Page 10 of 31 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast
Results 109 to 120 of 362

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
  1. #109
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    23-4-2008

    1. 12 வயதில் ஆரம்பம்; 13ல், 4 பாட்டில் ஒயின்; 14ல் கல்லீரல் 'போச்ச்' : பள்ளி சிறுமியின் கதை

    லண்டன்: லண்டன் பள்ளிச்சிறுமிக்கு "தண்ணி'யில் ஆர்வம்; 12 வயதில் "அடிக்க' ஆரம்பித்தாள்; 13 வயதில், ஒரு நாளைக்கு நான்கு பாட்டில் ஒயின் குடித்தாள்; 14 வயதில், அவர் கல்லீரல் செயலிழந்துவிட்டது; "இனி குடித்தால் சாவு தான்' என்று டாக்டர் கள் சொல்லி விட்டனர்...


    2. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடும் நீச்சல் உடை

    ஜகார்த்தா: உச்சந்தலை முதல், உள்ளங் கால் வரை மூடும், பெண் களுக்கான நீச்சல் உடை, இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சிறுமிகள் மட்டுமே குளத்தில் நீச்சல் அடிக்கலாம். வயதுக்கு வந்து விட்டால் நீச்சலுக்கு போகஎஊடாது ...


    3. பீச்களில் நாளுக்கு 30 லட்சம் கிலோ குப்பை குவிகிறது



    வாஷிங்டன்: உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் உணவுத் துகள்கள், சிகரெட் துண்டுகள் உட்பட, குப்பைகள் தேக்கம் அதிகரித்து வருகிறது; ஒரு நாளைக்கு 30 லட்சம் கிலோ குப்பைகள் தேங்குகின்றன

    4. காட்டுத்தீயை அணைக்க 'வண்டு' ரோபோக்கள்

    புதுடில்லி: ஜெர்மனி நாட்டில் காட்டுத்தீயை அணைக்க, ராட்சத வண்டு போன்ற தோற்றத் தில் உள்ள "ரோபோக்'களை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆறு கால் ராட்சத வண்டு போன்ற தோற்றத்துடன் "ரோபோ'க்களை விஞ்ஞானிகள் வடிவமைத் துள்ளனர்.

    5. காது கேளாதோருக்கு விமான பயணம் 'நோ': தனியார் நிறுவன செயல்பாட்டால் சர்ச்சை

    கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான நிறுவனம், காது கேளாதோரை தனியாக விமானத்தில் அனுமதிக்க முடியாது என்ற விதிமுறையை பின்பற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #110
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    25-4-2008

    1. உலகின் பழமையான மரம் கண்டுபிடிப்பு


    ஸ்டாக்ஹோம் : நார்வேயையும், சுவீடனையும் பிரிக்கும் மலைபிரதேசங்களில் "ஸ்ப்ரூஸ்' என்ற மரங்கள் உள்ளன. இதிலுள்ள, ஒரு மரத்தின் வயது 8000 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவே, உலகின் மிக பழமையான மரமாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் ...

    2. ஸ்பெயின் ராணுவ அமைச்சராக கர்ப்பிணிப்பெண்


    மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டின் ராணுவ அமைச்சராக ஒரு கர்ப்பிணிப்பெண் நியமிக்கப் பட்டுள்ளார். இங்கு சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து, சோஷலிச அரசு பதவியேற்றுள்ளது; பிரதமராக ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபாடெரோ பதவியேற்றார். அவருடன் எட்டு ...

    3. ரஷ்யாவில் மீண்டும் யோகாவுக்கு மவுசு!


    மாஸ்கோ : கம்யூனிச அரசால் தடை செய்யப்பட்ட இந்திய யோகா பயிற்சி, ரஷ்யாவில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ரஷ்யாவின் அதிபராக, லியோனித் பிரஷ்னேவ் இருந்தபோது, இந்திய யோகாவுக்கு தடை போட்டார். அப்போது, மாஸ்கோவில் உடல் கல்வி ஆய்வு நிலையம் ...

    4. நீதிபதிகளை மீண்டும் சேர்க்க மசோதா ரெடி


    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்ட போது, அனைத்து நீதிபதிகளும், அதிபர் முஷாரப் முன்னிலையில், மீண்டும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இவ்வாறு உறுதிமொழி எடுக்காத சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உட்பட ...


    5. கடல்நீர் மட்டம் 20 செ.மீ., உயர்வு


    லிவர்பூல் : "கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 20 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவில், 0.8 முதல் 1.5 மீட்டர் வரை உயரலாம்' என, லிவர்பூல் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: கடல் மட்டம் ...
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #111
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    26-4-2008

    1- ஈரான் விஷயத்தில் இந்தியாவை வற்புறுத்தவில்லை: அமெரிக்கா
    வாஷ’ங்டன், ஈரான் விஷயத்தில் இந்தியாவை வற்புறுத்தவில்லை என மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் தெரிவித்தார்.

    2-பாகிஸ்தான் ஜெயிலில் சரப்ஜித்சிங்கை, மனைவி மகள்கள் சந்தித்தனர்
    லாகூர், பாகிஸ்தான் ஜெயிலில் இருக்கும் தூக்கு தண்டனை கைதியான சரப்ஜித்சிங்கை, அவருடைய மனைவி, மகள்கள் நேற்று சந்தித்து பேசினார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சரப்ஜித்சிங்குடன் குடும்பத்தினர் சந்தித்த காட்சி மிகவும் உருக்கமாக அமைந்தது.

    3-பாகிஸ்தானில் போர் நிறுத்தம் செய்ய தீவிரவாதிகள் தலைவர் உத்தரவு
    பெஷாவர், பாகிஸ்தான் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதால், அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதை கைவிட்டு, போர் நிறுத்தம் செய்யும்படி பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தலைவர் பைதுல்லா மெசூத் தன் இயக்கத்தினரை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

    4-இலங்கையில் பலியான சிங்கள படையினரின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு
    தமிழீழம், இலங்கையில் பலியான சிங்கள படையினர் 176 பேர் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    5- ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம்: இங்கிலாந்து பிரதமர்
    லண்டன், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்றும் ஜி-8 எனப்படும் பணக்கார நாடுகள் குழுவிலும் இந்தியா சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் வலியுறுத்தி இருக்கிறார்.

    6- தலாய்லாமாவுடன் பேச்சு நடத்த தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும்: žசினாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    வாஷ’ங்டன், திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமாவுடன் žசினா பேச்சுவார்த்தை நடத்த தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று žசினாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  4. #112
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    27-4-2008

    1. கொழும்பில் குண்டுவெடிப்பு 16 பேர் பலி


    கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 16 பேர் பலியாயினர். 40 பேர் படுகாயமடைந்தனர். கொழும்பில் மாலை நேர கூட்ட நெரிசலின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது


    2. தமிழர்களின் அப்பீல் மனுவை நிராகரித்தார் மலேசிய மன்னர்



    கோலாலம்பூர் : மலேசியாவில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழர்கள் ஐந்து பேரின், அப்பீல் மனுக்களை அந்நாட்டு மன்னர் நிராகரித்து விட்டார்.


    3. சரப்ஜித் சிங்குக்கு கருணை கிடைக்க வாய்ப்பு



    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்குக்கு, கருணை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தூக்கு தண் டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...



    4. தனிப்பெரும்பான்மையில் மாவோயிஸ்டுகள் வெற்றி

    காத்மாண்டு : நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுட்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். நேபாளத்தில் 240 ஆண்டு மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர, 10 ஆண்டுகளாக, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர்.


    5. ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியிடம் திருட்டு


    கேப் டவுன் : ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது சென்றிருந்த மூத்த போலீஸ் அதிகாரியிடமிருந்த பணப்பை திருட்டு போனது. இதில் ரூ.40 ஆயிரம் இருந்தது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  5. #113
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    28-4-2008

    1. விண்வெளியில் உயிரினம் இருக்கலாம்; புத்திசாலித்தனம் இருக்காது

    வாஷிங்டன் : விண்வெளியில் உயிரினங்கள் உண்டா? - இந்த கேள்வியை பல நூற் றாண்டகளாக மனிதன் கேட்டு வருகிறான். பிரபல விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கிடம் இந்த கேள்வியை கேட்ட போது, "விண்வெளியில், முதிர்ச்சி பெறாத உயிரினம் இருக்கலாம்; ஆனால், அந்த உயிரினத்திர்குகு புத்திசாலித்தனம் இருக்காது ...


    2. மடோனா பாணி தத்தெடுப்பால் புது தலைவலி : ஆதரவற்றோர் காப்பகங்கள் அதிகரிப்பு


    லண்டன் : மடோனா போன்ற பிரபலங்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதால், ஆதரவற்றோர் பிரச்னை முடிவுக்கு வராது; காப்பகங்கள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். "பப்ளிசிட்டி'க்காக இப்படி தத்தெடுப்பது குறித்து மனோதத்துவ நிபுணர்கள் கவலை தெறிவித்தார் ...



    3. காது கேளாதோருக்கு மறுப்பு : விமான நிறுவனத்தால் சர்ச்சை


    கேன்பெரா : ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான நிறுவனம், காது கேளாதோரை தனியாக விமானத்தில் அனுமதிக்க முடியாது என்ற விதிமுறையை பின்பற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




    4. பயனுள்ள ராட்சத 'ட்ரெட்மில்' : விஞ்ஞானிகள் வடிவமைப்பு



    லண்டன் : பல வகையிலும் பயன்தரும் வகையில் 25 "டிரெட்மில்'களை ஒன்றாக சேர்த்து, ராட்சத "ட்ரெட்மில்'லை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு, "சைபர் கார்பெட்' என்று பெயர். இப்போது உள்ள "டிரெட்மில்'களை இணைத்து, 15 க்கு , 18 அடி உள்ள வகையில் பிர்மான்ட டிரேட்மில் அமைக்கப் பட்டுள்ளது ஒரே நேரத்தில் பலர் இதில் நடக்கலாம்


    5. 43 வயது காதலியை கரம் பிடிக்கிறார் ஜெர்மன் மாஜி பிரதமர்


    பெர்லின் : ஜெர்மன் முன்னாள் பிரதமர் ஹெல்மட் கோல், மைக் ரிச்டர் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஜெர்மன் நாட்டின் முன்னாள் பிரதமர் ஹெல்மட் கோல். தற்போது இவருக்கு வயது 78. இவரது மனைவி, 2001ல் இறந்தார்



    6. ஒரே பிரசவத்தில் 4 குழந்தை :மூன்றுக்கு ஒரே உருவ அமைப்பு


    டவுசன் (மேரிலாந்து) : குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் மூன்று ஒரே முக, உருவ ஒற்றுமையுடன் உள்ளன.




    7. திபெத் ரயில் பாதை : நேபாளம் வரை நீட்டிக்க முடிவு

    காத்மாண்டு : உலகின் மிக உயரமான ரயில்பாதையான சீனா-திபெத் ரயில் பாதையை, நேபாள எல்லை வரை நீட்டிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நேபாளம் வரவேற்றுள்ளது.


    8. துபாயில் காயமடைந்த இந்திய மாடல் அழகிக்கு இலவச சிகிச்சை


    துபாய் : துபாயில், மோட்டார் சைக்கிள் விபத்தில் கடும் தீக்காயம் அடைந்த இந்திய பெண்ணுக்கு, இலவச சிகிச்சை அளிக்க அமெரிக்க முகச் சீரமைப்பு அகடமி மருத்துவமனை முன்வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் நிர்மலா(25).இந்தியாவில் மாடல் அழகியாக உள்ளார்.


    9. துபாயில் வாடகை அதிகரிப்பு : நிறுவனங்கள் தவிப்பு


    துபாய் : துபாயில் வர்த்தக வளாக கட்டடங்களின் வாடகை 54 சதவீதம் அதிகரித்திருப்பதால், பல்வேறு நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


    10. பள்ளி வேன் பூட்டப்பட்டதால் இந்திய குழந்தை மரணம்


    துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்டில், பள்ளி வேனுக்குள் பூட்டப்பட்ட, கேரளாவைச் சேர்ந்த, நான்கு வயது ஆண் குழந்தை, மூச்சு திணறி உயிரிழந்தது. கேரளாவைச் சேர்ந்தவர் ஷெபின் ஸ்ரீதர். அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார். இவரது நான்கு வயது ஆண் குழந்தைக்கு இப்படி நடந்ந்து


    11. பாகிஸ்தானில் இந்து மக்கள் பீதி


    கராச்சி : பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக, இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்து மதத்தினரிடையே பீதி நிலவுகிறது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #114
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by mgandhi View Post
    13-4-2008

    1* நேபாள காங்கிரசுக்கு முதல் வெற்றி - காத்மாண்டு,
    நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றிக் கிடைத்துள்ளது.
    Quote Originally Posted by mgandhi View Post
    20-4-2008

    1. இந்தியாவின் உதவி : பிரசாண்டா ஆவல்

    காத்மாண்டு : "நேபாள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, இந்தியா தொடர்ந்து வழங்க வேண்டும்'என நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டா கூறினார். நேபாள பார்லிமென்ட் தேர்தலில், மாவோயிஸ்ட் அமைப்பு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ...
    Quote Originally Posted by mgandhi View Post
    27-4-2008
    4. தனிப்பெரும்பான்மையில் மாவோயிஸ்டுகள் வெற்றி

    காத்மாண்டு : நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுட்கள் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். நேபாளத்தில் 240 ஆண்டு மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர, 10 ஆண்டுகளாக, மாவோயிஸ்டுகள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர்.
    Quote Originally Posted by mgandhi View Post
    28-4-2008
    7. திபெத் ரயில் பாதை : நேபாளம் வரை நீட்டிக்க முடிவு

    காத்மாண்டு : உலகின் மிக உயரமான ரயில்பாதையான சீனா-திபெத் ரயில் பாதையை, நேபாள எல்லை வரை நீட்டிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நேபாளம் வரவேற்றுள்ளது.

    பார்த்தீர்களா காந்தி...
    நேப்பாள் , நிலத்தால் சூழ்ந்த நாடு, அது இந்தியாவை நம்பி இருந்தது... உறவு நல்லா இருந்தது.. மாவோயிஸ்டுட்கள் வந்தவுடன் கதை மாறுவதை... சீனா இதில் ஆதாயம் தேடுகிறது.... அவர்களுக்கு கிடைக்கும்... இந்தியாவுக்கு தொந்தரவுதான்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  7. #115
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    பார்த்தீர்களா காந்தி...
    நேப்பாள் , நிலத்தால் சூழ்ந்த நாடு, அது இந்தியாவை நம்பி இருந்தது... உறவு நல்லா இருந்தது.. மாவோயிஸ்டுட்கள் வந்தவுடன் கதை மாறுவதை... சீனா இதில் ஆதாயம் தேடுகிறது.... அவர்களுக்கு கிடைக்கும்... இந்தியாவுக்கு தொந்தரவுதான்...
    தகவலுக்கு நன்றி பென்ஸ்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #116
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    29-4-2008


    2*தென்கொரியாவில் ஒலிம்பிக் ஜோதி: வடகொரியர் எதிர்ப்பு

    சியோல், தென்கொரியாவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது. இதற்கு தென்கொரியாவில் வசிக்கும் வடகொரிய அகதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    2*சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை

    நியூஜெர்சி, சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேலை இழந்து, தங்க இடமும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    3* முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்

    கொழும்பு, வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    4* பெரும் பணக்காரர் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதலிடம்

    லண்டன் : பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிரபல உருக்காலை அதிபர் லட்சுமி மிட்டல், தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

    5*'குளோனிங்'கில் பிறந்த நாய்களுக்கு மோப்ப பயிற்சி

    சியோல் : உலகில் முதன் முறையாக, சுங்கத்துறையில் "குளோனிங்' நாய் களை தென் கொரியா சேர்க்க உள் ளது. இந்த நாய்களுக்கு இப்போது மோப்ப பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள "செல்'லில் இருந்து செயற்கையாக உருவாக்குவது தான், "குளோனிங்' முறை.


    6* நேபாளத்தில் இனி காபிடலிசம் : மவோயிஸ்ட் தலைவர் உறுதி

    காத்மாண்டு : நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான ஆட்சி முடிவாகி விட்டது. ஆட்சி துவங்கும் போதே , "காபிடலிசம்' எனும் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்ற முடிவு செய்து விட்டனர்.


    7* ஆடையை ஊடுருவி, உரித்து காட்டும் ஸ்கேனர்

    நியூயார்க் : ஆடையை ஊடுருவி, உடலின் வளைவு, நெளிவுகளை அப்பட்டமாக காட்டும் நவீன ஸ்கேனர்கள், அமெரிக்க விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் கொடூர செயல்களால், விமான பயணம் பாதுகாப்பாற்றதாகி வருகிறது. இதை தடுக்க, நவீன ஸ்கேனர்கள், அமெரிக்க விமான நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன


    8* 27 பாட்டில் ஒயின் விலை 2 கோடி ரூபாய்

    லண்டன் : அபூர்வமாக கிடைக்கும் பழமையான ஒயின் வாங்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் லண்டன் கோடீஸ்வரர்! பல ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்டு, சேமித்து வைத்து, பின்னர் விற்கப்படுவது, "ஆன்டிக் ஒயின்' என, அழைக் கப்படுகிறது.



    9* இண்ட்ராப் தலைவர்கள் கைது: மலேசிய அரசு பிடிவாதம்

    கோலாலம்பூர் : "இண்ட்ராப் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, உள்நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய முடியாது' என, மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #117
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    3-5-2008

    1. உலகின் வயது குறைந்த பேராசிரியை அமெரிக்காவின் 19 வயது அலியா!


    நியூயார்க் : உலகின் மிக வயது குறைந்த கல்லூரி பேராசிரியையாக, அமெரிக்காவை சேர்ந்த 19 வயது அலியா சாபுர் தேர்வு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


    2. ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லை : மாஜி பிரதமர் பிளேருக்கு தர்மசங்கடம்


    லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரயில் பயணத்தின் போது டிக்கெட் வாங்க பணம் இல்லாமல் தர்மசங்கடத்துக்கு ஆளானார்.

    3. 'மலேசியா மதச்சார்பற்ற நாடு' என்ற இந்திய பிரமுகருக்கு கொலை மிரட்டல்!


    கோலாலம்பூர் : "மலேசியா மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன இந்திய அரசியல் தலைவர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


    4. நேபாளத்தில் கூட்டணி ஆட்சி : ஆலோசனை கூறுகிறார் யெச்சூரி


    காத்மாண்டு : நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவி யேற்கிறது. இதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காத்மாண்டு சென்றுள்ளார்.
    மேலும்
    5. பாகிஸ்தானில் வலுவாக வளர்கிறது அல்-குவைதா


    வாஷிங்டன் : "பாகிஸ்தானில், 2007ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது, அங்கு தனது ஆயுத பலத்தை மீண்டும் அல்-குவைதா பெருக்கிக் கொண்டது.


    6. செல்வாக்கு மிக்க தலைவர்களில் சோனியா, டாடா, தலாய் லாமா


    நியூயார்க் : உலகில், அதிக செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பட்டியலை, "டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, திபெத் மத தலைவர் தலாய் லாமா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


    7. நேபாளத்தில் உணவு பற்றாக்குறை : அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு தடை


    காத்மாண்டு : உணவு பற்றாக்குறை அபாயத்தை கருத்தில் கொண்டு, அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

    8. ஈரானில் நிலநடுக்கம் : 100 பேர் காயம்


    டெக்ரான் : ஈரானில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டெக்ரானிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போரோஜர்ட் பகுதியில், 4.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்க பாதிப்பால், 100 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


    9. குண்டு வெடிப்பில் இருவர் பலி


    கொழும்பு : இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியானார்கள்.


    10 பிரிட்டனில் அரிசிக்கு தட்டுப்பாடு : ரேஷன் கியூவில் வாங்கும் பரிதாபம்


    லண்டன் : சர்வதேச அளவில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் வர்த்தகர்கள் அதிக கையிருப்பு வைப்பதைத் தடுக்கவும், பற்றாக்குறை பீதியைத் தடுக்கும் வகையில், ரேஷன் முறையில் அரிசி விற்பனை
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  10. #118
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    4-5-2008

    1. விமான விபத்தில் சூடான் ராணுவ அமைச்சர் பலி

    கார்ட்டூம் : விமான விபத்தில் தெற்கு சூடான் நாட்டின் ராணுவ அமைச்சர் உட்பட 23 பேர் பலியாயினர்.

    2. ஜனநாயக குடியரசாகும் நேபாளம்: யெச்சூரி பேட்டி

    காத்மாண்டு : புதிய அரசியலமைப்புச் சட்டத்தை விரைவாக உருவாக்குவதன் மூலம், நேபாளம் விரைவில் ஜனநாயக குடியரசு நாடாக வேண்டும் என இந்தியா விரும்புவதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

    3. செக்சியான பிரா வடிவமைப்பு திருட்டு சொத்தா? : அமெரிக்க கோர்ட்டில் வழக்கு

    நியுயார்க் : அமெரிக்காவில், "மிகவும் செக்சியான பிரா' என்று விளம்பரப்படுத்தி, விற்பனை செய்யப்படும் பிராவின் வடிவமைப்பு, தனது சொத்துரிமை என, பெண் ஒருவர், வழக்கு தொடுத்துள்ளார்.

    4. மற்றவர்களை புகழ்ந்து பேசுவது ஏன்? : ஜப்பான் ஆய்வில் புது தகவல்

    டோக்கியோ : "நமக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மற்றவர்களை புகழ்ந்து பேசுகிறோம்'என, ஜப்பான் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5. முஷாரப் ஆதிக்கம் குறைகிறது : நீதிபதிகள் மீண்டும் நியமனம்

    இஸ்லாமாபாத் : "பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை, மீண்டும் பதவியில் அமர்த்த, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட, அதிபர் முஷாரப் முயற்சிகள் பலிக்கவில்லை.

    6. கொலையில் முடிந்த கிரிக்கெட் : இந்திய வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

    துபாய் : கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட பிரச்னையால், வாலிபரைக் கொலை செய்த இந்தியருக்கு குவைத் கோர்ட்டில் ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    7. இந்திய கைதி சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்

    லாகூர் : "பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக' சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  11. #119
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    5-5-2008

    1- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?

    மெக்சிகோசிட்டி, பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது.

    2- மியான்மரில் நர்கீஸ் புயல் தாக்குதல்: 400 பேர் பலி

    யங்கூன், மியான்மர் நாட்டில் நர்கீஸ் புயல் தாக்கியது. இதில் 400 பேர் பலியானார்கள். 2 முக்கிய நகரங்களில் 75 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகின.


    3-துருக்கி விமானத் தாக்குதலில் 150 குர்திஷ் தீவிரவாதிகள் பலி - அங்காரா,

    துருக்கி நாட்டு போர் விமானங்கள், ஈராக்கில் குர்திஷ் பகுதிக்குள் ஊடுருவி, அந்த நாட்டில் மறைந்து இருந்த குர்திஷ் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கின. இதில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.

    4-வேகத்தில் முடிந்தது தலாய்லாமா - žனா பேச்சு - பெய்ஜிங்,

    தலாய் லாமாவின் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேச்சு எந்த முடிவும் எட்டப்படாமல் சில மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    5-குவாம் தீவில் ஓபாமா வெற்றி - ஹகாந்தா (குவாம்)

    குவாம் தீவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் பராக் ஓபாமா, 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹ’ல்லாரி கிளிண்டனை தோற்கடித்தார்.

    6- குண்டு வெடிப்பில் ஈராக் அதிபர் மனைவி உயிர் தப்பினார்

    பாக்தாத், ஈராக் அதிபர் ஜலால் தலாபானியின் மனைவி ஹெரோ இப்ராகிம் அகமது.உயிர் தப்பினார்

    7- கருணாரத்னம் அடிகளாரின் படுகொலையைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

    கனடா, சிறிலங்காப் படையினரின் படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரத்னம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    8- சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம்: கேணல் தீபன்

    தமிழீழம்,சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம் என்று கேணல் தீபன் கூறியுள்ளார்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #120
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    6-5-2008

    1. போதை கடத்தல் ஆசாமி கொலம்பியாவில் வேட்டை

    பக்கோடா : கொலம்பிய தலைநகரமாகிய பக்கோடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சகோதரர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


    2. பெண் எம்.பி., உட்கார்ந்த நாற்காலியை முகர்ந்து பார்த்த எதிர்க்கட்சி தலைவர்

    மெல்போர்ன் : சக பெண் எம்.பி., உட்கார்ந்த நாற்காலியை முகர்ந்து பார்த்ததாக, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டிரோய் பஸ்வெல் ஒப்புக்கொண்டுள்ளார்.

    3. நேபாளத்தில் முதன் முறையாக 'ஹோமோ' எம்.பி., தேர்வு

    காத்மாண்டு : இந்து நாடு என்று பிரகடனப் படுத்தப்பட்ட நேபாளத்தில், மன்னராட்சி நடந்து வந்தது. ஆனால், இடதுசாரி மாவோ கட்சி உட்பட சில கட்சிகள், ஜனநாயக ஆட்சி கோரி போராடி வந்தன. இதையடுத்து, மன்னராட்சி நீக்கப்பட்டு, தேர்தல் நடந்தது.


    4. போதை கடத்தலுக்கு மர்ம ரேடியோவில் விளம்பரம்

    கவுதமாலா சிட்டி : போதை கடத்தலுக்கு மர்ம ரேடியோவை போதை கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன; போதை கடத்தலுக்கு மாஜி ராணுவத்தினருக்கு ரேடியோ மூலம் அழைப்பும் விடுக் கப்படுகிறது.


    5. பெண்ணுரிமை பேசியவருக்கு ஈரானில் கசையடி

    டெஹ்ரான் : பெண்ணுரிமைக்காக போராடிய ஒரு பெண்ணுக்கு ஈரானில் கசையடியும், ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.ஈரான் நாட்டில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    7. ஆபாச வெப்சைட் பார்த்தவருக்கு பதவி இறக்கம்

    டோக்கியோ : ஜப்பானை சேர்ந்த அரசு ஊழியர், அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச இணைய தளங்களை பார்த்ததால், பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

    8. பாக்., பிச்சைக்காரர்கள் நூதனமாக பணம் பறிப்பு

    இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் பணம் பெறுவதற்கு நூதன வழியை பின்பற்றத் துவங்கி உள்ளனர். கடவுளின் பெயரால் மொபைல் போன்களில் தர்மம் கேட்கின்றனர். இதை தவிர்க்க முடியாமல், அத்தொகையை மற்றவர்கள் செலுத்துகின்றனர்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 10 of 31 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •