01.நடிகர் மாதவன் நடித்த தமிழ் படம் நியூயார்க்கில் பெரும் வரவேற்பு

நியூயார்க் :தமிழ் திரைப்பட நடிகர் மாதவனின், "எவனோ ஒருவன்' படம் நியூயார்க் நகரில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.



02. காஸ் பைப் லைன் வெடித்ததில் இந்தியர் உட்பட 28 பேர் பலி
துபாய் :சவுதியில் எரிவாயு குழாய் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இந்தியர் உட்பட 28 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும், 12 பேரை காணவில்லை.


03.."சிதர்' புயலுக்கு 1,860 பேர் பலி வங்கதேச அரசு அறிவிப்பு

தாகா :வங்கதேசத்தில் "சிதர்' புயல் ஏற்படுத்திய சேதத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



04.ஆங்கிலம் கற்று கொடுத்ததால் மாணவன் சுட்டு கொலை தலிபான்கள் வெறிச்செயல்

கோஸ்ட்,(ஆப்கன்) :சக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மாணவனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


05.முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே
லண்டன் :தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.


06.காது கேளாமைக்கு மரபணுக்களே முக்கிய காரணம்
நியூயார்க் :காதுகளின் கேட்கும் திறனுக்கு, அவர்களின் மரபணுக்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


07.இலங்கை அரசுக்கு நெருக்கடி புலிகள் அதிரடி வியூகம்
கொழும்பு :இலங்கை பார்லிமென்ட்டில் இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் தாக்கலை, தமிழ் தேசிய கூட்டணி கட்சிகள் மூலம் முறியடிக்க விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.


08.எவரெஸ்ட்டில் சீனா அமைத்தது மொபைல் ஸ்டேஷன்
பிஜீங் :சீனாவின் பிரபல மொபைல் போன் இணைப்பு நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,மொபைல் டிரான்ஸ்மிஷன் கோபுரத்தை நிறுவி, வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது.

09.சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை
சிங்கப்பூர் :சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.