Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 46

Thread: பருவநட்சத்திரங்கள்....! - பாகம் 1

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    பருவநட்சத்திரங்கள்....! - பாகம் 1


    'கலா குட்டி...!! எங்கடா இருக்கே??' என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ்.

    அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, 'இதோ வர்றேங்க..!!' என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள்.

    'இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா...?!!'

    'எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?'

    'என்ன முடிவு???' என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் காமேஷ்.

    'ரொம்ப யோசிக்காதீங்க...அப்புறம்... தலைவலிக்குதுடா கலான்னு... டீ போட்டு தான்னு இரவு எந்திரிச்சி உக்காந்துட்டு தொல்லை பண்ணுவீங்க.. நானே சொல்றேன்.
    நம்ம முதல் வெட்டிங்க் டே அன்னிக்கி அனாதை இல்லதில் இருக்கும் முதியோர்களைக் கண்டு ஒரு நாள் முழுக்க அவங்களோட இருந்து உணவு கொடுத்து ஆசி வாங்கிட்டு வரனும்னு முடிவு பண்ணினோமே?? மறந்துபோச்சா??'


    'ஓ...... அதுவா?? அதை எப்படிடா மறப்பேன்...! நல்லா ஞாபகம் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஏதாவது ஆசையா வாங்கி கொடுக்கனும்னு தோனிச்சி... அதான் வாங்கிட்டு வந்திட்டேன்.
    உனக்கு புடவை பிடிச்சிருக்கா??'


    வெளிர் ஊதா நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்து பட்டுப்புடவை நேர்த்தியாய் ஜொலித்தது. பிரித்துப் பார்த்த வண்ணமே கலா, 'ரொம்ப பிடிச்ச்சிருக்குங்க...!! உங்கள மாதிரியே இருக்கு...!!' சொல்லிவிட்டு வெட்கப்பட்டு சமையல் அறை நோக்கி சட்டென்று ஓடிச் சென்றாள்.

    'கலா...கலா....!!' என்று கூப்பிட்டவாறே காமேஷ் பின்னாலேயே ஓடினான்.

    'கலா! நாளைக்கு நம்மலோட ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி. அதனால ஆபிஸ்ல லீவ் போட்டிருக்கேன் டா... நீயும் நானும் நேர கோயிலுக்கு போயிட்டு அப்படியே "அன்பு முதியோர் இல்லம்" போகலாம்! அங்கு ஒரு முக்கியமான ஒருவரை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.'

    'என்னங்க...!! யாருங்க அது??' அழகான பெரிய ப்ரவுன் நிற கண்கள் விரிய ஆவலாய் கேட்டாள் கலா.

    'பொறுடா.. கலா..! நாளைக்கு தான் பார்க்க போறியே... அப்போ சொல்றேன்..' சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ் நகைத்தபடி..!!

    'சரி.... ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க! உங்களுக்குப் பிடிச்ச கேசரி செய்து வைத்திருக்கிறேன்.. சூடா சாப்பிடலாம்..! சீக்கிரம் வாங்க..!!'

    ஆதவன் மெதுவாக நீல நிற கடலின் பின்னால் ஒளியத்துவங்கினான்.. நட்சத்திரக்கூட்டம் ஆதவனைத் தேடி... அங்கும் இங்கும் கண்கள் சிமிட்டி தேடிப் பார்க்க துவங்கியிருந்தன..

    இரவு உணவைப் பரிமாறி, அடுப்படி வேலை முடித்து கலா கண்ணயர 10.30 மணி ஆனது.

    காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்ப, அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து உறங்கியிருந்தான் காமேஷ்.

    விடியக்காலை... வேகமாக எழுந்து பல் துலக்கி, வாசல் பெருக்கி கோலம் போட வெளிப்பட்டால் கலா. அவர்கள் இருக்கும் வீடு சிட்டியை விட்டு கொஞ்சம் உள்ளே...அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி.

    அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த நகரத்தின் ஆக்கிரமிப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரத்தின் மிச்சப்பகுதி.

    ஆங்காங்கே தெரியும்.... வீடுகள்..!!

    வாசலுக்கு முகம் கழுவி, கோலம் போட கோலப்பொடியை துலாவியபடியே சின்ன விரல்களால் வானத்து நட்சத்திரங்களை தரையில் தற்காலிகமாக இறக்கிவைத்தவண்ணம் இருந்தாள்.

    அப்போது, அவள் அருகில் மிகக் கொடிய நாகம் ஒன்று மிக அருகில் வந்து காலருகே நின்றது. புள்ளி வைத்துவிட்டு திரும்பிய அவள், அதனைக் கண்டு அஞ்சி திரும்பி ஓடத் துவங்கினாள்.

    வீட்டிற்குள் செல்ல இயலாமல் கதவருகே அது இருந்ததால்...வெளியில் ஓடுவது தவிர வேறு வழியே இல்லை கலாவிற்கு.... பின்னாலேயே பாம்பும் துரத்தியது. அதிகாலை நேரமாதலால் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.

    கலா கலங்கும் நெஞ்சுடன், ஓடிக்கொண்டே இருந்தாள்... ஒரு ஒற்றையடிப்பாதையில் உயிரைப் பணயம் வைத்து...தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை ஒரு கோயிலில் போய் முடிந்தது. ஒரு பழைய கோபுத்தை பார்த்தாள் கலா..
    கலா.... கோயிலின் முகப்பினை நெருங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே, பிரகதீஸ்வரர் உருவில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

    பின்னால் பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா...!!

    (ஓட்டம் தொடரும்)


    Last edited by பூமகள்; 17-10-2007 at 09:00 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலை தூண்டிவிட்டது.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    கவிதாயினி பூமகளே.....
    கதையிலும் பிச்சி உதறுரீங்களே.....
    ம்...வாழ்த்துக்கள் அக்கா.....


    பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா...!!
    என்னக்கா இது கல்யாண நாள் அதுவுமா....
    கலா பாவம் இல்ல....

    அப்புறம் என்ன ஆச்சி.........??? ஆர்வமுடன்
    Last edited by மலர்; 15-10-2007 at 07:45 PM.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    தொடக்கமே பாம்பாக இருக்கிறது... அது கனவு கினவு இல்லியே... ...

    அப்புறம் என்னாச்சு???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    இளையவர் பண்பட்டவர் பூந்தோட்டம்'s Avatar
    Join Date
    15 Oct 2007
    Posts
    85
    Post Thanks / Like
    iCash Credits
    8,977
    Downloads
    7
    Uploads
    0
    அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by நேசம் View Post
    அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலை தூண்டிவிட்டது.
    மிக்க நன்றிகள் சகோதரர் நேசம். உங்களது உடன் ஊக்கமே என்னை மீண்டும் எழுத வைக்கிறது.
    எனது இரண்டாவது கதை இது. நீங்கள் ஆர்வமாக படிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

    Quote Originally Posted by மலர் View Post
    கவிதாயினி பூமகளே.....
    கதையிலும் பிச்சி உதறுரீங்களே.....
    ம்...வாழ்த்துக்கள் அக்கா.....

    அப்புறம் என்ன ஆச்சி.........??? ஆர்வமுடன்[/COLOR]
    மிகுந்த நன்றிகள் மலரு...!!
    எனது இரண்டாவது கதை பயத்துடன் தான் எழுதினேன். உங்களின் ஆர்வத்தைத் தூண்டும் படி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
    அப்படியே குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் மன்ற உறவுகளே..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    தொடக்கமே பாம்பாக இருக்கிறது... அது கனவு கினவு இல்லியே... ...
    அப்புறம் என்னாச்சு???
    அடுத்த பாகம் எழுதவில்லை இன்னும்.... விரைவில் தர முயல்கிறேன் அன்பு அண்ணா.
    அப்புறம் என்னாச்சின்னு சொல்ல மாட்டேனே...!! காத்திருங்கள்..!!

    Quote Originally Posted by பூந்தோட்டம் View Post
    அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே
    அடுத்த பாகத்தை விரைவில் தர முயல்கிறேன் பூந்தோட்டம். கதை எழுதுவதில் நானும் கத்துக் குட்டி தான். எனது இரண்டாவது கதை தான் இது.
    மன்றத்தில் சிறுகதை, தொடர்கதை ஜாம்பவான்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...
    அவர்கள் நிச்சயம் அம்மாதிரி திரி ஆரம்பிப்பார்கள்..! பொறுப்பாளர்கள் கவனத்திற்கு நான் கொண்டு செல்கிறேன்.
    உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் பூந்தோட்டம்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நானும் முதலில் அது கனவாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்...ஆனால் என்ன செய்வது? பூமகள் கனவல்ல நிஜம்...ன்னு சொல்லியாச்சே...கதையின் இடை இடை வரும் வர்ணணைகள் நன்றாக உள்ளது. கணவன் மனைவியின் அன்யோன்யம் கவிதை போல உள்ளது...பருவ ராகம்...பல்லவியே அரோகணத்தில் அடித்து தூள் கிளப்புது...சரணத்திற்காக யவனிகா வெயிட்டிங்...வாழ்த்துக்களுடன்
    யவனிகா.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆரம்பமே அசத்தல்...
    கலக்குங்க பூமகள்.. எதிர்பார்ப்பை தூண்டி விட்டுவிட்டீர்.
    அடுத்த பாகம் எதிர்நோக்கி...

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கனவன் மனைவி சந்தோசமாக களிக்கும் சில உரை நடை காட்சிகளுடன் ஆரம்பிகிறது (புதுமன தம்பதிகளோ)
    கதை நடை அருமையாக இருகிறது. வர்னனைகளும் அருமை. கடைசியில் சஸ்பன்ஸ் வைத்து விட்டீர்கள்.

    ஒரு சிறு குறிப்பு : பாம்பு தீடிரென தான் தீண்டும். தப்பி ஓடிய இரையை கூட துரத்தாது, அதுவும் அதை கண்டவுடன் ஓடும் மனிதனை கண்டால் பாம்பு வேறு திசையில் தான் ஓடும், துரத்தாது.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    கதையின் இடை இடை வரும் வர்ணணைகள் நன்றாக உள்ளது. பருவ ராகம்...பல்லவியே அரோகணத்தில் அடித்து தூள் கிளப்புது...சரணத்திற்காக யவனிகா வெயிட்டிங்...வாழ்த்துக்களுடன்
    யவனிகா.
    நன்றிகள் யவனி அக்கா... உங்களின் வாழ்த்துக்களுடன் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கிறேன்...

    (என்ன எழுதறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...!! )
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    ஆரம்பமே அசத்தல்...
    கலக்குங்க பூமகள்.. எதிர்பார்ப்பை தூண்டி விட்டுவிட்டீர்.
    அடுத்த பாகம் எதிர்நோக்கி...
    நன்றிகள் மதி அண்ணா..
    அடுத்த பாகம் விரைவில் தருகிறேன்.
    பொறுத்தருளுங்கள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •