Page 3 of 31 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #25
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.நடிகர் மாதவன் நடித்த தமிழ் படம் நியூயார்க்கில் பெரும் வரவேற்பு

    நியூயார்க் :தமிழ் திரைப்பட நடிகர் மாதவனின், "எவனோ ஒருவன்' படம் நியூயார்க் நகரில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.



    02. காஸ் பைப் லைன் வெடித்ததில் இந்தியர் உட்பட 28 பேர் பலி
    துபாய் :சவுதியில் எரிவாயு குழாய் பராமரிப்பு பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இந்தியர் உட்பட 28 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும், 12 பேரை காணவில்லை.


    03.."சிதர்' புயலுக்கு 1,860 பேர் பலி வங்கதேச அரசு அறிவிப்பு

    தாகா :வங்கதேசத்தில் "சிதர்' புயல் ஏற்படுத்திய சேதத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    04.ஆங்கிலம் கற்று கொடுத்ததால் மாணவன் சுட்டு கொலை தலிபான்கள் வெறிச்செயல்

    கோஸ்ட்,(ஆப்கன்) :சக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த மாணவனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.


    05.முதுமையில் தனிமை பெண்களுக்கு சந்தோஷமே
    லண்டன் :தனிமையில் முதுமைக் காலத்தை கழிப்பவர்களில், ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.


    06.காது கேளாமைக்கு மரபணுக்களே முக்கிய காரணம்
    நியூயார்க் :காதுகளின் கேட்கும் திறனுக்கு, அவர்களின் மரபணுக்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    07.இலங்கை அரசுக்கு நெருக்கடி புலிகள் அதிரடி வியூகம்
    கொழும்பு :இலங்கை பார்லிமென்ட்டில் இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் தாக்கலை, தமிழ் தேசிய கூட்டணி கட்சிகள் மூலம் முறியடிக்க விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.


    08.எவரெஸ்ட்டில் சீனா அமைத்தது மொபைல் ஸ்டேஷன்
    பிஜீங் :சீனாவின் பிரபல மொபைல் போன் இணைப்பு நிறுவனம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில்,மொபைல் டிரான்ஸ்மிஷன் கோபுரத்தை நிறுவி, வெற்றிகரமாக சோதனையும் செய்துள்ளது.

    09.சிங்கப்பூரில் செக்ஸ் வீடியோ விளையாட்டுக்குத் தடை
    சிங்கப்பூர் :சிங்கப்பூரில் செக்ஸ் காட்சியுடன் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கேமுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.குண்டாக இருக்கிறீர்களா? நியூசி., செல்ல முடியாது

    லண்டன் :பிரிட்டனை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர், தனது மனைவியுடன் நியூசிலாந்து செல்ல விரும்பினார்.



    02. பாக்.,கில் ஜனவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் அதிபர் தேர்வை எதிர்த்த மனுக்கள் "டிஸ்மிஸ்'
    இஸ்லாமாபாத் :"பாக்.,கில் ஜனவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்' என்று, பாக்., சர்வாதிகாரி முஷாரப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


    03.வங்கதேசத்தில் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்
    தாகா :வங்கதேசத்தில் வீசிய "சிதர்' புயலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.


    04.உடல் ஈர்ப்புமிக்க மிஸ்டர் மேக்னட் ருமேனியாவில் குவியும் நோயாளிகள்
    ருமேனியா :உடலில் காந்த சக்தி இருப்பதாக நம்பி ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர் நோயாளிகள்.


    05.எலிசபெத் டெய்லர் ஓவியம் ரூ. 93 கோடிக்கு விற்பனை
    லண்டன் :ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் ஓவியம் ஏல விற்பனையில் கோடிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #27
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்தார் வனிஷா
    நியூயார்க்: உலக கோடீஸ்வரர்களின் பெண் வாரிசுகளும், தத்தமது துறைகளில் முன்னணியில் உள்ளனர்.


    02. அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்?
    லண்டன் : "அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்படக்கூடும்' என்று, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.


    03. தரம் குறைந்த செக்ஸ் மாத்திரைகள் பயன்படுத்த பிரிட்டனில் தடை
    லண்டன் : செக்ஸ் ஊக்க மாத்திரையான "வயாக்ரா' போல, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரம் குறைந்த செக்ஸ் ஊக்க மாத்திரைகளின் விற்பனை பிரிட்டனில் சக்கை போடு போடுகிறது.


    04. சவுதி சென்றார் முஷாரப்
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் முஷாரப், இரண்டு நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார்.


    05. வங்கதேசத்துக்கு ஐ.நா.,வின் உணவு பொட்டலங்கள்
    ஐக்கிய நாடுகள்: வங்கதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கதேச விமானப் படை விமானங்கள் மூலம், அவசர உணவு சப்ளைக்கு ஐ.நா., உணவு திட்டம் அமைப்பு முடிவு செய்துள்ளது.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. ஓவியத்தில் லயித்து முத்தமிட்ட பெண் நீதிபதி : அபராதம் விதித்து தண்டித்ததால் பரபரப்பு
    பாரீஸ் : ஓவியத்தில் லயித்துப்போய், லிப்ஸ்டிக் உதட்டால் முத்தமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


    02. இடநெருக்கடிக்கு ஏற்ப மடிப்பு கார் வடிவமைப்பு
    வாஷிங்டன் : போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இயக்கிய பின் மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் வித்தியாசமான குட்டிக் கார் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


    03. 10 நிமிடத்தில் வலியில்லாமல் கு.க., ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை
    பீஜிங் : ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    04. இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்
    லண்டன் : பிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, "இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்' யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.


    05. உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?
    லண்டன் : பிரிட்டனில் அதிக பருமன் உள்ள இரண்டாயிரம் பேர் வேலை பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நடத்த ரூ. 35 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.


    06. இந்திய அணு உலைகளை கண்காணிக்க ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை துவங்கியது
    வியன்னா : இந்தியாவில் மின் உற்பத்தி நடக்கும் அணு உலைகளை, சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று துவங்கியது.


    07. பிரான்ஸ் வேலை நிறுத்தம் : எட்டாவது நாளாக தொடர்கிறது
    பாரிஸ் : பிரான்சில் தொடர்ந்து நடந்து வரும் போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம், எட்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.


    08. தேர்தலில் போட்டியா? இரண்டு நாட்களில் பெனசிர் முடிவு
    இஸ்லாமாபாத் : "தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டொரு நாட்களில் முடிவு செய்யப்படும்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பெனசிர் கூறியுள்ளார்.


    09. "அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்' இலங்கைக்கு இந்தியா அறிவுரை
    கம்பாலா : தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.


    10. ஆசியான் நாடுகளுக்கு செல்ல ஒரே நாளில் விசா? : பிரதமர் புது தகவல்
    சிங்கப்பூர் : இந்தியாவுடன் சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்புக்கு ஆதரவு அளிக்க சீனாவும் முன்வந்துள்ளது.


    11. நாலந்தா பல்கலை கழகத்தை மீண்டும் ஏற்படுத்த அழைப்பு
    சிங்கப்பூர் : பீகாரில் பல நுற்றாண்டுகளுக்கு முன் சிறந்த சர்வதேச பல்கலைக் கழகமாக செயல் பட்ட நாலந்தா பல்கலைக் கழகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


    12.இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
    கொழும்பு: இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.





















    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #29
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    லண்டன்: போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய கார்கள் தயாரிப்புப் பிரிவுகளை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.

    டாடாவின் இந்த முயற்சிக்கு போர்ட் நிறுவனத்தின் முக்கிய ெதாழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகியவை மிக அதிக விலை கொண்ட ...

    அமெரிக்க சர்ச்சில் முழங்கிய சமஸ்கிருத மந்திரம்!
    வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த தேங்க்ஸ் கிவிங் நிகழ்ச்சியில், நிவேதா மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராலயத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்கப்பட்டன. அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ...

    பறவைக் காய்ச்சல் பீதி: செளதியில் கொல்லப்பட்ட 30 லட்சம் கோழிகள்!
    ரியாத்: செளதி அரேபியாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக 30.2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. எச்.5என்1 வகை ஏவியான் ப்ளூ காய்ச்சல் பரவுவதைத் தடுக்க செளதி அரேபிய ...

    ஜாகுவார், லேண்ட் ரோவரை வாங்கும் டாடா
    லண்டன்: போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய கார்கள் தயாரிப்புப் பிரிவுகளை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது. டாடாவின் இந்த முயற்சிக்கு போர்ட் நிறுவனத்தின் முக்கிய ெதாழிற்சங்கம் ...

    துபாயில் அதிகரிக்கும் பிக்பாக்கெட்!!
    துபாய்: துபாயில் பிக்பாக்கெட் உட்பட பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. துபாயில் தொழில், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வருகிறார்கள். இவர்களின் ...

    இந்தோனேஷியா: சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்
    ஜகார்தா: இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ரா தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள பண்டா அச்சே என்ற இடத்திலிருந்து ...

    காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட்
    கம்பாலா: காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று காமன்வெல்த் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    துபாய்: கைதிகள் மோதல்-ஆணுறுப்பு துண்டிப்பு
    துபாய்: துபாயில் உள்ள சிறையில், கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது. ரஸ் அல் காமா என்ற இடத்தில் உள்ள சிறையில்தான் இந்த பயங்கரச் சம்பவம் ...

    துபாயில் முமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
    துபாய்: துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கராமா மெடிக்கல் செண்டர் ஆகியவை இணைந்து நாளை (23ம் தேதி) துபாயில் இலவச மருத்துவ முகாமை நடத்தவுள்ளன. அல்-கூஸ் ...

    இம்ரான்கான் சிறையிலிருந்து விடுதலை
    இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நீதிக் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இம்ரான் கான் ...

    முஷாரப் செளதி பயணம்: ஷெரீப்புடன் பேச்சு?
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இரண்டு நாள் பயணமாக செளதி சென்றார். அங்கு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை முஷாரப் சந்திக்கக் கூடும் என்று ...

    இந்திய கோழி இறைசிக்கு ஓமனில் தடை நீக்கம்
    மஸ்கட்: இந்தியாவில் பறவை காய்ச்சல் நோய் இல்லையென்று உலக விலங்குகள் அமைப்பு கொடுத்த அறிக்கையையடுத்து ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு விலக்கியுள்ளது. ...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. தற்கொலைப்படை தாக்குதல் :25 பேர் பலி
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் நேற்று காலை அடுத்தடுத்து நடந்த இரண்டு தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


    02. நாடு திரும்புகிறார் நவாஸ் : தேர்தலிலும் போட்டி?
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மாலை லாகூர் வருகிறார். இந்த தகவலை அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி தெரிவித்துள்ளது.


    03. கையெழுத்தில் தெரியுமா தலையெழுத்து
    லண்டன் : மாரடைப்பு நோய் வருவதை ஒருவரின் கையெழுத்து வடிவத்தைக் கொண்டு கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆய்வில், லண்டன் டாக்டர் ஒருவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.


    04. காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா தேர்வு
    கம்பாலா : காமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச் செயலராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


    05. 14 விடுதலை புலிகள் பலி
    கொழும்பு : இலங்கையில் நடந்த சண்டையில், 14 விடுதலைப் புலிகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.


    06. உரிமை கோரி மலேசிய இந்துக்கள் பேரணி : "ராஜதுரோகம்' என்று பிரதமர் படாவி கோபம்
    கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி வேண்டுகோளை நிராகரித்து எதிர்ப்பு பேரணியை இன்று நடத்த மலேசிய இந்திய இந்துக்கள் முடிவு செய்துள்ளனர்.



    07. செக்சை விட ஷாப்பிங் செல்வதில் பிரிட்டன் பெண்களுக்கு அதிக ஆர்வம்
    லண்டன் : பிரிட்டன் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் செக்சில் ஈடுபடுவதைவிட ஷாப்பிங் செல்வதில் தான் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.



    08. விளையாட்டாகி விட்டது மது, போதை, செக்ஸ், கர்ப்பம் விபரீத மொபைல் கேம்: பெற்றோர் பீதி
    மெல்போர்ன் : ஓகே! ஆரம்பிக்கலாமா? முதல்ல மது குடிங்க, அத்தோடு சிகரெட்டையும் பற்ற வையுங்க.



    09. கடற்கரையில் காதல் சல்லாபம் : கண்காணிக்க நவீன கேமராக்கள்
    ஜென்சென் பீச் : கடற்கரையில் இனி காதல் சல்லாபங்கள் செய்ய முடியாது. இதை தடுக்கும் வகையில் நவீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    10. இந்தியா வந்தார் ஏசு? தயாராகிறது சினிமா
    லண்டன் : இந்தியாவிலும் ஏசு இருந்ததாக சித்தரித்து, புதிதாக தயாராகிறது ஹாலிவுட் சினிமா. ஏசுவின் 13வது வயது முதல் 30 வயது வரை, அவரைப் பற்றி பெரியளவில் தகவல்கள் இல்லை.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #31
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-11-2007

    01. ஆறு நிமிடத்துக்கு ஒரு "டைவர்ஸ்' * இங்கல்ல, எகிப்தில்...!
    கெய்ரோ: ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கிறது; திருமணம் ஆன முதலாண்டில், மூன்றில் ஒரு திருமணம் முறிகிறது. எகிப்து புள்ளிவிவர துறை, இப்படி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.


    02. மலேசியாவில் மூன்று தமிழர்கள் விடுதலை
    கோலாலம்பூர்: மலேசியாவில் அரசை எதிர்த்து போராட்டத்தை துண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட இந்து இனத் தலைவர்கள் மூன்று பேர், அவர்கள் பேசிய தமிழின் மொழியாக்கம் புரியாததால் தற்காலிகமாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.


    03. அப்பா "துறுதுறு' என இருந்தால் மகன் படு சுறுசுறுப்பு தான்!
    பாரிஸ்: "தாயை விட, தந்தையை போலத்தான் மகன் வளர்வான்; தந்தை சுறுசுறுப்பாக இருந்தால், கண்டிப்பாக மகனும் மிகவும் "துறுதுறு' என்று இருப்பான்!'


    04. கட்டட தொழிலாளர் துபாயில் சம்பள உயர்வு
    ஷார்ஜா: அரபு நாடுகளில் பணியாற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க கட்டுமான நிறுவனங்கள்முடிவு செய்துள்ளன.


    05. காதல் வலைவிரிக்கும் புன்னகை * பல் பராமரிப்பில் பெண்கள் ஆர்வம்
    லண்டன்: இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைக்க, பல் டாக்டரை தேடி ஓடும் பெண்கள் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை

    ரூ.46 கோடிக்கு ஏலம் போன ஒவியம்

    நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்: அரசாங்க வக்கீல் அறிவிப்ப

    மெக்சிகோவில் 2 தடவை நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கின

    தமிழர் பகுதியில் இலங்கை ராணுவ விமானம் சரமாரி குண்டு வீச்சு

    பிலிப்பைன்ஸ்-மெக்சிகோவில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின ரெயில்கள் ரத்து
    ஜப்பானில் பூமி அதிர்ச்சி

    ராணுவ தளபதி பதவியில் முஷரப் நாளை பதவி விலகுகிறார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகினார் முஷாரப் கியானியிடம் பொறுப்பை ஒப்படைத்து உருக்கமான பேச்சு
    இஸ்லாமாபாத் :உள்நாட்டு மற்றும் சர்வதேச நிர்பந்தத்துக்கு பணிந்து, ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து பாக்., சர்வாதிகாரி முஷாரப் விலகினார்.


    02.கருணாநிதி மீது மலேசிய மந்திரி கோபம்
    சிங்கப்பூர் :""எங்கள் நாட்டின் அரசியல் விவகாரங்களில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டாம்,'' என மலேசிய அமைச்சர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் ஆவேசப்பட்டுள்ளார்.


    03.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 80 இந்துக்கள் மீது வழக்கு பதிவு
    கோலாலம்பூர் :மலேசியாவில் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக 80 இந்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. அமெரிக்காவுக்கு உதவும் ஐரோப்பியர்களுக்கு மிரட்டல் *மீண்டும் ஒசாமா பின்லாடன் குரல்
    துபாய்: அமெரிக்காவுடனான தொடர்பை துண்டித்து கொண்டு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த போர் வீரர்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்.


    02. நவாஸ் ஷெரீப், இம்ரான் அணி சேர்ந்து முஷாரப் நடத்தும் தேர்தல் புறக்கணிப்பு
    லாகூர்: பாகிஸ்தானில் அனைத்து கட்சிகள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிகள், ஜனவரியில் நடக்க உள்ள பார்லிமென்ட் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.


    03. திருடிய காரில் சிரித்த குழந்தையால் மனம் மாறிய பெர்லின் திருடன்
    பெர்லின்: திருடிச் சென்ற காரில் குழந்தை துங்கிக் கொண்டிருந்ததால் மனிதநேயம் மிக்கத் திருடன் காரை மீண்டும் அதே இடத்தில் கொண்டு நிறுத்தி விட்டு தப்பினான்.


    04. ஈரானில் அதிகரிக்கிறது ஜோதிட நம்பிக்கை
    டெஹ்ரான்: ஈரானில் ஜோதிட நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஜோதிடர்களின், பின்னால் ஓடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


    05. ரூ.240 கோடியில் முஷாரப்புக்கு புது "ஜெட்'
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பயணம் செய்வதற்காக ரூ.240 கோடி செலவில் புது ஜெட் விமானத்தை பாகிஸ்தான் அரசு விலைக்கு வாங்கியுள்ளது.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #35
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. ஹிலாரி கிளின்டன் அலுவலகத்தில் மர்ம ஆசாமியால் பீதி : ஐந்து மணி நேர பரபரப்புக்குப் பின் சரண்
    நியுயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பிரசாரம் மேற்கொண்டு வரும் ஹிலாரி கிளின்டனின் பிரசார அலுவலகத்தில் புகுந்து, குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி...



    02. ரஷ்யாவின் "சோனியா'வாக உருவெடுப்பாரா புடின்? : இன்று நடக்கும் பார்லி., தேர்தலில் முடிவு தெரியும்

    மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும், பொது தேர்தல் இன்று நடக்கிறது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. ரஷ்ய பார்லிமென்ட் தேர்தல் : புடினுக்கு வெற்றி வாய்ப்பு
    விளாடிவாஸ்டாக்(ரஷ்யா) : ரஷ்ய பார்லிமென்ட்டுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 96 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று மக்கள் ஓட்டு போட்டனர்.


    02. ஏழைகள் நலனுக்கு நிதி திரட்ட விபசார பெண் நுதன திட்டம்

    சான்டியாகோ : ஏழை மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்டும் பணியில் ஒரு அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.


    03. இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

    ஜகார்த்தா : இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியிருந்தது.


    04. "இந்துராப்' அமைப்பு புகார் : மலேசிய பிரதமர் கோபம்
    சிங்கப்பூர் : மலேசியாவில் இந்துக்கள் மீது இன அழிப்பு நடத்தப்படுகிறது என்ற, "இந்துராப்' அமைப்பின் குற்றச்சாட்டு அந்நாட்டு பிரதமர் படாவிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


    05 பாக்.,கில் அழியும் இந்திய சின்னங்கள்

    இஸ்லாமாபாத் : பாக்.,கில் உள்ள இந்திய நினைவுச் சின்னங்கள் அந்நாடு பிரிந்த பின் பராமரிக்கப்படவில்லை.


    06. வீட்டு வேலைக்காரர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எமிரேட்டில் புது சட்டம்

    துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒவ்வொரு வீட்டிலும் பணிபுரியும் வேலைக்காரர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு வசதி அளிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.


    07. வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

    மொம்பாசா (கென்யா) : பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்;


    08 அமெரிக்காவில் பிறநாட்டவர்கள் இந்தியர்களுக்கு மூன்றாவது இடம்

    வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறிய பிறநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 3 of 31 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •