அமெரிக்காவில் கொடூரம்

    வாஷிங்டன் : அமெரிக்காவில் ஆயுள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களில் 70 பேர், 14 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    2. "ஹலோ! நீங்க எங்க இருக்கீங்க இப்ப...? மொபைலில் இனி கேட்கவே வேணாம்!

    நியூயார்க் : "ஹலோ! நீங்க எங்கேயிருந்து பேசறீங்க, இப்ப எங்கே இருக்கீங்க...?' என்று, மொபைல் போனில் கேட்காதவர்கள் இருக்க முடியாது.


    3. பயங்கரவாதிகளுடன் பாக்., ராணுவம் சண்டை : மக்கள் வெளியேற்றம்

    மிங்கோரா: பாக்.,கின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் தலிபானை போன்ற பயங்கரவாத அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.


    4. சிகிச்சைக்காக இந்தியா வரும் பிரிட்டன் நாட்டினர்

    லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர்.


    5. "டெரகோட்டா' மியூசியத்தை பார்வையிட்டார் சோனியா

    ஜியான் : ""சீன நாட்டின் தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை நல்ல பலனை அளித்துள்ளது,'' என்று காங்., தலைவர் சோனியா கூறினார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1.தீபாவளியை கவுரவப்படுத்தி அமெரிக்க எம்.பிக்கள் தீர்மானம்

    வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் பிரதிநிதிகள் சபையில், தீபாவளி பண்டிகையை கவுரவப்படுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


    2.நைஜீரியாவில் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் விடுதலை

    லாகோஸ்: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூன்று தமிழர்கள் உட்பட ஆறு வெளிநாட்டு ஊழியர்கள், பயங்கரவாதிகளால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.


    3. ஷேக் ஹசீனாவிடம் விசாரணை

    தாகா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, வங்கதேச முன்னாள் பிரதமரிடம், ஊழல் ஒழிப்பு குழுவினர் முதல் முறையாக நேற்று விசாரணை நடத்தினர்.


    4.முகர்ஜியுடன் பேசினார் ரைஸ்

    வாஷிங்டன்: வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ் டெலிபோனில் பேசினார். இருவரும் அணுசக்தி ஒப்பந்தத்தின் நிலை குறித்து பேசியுள்ளனர்.


    5.நவாஸ் பாக்., திரும்ப அனுமதி: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

    இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரிப் நாடு திரும்புவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த வேண்டும்


    6.வேலை நிறுத்தத்தால் துபாய் அதிரடி: 4 ஆயிரம் பேரை நாடு கடத்த முடிவு

    துபாய்: சம்பள உயர்வு கேட்டு, துபாயில் போராட்டம் நடத்திய கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்களை நாடு கடத்த துபாய் அரசு முடிவு செய்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. துபாய் போராட்டத்தில் வன்முறை 90 இந்தியர் உட்பட 159 பேர் கைது

    துபாய்: துபாயில், கூடுதல் சம்பளம் கோரியும், தொழிலாளர்கள் முகாம்களில் கூடுதல் வசதி கோரியும் நடந்த போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்ட 159 பேர் கைது செய்யப்பட்டனர்.


    2. மியான்மரில் புத்ததுறவிகள் மீண்டும் பேரணி

    யாங்கூன்: மியான்மரில் உள்ள பகோக்கு நகரில், புத்த துறவிகள் 100 பேர், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஒரு மணி நேரம் பேரணி நடத்தினர்.


    3. கியூபா மீது பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்

    ஐ.நா: கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை விலக்கிக் கொள்ளும் படி ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. கியூபா மீதான வர்த்தக தடை ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியாவும் கூறியுள்ளது.


    4. இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியம் சொல்கிறது அமெரிக்கா

    வாஷிங்டன்: "பாகிஸ்தானை விட இந்தியாவுடனான உறவு தான் எங்களுக்கு முக்கியமானது' என, அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    5. கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

    ஆக்லாந்து: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.


    6. இலங்கை மோதலில் 21 பேர் பலி

    கொழும்பு: இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக வடக்கு பகுதியில் நடந்த பல்வேறு மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.


    7. சாலையை பெருக்க சீனாவில் நவீன இயந்திரம்

    சீனா: சாலையை சுத்தப்படுத்த புதிய இயந்திரத்தை சீனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


    8. கம்போடிய பிரதமர் ஹுன் சென்னுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்

    நாம் பென்: கம்போடிய பிரதமர் ஹுன் சென், தனது வளர்ப்பு மகள் லெஸ்பியன் என்பதை அறிந்து வேதனை அடைந்துள்ளார்.


    9. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84 பிரிட்டனில் தான்

    லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பிரிட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84 என்ற அளவுக்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1. தாய் உடல்நிலை கவலைக்கிடம் : அவசரமாக துபாய் சென்றார் பெனசிர்
    கராச்சி : முஷாரப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தால், அவர் பாக்.,கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தலாம் என்ற அச்சத்தில்...

    2. விடுதலைப் புலிகளின் பயிற்சி தளம் மீது தாக்குதல்
    கொழும்பு : இலங்கையில் முல்லைத்தீவு மாகாணத்தில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் பயிற்சி தளத்தை, போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன.


    3. இந்திய வம்சாவளி பெண் மீது இன பாகுபாடு : அமெரிக்க நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
    சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில் உள்ள செவ்ரோன் நிறுவனம், அந்நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இன்ஜினியர் மீது இனப் பாகுபாடுடன் நடந்து கொண்டதால்...

    4. ஓட்டு போடும் போது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை
    ஓடாவா : ஓட்டுப் போடும் போது முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய கனடா கோர்ட் தடை விதித்துள்ளது.


    5. "உம்ரா' பயணிகளை காணவில்லை : சவுதி புகாருக்கு பாகிஸ்தான் மறுப்பு
    இஸ்லாமாபாத் : சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு பாகிஸ்தானில் இருந்து புனித பயணம் வந்த 1.21 லட்சம் பாகிஸ்தானியர்கள் அதன் பிறகு எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை.


    6. கியூபா மீது பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு வலியுறுத்தல்
    ஐ.நா., : கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை விலக்கிக் கொள்ளும் படி ஐ.நா., வலியுறுத்தி உள்ளது. கியூபா மீதான வர்த்தக தடை ஏற்கத்தக்கதல்ல என்று இந்தியாவும் கூறியுள்ளது.


    7. பாக்., ராணுவத்தில் முதல் சீக்கியர்
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத்தில், முதன் முதலாக, சீக்கிய மதத்தை சேர்ந்த ஒருவர், அதிகாரியாக பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.


    8. பிரிட்டனில் அதிகம் சம்பாதிப்பது வெளிநாட்டவர் தான்!
    லண்டன் : பிரிட்டன் நாட்டில், அதிகம் சம்பாதிப்பது பிரிட்டீஷ் மக்கள் அல்ல; இந்தியர் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் தான்.பிரிட்டன் அரசு சமீபத்தில் நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது.


    9. "கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால் மன அழுத்தம் போய்விடுமாம்
    டொரன்டோ : "கம்ப்யூட்டர் கேம்' விளையாடினால், மன அழுத்தம் போய்விடும் என்று, கம்ப் யூட்டர் "வீடியோ கேம்' வல்லுனர்கள் கண்டு பிடித் துள்ளனர்.


    10. இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்கும் அபாயம்
    ஜகர்த்தா : இந்தோனேசியாவில் உள்ள கெலுத் எரிமலை கடுமையான அதிர்வுகளுடன் புகையத் துவங்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    1."கந்தல் கரன்சி வியாபாரம்' வங்கதேசத்தில் இதுவும் பிழைப்பு தாகா
    :பழைய பேப்பர்களை வாங்கி வியாபாரம் செய்வதைத் தான் பார்த்திருப்பீர்கள்... பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்து வியாபாரம் செய்பவர்களை பார்த்துண்டா?

    2.திருட்டுத்தனமாக "டிரக்'கில் பயணம் பிரான்ஸ் எல்லையில் 30 இந்தியர் கைது

    கிரீனோபிள் :சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற இந்தியர்கள் 30 பேர் பிடிபட்டனர். அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    3.டிராபிக் போலீஸ் லஞ்சத்தை எதிர்த்து ரஷ்யர்கள் போர்க்கொடி!முதல் குரல் கொடுத்தவர் அடி வாங்கி மூளை கலங்கி கவலைக்கிடம்

    மாஸ்கோ : போக்குவரத்து போலீஸ் லஞ்சம், இந்தியாவில் மட்டுமல்ல... ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து, ரஷ்ய மக்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.


    4. முதுகு தண்டுவட முறிவு: "பயோ சிமென்ட்' கண்டுபிடிப்பு

    வாஷிங்டன் :"முதுகு தண்டுவட முறிவை சரி செய்ய, "பயோ சிமென்ட்' பயன்படுத்தலாம்; அறுவை சிகிச்சை செய்யாமல் ஊசி மூலம் திரவமாக இதை செலுத்தி, எலும்புகளைச் சேர்க்கலாம்' என்று, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.


    5.போலி பாஸ்போர்ட் மோசடியில் லண்டனில் சிக்கினார் கருணா

    கொழும்பு :விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தனி அமைப்பாக செயல்பட்டு வந்த கருணா, நேற்று முன்தினம் லண்டனில் கைது செய்யப்பட்டார். மோசடியாக போலி பாஸ்போர்ட் தயாரித்து பயணம் செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


    6.பயங்கரவாதிகளின் கைக்கு ஆட்சி செல்லும் அபாயம் சொல்கிறார் பெனசிர்

    இஸ்லாமாபாத் :பாக்.,கில் பயங்கரவாதிகளின் கைக்கு ஆட்சி மாறும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பெனசிர் புட்டோ கூறியுள்ளார்.


    7.மேற்கு வங்க மாநில அரிசியில் புற்றுநோய் உருவாக்கும் விஷம்

    மான்செஸ்டர் : மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் விளையும் அரிசியில் புற்றுநோய் உருவாக்கும் விஷம் கலந்திருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


    8.ஐரோப்பிய நாடுகளில் விவாகரத்துக்கள் அதிகரிப்பு

    லண்டன் :ஐரோப்பிய நாடுகளில் திருமண உறவு மிக விரைவில் கசந்து மணமுறிவுகள் அதிகம் ஏற்படுவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    9.கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டு தீக்கு சிறுவன் கொளுத்திய தீக்குச்சியே காரணம்

    லாஸ்ஏஞ்சலஸ் :அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய காட்டு தீ உருவாக, ஒரு சிறுவன் தான் காரணம் என்பதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.


    10.ஆப்ரிக்காவில் இப்படியும் ஒரு தத்தெடுப்பு பயங்கரம்! மிட்டாய் தந்து குழந்தைகளை விமானத்தில் ஏற்ற முயற்சி முறியடிப்பு

    அபேசி, சாட் நாடு : ஐரோப்பிய நாடுகளில், குழந்தை தத்தெடுப்போரிடம் விற்பதற்காக, ஆப்ரிக்க "சாட்' நாட்டில் இருந்து 103 குழந்தைகள் கடத்த நடந்த முயற்சி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 1 of 31 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •