Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 62

Thread: "சலாலா"வில் ஓவியனின் "லாலா","லாலா"...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2

    "சலாலா"வில் ஓவியனின் "லாலா","லாலா"...

    மத்திய கிழக்கு நாடுகளிலே தொடர்சியாக பணி புரிபவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வருடத்தில் எப்போதாவது தான் கிடைக்கும். அப்படி கிடைக்கும் விடுமுறைகளில் "ஈத்" பெரு நாளுக்காகக் கிடைக்கும் விடுமுறை மிக முக்கிய(நீள)மானது. அந்த விடுமுறையை எப்படியெல்லாம் பயன் மிக்கதாகக் கழிப்பதென ஒவ்வொருவரும் ஒரு திட்டம் தீட்டி வைத்து அந்த நாட்களுக்காகக் காத்திருப்பது வழமை. அப்படித்தான் இந்த முறை கிடைத்த ஆறு நாள் தொடர்சியான விடுமுறையை அமீரகத்துக்கு சென்று நண்பர்களுடன் கழிக்கலாமென திட்டமிட்டிருந்தேன், ஆனால் என்ன கொடுமை சில சட்ட சிக்கல்களால் அங்கே இந்த விடுமுறைக்கு போக முடியாதென சோகமாக முடிவாக, உள்ளூரிலே எங்களது பயணச் சுற்றுலாவை அமைப்பதென நானும் என் நண்பர்களும் முடிவாக முடிவெடுத்தோம்.

    உடனே எங்கள் கண் முன்னே வந்து நின்றது ஓமானின் தென் நகரமான "சலாலா (Salalah)" தான்...
    அது என்னடா "லக லக" என அக்னி முணு முணுப்பதால் , சலாலா பற்றி ஒரு சிறு அறிமுகம் இதோ..

    இறைவனது படைப்புக்களின் விநோதங்களை அளவிடவே முடியாது போலுள்ளது. ஆரேபிய நாடுகள் என்னும் போது, அந்த நாட்டினைப் பற்றி எமக்கு என்னென்ன எண்ணவோட்டங்கள் மனதிலே எழுகின்றனவென்று சிந்தித்தால் அதில் பின் வருவன தப்பாமல் இருக்கும்.

    1. மத்திய கிழக்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் மற்றும் தங்கம் போன்ற தாதுப் பொருட்கள்.
    2. மணல் மண்டிக் கிடக்கும் பாலை வனங்கள்.
    3. மனிதரை உயிருடனேயே எரித்துவிடும் வெயில்.

    ஆம் இவை உண்மையும் கூட, ஆனால் "இது மத்திய கிழக்கு நாடுகளின் எல்லாப் பகுதிக்கும் பொருந்தா" என்பதே நிஜம். அப்படி வழமைக்கு மாறாக மாறிப் படைக்கப்பட்ட ஒரு அற்புதம் தான் ஓமான் நாட்டின் "சலாலா" பிராந்தியம். நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும். மஸ்கட்டிலிருந்து தரை வழிப்பயணமாக செல்வதென்றால், பாலை வனங்களிடை 12 மணி நேர நெடி.....ய பயணத்தை மேற்கொள்ள வேண்டி வரும். அதாவது ஓமான் நாட்டின் தலைப்பகுதியில் மஸ்கட் இருந்தால் ஓமானின் கால் பகுதியின் டோஃபார்(Dhofar) மாநிலத்திலே அக்னியின் இந்த "லக லக" அமைந்துள்ளது.


    ஓமான் நாட்டிலே மஸ்கட்டுக்கு அடுத்த பெரிய நகரமான "சலாலா" அரேபியாவின் வாசனைத் திரவிய நகரம் (Perfume City of Arabia) எனப்படுகிறது. பொதுவாக ஓமான் மக்கள் வாசனைத் திரவியங்களை அதிகமாக உபயோகிக்கும் பழக்கம் மிக்கவர்கள், அதிலும் இந்த "சலாலா" மிகப் பிரபலமானது. வீட்டுக்கு வீடு தங்களுக்கு தேவையான வாசனைத் திரவியங்களை தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். "சலாலா" என்றால் கடலும் கடலை எட்டிப் பார்க்கும் மலைகளும் ஆங்காங்கே காடுகளாக பரிணமித்துக் கொண்டிருக்கும் மரங்களுமென வரையறுத்துவிடலாம். அத்துணை இயற்கை வளங்கள் செறிந்தது இந்த "சலாலா". மஸ்கெட்டிலே வெயில் நெருப்பாக சுழன்றடிக்கும் அதே காலப்பகுதியில் இங்கே நிஜமாக மழை பெய்து "சலாலா" வையே பச்சையாக மாற்றுவது தான் அற்புதம். அந்த கால கட்டத்திலே அங்கு நடக்கும் "Khareef Festival" உலகப் பிரசித்தமானது. இந்த பண்டிகைக்காக சுற்றுலாப் பயணிகள் ஜுன் தொடக்கம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் வந்து குவிவார்கள்.

    டோஃபார் மாநிலத்தில் ஆட்சி நடாத்தும் பொறுப்பை ஓமானின் தற்போதைய சுல்தான் ஹாபூஸ் பின் சயிட் (Sultan Qaboos bin Said) அவர்களினால் உள்ளூர் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை தலை நகராக இருந்த சலாலாவுக்கு பதில் மஸ்கட்டை தலை நகராக்கிய சுல்தான் ஹாபூஸ் எப்போதாவது ஒரு தடவை தான் சலாலாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



    சுல்தான் ஹாபூஸ் பின் சயிட் (Sultan Qaboos bin Said)

    சலாலா நகரிலே ஓவியன் குழுவினர் சுட்ட சில புகைப்படங்கள் இதோ, உங்களுக்காக....








    இந்த அற்புத நகரத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் விளக்கங்கள் இன்னும் விரியும்......

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    52,727
    Downloads
    100
    Uploads
    0
    உள்ளூரில் அழகான இடத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்லவும் வேண்டுமோ...?
    உடனே எங்கள் கண் முன்னே வந்து நின்றது ஓமானின் தென் நகரமான "சலாலா (Salalah)" தான்...
    அட... ஜன்னலால் எட்டிப் பார்த்தால் தெரியும் ஊருக்கா இவ்ளோ பில்டப்னு பாத்தா...
    நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும்.
    என்று சொல்லித் தப்பிவிட்டார்...

    கொஞ்சமா வரலாறும் சேர்த்து, சுவையூட்டும், லக லக லாலா தொடரட்டும்...
    Last edited by அக்னி; 18-10-2007 at 10:36 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    ஹா, ஹா அக்னி!

    உண்மையில் என்னால் இப்போது அமைதியாக இருந்து எழுத முன்னர் போல நேரம் கிடைப்பதில்லை என்றாலும் உங்களது அன்புக்கட்டளைக்காகவே இந்த தொடரை எழுதத் தொடங்கினேன்.
    மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    4,973
    Downloads
    32
    Uploads
    0
    சலாலாவுக்கு போகனும் என்று ஒவ்வொரு வருடமும் முடிவு எடுப்பொம். ஆனால் போக முடியவில்லை. அருமையான் படங்கள். ஒவியன். அங்கே உள்ள ஒரு பிரபலமான மசூதியை பார்த்திங்களா?அதில் காஷ்மிரிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்பள் விரிப்பு மசூதியில் முழுவதும் இருக்கும். அது ரொம்ப புகழ்பெற்றது.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    35,917
    Downloads
    15
    Uploads
    4
    அருமை... நண்பா...

    எங்களையும் சேர்த்து அழைத்து சென்றது போல் இருக்கிறது தங்களின் படைப்பு. நன்றி இன்னும் கொடுங்கள்...

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    அற்புதம் ஓவியன்...
    நன்றாக விடுமுறையை அனுபவிக்கின்றீர்...
    பல ஊர்கள் பற்றி பல விடயங்கள் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி..
    மேலும் தொடருங்கள்..!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    19,840
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஹா, ஹா அக்னி!

    உண்மையில் என்னால் இப்போது அமைதியாக இருந்து எழுத முன்னர் போல நேரம் கிடைப்பதில்லை என்றாலும் உங்களது அன்புக்கட்டளைக்காகவே இந்த தொடரை எழுதத் தொடங்கினேன்.
    மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....
    அக்னியின் அன்பு கட்டளை மட்டுமல்ல. எங்கள் அன்புக்கட்டளையும் அதுதான். நீங்கள் உங்கள் நேரத்தை ஒதுக்கி இப்படி பயணக்கட்டுரை எழுதாவிடில் நாங்கள் எங்ஙனம் இலவசமாக சுற்றிப்பார்க்கமுடியும்? படங்கள் அருமையாக உள்ளது.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    12,798
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஹா, ஹா அக்னி!
    உண்மையில் என்னால் இப்போது அமைதியாக இருந்து எழுத முன்னர் போல நேரம் கிடைப்பதில்லை என்றாலும் உங்களது அன்புக்கட்டளைக்காகவே இந்த தொடரை எழுதத் தொடங்கினேன்.
    மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு....
    அக்னி மட்டும் தான் அன்புகட்டளை கொடுத்தாரா... நாங்கள் எல்லாம் தரலியா.................????

    நான் இருக்கும் "மஸ்கட்"டுக்கும் "சலாலா"க்கும் இடை கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் இடை வெளி இருக்கும்
    நோ கமெண்ட்ஸ்.....

    சலாலா நகரிலே ஓவியன் குழுவினர் சுட்ட சில புகைப்படங்கள் இதோ, உங்களுக்காக....
    புகைப்படங்கள் அருமையாக உள்ளது..அப்படியே அதெல்லாம் என்ன இடம் என்று பக்கத்தில் தந்தால் இன்னும் நல்லாயிருக்கும்....

    ஹீ..ஹீ....விசா இல்லாமலே சலாலாலை சுற்ற ஆரம்பித்து விட்டோம்....
    சீக்கிரம் அடுத்ததையும் போடுங்கோ............
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,456
    Downloads
    39
    Uploads
    0
    சலாலா...அனுபவம் சல..சல..வென்று தெளிந்த நீரோடையில் உடல் நனைத்த சுகத்தை தருகிறது. பாலைக்குள் சோலையாய் இருக்கும் அந்த பிராந்தியத்தின் அழகை அனுபவிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி ஓவியன். அந்த பிரதேசத்தைப் பற்றிய ஒரு செய்தி. சலாலா ஏமன் நாட்டைச் சேர்ந்த பகுதி. தற்போதிருக்கும் சுல்தானின் தாயர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஓமன் வந்த போது அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட இடம் இது என்று நான் ஓமனில் இருக்கும்போது சொன்னார்கள். அப்படியா ஓவியன்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    63,987
    Downloads
    89
    Uploads
    1
    "சலாலா...சலாலா... ரெட்டை வால் வெண்ணிலா....!!" என்று என்னைப் பாட வைத்து விட்டது சலாலா பற்றிய உங்களின் அனுபவம் அண்ணா...!!
    ரொம்ப அழகாக விவரித்திருக்கிறீர்கள்...!! என்னைப் போன்ற புதியவர்களுக்கு உங்களின் ஓமானைச் சுற்றிக் காட்டி அசத்துங்கள்...!!
    படங்கள் அற்புதம்..!!
    சுல்தான் படம் அற்புதம்....!! இன்னும் கொடுங்கள்....!! முக்கியமா என்னனென்ன சாப்பிட்டீங்கன்னு கொடுங்க...!!
    (சாப்பாட்டிலேயே குறியா இருக்கே பூவுன்னு தப்ப நினைக்கப்படாது மக்கா...!! ஹி ஹி..!!)
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    31,768
    Downloads
    29
    Uploads
    0
    சலாலா பயண அனுபவம் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாகத் தான் உள்ளது...இது தான் விக்ரம் படத்தில் வரும் சலாமியா நாடோ?நானெல்லாம் ஈத் லீவிலியும் ஓவர் டைம் பாத்து நொந்து நூடுல்ஸ் ஆன வேளையில நீங்க குளு குளுன்னு சலாலா போயிட்டு வந்திட்டீங்க..காதில புகை வருது...சலாலாவைப் பாக்க முடியலைன்னாலும் உங்க பயணக் கட்டுரை படங்களுடன், எங்களை சலாலாவிற்கு அழைத்துச் சென்றது.சலாலா மன்னர் ,மன்னருக்குரிய பந்தா எதுவுமில்லால் அமைதியான முகத்துடன் சீரியல் அப்பா நடிகர் போல இருக்கிறார்.உபயோகமான கட்டுரை.
    Last edited by யவனிகா; 19-10-2007 at 11:49 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,667
    Downloads
    17
    Uploads
    0
    அறிஞர் சொன்னமாதிரி எங்களையும் நீங்கள் அழைத்து சென்றது மாதிரி அழகான பயணக்கட்டுரை.. ஒரு படத்தில் கூட ஓவியரின் குழுவை காணவில்லையே..

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •