Page 9 of 31 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 19 ... LastLast
Results 97 to 108 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #97
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    9-4-2008

    01. பெனசிர் படுகொலை குறித்து விசாரிக்க புதிய விசாரணை கமிஷன் அமைக்க முடிவு
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க, புதிய விசாரணை குழுவை அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.



    02. பள்ளி குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி
    ஹூஸ்டன் : பள்ளி மாணவிகள் கர்ப்பமாவதும், பெற்றொருக்கு தெரியாமல், குழந்தையை அழித்து விடுவதும், அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.



    03. விடுதலை புலிகள் முகாம் மீது தாக்குதல்
    கொழும்பு : நெடுஞ்சாலை துறை அமைச்சர் கொல்லப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகளின் தற்கொலை படை முகாம் மீது, இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.



    04. ஹிலாரியின் உதவியாளர் பதவி விலகினார்
    நியுயார்க் : அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரின் போட்டியில் இடம் பெற்றுள்ள ஹிலாரி கிளின்டனின் பிரசார அமைப்பாளர், அப்பதவியில் இருந்து விலகினார்.



    05." நாசா'விலும் ஆட்குறைப்பு : இந்தியர்கள் வேலை பறிபோகும்
    நியூயார்க் : அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா'விலும் ஆட்குறைப்பு அமலாகிறது.



    06. குடிகார தந்தைக்கு "கம்பெனி' கொடுத்தால் சம்பளம் * பாச மகனின் வினோத விளம்பரம்
    லண்டன் : " பாருக்கு செல்லும் எனது தந்தைக்கு, "கம்பெனி' கொடுத்தால், மணிக்கு ஏழு பவுண்ட் ( ரூ.480) கொடுக்கப்படும்.



    07. இந்திய குழந்தையை தத்தெடுக்க பாப் இசை பாடகி மடோனா முடிவு
    லண்டன் : பிரபல பாப் இசைப் பாடகி மடோனா, இந்திய குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.உலக புகழ் பெற்ற பாப் இசைப் பாடகி மடோனா(49).



    08. அமெரிக்காவில் தளம் அமைத்துள்ள விடுதலைப் புலிகள்
    வாஷிங்டன் : நிதி திரட்ட, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க, விடுதலைப் புலிகள் அமைப்பினர், அமெரிக்காவில் தளம் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது.



    09. ஹாலிவுட் "லவ் குரு' படம் : இந்து அமைப்புகள் எதிர்ப்பு
    வாஷிங்டன் : இந்து மதத்தை கிண்டல் அடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, ஹாலிவுட் படம்"லவ் குரு'வுக்கு, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.



    10. சுற்றுலா பயணிகளால் அன்டார்டிகாவுக்கு ஆபத்து
    லண்டன் : தென் துருவமான அன்டார்டிகாவுக்கு, சுற்றுலா பயணிகள் செல்வது, அதிகரித்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #98
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    10-4-2008

    01. பிரிட்டன் வீரர்களுக்கு மகாபாரதம் போதனை
    லண்டன் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் செல்லும் பிரிட்டன் வீரர்களுக்கு, மகாபாரதம் கற்றுத் தரப்படுகிறது.



    02. புஷ்ஷுக்கு அடித்த "சல்யூட்' : சர்ச்சையில் ஆஸி., பிரதமர்
    கேன்பெர்ரா : அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அடித்த சல்யூட்டால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்.



    03. விபத்தை காட்டிக்கொடுத்தது "கருப்பு பெட்டி' : சிக்கினார் இந்திய கோட்டீஸ்வரர் மகன்
    லண்டன் : சிறுமியை நினைவிழந்த நிலைக்கு செல்ல காரணமான கார் விபத்தை ஏற்படுத்திய இந்திய கோட்டீஸ்வரர் மகனுக்கு, முதல் முறையாக கருப்புப்பெட்டி ஆதாரம் மூலம் தண்டனை வழங்கப்பட உள்ளது.



    04. இதோ ஒரு அதிசய கேமரா மனிதர் : ஒரே முறை பார்த்து வரைந்து தள்ளுகிறார்
    லண்டன் : ஹெலிகாப்டரில் தேம்ஸ் நதியின் மீது ஒரு ரவுண்டு சுற்றி விட்டு தரை இறங்குகிறார் ஸ்டீபன் வில்ட்ஷைர். இறங்கியதும் ஓவியம் வரைய துவங்குகிறார். ஐந்து நாளில் முழு ஓவியம் தயாராகிறது.



    05. மனைவியை இழந்தால் மனம் உடையும் ஆண்கள்
    லண்டன் : ஆண்களை விட பெண்கள் தான் விரைவில் இதயம் உடைந்து போய்விடுவார்கள் என்று கூறுவது உண்டு.



    06. அழிந்து வரும் அரிய வகை ஆமை : "வயாகராவுக்காக' அறுத்து கொலை
    காசா : அழிந்து வரும் அரிய வகை ராட்சத கடல் ஆமையை பிடித்த பாலஸ்தீன மீனவர்கள், அதன் ரத்தம் மற்றும் இறைச் சிக்காக அதை கொன்றனர்.


    Last edited by mgandhi; 10-04-2008 at 06:21 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #99
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    11-4-2008

    01. நேபாள தேர்தல் பிரசாரத்தில் கலவரம்
    காத்மாண்டு : நேபாள தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.



    02. இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை?
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் புதிய ஆட்சி பதவியேற்றுள்ளதால், இந்தியாபாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த நல்லுறவு பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    03. "பிரிட்டனில் குடியேறியவர்களால் பலன் இல்லை' : இந்தியர்களை குறிவைத்து அறிக்கை
    லண்டன் : "வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களால் எந்த பலனும் இல்லை; குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்' என்ற...



    04. 5,000 ஆண்டுக்கு முன் பூமியை தாக்கிய ராட்சத விண்கல் : கி.மு., 700வது நுõற்றாண்டு களிமண் சித்திர குறிப்பில் தகவல்
    லண்டன் : பூமியில் 5,000 ஆண்டுக்கு முன் ராட்சத விண்கல் மோதியதற்கு, களிமண் சித்திர குறிப்பை ஆதாரமாக கண்டுபிடித்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள்.



    05. ரூ. 28 கோடி செலவழித்தும் ஆஸி., போலீஸ் கோபம் அடங்கவில்லை! : ஹனீப் நடவடிக்கை பற்றி மீண்டும் விசாரணை
    மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்ட பெங்களூரு டாக்டர் முகமது ஹனீப் தொடர்பான விசாரணையில்...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #100
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    12-4-2008

    01.சீனா சென்றார் முஷாரப்
    இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ஆறு நாள் பயணமாக நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார்.



    02.மலேசிய இந்திய காங்., கட்சியில் அதிரடி மாற்றம்
    சிங்கப்பூர் :தேர்தல் தோல்வியை அடுத்து, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



    03.குழந்தைகளை தனியே தவிக்கவிடும் பெற்றோருக்கு சிறை
    சிட்னி :குழந்தைகளை கவனிக்காமல் நீண்ட நேரம் தவிக்க விடும் பெற்றோருக்கு இனி மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. இது இங்கல்ல; குவின்ஸ்லாந்தில்


    04.இளவரசர் ஹாரியின் திருமண திட்டம் :காதலியின் பெற்றோருடன் பேச்சு
    லண்டன் :பிரிட்டன் இளவரசர் ஹாரி, திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது குறித்து காதலியின் பெற்றோரிடம் அவர், நேரடியாக பேசியுள்ளார்



    05.ஸ்பூன்களை வைத்து சிறுவன் உலக சாதனை!
    லண்டன் :ஸ்பூன்களை வைத்து உலக சாதனையை முறியடித்துள்ளான், பிரிட்டனை சேர்ந்த ஒன்பது வயது ஜோ அலிசான்.



    06.அமெரிக்க கண்டத்தில்4,000 ஆண்டு பழமையான நெக்லஸ் கண்டெடுப்பு
    வாஷிங்டன் :பெரு நாட்டில், நான்காயிரம் ஆண்டு பழமையான தங்க நெக்லசை, அகழ்வாராய்ச்சியினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க கண்டத்தில், தங்கத்தை கவுரவ சின்னமாக கருதுவது என்ற பழக்கம், பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.


    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #101
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    13-4-2008

    1* நேபாள காங்கிரசுக்கு முதல் வெற்றி - காத்மாண்டு,
    நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றிக் கிடைத்துள்ளது.


    2*ஈரான் எரிவாயு திட்டம்: இந்தியா-பாகிஸ்தான் ஏப். 16-ல் பேச்சு - இஸ்லாமாபாத்,
    ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தில் இருநாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்து மீண்டும் பேச்சு நடத்த இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவு செய்துள்ளன.


    3*தலாய்லாமா அமெரிக்கா சென்றார் - வாஷ’ங்டன்,
    திபெத்திய தலைவர் தலாய்லாமா 13 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார்.


    4*வங்காளதேசத்தில் போலீசாருடன் நடந்த மோதலில் 100 பேர் காயம் - டாக்கா,
    வங்காளதேசத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.


    5* ஸ்லோவோக்கியா நாடு சிறிலங்காவுக்கு 10 ஆயிரம் ஏவுகணைகள் விற்பனை - கொழும்பு,
    சிறிலங்காவுக்கு 10,000 இராணுவ ஏவுகணைகளை ஸ்லோவோக்கியா விற்பனை செய்துள்ளதாக "உலகப் பாதுகாப்பு" அமைப்பின் ஆயுத வர்த்தக கண்காணிப்புக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #102
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    15-4-2007

    1-ஈரான் மசூதியில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலி
    டெக்ரான்,

    ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் ஷிராஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    2-குண்டு வைத்ததாக திபெத்தில் 6 புத்த சாமியார்கள் கைது
    பீஜிங்,

    திபெத்தியர்கள் மீது சீனா அடக்குமுறையை கையாண்டதால் இதை எதிர்த்து திபெத்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர். புத்த சாமியார்களும் இதில் பங்கேற்றனர்.திபெத்தில் சில இடங் களில் குண்டு வெடிப்புகளும் நடந்தன. இந்த


    3-கென்யாவில் எதிர்கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி
    நைரோபி,

    கென்யாவில் எதிர் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுங் கட்சி முடிவு செய்துள்ளது. கென்யாவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.ஆனால் இதை ஆளுங் கட்சி ஏற்கவில்லை

    4-தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ஈராக்கில் 1300 ராணுவ வீரர்கள் டிஸ்மிஸ்'
    பாக்தாத்,

    ஈராக்கில் புதிய அரசு ஏற்படுத்தப்பட்ட பிறகு சதாம் உசேன் ராணுவம் கலைக்கப்பட்டு புதிய ராணுவ படை, போலீஸ் படை உருவாக்கப்பட்டது. சதாம் உசேன் ராணுவத் தில் இருந்தவர்களும் இந்த படையில் இடம் இடம் பெற்று இருந்தனர்

    5-பிரேசில் நாட்டில் பிரதீபா பட்டீலுடன் போட்டோ எடுக்க ஆர்வம்
    சாபோலே,

    ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லத்தீன், அமெரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.அவர் தற்போது பிரேசில் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த விழாவில் ... ஊ

    6-பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய 400 தீவிரவாதிகள் தயார் நிலை திடுக்கிடும் தகவல் ஜம்மு,

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் நுழைய 400 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.லஸ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #103
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    17-4-2008

    1. சீனா நடத்தும் 'கலாசார படுகொலை': தலாய்லாமா கேட்கிறார் சுயாட்சி

    வாஷிங்டன்: "திபெத்திற்கு அர்த்தமுள்ள சுயாட்சி தேவை' என்று திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக, உலகம் முழுவதும் திபெத்தியர் உரிமைப் போராட்டம் பற்றி பரவலாகக் கருத்து பேசப்படும் சூழ்நிலையில், திபெத் குறித்த தன் ...


    2. சீட்டுக்கட்டில் வேதியியல் பாடம்: சிறுவன் திரட்டுகிறார் ரூ. 20 கோடி

    நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுவன், தனது 14வது வயதிலேயே தொழிலதிபராகி உள்ளான். தனது வியாபாரத்துக்காக ரூ. 20 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளான். சிறுவன் அன்சுல் சமரின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறி 21 ஆண்டுகளாகிறது. அன்சுல் சமர் ...


    3. அர்ச்சகர்களுக்கு விசா நீட்டிப்பு: மலேசியாவின் அடுத்த மனமாற்றம்

    கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த அர்ச்சகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் சிற்பிகளின் விசாக்களை, அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தோல்விக்குப் பின் நடைபெறும் மனமாற்றங்களில் இதுவும் ஒன்று. மலேசியாவில் ...

    4. ஸ்பெயின் அரசில் : ஆண்களை மிஞ்சிய பெண்கள்

    மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டு அரசில் ஆண்களை மிஞ்சி விட்டனர் பெண்கள். ஆம்... ஆண் அமைச்சர்களை விட, பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஏற்கனவே பிரதமராக இருந்த ஜோஸ் லூயிஸ் ...

    5. இலங்கை அமைதி நடவடிக்கை: இந்தியாவுக்கு நார்வே அழைப்பு

    ஓஸ்லோ: "இலங்கையில் அமைதி திரும்புவதற்கு இந்தியாவால் மிக முக்கிய பங்காற்ற முடியும்' என்று நார்வே கூறியுள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான நார்வேயின் சிறப்பு தூதர் ஜான் ஷன்சென் பவுர் கூறியதாவது: எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியாவே மிக முக்கிய ...


    6. விமானம் விழுந்து நொறுங்கியது: 70 பேர் பலி
    ஏப்ரல் 16,2008,00:00 IST

    கின்ஷாசா: காங்கோ நாட்டில், பயணிகள் விமானம் ஒன்று, மார்க்கெட் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில், 70 பேர் உயிரிழந்தனர். ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா என்ற இடத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கின்ஷாசாவுக்கு, 70க்கும் மேற்பட்ட ...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #104
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    18-4-2008

    1. மடோனா பாணி தத்தெடுப்பால் புது தலைவலி: ஆதரவற்றோர் காப்பகங்கள் அதிகரிப்பு


    லண்டன்: மடோனா போன்ற பிரபலங்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதால், ஆதரவற்றோர் பிரச்னை முடிவுக்கு வராது; காப்பகங்கள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். "பப்ளிசிட்டி'க்காக இப்படி தத்தெடுப்பது குறித்து மனோதத்துவ நிபுணர்கள் கவலை ...


    2. கடன் வாங்கி கூலிப்படைக்கு கொடுத்து: கணவரை கொல்ல முயன்ற பெண் கைது


    லண்டன்: வீட்டுக் கடன் வாங்கி, அந்தப் பணத்தை கூலிப்படைக்கு கொடுத்து, கணவனை கொல்ல முற்பட்ட பெண் கைது செய்யப்பட்டார். லண்டனின் தென்பகுதியில் உள்ள கென்லே மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோ கெனிலி (வயது 44). இவரது கணவர் திமோதி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ...


    3. அமெரிக்காவில் படிப்பு: மாணவர் தங்க கூடுதல் அனுமதி


    வாஷிங்டன்: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் படிக்கும் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள், அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து வேலை பார்க்கும் காலம் 12 மாதங்களில் இருந்து 29 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ...


    4. முஸ்லிமாக மாற விரும்பினால் தகவல் கட்டாயம்: மாறுகிறது மலேசியா


    கோலாலம்பூர்: மலேசியாவில், முஸ்லிமாக மதம் மாறும் முன், சம்பந்தப்பட்ட நபர், தனது குடும்பத்தினரிடம், அத்தகவலை தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி புது விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது. மலேசியாவில், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். ...



    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #105
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    19-4-2008


    1. வீராங்கனையை மணக்கிறார் அதிபர் புடின்

    லண்டன் : ரஷ்ய அதிபர் புடின், பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினுக்கு (56), ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் லுட்மில்லா. வரும் மே மாதம்,அதிபர் பதவியில் ...

    2. மலேசியாவில் தமிழ்பத்திரிகைக்கு தடை

    கோலாலம்பூர் : மலேசியாவில், "மக்கள் ஓசை' தமிழ் நாளிதழ் வெளியிட, அந்நாட்டு அரசு தடை வித்துள்ளது. மலேசியாவில், " மக்கள் ஓசை' தமிழ் நாளிதழ், துவக்கத்தில், 15 ஆண்டுகளாக வார பத்திரிகையாக தான் வெளிவந்தது. பின் 2005ம் ஆண்டில், தினசரி நாளிதழாக ...

    3-கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

    வாஷிங்டன், போப் ஆண்டவர் பெனடிக் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். வாஷிங்டனில் அவர் கத்தோலிக்க பல்கலைக்கழ கத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதா வது:-ரோமன் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள்


    4-ஈராக்கில் தற்கொலை தாக்குதல் ; சவ ஊர்வலத்தில் குண்டு வெடித்து 45 பேர் பலி

    பாக்தாத், ஈராக்கில் அமெரிக்க படையை எதிர்த்து தீவிரவாதி கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகிறார் கள். சன்னி, ஜியா முஸ்லிம் கள் இடையிலும் மோதல் உள்ளது.

    5-9,550 ஆண்டுகளாக வளரும் உலகிலேயே வயதான மரம் சுவீடன் நாட்டில் உள்ளது.

    வாஷிங்டன், உலகிலேயே மிகவும் வயதான மரம் சுவீடன் நாட்டில் தலர்னா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது. இது ஒரு வகையான ஊசி இலை மரம் ஆகும்.

    6-ஐக்கிய அரபு நாட்டுக்கு புதிய தலைநகரம்

    துபாய், ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதால், புதிய தலைநகரம் உருவாக்கப்பட இருக்கிறது. இப்போது உள்ள அபுதாபி நகருக்கு அருகில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இது அமையும்

    7-லாகூர் தொகுதியில் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்

    இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் மீது வழக்கு இருப்பதாக கூறி அதிபர் முஷரப் தடைபோட்டு உள்ளது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #106
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    20-4-2008

    1. இந்தியாவின் உதவி : பிரசாண்டா ஆவல்

    காத்மாண்டு : "நேபாள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்'என நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டா கூறினார். நேபாள பார்லிமென்ட் தேர்தலில், மாவோயிஸ்ட் அமைப்பு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ...


    2. ஈராக்கில் அமெரிக்காவுக்கு தோல்வி : அல் - குவைதா

    துபாய் : ஈராக்கில், அமெரிக்கா படையெடுத்து ஐந்து ஆண்டுகள் நிறைவானதை, நினைவூட்டும் வகையில், அல்-குவைதா தலைவர் அய்மான் அல் - ஜவாகிரி ஆடியோ டேப்பை வெளியிட்டுள்ளார். அதில், " ஈராக் போரில், அமெரிக்காவுக்கு தோல்வியை தவிர வேறு எதுவும் ...


    3. இந்தியா - மெக்சிகோ ஒப்பந்தம்

    மெக்சிகோ சிட்டி : விமான போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பாக, இந்தியா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜனாதிபதி பிரதிபா, வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ சென்ற அவருக்கு, சிறப்பான ...


    4. புடின் மறுமணம் ஒரே நாளில் 'புஸ்'

    மாஸ்கோ : ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்தியை, ரஷ்ய அதிபர் புடின் மறுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினாவை, காதலித்து வருவதாக செய்திகள் ...

    5. குலுக்கல் மூலம் எச் -1 பி விசா விண்ணப்பங்கள் தேர்வு

    வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பித்து இருப்போர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், திறமை வாய்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமல் ...

    6. 10,000 மடங்கு வேகம் கொண்ட புது இன்டர்நெட் கண்டுபிடிப்பு

    ஜெனீவா : இப்போதுள்ள பிராட் பேண்ட் இணைப்பை விட, 10 ஆயிரம் மடங்கு அதிவேகம் கொண்ட புது இன்டர் நெட் முறை கண்டுபிடிக் கப் பட்டுள்ளது; நொடிப் பொழுதில், சினிமா படத்தை "டவுண் லோடு' செய்யும். இன்டர்நெட்டில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுவது ...

    7. மெக்சிகோவில் ஜனாதிபதி பரபரப்பு

    மெக்சிகோ : மெக்சிகோவில் நடந்த சம்பிரதாய வரவேற்பின்போது, கவனக்குறைவு காரணமாக ஜனாதிபதி பிரதிபா, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் திரும்பி வந்து கொடிக்கு ...



    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #107
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    21-4-2008



    1. ஜெட் விமான தயாரிப்பு: டாடாவின் அடுத்த இலக்கு

    ரியோ- டி- ஜெனிரோ : இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான, டாடா குழுமம், ஜெட் விமான தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்காக, பிரேசிலை சேர்ந்த, எம்பரெர் நிறுவனத்துடன் பேசப்படுகிறது.


    2. கிரண் பேடிக்கு கட்சிகள் அழைப்பு

    டொரன்டோ : இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடிக்கு பல அரசியல் கட்சிகள், தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத் துள் ளன. பல பொறுப்புகளில் இருந்த கிரண் பேடி, பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார்.


    3. 'அசிங்க' காபிக்கு விலை ரூ. 4,000

    லண்டன் : காட்டுப் பூனை மலத்திலிருந்து தயாரிக்கப்படும், காபிக்கு, பிரிட்டனில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கப் காபியின் விலை, நான் காயிரம் ரூபாய் என் றாலும், ஏராளமானோர் அதை, ஆர்வத்துடன் குடிக்கின்றனர்.

    4. அமெரிக்க பாதிரியார்கள் 'செக்ஸ்' மோசடியால் வருத்தமடைந்த போப்

    வாஷிங்டன் : அமெரிக்காவில், கிறிஸ்துவ பாதிரியார்களின் "செக்ஸ்' மோசடியில் பாதிக்கப்பட்டவர்களை, போப் ஆண்டவர் 16ம் பெனடிக், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்காக பிராத்தனை செய்வதாகவும் உறுதி அளித்தார்.


    5. ஊழியர்கள் இ-மெயிலை 'பாஸ்' பார்க்கலாம் : ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருது சட்டம்

    சிட்னி : ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு வரும் தனிப்பட்ட இ-மெயிலை, அந்த நிறுவனத்தின், "பாஸ்' பார்க்கும் வசதியை அளிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய துணை பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறியதாவது


    6. விவாகரத்தால் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடி செலவு : இங்கல்ல அமெரிக்காவில்

    நியூயார்க் : விவாகரத்து பெற்ற பெண் கள் மற்றும், திருமணமாகாமலேயே பிறக்கும் குழந்தைகளின் நலனுக்காக, அமெரிக் காவில் ஆண்டுதோறும் ரூ.4.50 லட்சம் கோடியை அரசு செலவிடுகிறது என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.


    7. அணு ஆயுத ஏவுகணை : சோதித்தது பாகிஸ்தான்


    இஸ்லாமாபாத் : அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, 2,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும், ஷாகீன்-2 ஏவுகணை சோதனையை, பாகிஸ்தான் நேற்று நடத்தியது. ரகசியமான இடத்தில் நடந்த இந்த சோதனையில், ஷாகீன் ஏவுகணை, குறிப்பிட்ட தூரத்தில் உள்ள இலக்கை, தாக்கும்...


    8. பழம் பெருமை பேசும் சீனாவில் கொடி கட்டி பறக்குது விபசாரம்

    பீஜிங் : சீன தலைநகர் பீஜிங்கிலும், ஷாங்காய் நகரிலும், விபசார தொழில் கொடி கட்டி பறக்கிறது. இத்தொழிலில் பெண்கள் ஈடுபட, வறுமை காரணம் இல்லை; ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது தான் நோக்கம்

    9. மகளை பார்க்க அனுமதியுங்கள் : சரப்ஜித் சிங் உருக்கமான கோரிக்கை

    இஸ்லாமாபாத் : "எனது இளைய மகளை, இதுவரை பார்த்தது இல்லை; அவளை பார்க்க, எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள சரப்ஜித் சிங், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கராச்சி, லாகூர் ...


    10. நோயாளி வயிற்றுக்குள் 'கிடுக்கி' : ரூ.80 லட்சம் கேட்டு வழக்கு

    பெர்லின் : அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட போது, வயிற்றியில் 15 அங்குல கிடுக்கிகளை வைத்து தைத்த டாக்டர் மற்றும் மருத்துவமனை மீது பாதிக்கப்பட்டவர் 80 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, வழக்குத் தொடர்ந்துள்ளார். ஜெர்மன் டியூஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ...



    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #108
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    22-4-2008

    1. பிரதமர் பதவியேற்க சர்தாரி விருப்பம்

    இஸ்லாமாபாத் : "அவசியம் ஏற்பட்டால், பிரதமராக பதவியேற்பேன்' என, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி கூறினார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது: ...


    2. பாக்., தூதரை விடுவிக்க தலிபான்கள் நிபந்தனை

    இஸ்லாமாபாத் : "ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதரை விடுவிக்க வேண்டும் எனில், தங்களின் தலைவர் ஒருவரையும் மற்றும் சில பயங்கரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்' என, தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    3. நீர்வரத்து அதிகரித்து காணாமல் போன ஏரி

    வால்டிவியா : திடீரென நீர்வரத்து அதிகரித்து, ஒரு கட்டத்தில் ஏரியே காணாமல் போகுமா? - இப்படி ஒரு அதிசய சம்பவம் சிலி நாட்டில் நடந்துள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தெற்கு பகுதியில், வால்டிவியா நகரையொட்டி, காசெட் ஏரி உள்ளது....


    4. மது விடுதியில் போதையில் கும்மாளம் : வில்லியமின் பேன்ட் அவிழ்ந்தது

    லண்டன் : மதுவிடுதியில் அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த பிரிட்டன் இளவரசர் வில்லியமின் கால் சட்டை அவிழ்ந்து விழுந்து, அங்கிருந்தோரை திகைக்க வைத்தது. உறவினர் பீட்டரின் பிறந்த நாளுக்காக, பிரபல மதுவிடுதிக்கு இளவரசர்கள் வில்லியமும், ...


    5. சர்க்கரை மூலம் காரையும் இயக்கலாம் : அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

    நியூயார்க் : காபியில் போடும் சர்க்கரை மூலம் காரை ஓட்டலாம்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். காரை இயக்க தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, சர்க்கரையில் இருந்து உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவில், ...


    6. ஈராக்கில் அமெரிக்க படை தேர்தலுக்கு பின் வாபஸ் ஆகுமா?

    : ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படை, அந்த நாட்டின் அதிபர் தேர்தலுக்கு பின் முழுமையாக வாபஸ் பெறப்படுமா? தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் ...



    7. தெருவில் கிடந்த 60 லட்சம் பணம்; உரியவரிடம் ஒப்படைத்த நல்லவர்

    லாஸ்ஏஞ்சலஸ் : தெருவில் 60 லட்சம் ரூபாய் பணம் கிடப்பதை கண்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதை எடுத்து வைத்துக் கொள்வீர்களா அல்லது போலீசிடம் ஒப்படைப்பீர்களா? இதே போன்ற ஒரு குழப்பம் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருக்கும் ஏற்பட்டது.


    8. காயமடையும் ராணுவ வீரர்களுக்கு செயற்கை காது, தோல் வளர்ப்பு

    வாஷிங்டன் : போர்க்களங்களில் காயமடையும் ராணுவ வீரர்களுக்காக, செயற்கையாக காது, தோல் போன்ற உறுப் புகளை வளர்க்கும் ஆராய்ச்சி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இதில் வெற்றி கிடைக் கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள் ளது.


    9. ஸ்பெயின் அரசில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்

    மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டு அரசில் ஆண்களை மிஞ்சி விட்டனர் பெண்கள். ஆம்... ஆண் அமைச்சர்களை விட, பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது.


    10 வாரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை : முன்னிலை வகிக்கிறது கம்யூனிச சீனா


    லண்டன் : "கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில், ஒவ்வொரு வாரமும் 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 64 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது' என, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 9 of 31 FirstFirst ... 5 6 7 8 9 10 11 12 13 19 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •