Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின்மறுபெய&

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின்மறுபெய&

    அந்நிய முதலீடுகள் : பகற்கொள்ளையின் மறுபெயர் - பாகம் 1

    நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா?? அதற்கு அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
    வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? - அதற்கும் அந்நிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு!
    தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் - என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அந்நிய நேரடி முதலீடு.

    ஒரே அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அந்நிய நேரடி முதலீடு (FDI) எனப்படுகிறது. இதற்கு அந்த அந்நிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அந்நிய நிறுவனங்கள் இதற்காக நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.

    "பிரிட்ஜ் ஸ்டோன்" என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் "ஃப்யர்ஸ்டோ ஸ்டோன்" டயர் கம்பெனியை 1988-இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதே போலத் தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%-க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.

    கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அந்நிய நேரடி முதலீடுதான் என்று தாராளமயதாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.

    "உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது ஆனால், அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?" என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.

    ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அந்நிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப்பங்கு, திறன் கட்டணம் - எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ.95 கோடி வீதம் விழுங்கியது. இப்போது பல்வேறு அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அந்நியச் செலாவணி வெகுவிரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?

    ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அந்நிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 1995-2003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இது தான் நடந்தது. அந்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998-இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: UNCTAD அறிக்கை, 2005)

    இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத்தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின் சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அந்நிய மூலதனம் நுழைகிறது.

    அந்நியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அந்நிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை.

    (அந்நிய நேரடி முதலீட்டின் விளைவுகள் அடுத்த பகுதியில் நிறைவடையும்..)

    நன்றிகள்: புதிய ஜனநாயகம் (செப்டம்பர் 2007) மாத இதழ்


    அந்நிய முதலீடுகள்:பகற்கொள்ளையின் மறுபெயர் - நிறைவு பகுதி
    Last edited by பூமகள்; 25-10-2007 at 11:15 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மிகவும் அருமையாக உண்மையை எடுத்துகாட்டியுள்ளது தங்களின் கட்டுரை..! இந்த ஒரு விசயம் மட்டுமல்ல இன்னும் பல விசயங்களில் உண்மை ஊமையாக இருக்க பொய்யே மெய்யாய் வலம் வருகிறது..! இன்னும் பல உண்மைகளை தொகுத்து வழங்குமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்..! இந்த கட்டுரைக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமையான கட்டுரை...

    நம் கரிகாலன் அண்ணா.. இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார் என எண்ணுகிறேன்

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இவ்வாறான சுத்துமாத்துக்கள் பல நாம் காணக்கூடியதாக இருக்கும்.

    எடுத்துரைத்த பூமகளுக்கு நன்றிகள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நல்ல பதிவு பூமகள்... ஆனால் கட்டுரையை அப்படியே பதித்தது போல் தெரிகிறது.... மற்ற பத்திரிகையின் கட்டுரைகளை அப்படியே பதிக்காமல்
    அது என்ன சொல்லுகிறது???,
    அது பற்றி உங்கள் கருத்து என்ன????
    போன்ற பதிவுகள் கொடுக்கலாம் என்பது என் கருத்து... இது படைப்பாளர்களை ஊக்குவிக்கும்... எழுத தூண்டும்.....

    மேலும்... எனக்கு இந்த பகுதி (வணிகம்) கொஞ்சம் சம்பந்தமில்லாதது எனலாம்.... இருப்பினும் சில கருத்துகள்....
    எந்த ஒரு செயலுக்கும் இரு வினை இருக்கும்... ஆனால் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மை, தீமையை அளவிட்டு அதை ஏற்று கொள்ளுவது அறிவு.... அன்னிய முதலீடு இல்லாமல் நாம் 50 ஆண்டுகளாக பட்ட பாடு போதாதா..???? நம் பணத்தையே நான் சரியாக பயன்படுத்தவில்லையே.....

    வணிகத்தில் யாரும் லாபம் கருதி மட்டுமே தொழில் துவங்குவர்.. இங்கு பொது சேவை செய்ய யாவரும் தொழில் துவங்குவது இல்லை, அப்படி முதலீடு செய்பவர்கள் அதிகமாக லாபம் ஈட்டவே செய்வர்.. அது காங்கோவாக இருந்தாலும் கனடவாக இருந்தாலும்.
    என்ரான் மோசடியில் நமக்கு நடந்ததை பேசும் நாம் ஹர்சத் மேத்தாவை மறந்து போவது வேடிக்கையே..... (என்ரானில் பாதிக்க பட்டவனில் நானும் ஒருவன்).

    கரிகாலன் மற்றும் இராசகுமாரன் போன்றவர்கள் இதில் நல்ல கருத்துகள் கூறமுடியும் என்பது என் கருத்து.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    இந்த ஒரு விசயம் மட்டுமல்ல இன்னும் பல விசயங்களில் உண்மை ஊமையாக இருக்க பொய்யே மெய்யாய் வலம் வருகிறது..! இன்னும் பல உண்மைகளை தொகுத்து வழங்குமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்..! இந்த கட்டுரைக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..!
    நன்றிகள் ப்ரீதன் அண்ணா.
    உங்களின் வேண்டுகோளை நிச்சயம் என்னால் இயன்ற அளவு நிறைவேற்றுவேன். தங்களின் உடன் பின்னூட்ட ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ப்ரீதன் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    அருமையான கட்டுரை...
    நம் கரிகாலன் அண்ணா.. இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார் என எண்ணுகிறேன்
    நன்றிகள் அறிஞர் அண்ணா.
    நல்ல பின்னூட்ட விளக்கங்களை அவர்களிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இவ்வாறான சுத்துமாத்துக்கள் பல நாம் காணக்கூடியதாக இருக்கும். எடுத்துரைத்த பூமகளுக்கு நன்றிகள்.
    உங்களின் ஊக்கத்தால் இன்னும் பல விசயங்கள் வெளிச்சம் போட்டு காட்ட ஊக்கமாய் இருக்கிறது.
    நன்றிகள் அன்பு அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    நல்ல பதிவு பூமகள்... ஆனால் கட்டுரையை அப்படியே பதித்தது போல் தெரிகிறது.... மற்ற பத்திரிகையின் கட்டுரைகளை அப்படியே பதிக்காமல்
    அது என்ன சொல்லுகிறது???,
    அது பற்றி உங்கள் கருத்து என்ன????
    போன்ற பதிவுகள் கொடுக்கலாம் என்பது என் கருத்து... இது படைப்பாளர்களை ஊக்குவிக்கும்... எழுத தூண்டும்.....
    பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.
    மிகச் சரியான கருத்து. அப்படியே தந்தால் ஆதரப்பூர்வமாக இருக்கும் என்று கொடுத்தேன். என் கருத்தையும் இனி இணைத்துத் தருகிறேன் அண்ணா.

    என்ரான் மோசடியில் நமக்கு நடந்ததை பேசும் நாம் ஹர்சத் மேத்தாவை மறந்து போவது வேடிக்கையே..... (என்ரானில் பாதிக்க பட்டவனில் நானும் ஒருவன்).
    கரிகாலன் மற்றும் இராசகுமாரன் போன்றவர்கள் இதில் நல்ல கருத்துகள் கூறமுடியும் என்பது என் கருத்து.
    தாங்களும் இதில் பாதிக்கப்பட்டவர் என்று அறிந்து உள்ளம் வருந்துகிறேன். இது பற்றி மன்ற மூத்தோரின் பதிவையும் எதிர்நோக்கியுள்ளேன்.
    உங்களின் கேள்விக்கான விளக்கம் அடுத்த பதிவில் தருகிறேன் பென்ஸ் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    புதிய ஜனநாயகம் இதழின் கொள்கை நாம் நாடு உலகமாயக்குதலுக்கு எதிராக இருக்கிறது( எனக்கு கூட சரியாக தான் படுகிறது).முதன் முதலாக இந்த பகுதியில் தனது பங்களிப்பை தந்து இருக்கும் சகோதரி பூமகள், (இந்த கட்டுரை சம்பந்தமாக அவருக்கு ஏதும் கருத்து இருக்கும்பட்சத்தில்)தனது கருத்தை பென்ஸ் கூறுவது போல் தந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். மன

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    வாவ் பூமகள் உங்களின் கட்டுரை அசத்தல்...
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by நேசம் View Post
    புதிய ஜனநாயகம் இதழின் கொள்கை நாம் நாடு உலகமாயக்குதலுக்கு எதிராக இருக்கிறது( எனக்கு கூட சரியாக தான் படுகிறது).முதன் முதலாக இந்த பகுதியில் தனது பங்களிப்பை தந்து இருக்கும் சகோதரி பூமகள், (இந்த கட்டுரை சம்பந்தமாக அவருக்கு ஏதும் கருத்து இருக்கும்பட்சத்தில்)தனது கருத்தை பென்ஸ் கூறுவது போல் தந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
    நன்றிகள் சகோதரர் நேசம்.
    எனக்கு அத்தனை திறமை இந்த துறையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். நல்லவிசயம் என்று என் மனதில் பட்டதை இங்கு உங்களோடு பகிர விரும்பினேன். என் கருத்தையும் இனி பதிக்க முயல்கிறேன்.
    பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் அண்ணா.

    Quote Originally Posted by தங்கவேல் View Post
    வாவ் பூமகள் உங்களின் கட்டுரை அசத்தல்...
    மிக்க நன்றிகள் தங்கவேல் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •