Page 20 of 30 FirstFirst ... 10 16 17 18 19 20 21 22 23 24 ... LastLast
Results 229 to 240 of 359

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   
 1. #229
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0

  உலகச்செய்திகள் (13-8-2008)

  13-8-2008

  1-நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்ந்து எடுக்க தேர்தல்

  காத்மாண்டு, இடைக்கால பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுக்கு பதிலாக புதிய பிரதமர் இன்னும் நியமிக்கப்படவில்லை. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மாவோயிஸ்டு கட்சி தன் தலைமையில் கூட்டணி ஆட்சியை ஒருமனதாக அமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதை தொடர்ந்து புதிய ஜனாதிபதி ராம் பரண் யாதவ் புதிய பிரதமரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்தும்படி பாராளுமன்றத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறார்


  2- அரசாங்கம், விடுதலைப்புலிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது: ஐ.தே.க.

  கொழும்பு,அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

  3-இந்தியப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவு

  இஸ்லாமாபாத், பாகிஸ்தான் வரும் இந்தியப் பயணிகளை தீவிர கண்காணிப்பு செய்யுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

  4-முஷரப்பை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றம் கூடியது

  இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்காக, பாராளுமன்றம் கூடியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கப் போவதாக முஷரப் அறிவித்துள்ளார்.


  5-பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 50 தலிபான்கள் பலி

  இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் நிறைந்த பகுதியில் அந்நாட்டு படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் இறந்ததாக செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
  .
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 2. #230
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
  Join Date
  20 Apr 2008
  Location
  சென்னைக்கு அருகில்
  Posts
  1,636
  Post Thanks / Like
  iCash Credits
  6,751
  Downloads
  12
  Uploads
  0
  தகவல் பொக்கிக்ஷம் திரு.மோகன் அவர்களுக்கு நன்றி  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

 3. #231
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0

  உலகச்செய்திகள் (13-8-2008)

  Quote Originally Posted by அழகிய மணவாளன் View Post
  தகவல் பொக்கிக்ஷம் திரு.மோகன் அவர்களுக்கு நன்றி
  நன்றி மணவாளன்
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 4. #232
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  14-8-2008

  1-பதவி விலகுவாரா முஷாரப்: இன்று அறிவிக்க முடிவு

  இஸ்லாமபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இன்று பதவி விலகுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப் படுவதை அடுத்து, தொலைக்காட்சி ஒன்றில் முஷாரப் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். அவர் வாழ்த்து தெரிவித்த சிறிது நேரத்தில் பதவி விலகுவதை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  2-ஒலிம்பிக் நீச்சலில் 11 தங்கம் வென்று பெல்ப்ஸ் உலக சாதனை


  பீஜிங் : அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 11வது ஒலிம்பிக் தங்கம் பெற்று ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆண்கள் பட்டர்பிளை 200மீ போட்டியில் அவர் தங்கம் வென்றார். அவர் 1 நிமிடம் 52.03 வினாடிகளில் இந்த தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 800மீ நீச்சல் ரிலேயில் ஒரு தங்கம் வென்றுள்ளார். இது ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பெறும் 11வது தங்கமாகும். பீஜிங் ஒலிம்பிக்கில் இது வரை அவர் தனி நபரில் 4 தங்கங்களை வென்றுள்ளார். . ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம் பெற்றுள்ளார்.

  3-சீனாவில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி


  பீஜீங்: சீனாவில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலியாயினர். சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஞ்சியாங் மலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வளைவு பகுதியில் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது. இதில் இருந்த 24 பேர் இறந்து போயினர். இவர்கள் அனைவரும் ஒரு பள்ளியில் தேர்வு எழுதி விட்டு திரும்பிய மாணவர்கள் ஆவர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  4-ஊழல் புகார் இஸ்ரேல் பிரதமரிடம் 3 மணி நேரம் விசாரணை

  இஸ்ரேல் பிரதமர் இகுட் ஒல்மர்ட். இவர் வெளிநாட்டு பயணச் செலவு பற்றி போலியான தகவல்களை தெரிவித்து அரசு பணத்தை சுருட்டியதாகவும், பின்னர் அந்த பணத்தை தனது குடும்பத்தினரின் வெளிநாட்டு பயணத்துக்கு வழங்கினார் என்றும், அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடம் இருந்து சட்ட விரோதமான வழிகளில் பணம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதவிர அவர் மீது மேலும் சில ஊழல் புகார்களும் கூறப்படுகிறது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 5. #233
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  15-8-82008

  1-ஜார்ஜியா மீது தாக்குதல்: ரஷ்யாவுக்கு கண்டலீசா ரைஸ் கண்டனம்


  வாஷிங்டன்: சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக உருவானது ஜார்ஜியா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யா ஜார்ஜியா மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இத்தாக்குதல் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலீசா ரைஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  2பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 8 பேர் பலி


  லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரின் பிரதான பகுதியான அலாமா இக்பால் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலியாகினர், அதில் 5பேர் போலீசார் ஆவர், 30க்கும் மேற்பட்டடோர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இத்தற்கொலைப்படை தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  3வெள்ளச் சேதத்திற்கு ரூ. 361 கோடி: மேற்கு வங்க அரசு அறிவிப்பு


  கோல்கட்டா: வெள்ளத்தால் தேசமடைந்த பகுதிகளுக்கு ரூ.361 கோடியை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி அம்மாநில நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா கூறுகையில் மழை வெள்ளத்தால் மேற்கு மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கிழக்கு மிதினாபூர் மற்றும் மேற்கு மிதினாபூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த அரசு நிவாரணம் அளிக்கிறது. அதன்படி இந்த தொகை மூலம் வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு அமைத்தல் மற்றும் மராமத்து செய்தல், சாலைகள் சீர் செய்தல், விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தல் போன்றவைகளாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

  4அதிபர் பதவியை துறக்கிறார் முஷாரப்?


  இஸ்லாமாபாத் : நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இத்தருணத்தில் மிக முக்கியமான ஒன்றாகும் என்றும், அனைத்துக்கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப் சுதந்திர தின அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக லாகூர் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீர் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : காஷ்மீர் ஒவ்வொரு பாகிஸ்தானியரின் இதயத்துடிப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் பதவியை விரைவில் துறக்க முஷாரப் முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  5மழையால் ஒலிம்பிக் போட்டிகள் கடும் பாதிப்பு


  பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டிகள் பெரும்பாலும் மழையால் கடுமையாக தடைபட்டுள்ளன. டென்னிசில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடக்க இருந்தது திடீரென பெய்த மழை காரணமாக தடைபட்டுள்ளன. இதே போல சாப்ட் பால், பேஸ் பால் போட்டிகளும் தடைபட்டுள்ளன. ஜெர்மனி, கிரீஸ் அணிகள் இடையிலான பெண்கள் பீச் வாலிபால் போட்டிகள் கடுமையான மழையிலும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 6. #234
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  15-8-82008

  1-ஜார்ஜியா மீது தாக்குதல்: ரஷ்யாவுக்கு கண்டலீசா ரைஸ் கண்டனம்


  வாஷிங்டன்: சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக உருவானது ஜார்ஜியா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யா ஜார்ஜியா மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இத்தாக்குதல் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலர் கண்டலீசா ரைஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  2பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 8 பேர் பலி


  லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரின் பிரதான பகுதியான அலாமா இக்பால் பகுதியில் அமைந்துள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலியாகினர், அதில் 5பேர் போலீசார் ஆவர், 30க்கும் மேற்பட்டடோர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இத்தற்கொலைப்படை தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  3வெள்ளச் சேதத்திற்கு ரூ. 361 கோடி: மேற்கு வங்க அரசு அறிவிப்பு


  கோல்கட்டா: வெள்ளத்தால் தேசமடைந்த பகுதிகளுக்கு ரூ.361 கோடியை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி அம்மாநில நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா கூறுகையில் மழை வெள்ளத்தால் மேற்கு மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கிழக்கு மிதினாபூர் மற்றும் மேற்கு மிதினாபூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த அரசு நிவாரணம் அளிக்கிறது. அதன்படி இந்த தொகை மூலம் வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு அமைத்தல் மற்றும் மராமத்து செய்தல், சாலைகள் சீர் செய்தல், விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தல் போன்றவைகளாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

  4அதிபர் பதவியை துறக்கிறார் முஷாரப்?


  இஸ்லாமாபாத் : நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இத்தருணத்தில் மிக முக்கியமான ஒன்றாகும் என்றும், அனைத்துக்கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப் சுதந்திர தின அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக லாகூர் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீர் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது : காஷ்மீர் ஒவ்வொரு பாகிஸ்தானியரின் இதயத்துடிப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் பதவியை விரைவில் துறக்க முஷாரப் முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  5மழையால் ஒலிம்பிக் போட்டிகள் கடும் பாதிப்பு


  பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டிகள் பெரும்பாலும் மழையால் கடுமையாக தடைபட்டுள்ளன. டென்னிசில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடக்க இருந்தது திடீரென பெய்த மழை காரணமாக தடைபட்டுள்ளன. இதே போல சாப்ட் பால், பேஸ் பால் போட்டிகளும் தடைபட்டுள்ளன. ஜெர்மனி, கிரீஸ் அணிகள் இடையிலான பெண்கள் பீச் வாலிபால் போட்டிகள் கடுமையான மழையிலும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 7. #235
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  18-8-2008

  1-போலந்தில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்க ஒப்பந்தம்


  2-முல்லைத்தீவில் புதிய வானூர்தி ஓடுபாதை அமைப்பதில் புலிகள் தீவிரம்


  3-நான் பதவி விலக மாட்டேன்: முஷரப் திட்டவட்ட அறிவிப்பு


  4-தாய்லாந்தில் தக்சின் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு


  5-வன்னிப்போர் நிலவரம் குறித்து இந்திய அரசுக்கு ரோ ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 8. #236
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  19-8-2008

  1-பாகிஸ்தான் இடைக்கால அதிபராகிறார் முகமது மியான் சும்ரூ


  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் இடைக்கால அதிபராக அந்நாட்டு சட்டசபை மேலவை தலைவர்முகமது மியான் சும்ரூ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டை, பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரூக் நாயக் தெரிவித்துள்ளார்.

  2-முஷராப் ராஜினாமா ; மக்கள் வெற்றி : ஜர்தாரி பேட்டி

  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ்முஷராப் பதவி விலகியதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாகிஸ்தான் மக்கள் கட்சி துணை தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி. அப்போது அவர் அதிபர் பதவியிலிருந்து முஷராப் விலகியிருப்பது, பாக்., மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

  3-பதவி விலகினார் அதிபர் முஷராப்

  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராப் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார். அவருடைய ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், அவரது முடிவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


  4-சவுதி செல்கிறார் முஷராப்


  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் முஷராபுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது. இந்நிலையில் மதியம் 1 மணிக்கு அதிபர் முஷராப் உரையாற்றுவார் எனும் தகவலை , அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். முஷராப் பாக்., மக்களுக்கு உரையாற்றிய பிறகு உம்ராவுக்காக சவுதி பயணம் மேற்கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முஷராப் மீது வழக்கு தொடரப்படாது என்றும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பாக்., அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  5-ஆப்கனில் இருந்து படைகளை திரும்ப பெற வேண்டும் : தலிபான்கள் எச்சரிக்கை  மான்டிரியல் : ஆப்கானிஸ்தானில் இருந்து கனடா தனது படைகளை திரும்ப பெறாவிட்டால் அந்நாட்டை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவார்கள் என தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். கனடாவை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் இருவரை தலிபான்கள் கொன்றனர். மேலும் கனடா உடனடியாக தனது படையை ஆப்கனில் இருந்து திரும்ப அழைக்காவிட்டால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் என தலிபான்கள் எச்சரித்துள்ளதாக கனடா செய்தி தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 9. #237
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  21-8-2008

  1-சீனாவில் திடீர் நில நடுக்கம்

  2-ஜார்ஜியாவில் இருந்து ராணுவம் வாபஸ் இல்லை: ரஷ’யா

  3-அல்ஜ“ரியாவில் போலீஸ் பயிற்சிப் பள்ளி மீது தற்கொலை தாக்குதல்: 43 பேர் சாவு

  4-ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ தளபதி

  5-இந்திய-வங்கதேச உயர் அதிகாரிகள் கூட்டம்: டாக்காவில் இன்று தொடங்குகிறது
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 10. #238
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  22-8-2008

  1-ஈராக் போரில் சேதமடைந்த அரிய சிலைகள் புதுப்பிப்பு

  பாக்தாத்: ஈராக் போரின் போது சேதமடைந்த அந்நாட்டின் பழமை மிக்க தலைவர்கள், மன்னர்கள் சிலை போன்றவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்த போது, பாக்தாத் நகர் முழுவதும் வியாபித்திருந்த ஏராளமான சிலைகள் சேதமடைந்தன. சிலைகளை, புதுப்பித்து மீண்டும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈராக் சிற்பி காலத் அல் ரகல், 1950ம் ஆண்டு வடிவமைத்த, 'தாய்' என்று பெயர்சூட்டப்பட்ட சிலை, புதுப்பிக்கப்பட்டு தற்போது, பாக்தாத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


  2-சீனாவில் நிலநடுக்கம்


  பீஜிங் : சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் நிநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்தது. உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இது இந்த வாரத்தில் ஏற்படும் 2வது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது


  3-பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு : 65 பேர் பலி


  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்புகளில் 65 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இவ்விரு குண்டுவெடிப்புகளும் 30 வினாடி கால இடைவெளியில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயககம் பொறுப்பேற்றுள்ளது.


  4-அதிபர் பதவியை கைப்பற்ற ஜர்தாரி முயற்சி


  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் பதவியை ஜர்தாரி கைப்பற்ற முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முஷாரப் ராஜினாமாவிற்கு பின்னர் தற்காலிகமாக சும்ரு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆளும் கட்சிகள் அதிபர் வேட்பாளராக பாகிஸ்தான் மக்கள் கட்சி துணை தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  5-கனடாவில் கார் குண்டு வெடித்து 12பேர் பலி


  ஒட்டவா: கனடாவின் ஒட்டவா நகரில் கார் குண்டு வெடித்ததில் எஸ்.என்.சி இன்ஜியனிரிங் கம்பெனியில் வேலை பார்க்கும் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பிராஜக்கெட் வேலை தொடர்பாக இன்ஜினியர்கள் கம்பெனி பஸ்சில் சென்று கொண்டிருந்த போது தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மேலும் 15பேர் காயமடைந்தனர்.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 11. #239
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  23-8-2008

  1-அரையிறுதியில் விஜேந்தருக்கு வெண்கலம் கிடைத்தது

  - பீஜிங், . பீஜிங் ஒலிம்பிக்கில் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவு குத்துச்சண்டையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

  2-பாகிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது

  - இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் அதிபர் பதவியை முஷரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.

  3-பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்களில் 70 பேர் பலி

  - இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுத தொழிற்சாலைகளின் வாசலில் 2 தற்கொலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 70 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.

  4-இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகிக்க 3 நாடுகள் எதிர்ப்பு

  - வியன்னா, இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்யுமாறு 45 நாட்டு பிரதிநிதிகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவுக்கு அணு எரிபொருள் வினியோகம் செய்ய 3 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  5-ஒபாமாவின் காணாமல் போன சகோதரர் கண்டுபிடிப்பு

  - லண்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவின் சகோதரர் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது கென்யா தலைநகர் நைரோபி அருகே வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

 12. #240
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  05 Aug 2006
  Location
  A, A
  Age
  65
  Posts
  4,559
  Post Thanks / Like
  iCash Credits
  9,794
  Downloads
  9
  Uploads
  0
  24-8-2008

  1-ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 10பேர் பலி

  கந்தகார்: ஆப்கனின் கந்தகாரில் குண்டு வெடித்ததில் சாலையோரத்தில் மினிபசில் 10பேர் பலியாகினர். குண்டு வெடிப்பின் எதிரொலி 20கி.மீ அளவிற்கு எதிரொலித்தது. பலியானவர்களில் 2பேர் குழந்தைகள், 1பெண் மற்றும் 7பேர் ஆண்கள் ஆவர். குண்டுவெடிப்பில் மேலும் 4பேர் காயமடைந்தனர்.

  2-நீக்கப்பட்ட நீதிபதிகளை சேர்க்க கெடுவை குறைத்தார் ஷெரீப்


  இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் நவாஸ்ஷெரீப், நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தும் கெடுவை புதன் கிழமையிலிருந்து திங்கள் கிழமையாக குறைத்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பத்து நிமிடங்களில் பார்லிமென்ட்டில் ஒரு திர்மானத்தை கொண்டு வந்து நீதிபதிகளை மீண்டும் தன்னால் பணியமர்த்த முடியும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.


  3-துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுத்தார் ஒபாமா  வாஷிங்டன் : அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஜனநாயக கட்சி, அதிபர் வேட்பாளரான ஒபாமா, துணை அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளார். முன்னதாக துணை அதிபர் வேட்பாளர் யார் என்பதை தான் முடிவு செய்து விட்டதாக பல நாட்களுக்கு முன்னரே ஒபாமா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அந்த வேட்பாளர் யார் என்பதை அறிவித்துள்ளார். அவருக்கு மிகவும் பிரியமான, ஜோசப் பிடன் தான் துணை அதிபர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார்.டெல்லாவர் செனட்டரான ஜோசப் பிடன், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

  4-வாஷிங்டன் செல்கிறார் சிவசங்கர் மேனன்


  வாஷிங்டன் : வெளியுறவு துறை செயலர் சிவசங்கர் மேனன், அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்கிறார். இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வியன்னாவில் நடை*பெற்ற பேச்சுவார்த்தையில் அணுசக்தி விநியோக நாடுகளில் சில, இந்தியா அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததை காரணம் காட்டி, இந்திய அணு வர்த்தகத்தில் எப்படி ஈடுபட முடியும் என்று கேள்வி எழுப்பின. இதனை தொடர்ந்து நியூக்ளியர் சப்ளையர்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் முழு ஆதரவை இந்தியா பெற முடியாத நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் வெளியுறவு துறை செயலர் அமெரிக்கா செல்வது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.


  5-பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : 20 பேர் பலி  இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில், தாலிபன் தீவிரவாதிகள் மீண்டும் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்தில் தாலிபன் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  R.மோகன் காந்தி.

  வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 20 of 30 FirstFirst ... 10 16 17 18 19 20 21 22 23 24 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •