Page 7 of 31 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 17 ... LastLast
Results 73 to 84 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #73
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    13-2-2008

    01. விமானத்தில் வெடிகுண்டும் கடத்த முடியும் :நிரூபித்து காண்பித்தார் புலனாய்வு நிருபர்

    ஆம்ஸ்டர்டாம் :ஐரோப்பாவில் மிக அதிகமான விமானங்கள், பயணிகள் குவியும் நான்காவது விமான நிலையம் ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபோல். இங்கு, பயணிகளின் சுமைகளை கையாளும் பணியாளர்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் விமானத்தில் கடத்தி செல்ல முடியும் என்ற பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

    02. அடுத்த அமெரிக்க அதிபராக ஒபாமா...! கணிப்பு
    சந்தையில் பரபரப்பு...!

    மிசிசிப்பி :அமெரிக்காவின் அடுத்த அதிபராக பராக் ஒபாமா வருவார் என்ற கணிப்புக்கு சாதகமாக பெட்டிங் அதிகரித்து வருகிறது.

    03. ஹிலாரியின் மேனேஜர் திடீர் மாற்றம்

    வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி, தனது பிரசார திட்ட மேனேஜரை திடீரென்று மாற்றியுள்ளார்.

    04. நடிகை நீச்சல் உடையால் இந்திய விவசாயிகளுக்கு மாடு உதவி! சுவீடன் அறக்கட்டளை புதுமை

    ஸ்டாக்ஹோம் : ஆஸ்திரேலிய நடிகை நிக்கோல் கிட்மன் நீச்சல் உடையை ஏலம் விட்டு, அதில் கிடைத்த பணத்தில், இந்திய ஏழை விவசாயிகளுக்கு பசுக்களை வாங்கி அளிக்க சுவீடன் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

    05. ஈராக் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி :ஆதாரம் வெளியிட்டது அமெரிக்கா

    பாக்தாத் :அல்குவைதா அமைப்பினர், ஈராக்கைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்ற "வீடியோ'வை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

    06. அகலமான மூக்கா உங்களுக்கு? அப்ப நீங்க, "அதில்' கில்லாடியாம்!

    சிட்னி :"கைரேகையில் மட்டுமல்ல; மூக்கை வைத்தும் ஒருவரின் குண நலன்களை அறியலாம்' என உடலியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    07. சூதாட்டத்தில் மகளை இழந்த தந்தை

    காத்மாண்டு : தந்தை சூதாட்டத்தில் தோற்றதால், ஒன்பது வயது பெண், 30 வயது நபருக்கு திருமணம் முடிக்க கடத்தி செல்லப்பட்டாள்.

    08. பக்ரைன் ஊழியர்கள் துதரகம் படையெடுப்பு

    துபாய் :பக்ரைனில் பணிபுரிந்து வரும் 250க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள், போதிய சம்பளம் தரப்படவில்லை என வலியுறுத்தி, இந்திய துதரகத்துக்கு ஊர்வலமாக சென்று புகார் அளித்தனர்.

    09. தலிபான் கமாண்டர் பாக்.,கில் கைது

    குயெட்டா :தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் முல்லா மன்சூர் ததுல்லா கைது செய்யப்பட்டார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #74
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    15-2-2008

    01.பூர்வீகக் குடிகளிடம் மன்னிப்பு கேட்டு ஆஸ்திரேலிய பார்லி.,யில் பிரதமர் கதறல்

    மெல்போர்ன் : பூர்வீகக் குடிகளுக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தீமைகளுக்கு ஆஸ்திரேலிய பார்லிமென்டில், அந்நாட்டு பிரதமர் கெவின் ரூட் மன்னிப்பு கேட்டுக் கதறினார்.

    02.முஷாரப் செல்வாக்கு சரிகிறது : சொல்கிறது கருத்து கணிப்பு

    வாஷிங்டன் : பாகிஸ்தானில் முஷாரப்பின் செல்வாக்கு சரிந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    03.நெப்போலியன் மரணத்துக்கு காரணம் உணவு, பசியால் ஏற்பட்ட புற்றுநோய்


    லண்டன் : மாவீரன் நெப்போலியன் மரணுத்துக்கு, வயிற்று புற்று நோய் தான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர

    04.மலேசியாவில் விரைவில் தேர்தல் : பார்லி.,யை கலைத்தார் பிரதமர்

    கோலாலம்பூர் : மலேசிய பார்லிமென்ட்டை கலைக்க, அந்நாட்டு மன்னர் நேற்று கையெழுத்திட்டதை அடுத்து, பிரதமர் அப்துல்லா அமாத் படாவி, பார்லி.,யைக் கலைத்து அறிவித்துள்ளார்.

    05.எங்கள் திருமணம் அவசரமாக நடக்கவில்லை : வாய் திறந்தார் கர்லா புரூனி

    பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியுடன் தனக்கு அவசர திருமணம் நடக்கவில்லை என்றும், நிதானமாக, கவனமாகத் தான் திருமணம் நடந்தது என்றும், புது மனைவி கர்லா புரூனி கூறியுள்ளார்.

    06.நவாஸ் சர்தாரி கைகோர்ப்பு

    லாகூர் : பாகிஸ்தானில் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி.,) மற்றும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி ஆகியவை கைகோர்த்துள்ளன
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #75
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உலகத் தினச் செய்திகளைத் திரட்டித் தரும்
    மோகன் காந்தி அவர்களின் சேவைக்கு மிக்க நன்றி...
    என்றும் எதிர்பார்க்கின்றோம்...
    Last edited by அக்னி; 15-02-2008 at 02:29 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #76
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    01. வெளிநாட்டு பணியாளர்கள் பிரிட்டனில் பெரிதும் அதிகரிப்பு


    லண்டன் : பிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் ஆறு ஆண்டுகளில் 75 சதவீதம் அதிகரித்துள்ளது. .

    02. கனடாவில் பஞ்சாபியின் ஆதிக்கம் : அதிகம் பேசப்படும் 4வது மொழி


    வான்கூவர் : கனடாவில், பஞ்சாபியர்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. அங்கு பேசப்படும் மொழிகளில், ஆறாவது இடத்தில் உள்ளது பஞ்சாபி.


    03. நாய்களுடன் சினிமா பார்க்கலாம் : தியேட்டர்களின் புது திட்டம்


    வியன்னா : ரசிகர்களை மேலும் அதிகளவில் ஈர்ப்பதற்காக, தங்களின் செல்லப்பிராணிகளுடன் படம் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

    04. ஆண், பெண் முத்தத்தில் வித்தியாசம் இருக்கு!
    வாஷிங்டன் : "ஆண், பெண் தரும் முத்தத்தில் வித்தியாசம் இருக்கிறது' என்று, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள், தங்கள் புது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்

    05. தாந்திரீக செக்ஸ்: பிரிட்டனில் கிராக்கி
    லண்டன் : இந்திய கலையான "தாந்திரீக செக்ஸ்' மீதான மோகம், பிரிட்டனில் அதிகரித்து வருகிறது.

    06. அடுத்த அமெரிக்க அதிபராக ஒபாமா...! கணிப்பு சந்தையில் பரபரப்பு...!

    அமெரிக்காவின் அடுத்த அதிபராக பராக் ஒபாமா வருவார் என்ற கணிப்புக்கு சாதகமாக பெட்டிங் அதிகரித்து வருகிறது.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #77
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    17-2-2008


    1. வகுப்பு நடந்த போது பயங்கரம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக்கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை


    2. தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் கார்


    3. உலகின் உயரமான கட்டிடத்தில் 94-வது மாடி ரூ.48 கோடிக்கு விற்பனை


    4. சீனாவில் ஓட்டலில் தீ பிடித்ததில் 11 பேர் பலி


    5. வங்காளதேசத்தில் படகு விபத்தில் 5 பேர் பலி


    6. பெனாசிர் கொலையில் மேலும் ஒருவர் கைது


    7. 8 குழந்தைகளை கொன்ற ஜெர்மானிய தாய்


    8. மலேசியாவில் இந்தியர்கள் ஓட்டு ஆளும் கூட்டணிக்கு கிடைக்குமா?

    9. 8 முறை தொடர்ந்து தோல்வி அடைந்த ஹிலாரி, நி மெக்சிகோ மாநிலத்தில் வெற்றி பெற்றார் 1700 ஓட்டு வித்தியாசத்தில் ஒபாமா தோல்வி அடைந்தார்


    10 70 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்ட குண்டு
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #78
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi View Post
    17-2-2008
    1. வகுப்பு நடந்த போது பயங்கரம் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக்கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
    மீண்டும் ஒரு துயரசம்பவம். முன்னேறிய மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மீண்டும் ஒரு மரணஅடி

    Quote Originally Posted by mgandhi View Post
    2. தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் கார்
    குறிப்பிடத்தக்க அறிவியல் முன்னேற்றம்தான். நாங்கதான் ஏற்கெனவே இதை பல 007 படங்களில் பார்த்துட்டோமே..! (நம்ம மக்கள் தண்ணியடித்தாலும் ஸ்டெடியாக ஓட்டக்கூடிய கார் கண்டுபிடிச்சா நல்லாயிருக்குமுன்னு சொல்றாங்க..!)

    Quote Originally Posted by mgandhi View Post
    8. மலேசியாவில் இந்தியர்கள் ஓட்டு ஆளும் கூட்டணிக்கு கிடைக்குமா?
    கிடைக்கும்தான் நினைக்கிறேன். இந்தியவம்சாவழியினருக்கு பல சலுகைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறதாம் படாவி அரசு

    Quote Originally Posted by mgandhi View Post
    9. 8 முறை தொடர்ந்து தோல்வி அடைந்த ஹிலாரி, நி மெக்சிகோ மாநிலத்தில் வெற்றி பெற்றார் 1700 ஓட்டு வித்தியாசத்தில் ஒபாமா தோல்வி அடைந்தார்
    அங்கேயும் ஒரு கஜினியா?
    Last edited by ஜெயாஸ்தா; 17-02-2008 at 02:29 AM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  7. #79
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    18-2-2008

    01. "இண்ட்ராப்' அமைப்பினர் மீண்டும் கைது
    கோலாலம்பூர்: மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், சம உரிமை கேட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். "இண்ட்ராப்' அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகிறது.


    02. குரங்குகளும் பேசிக்கொள்ளும் ஆய்வில் தெரியவந்த அதிசயம்
    லண்டன்: குரங்குகளும் மனிதர்களைப் போல, ஒன்றுக் கொன்று பேசிக்கொள்வதும், குரல் வித்தியாசத்தை உணர் ந்து கொள்வதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

    03. கரை ஒதுங்கும் கால் பாதங்கள் : கனடாவில் பரபரப்பு

    வான்கூவர் (கனடா): கனடா நாட்டு கடற்கரைப் பகுதிகளில் துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கால் பாதங்கள் ஒதுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    04. இன துவேஷத்துடன் நடத்தப்பட்ட இந்தியர் ஹோண்டா நிறுவனம் ரூ.52 லட்சம் இழப்பீடு

    லண்டன்: பிரிட்டனில், இன துவேஷத்துடன், கடுமையாக நடத்தப்பட்டதால், வேறு வழியின்றி வேலையில் இருந்து விலக நேரிட்ட இந்தியருக்கு, ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க, ஹோண்டா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    05. கட்டுப்பாடு இழந்த செயற்கைகோளை தகர்க்க அமெரிக்கா முயற்சி

    வாஷிங்டன்: பூமியின் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி, தரைக்கட்டுப்பாட்டை இழந்த செயற்கைகோளை, ஏவுகணையை செலுத்தி, அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

    06. பாகிஸ்தானில் பிரசாரம் ஓய்ந்தது
    இஸ்லாமாபாத்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, பாகிஸ்தானில் நாளை(பிப்.18) பொதுத் தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் நேற்றோடு ஓய்ந்தது.

    07. பயங்கரவாதிகள் பிடியில் பாக்., அணுகுண்டு நிபுணர்கள்!: ஆப்கன் எல்லையில் கடத்தல்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணு சக்தி கமிஷன் நிபுணர்கள் இருவரை, அல் கொய்தா பயங்கரவாதிகள் கடத்திச் சென்று விட்டனர்.

    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #80
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    19-2-2008

    1-பாகிஸ்தானில் இன்று பொதுதேர்தல்: 50 பேர் பலி

    வன்முறைகளுக்கு இடையே பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு பொது தேர்தல் நடக்கிறது. 2 தற்கொலைதாக்குதலில் 50பேர்பலி.


    2-செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க இயலாது நாசா விஞ்ஞானி தகவல்

    3-கார் நம்பர் பிளேட் எண் ரூ.55 கோடிக்கு ஏலம் விடப்பட்டது

    அபுதாபி நகரில் ஒரு தொழில்அதிபர் நம்பர் பிளேட்டில் ஒன்றாம் எண்ணை மட்டும் பெறுவதற்கு விரும்பினார். இதற்கான ஏலத்தில் அவர் கலந்து கொண்டார். மற்ற சிலரும் இந்த எண்ணை பெறுவதற்காக போட்டி போட்டனர். இதனால் நடந்த போட்டியில் ஏலத்தொகை உயர்ந்து போய்விட்டது. கடைசியில் அவர் 55 கோடி ரூபாய் செலுத்தி அந்த எண்ணை பெற்றார். இவ்வளவு தொகை செலுத்தி 1-ம் எண்ணை பெற்ற தொழில் அதிபரின் பெயர் சயீத் அல் கோரி. வயது 25.

    4-ஆப்கானிஸ்தானில் நாய்ச்சண்டையில் குண்டு வெடித்து 80 பேர் பலி

    5-சிகரெட் வாங்குவதற்கு பெர்மிட் வேண்டும் (இங்கிலாந்து நாட்டில்)

    6-ஐரோப்பாவில் புதிய நாடு உதயம் செர்பியாவில் இருந்து கொசோவா பிரிந்தது

    7-ஆப்கானிஸ்தானில் பனிப்புயலுக்கு 1000 பேர் பலி

    8-பிரபாகரனை யாரும்நெருங்க முடியாது-விடுதலைப்புலிகள்

    குண்டுவீச்சில் பிரபாகரன் காயம் அடையவில்லை அவரை யாருமநெருங்க முடியாது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.


    9-நிசிலாந்தில் ஹெலிகாப்டருடன் விமானம் மோதியதில் 2 பேர் பலி

    10-லெனின் உடல் மேலும் 100 ஆண்டுகளுக்கு காட்சிக்கு வைக்கப்படும்

    11-40 அடி உயர பாலத்தில் இருந்து பஸ் விழுந்ததில் 13 பேர் பலி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #81
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    21-2-2008

    01. "தேர்தலில் போட்டியிடமாட்டேன் ' : அமைச்சர் டத்தோ சாமிவேலு பேட்டி
    கோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் இந்தியர்களின் நலனுக்கு, போதுமான உதவிகள் செய்யவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர் டத்தோ சாமிவேலு,


    02. பிரபாகரனை வெளியேற்ற "இடி அமீன் திட்டம்'
    கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற, "இடிஅமீன் திட்டம்' ஒன்றை சில காலத்துக்கு முன், இலங்கை அரசு முன் வைத்தது.

    03. அதிபர் பதவியிலிருந்து பிடல் காஸ்ட்ரோ ஓய்வு
    ஹவானா: கியூபா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், அந்த பதவிக்கு, மீண்டும் வரப்போவதில்லை எனவும், பிடல் காஸ்ட்ரோ(81) தெரிவித்துள்ளார்.

    04. அளவோடு ஒயின் அருந்தினால் இதயத்துக்கு நல்லது
    டொரன்டோ,: தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால் இதய நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #82
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சாமிவேலு போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் போட்டியிடவில்லையா? புதிராக இருக்கிறதே.

    மனோ.ஜி அவர்கள் வந்துதான் இதற்கு பதில் தரவேண்டும்

  11. #83
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    22-2-2008

    பாகிஸ்தான் புதிய பிரதமர் யார்?- 5 பேர் பெயர் அடிபடுகிறது
    இஸ்லாமாபாத், -பாகிஸ்தான் தேர்தலில் பெனாசிர் கட்சியும், நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சியும் அதிக இடங் களை பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் வேறு சில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சி

    அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி சிதறின
    வாஷிங்டன், -அமெரிக்கா விமானப் படையில் உள்ள எப்-15சி என்ற போர் விமானங்கள் மெக்சிகோ கடல்பகுதிகளில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்து சிதறின. விமானங்கள் மோதிக் கொண்டால் ...


    மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி ஹிலாரி தோல்வியை தழுவினார்
    வாஷிங்டன், -அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் மேலும் 2 மாநிலங்களில் ஒபாமா வெற்றி பெற்றார். ஹிலாரி தோல்வியை தழுவினார்.9-வது வெற்றிஅமெரிக்காவில் வருகிற நவம்பர் 4-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற ...

    செர்பியாவில் இருந்து தூதரை திரும்பப்பெற மாட்டோம் அமெரிக்கா அறிவிப்பு
    வாஷிங்டன், -செர்பியாவில் இருந்து கொசோவா தனிநாடாக சுதந்தரம் அடைந்ததாக பிரகடனம் செய்ததை தொடர்ந்து அந்த புதிய நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தது. இதனால் கோபம் அடைந்த செர்பியா அமெரிக்காவுக்கான தன் நாட்டு தூதரை திரும்ப பெற்றது. ..


    இந்தோனேஷியாவில், அடுத்தடுத்து 3 முறை பயங்கர நில நடுக்கம் 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்
    பண்டா ஏஸ், பிப்.21-இந்தோனேஷியாவில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
    Last edited by mgandhi; 21-02-2008 at 05:17 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #84
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    23-2-2008

    01. கிழக்கு தைமூர் அதிபர் ரமோஸ் "கோமா' வில் இருந்து மீண்டார்
    திலி: கிளர்ச்சியாளர்களால் பத்து நாட்களுக்கு முன் சுடப்பட்ட கிழக்கு தைமூரின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, "கோமா' நிலையில் இருந்து நினைவு திரும்பினார்.

    02. முஷாரப்பை பதவியிலிருந்து நீக்குவதா தயங்குகிறார் பெனசிர் கணவர் சர்தாரி
    இஸ்லாமாபாத்: முஷாரப்பின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(க்யூ)குடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை, என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

    03. சர்தாரி மீதான ஊழல் வழக்கு உயிர்ப்பிப்பு
    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய அரசு அமைவது தொடர்பாக நிச்சயமற்ற சூழல் நீடித்து வரும் நிலையில், பாக்., மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆசிப் சர்தாரிக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில்...

    04. தலைப்பாகை அவிழாது: 110 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டி நிரூபித்தார் சீக்கியர்!
    டொரான்டோ: கனடாவில், ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்ட சீக்கியர், "தலைப் பாகை அணிவதை தடுப்பது "மதவாத ஒடுக்குமுறை' என்ற, சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 7 of 31 FirstFirst ... 3 4 5 6 7 8 9 10 11 17 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •