Page 11 of 31 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast
Results 121 to 132 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #121
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    7-5-2008



    1. பாகிஸ்தான் இடைத்தேர்தலில் சர்தாரி போட்டியிடவில்லை

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும், படுகொலை செய்யப் பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி அந்த நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

    2. 560 கோடி மோசடி முயற்சி: லண்டனில் இந்தியர் கைது

    லண்டன்: வங்கியில் 560 கோடி ரூபாய் மெகா மோசடி முயற்சியில், இந்தியாவை சேர்ந்த ஒரு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் எசெக்ஸ் பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி.,வங்கியில் ஊழியராக இருப்பவர் ஜக்மீத் சன்னா; வயது 25.

    3. ஆட்டோ ஓர்க் ஷாப்பாக மாறிவிட்டது: பாகிஸ்தானில் புராதன இந்து கோயில்

    கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த, கட்டடக் கலை சிறப்பு வாய்ந்த "ரட்டன் டால்கா' என்ற இந்து கோவில், இப்போது ஆட்டோ ரிப்பேர் செய்யும் பட்டறையாக மாறியுள்ளது.

    4. பெண்களுக்கு கட்டுப்பாடு: மலேசிய அரசு பணிந்தது

    கோலாலம்பூர்: வெளிநாடுகளுக்கு செல்லும் மலேசிய பெண்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. பெண்கள் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை மலேசிய அரசு கைவிட்டுள்ளது.

    5. கிறிஸ்தவரான எழுத்தாளருக்கு ஆபத்து

    வாடிகன் சிட்டி: எகிப்து நாட்டை சேர்ந்த சர்ச்சைக்கிடமான, எழுத்தாளர் மாக்தி ஆலம். முஸ்லிம் மதவாதத்தை எதிர்த்து, 55 வயதான இவர் எழுதி வந்தார்; இதனால், பலரின் எதிர்ப்புக்கு ஆளானார். சமீபத்தில் இவர் கிறிஸ்தவராக மதம் மாறினார்;

    6-நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் மகள் எம்.பி.யாக நியமனம்

    காத்மாண்டு, நேபாள நாட்டில் மாவோயிஸ்டு கட்சி தலைவர் பிரசாந்தாவின் 2-வது மகள் ரேணு தகால் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    7- எதிர்க்கட்சி தலைவர்களை கொல்ல சதி: ஜிம்பாப்வே ஆளும் கட்சி மீது புகார்

    டர்பன், தமது உயர்தலைவர்களை கொல்ல அதிபர் ராபர்ட் முகாபே தலைமையிலான ஆளும் கட்சி (ஜானு பிஎப்) சதி செய்வதாக ஜிம்பாப்வே நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #122
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  3. #123
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    மிக்க நன்றி அனு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #124
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    8-5-2008

    1- அமெரிக்கா - ரஷ’ய அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்

    மாஸ்கோ-அமெரிக்கா-ரஷ’யா நாடுகள் இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகின.

    2- இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு

    ஜகார்தா- இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

    3- சிறிலங்காவின் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

    கொழும்பு- சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

    4- பெட்ரோல் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணம்: அமெரிக்கா

    வாஷ’ங்டன்- உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு இந்தியா தான் காரணம் என்று சொன்ன அமெரிக்கா, பெட்ரோல் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணம் என்று கூறி உள்ளது.

    5 மன்னாரில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிப்பு: 9 படையினர் பலி

    சிறிலங்கா- மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இரு முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

    6- நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார்

    இஸ்லாமாபாத்-பாகிஸ்தானில் விரைவில் நடக்க இருக்கிற இடைத்தேர்தலில் முஸ்லிம்லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் போட்டியிடுவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #125
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    9-5-2008

    1. ரஷ்யாவின் பிரதமராக புடின் பதவியேற்பு



    மாஸ்கோ : ரஷ்யாவின் பிரதமராக,விளாடிமிர் புடின், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ரஷ்ய அதிபராக இருந்த, புடினின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புடினின் ஆதரவாளர் மெட்வதேவ், அடுத்த அதிபராக தேர்வானார்....



    2. 'ஹட்ப் - 8' ஏவுகணை : சோதித்தது பாகிஸ்தான்



    இஸ்லாமாபாத் : அணு ஆயுதங்களை தாங்கி சென்று, 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும், "ஹட்ப்-8' ஏவுகணை சோதனையை, பாகிஸ்தான் நேற்று நடத்தியது. கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தான், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.



    3. பிரிட்டனில் இந்திய மாணவி படுகொலையில் ஒருவர் கைது : உயிருக்கு போராடிய மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை



    லண்டன் : பிரிட்டனில், இந்திய மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி (23). பிரிட்டனில் உள்ள வோல்வர்ஹேம்டன் பல்கலையில், சுகாதார அறிவியல் பாடப் பிரிவில், முதுகலை பட்டதாரி



    4. புலி ஆதரவாளர்கள் நான்கு பேர் பிரிட்டனில் கைது



    லண்டன் : விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நான்கு பேர், பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்காக, லேப்-டாப், கம்ப்யூட்டர், டார்ச் லைட், ரேடியோ சாதனங்கள் உள்ளிட்ட கருவிகளை வாங்கத் திட்டமிட்ட, நான்கு பேரை, பிரிட்டன் போலீசார் கைது செய்தனர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #126
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #127
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    நன்றி மோகன் காந்தி அவர்களே!!
    மிக்க நன்றி அனு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #128
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    10-5-2008


    பாகிஸ்தான் ஹட்ப்-8 ஏவுகணை சோதனை நடத்தியது -

    இஸ்லாமாபாத், நேற்று நிலத்திலும், கடலிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஹட்ப்-8 என்ற ஏவுகணையை சோதனை நடத்தியது. இது 350 கி.மீ.தூரம் சென்று தாக்கக்கூடியது ஆகும்.

    ஐசிசி பதவியை தூக்கியெறிந்தார் காவஸ்கர்

    துபாய், ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.

    சர்தாரியை, நவாஸ் ஷெரீப் லண்டனில் சந்தித்து பேசினார்

    லண்டன், பாகிஸ்தான் ஆளும் கூட்டணியை சேர்ந்த மக்கள் கட்சி தலைவர் ஆசிப் சர்தாரியும், முஸ்லிம்லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப்பும் லண்டனில் சந்தித்தார்கள்.

    இங்கிலாந்தில் ஆந்திர பெண் கொலையில் இந்திய வாலிபர் கைது

    - லண்டன், மே. இங்கிலாந்தில் ஆந்திர பெண் கொலையில் இந்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றிகரமாக முடிந்ததாம் -

    இஸ்லாமாபாத், மே. பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்த்தான் அரசுடன் மேற்கொண்டு வரும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #129
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    12-5-2008

    1. பில்லினர்கள் நிறைந்த நகரங்களில் மும்பைக்கு 7வது இடம்

    நியூயார்க் : உலகில்,100 கோடி டாலருக்கு அதிகமான சொத்து உள்ளோர் வசிக்கும் நகரங்களில், மும்பைக்கு ஏழாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ்,

    2. மியான்மருக்கு அமெரிக்கா உதவி

    யாங்கூன் : "நர்கீஸ்' புயலால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, அமெரிக்க ராணுவ விமானம் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல, அந்நாட்டு ராணுவ அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,

    3. நடன மாதுக்கள் நடத்தும் கூட்டுறவு நடன விடுதி

    சான்பிரான்சிஸ்கோ : அமெரிக்காவில், பல்வேறு விடுதிகளில், ஆடை அவிழ்த்து, கவர்ச்சி நடனமாடும் பெண்கள் ஒன்று சேர்ந்து, கூட்டுறவு முறையில், புதிய கிளப் உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில்,

    4. முஸ்லிமாக மாறிய பவுத்த பெண் : மீண்டும் மதம் மாற அனுமதி

    கோலாலம்பூர் : முஸ்லிம் மதத்துக்கு மாறிய பெண், மீண்டும் தனது தாய் மதத்துக்கு செல்ல மலேசிய மத கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம்கள் நாடான மலேசியாவில், முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுவது மிக அரிதாகவே அனுமதிக்கப்படுகிறது.

    5-நேபாள பிரதமருடன் மாவோயிஸ்டுகள் சந்திப்பு

    காத்மாண்டு, :நேபாள பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

    6- திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள ராணுவத்தின் கப்பல் மூழ்கடிப்பு

    திருகோணமலை, :திருகேணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

    7-மண்டேலா மீதான தடையை அகற்ற யு. எஸ்.ல் ஓட்டெடுப்பு

    வாஷ’ங்டன்:தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி இருந்தபோது அதை எதிர்த்து போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #130
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    13-5-2008

    1-ஒபாமாவுக்கு மேலும் ஒரு வெற்றி

    வாஷ’ங்டன்-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று வருகிறார்.

    2- அமெரிக்காவில் சாலை விபத்தில் 6 இந்தியர்கள் பலி

    வாஷ’ங்டன்-அமெரிக்காவில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் 6 பேர் சாலை விபத்தில் பலியானார்கள்.

    3-நேபாள மாவோயிஸ்ட் தலைவருடன் இந்திய தூதர் பேச்சு

    காத்மாண்டு, மே-நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவை அந் நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகேஷ் சூத் சந்தித்துப் பேசினார்.

    4-இலங்கை தேர்தலில் ராஜபக்சே கூட்டணி தில்லுமுல்லு வெற்றி

    மட்டக்களப்பு - இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ராஜபக்சே கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    5- அமெரிக்காவில் பலத்த சூறாவளி காற்றுக்கு 18 பேர் பலி

    ஓக்லஹாமா - அமெரிக்காவில் ஓக்லஹாமா, மிசோரி ஆகிய மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளிக்கு 18 பேர் பலியானார்கள்.

    6-யு.எஸ். ராணுவம் துப்பாக்கிச் சூடு: தாய், குழந்தை பலி

    பாக்தாத்- ஈராக்கில் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாயும், குழந்தையும் உயிரிழந்தனர்.

    7- இந்திய வம்சாவளியினர் மலேசியாவில் போராட்டம்

    கோலாலம்பூர்- மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் திடீரென ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

    8-மனித உரிமை சபையில் மீண்டும் இடம்பிடிக்கும் இறுதி முயற்சியில் சிறிலங்கா

    கொழும்பு, மே- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தேர்வாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (13. 05. 08) தீவிரமாக இறங்க உள்ளது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #131
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    14-5-2008

    1- எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத் தேர்வு: இன்று ரிசல்ட்


    சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், மாணவர்களை சேர்ப் பதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளி யிடப்படுகின்றன. எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத் தில், மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு (எஸ்.ஆர்.எம்.இ.இ.இ.,) முடிவுகள் 14ம் தேதி(இன்று) வெளியிடப்படுகின்றன. இம்முடிவுகள் தினமலர் டாட்காம், கல்விமலர் டாட்காம், எஸ்ஆர்எம்யுனிவ்டாட்ஏசிடாட்இன் ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    2- ஆசிய கோப்பையுடன் பெண்கள் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது


    சென்னை: ""ஆசிய கோப்பையை பெற்றது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற படிக்கல்லாக இருக்கும்,'' என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.

    நான்காவது முறையாக ஆசிய கோப்பையை தட்டிச் சென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிகொழும்புவில் இருந்து சென்னை வந்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. குர்னேகலாவில் நடந்த பைனலில் இந்த இரு அணிகளும் மோதின. இதில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் அணி தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது. வெற்றிக் கோப்பையுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கொழும்புவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தது. விமான நிலையத்தில் அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


    3- ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் போட்டி:டில்லி டேர் டெவில்ஸ் அணி 105/9

    ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் கோல்கட்டாவில் நடைபெறும் போட்டியில் கங்குலிதலைமையிலான கோல் கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் சேவக் தலைமையிலான டில்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ்அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதனைதொடர்ந்து களம் இறங்கிய கோல்கட்டாநைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில்6விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.அடுத்து களம் இறங்கிய டில்லி டேர் டெவில்ஸ் அணி 17.3-வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


    4- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது: 50 பேர் பலி: 150 பேர் காயம்

    ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது இதில் 50 பேர் பலியாகினர் . ராஜாஸ்தான் மாநிலம் ஜோகிர்பஜார் மற்றும் மார்கெட் பகுதி மற்றும் அனுமான் கோயில் அருகே உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் குண்டு வெடித்தது. 12 நிமிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து முடிந்து போனது. கார் மற்றும் சைக்கிள்,உள்ளிட்ட குண்டு வெடித்துள்ளது. சம்பவம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .காயமடந்த 150க்கும் மேற்பட்ட பலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் , சதி செயலில் ஈடுபட்டவர்கள் யார் இன்னும் அறியப்படவில்லை.இதனையடுத்து டில்லி,மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


    5- விலைவாசி உயர்வை கண்டித்து ஆக - 20 ல் நாடு தழுவிய பந்த்

    புதுடில்லி: விலைவாசி உயர்வை கண்டித்து ஆக - 20 ல் நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் அனைத்து இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் 20 ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாளில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்படும், பாங்குகள் இயங்காது . இத்தகவலை ஏ.ஐ.டி.யூ., சி., பொதுசெயலர் குருதாஸ்குப்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய கம்யூ., செயலர் டி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில் வரும் ஜூன்மாதம் 6 ம் தேதி நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.


    6- மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் 19 மீனவர்களை காணவில்லை

    ராமநாதபுரம்: மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 19 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று கரை திரும்பாததால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜாண்சன், ஜஸ்டின், சகாயம், அந்தோணி, ஆரேக்கியம், ஸ்விஸ்டன் உள்ளிட்ட 19 பேர் 4 படகில் மீன் பிடிக்கும் பொருட்டு கடந்த 5 ம் தேதி கடலுக்கு சென்றனர். இவர்கள் ஒரு வாரம் வரை கடலில் இருந்து மீன்பிடித்து கரை திரும்புவது வழக்கம். இதே போல் மீனவர்கள் 11 ம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஆனால் செவ்வாய்கிழமை வரை கரை திரும்பாததால் மீனவர்களின் உறவினர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை படையினர் பிடித்து சென்று இருப்பார்களோ என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.


    7- ஹோட்டலை காலி செய்யுங்கள் : கோல்கட்டா அணி நிர்வாகம்

    கோல்கட்டா: ஐ.பி.எல் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பராமரிப்பு செலவை கட்டுப்படுத்தும் முயற்சியில், போட்டிகளில் பங்கேற்காத ஐந்து வீரர்கள் ஹோட்டல் அறையை காலி செய்யவேண்டும் என்று அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐ.பி.எல் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை பாலிவுட் நட்சத்திரம் ஷாருகான் ஏலத்தில் எடுத்தார். தற்போது இரண்டாவது சுற்று ஐ.பி.எல் "டுவென்டி20' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோல்கட்டா அணியின் வீரர்கள் புஜாரா, போஸ், லஹிரி, யஸ்பால் சிங், ஹோக்கய்டோ இது வரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை. இது குறித்து கோல்கட்டா அணி வீரர் ஒருவர் பேசிய போது, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று வரும் கோல்கட்டா அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அணி பயிற்சியாளர் ஜான் புக்கனன் அணியில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்காத ஐந்து வீரர்கள், ஹோட்டலை காலி செய்யவேண்டும் அல்லது வீட்டிற்கு செல்லவேண்டும், என்று அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாக என கோல்கட்டா வீரர் ஒருவர் கூறினார்.


    8- மத்தியபிரதேச பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டம் துவக்கம்



    போபால் : மத்தியபிரதேச பா.ஜ., கட்சி உயர் மட்ட குழுவின் இரண்டு நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தை பா.ஜ., துணை தலைவரும், கட்சியின் தேர்தல் விவகாரங்கள் துறை நிரர்வாகியுமான வெங்கைய்யநாயுடு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    9- சியா முஸ்லீம்களின் மதகுரு ஆகாகான் ஜனாதிபதி பிரதிபாபாட்டீலை சந்தித்தார்


    புதுடில்லி : சியா முஸ்லீம்களின் மதகுரு ஆகாகான் ஜனாதிபதி பிரதிபாபாட்டீலை இன்று சந்தித்தார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பிறந்தநாளை ஒட்டி இந்தியா வந்துள்ள ஆகாகான் ஐதராபாத்தில் உள்ள ஆகாகான் அகடெமிக்கும் செல்லவிருக்கிறார். ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கும் அவர் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்கிறார். அதன் பிறகு இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு செல்கிறார்.


    10- மும்பை பங்குசந்தை பேர் மாற்றம் செய்ய கோரி சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்


    மும்பை : மும்பையில் சிவசேனா தொண்டர்கள், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் என்ற *பெயரை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ் என பெயர் மாற்றம் செய்ய கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை பங்குசந்தை முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பாக இருக்கும் பங்குசந்தை பகுதி இந்த சம்பவத்தால் பதற்றத்துடன் காணப்பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #132
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    15-5-2008

    1- வளதேசத்தில் படகு கவிழ்ந்து 41 பேர் பலி
    - டாக்கா, வங்காளதேசத்தில் கோராத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் நடந்தது.

    2- நவாஸ் செரீப் கட்சி அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா
    - இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சியிலிருந்து நவாஸ் ஷரீப் கட்சி விலகியது. அவரது கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் பிரதமர் கிலானியிடம் தங்களது ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
    3- லண்டனிலிருந்து கருணா, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்
    - லண்டன், போலி பாஸ்போர்ட் வழக்கில் லண்டனில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த கருணா, அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிற
    4- சர்வதேச உதவியை ஏற்கத் தயார்: žனா அறிவிப்பு
    - பெய்ஜிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள
    சர்வதேச சமூகம் உதவினால், அதனை ஏற்றுக் கொள்ள தயார் என žனா அறிவித்துள்ளது.
    5- அம்பாறை குண்டுவெடிப்பு அரசாங்கத்தின் கைவரிசை: ஐ.தேக.
    - கொழும்பு, அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியதாக ஐக்கிய
    6- தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
    நிவாரணப்பணிகளில் மியான்மார் அரசு காட்டும் மெத்தனம்: ஐ.நா. கண்டனம்
    - நியூயார்க், மியான்மார் நாட்டில் புயலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் அந்த நாட்டு ராணுவ அரசு மெத்தனம் காட்டுவதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
    7- ராணுவ ஒத்துழைப்பு பற்றி ஐக்கிய அரபு எமிரேட்டுடன் இந்தியா பேச்சு
    - அபுதாபி, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் பேச்சு நடத்தியுள்ளன.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 11 of 31 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •