Page 8 of 31 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 ... LastLast
Results 85 to 96 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #85
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    26-2-2008

    01. அமெரிக்க அரசில் உயர் பதவி: ஆசைப்படுகிறார் இந்திரா நுயி
    நியூயார்க் : "அமெரிக்க அரசில் உயர் பதவி ஒன்றை பெற வேண்டும்' என ஆசைப்படுகிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவரான வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி இந்திரா நுயி.

    உள்ளே

    02. "இண்ட்ராப்' சிவநேசன் போட்டி
    கோலாலம்பூர் : மலேசியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், "இண்ட்ராப்' அமைப்பைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர்.

    03. இந்தியர்களை சித்ரவதை செய்த அமெரிக்க கம்பெனிக்கு கெடு! : ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு
    நியூயார்க் : வேலை தந்து, கிரீன் கார்டு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 52 இந்திய தொழிலாளர்களைச் சித்ரவதை செய்த அமெரிக்கக் கம்பெனிக்கு, அந்த நாட்டின் கோர்ட் கெடு விதித்துள்ளது.

    04. இரவு நேர, வார இறுதி "அட்டாக்' ஆபத்து! : வார நாட்களில் தப்பலாம்
    நியூயார்க் : இரவு, வார இறுதியில் ஏற்படும் மாரடைப்புக்கு உள்ளாவோர் தான் அதிகம் இறக்கின்றனர்; வார நாட்களில் "அட்டாக்' வருவோர் பிழைத்துக்கொள்கின்றனர்

    05. இறைச்சிக்கு வெட்டப்பட்ட 6.5 கோடி கிலோ பன்றிகள் வாபஸ்
    வாஷிங்டன் : நோய்வாய்ப்பட்ட பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலிபோர்னியா நிறுவனம், 6.5 கோடி கிலோ இறைச்சியை திரும்பப் பெற சம்மதித்துள்ளது.

    06. லண்டனில் வீட்டுச் சந்தை : ரஷ்யர்களை மிஞ்சும் இந்தியர்கள்
    லண்டன் : லண்டனில் வீடுகள் வாங்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு ரியல் எஸ்டேட் சந்தை களை கட்டியுள்ளது. இந்தியர்களுக்கு போட்டியாக ரஷ்யர்களும் களம் இறங்கியுள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #86
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-2-2008

    01. கியூபாவின் புதிய அதிபராக ரவுல் காஸ்ட்ரோ பதவி ஏற்பு
    ஹவானா: கியூபா அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

    02. மலேசியாவில் தேர்தல் பிரசாரம் : துவக்கம்
    கோளாளம்பூர்: மலேசியாவில் பார்லிமென்ட் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை துவக்கியுள்ளன.

    03. முஷாரப் தானாக பதவி விலக வேண்டும் : அமெரிக்க செனட்டர்கள் அறிவுரை
    வாஷிங்டன்: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் நீக்கப்படுவதை விட, அவராகவே பதவி விலகுவது நல்லது, என அமெரிக்க செனட்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    04. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை
    ஜகர்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    05. ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளி பாகிஸ்தானில் கைது
    இஸ்லாமாபாத்: தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரும், அல்குவைதா தலைவர் ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளியுமான முல்லா உபைதுல்லாவை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #87
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    2-3-2008

    பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 38 பேர் பலி - இஸ்லாமாபாத்,
    பாகிஸ்தானில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட மனிதக் வெடிகுண்டுத் தாக்குதலில் 38 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.

    இந்தியா துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும்: நிகோலஸ் பர்ன்ஸ் - வாஷங்டன்,
    அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என அமெரிக்கத் தரப்பில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் நிகோலஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் புதிய பாராளுமன்றம் 5-ந் தேதி கூடுகிறது - இஸ்லாமாபாத்,
    பாகிஸ்தானில் புதிய பாராளுமன்றம் வருகிற 5-ந் தேதி கூடுகிறது. முஷரப் தன் ஆட்சியின் கடைசி ஆண்டில் நெருக்கடிநிலை காலத்தில் கொண்டுவந்த அரசியல் சட்டதிருத்தங்கள் ரத்து செய்யவேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி கோரி வருகிறது. அதன்படி அவை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    தென்னிந்திய மத்திய மின் தொகுப்பில் சிறிலங்காவை இணைக்க இந்தியா முடிவு - கொழும்பு,
    சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் அடுத்த மாதம் கையெழுத்தாகவுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிரான யுத்தத்தில் இளவரசர் ஹாரி - லண்டன்,
    இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கடந்த 10 வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து தலீபான்களுக்கு எதிரான யுத்தத்தில் பங்கு கொண்டு வருகிறார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #88
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    3-3-2008

    01. தேங்காய் எண்ணெயில் விமானம் பறந்தது
    லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது.

    02. ரெஸ்டாரன்ட்களில் "இவெயிட்டர்கள்' : தொடு திரையில் உணவு ஆர்டர் செய்யலாம்
    டெல் அவிவ் : இனி ரெஸ்டாரன்ட் செல்லும் போது, உணவு வகைகளை ஆர்டர் எடுக்க அதை பரிமாறும் வெயிட்டர்களுக்காக காத்திருக்க தேவையில்லை.

    03. இதுவரை 20 முறை; இன்னும் தீர வில்லை ஆசை : ஒவ்வொரு மாதமும் ரத்த தானம் செய்யும் நாய்

    வாஷிங்டன் : இதுவரை 20 முறை ரத்ததானம் செய்ததற்காக, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டது.

    04. சீக்கிய மாணவர் "டர்பன்' : ஆஸி., பள்ளியிலும் தடை
    மெல்போர்ன் : பிரிட்டனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும், சீக்கிய மாணவர், பள்ளியில் "டர்பன்' (தலைப்பாகை) அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    05. "இன்டர்நெட்'டில் சட்டவிரோத பார்மசி : இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
    நியூயார்க் : அமெரிக்காவில், "இன்டர்நெட்'டில் சட்டவிரோத மருந்துக்கடை நடத்திய இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #89
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    4-3-2008
    01. ஆப்கன் ராணுவ பணியிலிருந்து லண்டன் திரும்பினார் ஹாரி
    லண்டன் :தலிபான்களுக்கு எதிராக பிரிட்டன் இளவரசர் ஹாரி போரிட்டு வருவதாக இணைய தளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆப்கனில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, நேற்று லண்டன் திரும்பினார்.

    02. மீண்டும் கார்கில் விவகாரம் துசி தட்டுகிறார் நவாஸ்
    இஸ்லாமாபாத் :"பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, கார்கில் போர் தொடர்பாக அதிபர் முஷாரப்பின் பங்கு உள்ளிட்ட அனைத்தும் ஆராயப்படும்' என, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    03. இந்திய வம்சாவளியினருக்கு அநீதி டத்தோ சாமுவேல் வாய்திறக்கிறார்
    கோலாலம்பூர் :"மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு,போதிய வசதிகளை,அரசு செய்து தரவில்லை என்பது உண்மை தான்'என மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேல் ஒப்புக் கொண்டுள்ளார்.

    04. இந்தியாவின் நீலம் நதியை, பாக்., ஜீலத்தில் திருப்ப சீனா உதவிசீன கம்பெனிகளுக்கு ரூ. 600 கோடி கான்ட்ராக்ட்
    பிஜிங் :இந்தியாவில் இருந்து, பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாயும் நீலம் நதிநீரை, பாகிஸ்தானில் ஓடும் ஜீலம் நதிக்கு திருப்பும், ரூ. 600 கோடி கான்ட்ராக்ட், இரு சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    05. மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி
    இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் பழங்குடியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #90
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    5-3-2008

    01. சீக்கிய கடைசி மன்னரின் வாரிசு வெள்ளைக்காரர்: ரத்தத்தை பரிசோதித்த போது அபூர்வம் அம்பலம்
    லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் 64 வயது வெள்ளைக்காரர், சீக்கிய கடைசி மன்னரின் வாரிசு என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது..

    02. "சுதந்திரம் வேண்டும்!' ஸ்காட்லாந்து கேட்கிறது
    லண்டன்: "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்; அமைதியான முறையில் போராடி அதைப்பெறுவோம்' என்று, ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சால்மோன்ட் கூறியுள்ளார்.

    03. சிரிப்பை அளக்க வருது டிஜிட்டல் கருவி
    டோக்கியோ: "வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்' என்று பெரியவர்கள் சொல்லி விட்டனர். ஆனால், எத்தனை பேர் சிரிக்கின்றனர்... அப்படியே சிரித்தாலும் வாயார, வயிறு குலுங்க சிரிக்கின்றனரா?

    04. குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி எந்த வயதில் துவக்கலாம்?
    நியூயார்க்: குழந்தைகளுக்கு எந்த வயதில், "செக்ஸ் கல்வி' துவக்க வேண்டும் என்பது தொடர்பாக டாக்குமென்டரி சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.

    05. இரவில் மட்டும் பேய் நடமாடுவது ஏன்?
    லண்டன்: பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது

    06. வாழும் தெய்வமான சிறுமி பாதை மாறி ஓய்வு பெற்றார்
    காத்மாண்டு: வாழும் தெய்வமாக, புத்த மத குருக்களாலும், இந்துக்களாலும் வழிபாடு செய்யப்பட்டு வந்த நேபாள சிறுமி, தனது குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று, ஓய்வு பெற்றார்.

    07. அமெரிக்கர்களை பின்னுக்கு தள்ளினர் இந்துக்கள்
    நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள இந்துக்கள், கல்வி, வருமானத்தில், அமெரிக்கர்களை பின்னுக்கு தள்ளி விட்டனர்.

    08. வளைகுடா மோகம் கலைகிறது: மாற்று வேலை தேடும் இந்தியர்கள்
    துபாய்: வளைகுடா நாடுகளுக்கு சென்று வேலை செய்தால், கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற மோகம் கலைந்து வருகிறது.

    09. பாக்.,கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 ஆண்டு சிறைவாசம் உளவாளி என்று
    சந்தேகிக்கப்பட்ட அப்பாவி இந்தியர் விடுவிப்பு
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, 35 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர், காஷ்மீர் சிங் என்பவர் இன்று நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #91
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    2-4-2008

    01.குவைத்தில் வேலைக்கு போனால் அதிக பாதுகாப்பு தர புதிய ஏற்பாடு
    துபாய் :குவைத்தில், சிக்கலின்றி வேலை பார்க்க, புதிய கான்டிராக்ட் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. குவைத்தும் இந்திய அரசும் இதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

    02. ஷாஜகான் உடைவாள் லண்டனில் ஏலம்!
    லண்டன் : முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மன்னனும், தாஜ் மகாலை கட்டியவருமான ஷாஜகான் உடைவாளை ஏலத்தில் விற்க லண்டன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    03.லெனினின் சொந்த ஊரில் ஆங்கிலம் கற்பது கட்டாயம்
    மாஸ்கோ :ரஷ்ய முன்னாள் அதிபரும், உலகளவில், கம்யூனிசம் பரவ காரணமாக இருந்தவருமான விளாடிமிர் லெனினின் சொந்த ஊர், ஆங்கில மயமாகிறது.

    04.டாக்டரிடம் காட்டாமல், பிரார்த்தனை செய்ததால் சிறுமி பலி! சர்க்கரை நோய்க்கு மருந்து தராமல் ஜபம் செய்த தாய்
    வெஸ்டன், அமெரிக்கா : சர்க்கரை நோயால் படுத்தபடுக்கையாகி விட்ட சிறுமியை டாக்டரிடம் அழைத்து செல்லாமல், ஜபம் செய்து கொண்டிருந்தார் தாய்; ஒரு மாத போராட்டத்துக்கு பின், ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரத்துக்கு முன், சிறுமி உயிர் பிரிந்தது.

    05.ரிமோட் வேலையை செய்யும் ரோபோ ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் புதுமை

    டோக்கியோ :"டிவி' ரிமோட்டை அமுக்கி, அமுக்கி அலுத்து விட்டீர்களா? இனி அதனுடன் சண்டை போட அவசியம் இல்லை.

    06.பயங்கரவாதிகளை கண்டதும் ஓட்டம்; 50 பாக்.,போலீஸ் டிஸ்மிஸ்!

    இஸ்லாமாபாத் :பயங்கரவாதிகளை கண்டதும் ஓட்டம் பிடித்து, பணிக்கே வராமல் இருக்கும் 50 போலீசாரை பாகிஸ்தான் அரசு "டிஸ்மிஸ்' செய்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #92
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    4-4-2008

    01. விலங்குகளை கொல்லும் பூங்கா;: ஜர்மனி பெண் எம்.பி.,புகார்
    பெர்லின்: "வனவிலங்குப் பூங்காவில் இருந்து நுõற்றுக்கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டு, அவற்றின் தோல்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன'

    02. இளம் பெண் துறவியாகிறார் இத்தாலி பெண்
    வாட்டிகன் நகர்: எலும்பு புற்றுநோயால் உயிரிழந்த, ஆறரை வயது பெண் குழந்தை, உலகிலேயே மிகச் சிறிய பெண் துறவியாக அறிவிக்கப்பட உள்ளார்.

    03. ஜாக் வேண்டாம்; ஜேம்ஸ் "ஓகே!'
    லண்டன்: "ஒருவரின் பெயரைப் பொறுத்தே, அவரது அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் அமைகின்றன' என பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    04. கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் கல்லால் அடித்து கொலை
    இஸ்லாமாபாத்: கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியை, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பழங்குடி மக்கள், கல்லால் அடித்து கொன்றனர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #93
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    5-4-2008

    1- ஸ்கார்லெட் உடலில் 3வது முறையாக பிரேத பரிசோதனை
    லண்டன்: கோவாவில், கற்பழித்து கொல்லப்பட்ட பிரிட்டன் இளம் பெண் ஸ்கார்லெட் உடலில், மூன்றாவது முறையாக நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.


    2- மலேசிய தமிழர்களை விடுவிக்க எதிர்ப்பு
    கோலாலம்பூர்: மலேசிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, "இண்ட்ராப்' அமைப்பை சேர்ந்த தமிழர்கள் ஐந்து பேரை, விடுவிக்க கூடாது என, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில், அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

    3- போலி மத குரு மருத்துவமனையில் அனுமதி
    பெக்காவோவ்: உலகம் அழியப் போகிறது எனக் கூறி, சீடர்களுடன், ஐந்து மாதங்களாக பதுங்கு குழியில் தங்கிருந்த போலி மத குரு, தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    4- கத்தோலிக்க கிறிஸ்துவர்களை விட முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
    ரோம்: உலகளவில், கத்தோலிக்க கிறிஸ்துவர்களை விட, முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, வாட்டிகன் தெரிவித்துள்ளது.

    5- ஆசிரியையை தாக்க திட்டம் : 9 வயது சிறுவர்கள் கைது
    அட்லான்டா: வகுப்பு ஆசிரியரை தாக்க திட்டமிட்ட மாணவர்கள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்பது வயதுக்கு <உட்பட்டவர்கள்.

    6- அந்தஸ்து பட்டியலில் ரிலையன்ஸ், ஓ.என். ஜி.சி
    நியூயார்க்: இந்தியாவின் ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட 48 நிறுவனங்கள், உலகின் மிகச் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

    7- இந்தியாவுக்கு சீனா பாராட்டு

    பீஜிங்: "தலாய்லாமாவை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்' என, வலியுறுத்திய இந்தியாவுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. .
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #94
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    6-4-2008

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் செரீப் காஷ்மீர் வருகிறார் - இஸ்லாமாபாத்,
    காஷ்மீரில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, பாகிஸ்தான் சென்று இருக்கிறார்.


    புனிதத்தலத்தை போர்க்களமாக்கும் சிங்கள அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு - தமிழீழம்,
    கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சிங்கள அரசு ஒரு போர்ப் பூமியாக மாற்றி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.


    எம்.பி.க்கள் விரும்பினால் முஷாரபை அதிபர் பதவியில் இருந்து நீக்கலாம்: சபாநாயகர் - இஸ்லாமாபாத்,
    பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்பினால், அதிபர் முஷாரபை பதவி நீக்கம் செய்யலாம் என்று பாகிஸ்தான் தேசிய சபைத் தலைவர் ஃபெமிடா மிர்சா கூறினார்.


    அடுத்த கட்ட பேச்சு குறித்து பாகிஸ்தானுடன் பிரணாப் ஆலோசனை - இஸ்லாமாபாத்,
    மீண்டும் எந்தத் தேதியில் பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்பது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேசியுடன் (Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi ) இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.


    திபெத் விவகாரத்தில் žனாவுக்கு ஆதரவு: அமெரிக்க மந்திரியிடம் கோரிக்கை - பீஜிங்,
    திபெத் விவகாரத்தில் žனாவுக்கு ஆதரவு தரவேண்டும் அமெரிக்க மந்திரியிடம் žனா கோரிக்கை விடுத்தது.


    இலங்கைக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் - கொழும்பு,
    அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள போதிலும், இலங்கைக்கு மட்டும் ஒரு லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.


    பாகிஸ்தான் அதிபர் முஷரப் žனாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் - இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் முஷரப், புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக žனா செல்கிறார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #95
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    7-4-2008

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பெண்
    தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டு ஜனாதிபதி தேர்தல் வருகிற 20ந்தேதி நடக்கிறது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் பலாங்கா ஒவெலர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்


    113 வயது பாட்டி மரணம்
    ஜப்பானின் அதிக வயதான பாட்டி ககுயமனதகா. 113 வயது வரை வாழ்ந்த இவர் நேற்று மரணம் அடைந்தார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் பொக்கை வாயுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் ..

    லண்டனில் ரூ.16 கோடி ஹெராயன் பறிமுதல்: இந்தியர் உள்பட 3 பேர் கைது
    லண்டன், கிழக்கு லண்டன் பகுதியில் இங்கிலாந்து போலீசார் நடத் திய சோதனையில் 350 கிலோ ஹெராயன் பறிமுதல் செய் யப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்மிந் தர் சானா மற்றும் பாகிஸ் ..சுதிப்கான், ஆலந்தை சேர்ந்த பேட்ரிக் ஆகியோர் கைதானார்கள்.

    பிரான்சு அதிபர் மனைவியின் நிர்வாணப் படம் 10ந் தேதி ஏலம்
    நிஹீயார்க்,பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, கடந்த பிப்ரவரி மாதம் கர்லா புருனி என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். கர்லா புருனி, மாடலிங் தொழிலின் ஆரம்ப கட்டத்தில், 1993ம் ஆண்டு நிர்வாணமாக புகைப்படத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கெர்ட் எல்பெரிங் என்பவர், தன்வசம் வைத்துள்ளார்.

    இங்கிலாந்து ராணியின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
    லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், லண்டனில் உள்ள மன்னர் 7வது எட்வர்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 86. அவர் மார்பு தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    கத்தார் நாட்டில் அமெரிக்க குண்டு வீச்சு விமானம் தீப்பற்றி கொண்டது
    கத்தார், அமெரிக்காவின் பி1 ரக குண்டு வீச்சு விமானம், கத்தார் நாட்டில் உள்ள விமான தளத்தில் தரை இறங்கியது. அப்போது அது திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக அதில் இருந்த சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ..

    சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவை புறக்கணிப்பேன் கனடா பிரதமர் அறிவிப்பு
    டொரண்டோ, ஏப்.6சீனாவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். ...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #96
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    8-4-2008

    1-ஆப்கனில் நேட்டோ படை தாக்குதல்: 15 தாலிபான்கள் சாவு - காபூல்,
    ஆப்கானிஸ்தானின் இருவேறு இடங்களில் ஆப்கானிஸ்தான் படைகளுடன் சேர்ந்து நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் தாலிபான் தீவிரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    2- அமெரிக்காவுடன் பனிப்போர் இல்லை புதின் அறிவிப்பு - புக்காரெஸ்ட்,
    "அமெரிக்காவுடன் பனிப்போர் எதுவும் இல்லை' என்று ரஷ’ய அதிபர் புதின் அறிவித்தார்.

    3- அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அல் கொய்தா திட்டம்: யு.எஸ். தகவல் - வாஷ’ங்டன்,
    அமெரிக்காவை தாக்குவதற்காக, அணு ஆயுதத் தொழில் நுட்பத்தை அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு வாங்க விரும்பியது என்ற தகவலை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

    4- ஈராக்கில் 42 மாணவர்கள் கடத்தப்பட்டனர்
    பாக்தாத்,
    ஈராக்கில் மோசூல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அந்த வழியாக சென்ற 2 பஸ்களை தீவிரவாதிகள் மறித்து நிறுத்த முயன்றனர்.

    5- முஷாரபின் அதிகாரத்தைத் குறைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் –
    இஸ்லாமாபாத்,
    பாகிஸ்தான் அதிபர் முஷாரபிடம் உள்ள பல முக்கிய அதிகாரங்களை குறைக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அந்த நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

    6- திபெத் வளமாக இல்லை: žனா மீது தலாய் லாமா தாக்கு - தர்மசாலா,
    திபெத்தில் மக்கள் வளமாக வாழ்வதாக žனா கூறுவது உண்மையல்ல என்பதை அங்கு நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் தெளிவாகிறது என திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 8 of 31 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •