Page 5 of 31 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    5-1-2008

    1- இந்திய வம்சாவளியினருக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு
    கோலாலம்பூர் : மலேசியாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினருக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என...
    உள்ளே

    2- "எமிரேட் ஆப் வசீர்ஸ்தான்': பயங்கரவாதத்தின் புதிய முகவரி
    பெனசிர் படுகொலையில் பாகிஸ்தானில் வசீர்ஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் தொடர் புள்ளதாக பாக்., உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.

    3-ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
    மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.

    4- பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னா செல்கிறார் -
    பெய்ஜிங், பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னாவுக்கு செல்கிறார். இதற்காக அவர் வரும் 13-ந்தேதி புறப்பட்டு செல்வார்.

    5- ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலி -
    காபூல், ஜ ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்கியதில் இந்திய போலீஸ் அதிகாரிகள் இருவரும், தொழிலாளி ஒருவரும் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் போலீசார் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

    6- பாகிஸ்தான் அரசுக்கு தலீபான் மதகுரு கெடு -
    இஸ்லாமாபாத், மசூத் பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார். ராணுவத்தை பாகிஸ்தான் அரசு 2 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01.ஸ்காட்லாந்து போலீஸ் பாகிஸ்தான் வருகை
    இஸ்லாமாபாத் :பெனசிர் படுகொலை வழக்கு புலன் விசாரணையில் பாக்., போலீசாருக்கு உதவுவதற்காக ஸ்காட் லாந்து போலீஸ் குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.

    02.பெனசிர் ஊழியர் மீது கிளம்புது சந்தேகம்
    இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

    03.இந்திய வம்சாவளியினர் மீது வழக்கு கூட்டாக விசாரிக்க அனுமதி

    கோலாலம்பூர் :சட்ட விரோதமாக நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பாக 54 இந்திய வம்சாவளியினர் மீதான வழக்கை ஒன்றாக விசாரிக்க, மலேசிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

    "04.இண்ட்ராப்' தலைவர் அதிரடி

    கோலாலம்பூர் :பயங்கரவாதி என அவதுறாக குற்றம் சாட்டியதற்காக, மலேசிய அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக ரூ.100 கோடி 40 லட்சம் கேட்டு, இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    7-1-2008

    1-.பெனசிர் மகன், மகள்களுக்காக பாக்., குழந்தைகள் அனுதாபம்

    இஸ்லாமாபாத்: பெனசிர் படுகொலையால், தாயை இழந்த அவரின் குழந்தைகள் மீது, பாக்., குழந்தைகளுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.


    2-.விவாகரத்து கிடைத்தாலும் பிரிந்து வாழ வீடு இல்லை

    ஹவானா: கியூபாவில் விவாகரத்தை சுலபமாக வாங்கிவிடும் தம்பதிகள், தனித் தனியே வசிப்பதற்கு வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால், மீண்டும் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    3-.சந்தோஷ மண வாழ்க்கையா?பெண்ணுக்கு "ஸ்ட்ரெஸ்' போச்!

    லண்டன்: மணவாழ்க்கை சந்தோஷமாக அமைந்து விட் டால், ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தம் வெகுவாக குறைந்துவிடுகிறது! அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் , இந்த தகவல் தெரியவந்துள்ளது.


    4- .ஜோதிடர்கள் கணித்து கொடுத்த படி நடக்கிறது பூடான் நாட்டு தேர்தல்

    திம்பு: பூடானில் தேர்தல் தேதியும் ஜோதிடர்களால் தான், கணித்து முடிவு செய்யப்பட்டது. பூடானில் ஜனநாயக அரசு ஏற்படுத்த மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.


    5-.குற்றவாளிகள் பற்றி தகவல் சொல்ல பொதுமக்களுக்கு இலவச மொபைல்

    6-மோன்ரோவியா: குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தர, அனைத்து பொது மக்களுக்கும் அரசே இலவச மொபைல் போன்களை வழங்கியுள்ளது.


    7-.விடுதலைப் புலிகள் 34 பேர் பலி

    கொழும்பு: இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே இரண்டு நாட்களாக நடந்து வரும் சண்டையில் 34 புலிகள் கொல்லப்பட்டனர்.

    8-.விமான விபத்து: 18 பேர் பலி

    9-காரகாஸ்: வெனிசுலாவில் உள்ள லாஸ் ரோக்ஸ் தீவுகளில் இருந்து காரகாசுக்கு 18 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

    10-."குளோஸ்' பண்ணிடுவோம்: பாக்., தலைவர்களுக்கு மிரட்டல்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    11-.மலேசிய அமைச்சரின் செக்ஸ் "டிவிடி':விற்ற இந்தியர்கள் கைது

    சிங்கப்பூர்: மலேசிய சுகாதார அமைச்சர் சுவா விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.



    12-.சினிமா படமாகிறது பெனசிரின் வாழ்க்கை

    இஸ்லாமாபாத்: இந்திய சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் உதவியுடன், பெனசிர் குறித்த சினிமாவை தயாரிக்கிறது


    13-.47வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

    நியூயார்க்: அமெரிக்காவில் ஜன்னல் சுத்தம் செய்யும் போது 47வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    8-1-2008

    01. டைட்லரை சிக்க வைத்தவருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி
    சான் பிரான்சிஸ்கோ: டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லருக்கும் பங்கு உண்டு என கூறிய நபருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    02. சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்
    நியூஜெர்சி: இந்தியாவில் சொந்த கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, அமெரிக்காவில் பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரம் வேலை செய்து பணம் சேமிக்கிறார் சமூக ஆர்வ சிறுவன் ஒருவர்.

    03. ஐரோப்பாவின் பெரிய பணக்காரர் புடின்
    மாஸ்கோ: "ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எட்டு ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.

    04. அமெரிக்க அதிபரை கொல்ல முயன்ற பெண்: 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
    சான்பிரான்சிஸ்கோ: மறைந்த அமெரிக்க அதிபர் ஜெரால்டு போர்டை கொல்ல முயன்றதாக ஆயுள் சிறை அனுபவித்து வந்த பெண், 32 ஆண்டுக்கு பின் , பரோலில் இப்போது விடுதலை செய்யப் பட்டார்.

    05. பெனசிர் பரிசோதனை அறிக்கை : ஏராளமான குளறுபடிகள் அம்பலம்
    இஸ்லாமாபாத்: படுகொலை செய்யப் பட்ட பெனசிர் புட்டோவின் பரிசோதனை அறிக்கை, பல் வேறு சந்தேகங்களுக்கு விடை இல்லாமல் உள்ளது. தெரிந்தே இந்த அறிக்கையை, நிர்ப்பந்தத்துக்காக டாக்டர்கள் தயாரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.


    06. குழந்தைகளோடு வர்றீங்களா? : ரெண்டுக்கு மேல் கிடையாது
    லண்டன்: குழந்தைகளுடன் மது அருந்தும் விடுதிக்கு வருபவர்களுக்கு இரண்டு "லார்ஜு'க்கு மேல் சப்ளை செய்ய முடியாது, என லண்டனின் பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

    07. ஸ்கேட்டிங்கில் அசத்தும் இந்திய சிறுவன்
    லண்டன்: இந்தியாவை சேர்ந்தவர் அங்கித் ரமேஷ் சின்டாக். ஆறு வயது சிறுவன். பிரிட்டனில் வசிக்கிறார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    9-1-2008

    1-புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

    ஐரோப்பா, -இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    2- இரவில் தேடுதல் நடத்தக்கூடாது: கோத்தபாயவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,
    - கொழும்பு -சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு (Gotabhaya Rajapakse ) உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. எனினும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மட்டுமே வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கின்றது.

    3- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மலேசியா தீவிரம்
    - கோலாலம்பூர், - இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மலேசியாவும் தீவிரம் காட்டிவருகின்றன.

    4-சமரசப்பேச்சுவார்த்தை நடத்திய பழங்குடி இன மூத்த தலைவர்கள் 8 பேர் பலி
    - இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பழங்குடி இன மூத்த தலைவர்கள் சார்பில் பைத்துல் மெசூத் தலைமையிலான தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியை மேற் கொண்ட தலைவர்கள் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    5- கென்யாவில் போராட்டம் வாபஸ்,
    - நைரோபி -கென்யா நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடியை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்கா போராட்டத்தில் ஈடுபட்டார். இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.
    எரிவதை புடிங்கினால்
    கொதிப்பது அடங்கும்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    10-1-2008

    01. நேபாள மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமை சட்ட மசோதா நிறைவேறியது

    காத்மாண்டு: நேபாள மன்னரின் சொத்துக்களை நாட்டுடமையாக்கும் சட்ட மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



    02. இலங்கையில் 33 பேர் பலி

    கொழும்பு: இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 19 புலிகள் உட்பட 33 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.



    03. அமெரிக்காவில் திவாலானது இந்து கோவில் : பூசாரி குடும்பத்தினர் திடீர் வெளியேற்றம்

    வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தததால், திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குருக்களும், நான்கு குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் திடீரென்று வெளியேற்றப்பட்டனர்.



    04. குற்றவாளிகளை அடையாளம் காணவில்லை : சொல்கிறது பாக்., உள்துறை

    இஸ்லாமாபாத்: "முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்தி அர்த்தமற்றது' என்று பாக்., உள்துறை மறுத்துள்ளது.



    05. இலங்கை அமைச்சர் படுகொலை எதிரொலி : எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு

    கொழும்பு: இலங்கை தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் தசநாயகே கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.


    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    11-1-2008

    திபெத் மலைப் பகுதியில் பயங்கர பூகம்பம்
    - பீஜிங்,னாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஐ.நா. மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்த சிறிலங்கா
    - கொழும்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அமெரிக்க கப்பலைத் தாக்கினால் கடும் விளைவு: ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை
    - ஜெருசலேம், அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் 2 நாட்களுக்கு முன்பு ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் கடற்படை படகுகள் அங்கு வந்து வழி மறித்து எச்சரிக்கை விடுத்தன. எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நீங்கள் செல்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

    நியாயமான முறையில் தேர்தல் நடக்காவிட்டால் பாக். சிதறி விடும்: பிலாவல்
    - லண்டன், அடுத்த மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடக்காவிட்டால் பாகிஸ்தான் உடைந்து சிதறி விடும் என்று பெனாசிர் கட்சியின் தலைவரான பிலாவல் எச்சரித்து இருக்கிறார்.

    இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடையில்லை: மலேசிய அரசு
    - கோலாலம்பூர், இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடை எதுவும் விதிக்கவில்லை என்று, மலேசிய அரசு விளக்கம் அளித்து உள்ளது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    12-1-2008

    01.அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல்: முஷாரப் உறுதி
    இஸ்லாமாபாத்: ""அறிவிக்கப்பட்ட தேதியில் பாகிஸ்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலின் போது முறைகேடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது,'' என்று பாக்., அதிபர் முஷாரப் கூறினார்.


    02.சிறிதளவு மதுவும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்
    லண்டன்: தினமும் சிறிதளவு மதுவும், உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும் என்பது நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகு தெரியவந்துள்ளது.

    03.சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்தியச் சிறுமி பலி
    துபாய்: சவுதியில் 14 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் இந்தியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.

    04.பாக்., மதரசாக்களில் சீர்திருத்தம் ஆலோசகராக இந்து அதிகாரி நியமனம்
    இஸ்லாமாபாத்: மதரசாக்கள் பதிவு மற்றும் அதன் சீர்திருத்தங்கள் பற்றி பாக்., பிரதமருக்கு ஆலோசனை வழங்க இந்து அதிகாரி ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    05.வங்கதேச மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
    தாகா: ஊழல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    13-1-2008

    01..சிகரெட் விளம்பரம் ரஷ்யாவில் தடை

    மாஸ்கோ :ரஷ்யாவில் சிகரெட் விளம்பரத்துக்கு ஒட்டு மொத்த தடை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    02.ஹிலாரி மீது முஷாரப் கோபம்

    இஸ்லாமாபாத் :"ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கபிரிட்டன் கூட்டுப் படையினர், தன்னிச்சையாக பாக்.,கில் சாகசம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாது' என்று முஷாரப் எச்சரித்துள்ளார்.

    03.மலேசிய தமிழ் எம்.பி., சுட்டு கொலை

    கோலாலம்பூர் :மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எம்.பி., கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    04.பெனசிர் உடலை பரிசோதனை செய்ய ஸ்காட்லாந்து போலீசார் வலியுறுத்தல்

    இஸ்லாமாபாத் :சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.

    05."இண்ட்ராப்' தலைவர்கள் கதி என்ன?

    கோலாலம்பூர் :மலேசியாவில் ஆள் துக்கி சட்டமாக கருதப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள "இண்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரின் தலைவிதி வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படுகிறது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    14-1-2008

    01. ஈபிள் டவரை தகர்க்க சதி முறியடிப்பு
    லண்டன் : பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரை தகர்க்க திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.

    02. இரட்டையராக பிறந்தவர்கள் தங்களை அறியாமலேயே "டும் டும்!'

    லண்டன் : இருவரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். குழந்தையாக இருக்கும் போதே பிரிந்து விட்டனர். வளர்ந்த பிறகு, ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    03. எச்சரிக்கையாக இருங்கள் : கட்சிக்காரர்களுக்கு சாமிவேலு அறிவுரை

    கோலாலம்பூர் : மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி, தனது எம்.பி.,க்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

    04. நேபாளத்திலும் குடி புகுந்தது வாரிசு அரசியல்
    காத்மாண்டு : தெற்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் வாரிசு அரசியல் நடைமுறை, நேபாளத்திலும் குடி புகுந்து விட்டது.

    05. பிரான்சுக்கு "அட்வைசராக' அமர்த்தியா சென் அழைப்பு

    பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்க, இந்தியாவின் பொருளாதார நிபுணரும்...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 5 of 31 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •