Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! − பாகம் 2.

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  34,908
  Downloads
  29
  Uploads
  0

  ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! − பாகம் 2.

  இட்டிலி, சட்னி, சாம்பார் காம்பினேசன் மாதிரி பேலன்ஸ்டு டயட்ட அடிச்சுக்க ஆளில்லை. தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி. இட்லியப்பத்தி பாக்குறதுக்கு முன்னால, சரிவிகிதச் சத்துணவுனா என்னனு பாக்கலாம்.

  நம் உடலுக்கு சக்தி அளிக்கும் கார்போஹைட்ரேட்ஸ்
  செல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன்ஸ்
  ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் விட்டமின்கள்
  சக்தியை சேமிக்கும் கொழுப்பு
  போன்ற மேற்கூறியவை தேவையான விகிதாச்சாரத்தில் அமைந்த உணவே சரிவிகிதசத்துணவு.

  நாம் உண்னும் சாதாரண இட்லி எப்படி இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று பார்ப்போம். அரிசியில் கார்போஹைட்ரேட்ஸும், உளுந்தில் தரமான புரோட்டீனும், சாம்பாரில் இடப்படும் காய்கறிகளில் விட்டமின்களும், தாளித்துக் கொட்டப்படும் எண்ணையில் ஃபேட்டி ஆசிட்ஸும் இட்லியை ஒரு சரிவிகிதச் சத்துணவாக மாற்றுகிறது. அதோடு இட்லிமாவு நொதிக்க வைக்கப்படுவதால் ஜீரணத்திற்குத் தேவையான நுண்ணுயிர்ப் பொருட்களும் கிடைக்கின்றது.

  சரி, அதற்காக இட்லி கிடைக்காத அமரன் போன்றவர்கள் என்ன செய்வது? "சீச்சீ, இந்த இட்லி புளிக்கும்" என்று வேற சாய்ஸ் தேட வேண்டியது தான்..�கிட்டாதாயின் வெட்டென மற��

  நம்மைக் காத்து ரட்சிக்க இருக்கவே இருக்கு, பிரெட் குடும்பம்�, முட்டையின் வெள்ளைக் கருவில் செய்த ஆம்லெட்டுடன் இரண்டு ஸ்லைஸ் ப்ரவுன் ப்ரெட், பருப்புடன் இரண்டு சப்பாத்தி, ஒரு கப் ரவா உப்புமா, ஒரு கப் தயிர் சேமியா, இரண்டு நான்ஸ்டிக் தோசைகள் என ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு. நம்ம ஊரில் இருப்பர்களுக்கு ராகி அல்லது சத்து மாவு கஞ்சியும் வரப்பிரசாதம் தான். காலை உணவில் பறப்பவை, நடப்பவைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

  குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு தினமும் ப்ரெட்டா?கொடுமைடா சாமி? நாங்க குண்டாவே இருந்துட்டு போரோம்கிறீகளா?

  சர்க்கரையில்லாம ஓட்ஸ் கஞ்ஜி நல்லகாலை உணவு. ஓட்ஸை வேகவைத்து மோருடன் உப்பு போட்டும் சாப்பிடலாம், சூப் வடிவிலும் சாப்பிடலாம். காட்டேஜ் சீஸ் உடன் வெஜிடெபிள் பர்கர் சாப்பிடலாம். பிஸ்ஸா பேஸ் வாங்கி அல்லது வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் அப்பப்ப அருமையான வெஜிடபிள் பிஸ்ஸா (பாதி அளவு போதுங்க) சாப்பிடலாம். கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரான் ஃப்ளேக்ஸ் என்று ஏகப்பட்ட ரெடிமேட் உண்வுகள் மார்க்கெட்டில் இருக்கு. இத்தனைக்கும் மேல இருக்கவே இருக்கு சீன உணவுகளின் ராஜா... நூடுல்ஸ்... (ம்ம்மா....நூடுல்ஸ் எங்க? இப்ப நூடுல்ஸ் மேலஆசை வந்தாச்சா?) ஒண்ணுமே பிடிக்கலையா... பாலுடன் ஐந்து ஃபைபர் ரிச் பிஸ்கட்ஸ் சாப்பிடலாம்.

  பால் என்றதும் தான் ஞாபகம் வருகிறது."நான் வளர்கிறேனே மம்மி" என்று காம்ப்ளான் அல்லது "சுப்பாங்..., சப்பாங்... ஹுப்பாங்" என்று கோப்பையை சுழற்றிச் சுழற்றி ஹார்லிக்ஸ் குடிப்பவரா? அவற்றிலும் சர்க்கரை அதிகம் உள்ளதால் தவிர்த்தல் நலம் அல்லது அந்தந்த கம்பெனிகளில் வரும் லைட் பிராண்டுக்கு மாறிவிடுங்கள். (ஆங்கில வார்த்தைகளுக்காக மன்னியுங்கள் நிர்வாகிகளே). பாலும் கண்டிப்பாக ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும்.

  காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டல்லுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)

  வேண்டுமானால் நீங்கள் முதல் கட்டமாக ஒரு கிலோ எடை குறையும் நன்னாளில் உங்களுக்கு ஒரு ஊக்க போனசாக இவற்றில் ஒன்றை மட்டும் எனக்கும் வாங்கிக் குடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க! அப்புறம் அந்த ஒரு நாள் தீபாவளி தொடர்வதற்காகவே கண்டிப்பாக நீங்கள் எடை குறைவீர்கள். (என்ன ஒரு ஒளி வெள்ளம் உங்க முகத்தில்) உங்கள் ஒவ்வொரு வேளை உணவையும் ஒரு முழுப் பழத்துடன் முடிப்பது சிறந்தது. முழு பலாப்பழம், முழு தர்பூசணி, முழு அண்ணாச்சிப் பழம் எல்லாம் கணக்கில் வராதுங்க.

  பழங்களைப் பற்றிப் பார்ப்போம், பழவகைகள் உடலுக்கு நல்லது என்பது நாம் அறிந்ததே. ஆனால் மா, பலா, வாழை, திராட்சை போன்ற சிலவகைகள் 100கிராம் = 100கிலோ கிலோரிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை அதிகம் உண்ணாமல், வாரம் நான்கு முறை சாப்பிடலாம். ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
  பழங்கள் மேனி அழகைப் பராமரித்து, சருமத்திற்கு புதுப் பொலிவைத் தர வல்லன.

  எங்க கிளம்பீட்டீங்க? பழம் வாங்கத்தானே? பழம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஜூசாக அருந்தலாம். ஆனால் பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
  சரி, இப்பொழுது சாப்பிடும் முறை பற்றிப் பார்க்கலாம்.

  காலை உணவாக இட்லி சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் நான் விட்டாலும் இட்லி என்னை விட மாட்டேங்குதே? நான்கு இட்டிலியையும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அப்படியே அவசர அவசரமாகச் சாப்பிடாமல், ஒவ்வொன்றாக நிதானமாக ருசித்து சாப்பிடவும். ஒரு இட்லி சாம்பாருடன், ஒரு இட்லி சட்னியுடன்... என்று ருசித்து சாப்பிடும் போது குறைவாகச் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போல மனம் திருப்தி அடையும்... இல்லை உங்கள் மனம் திருப்தி அடையவில்லையா? சாப்பிட்டு பழகிய வயிறு இன்னும் போடு போடு என்கிறதா? சட்டையே செய்யாமல் இரண்டு டம்ளர் தண்ணி குடிக்கவும். வயிறு, வாயை மூடிக் கொள்ளும்.

  ஒரு முக்கியமான விசயத்தை உதாரணத்துடன் விளக்குகிறேன். கோவையில் எனக்கொரு அண்ணா இருக்கார். அவரை எல்லாரும் வாத்தியாரன்ணா என்று கூப்பிடுவோம். .அவர் மனைவிக்கு அவர் மேல் கொள்ளைப் பிரியம்.
  காலை உணவை அவர் மனைவிதான் அவருக்குப் பறிமாறுவார். அண்ணன் மூன்று இட்லி போதுமென்று கை கழுவப் போனால், அவ்வளவு தான் "அய்யோ மாமா, என்னக் கல்யாணம் கட்டின நாள்ல இருந்து தினமும் பத்து இட்டிலிக்கு குறையாம சாப்பிடுவீங்களே? யாரு கண்ணுபட்டுதோ தெரியல, மூணோட முடிச்சிட்டீங்களேனு... மூக்கு சிந்த ஆரம்பித்து விடுவார்கள் அண்ணி. அவங்க பன்ற அலம்பல்ல பத்து இட்டிலிய படப்படன்னு உள்ளே தள்ளிடுவாரு வாத்தியாரண்ணா.

  காலையிலே இப்படின்னா மத்தியானம் பரிமாறும் செஷன் வாத்தியாரோட அம்மாக்கு. இவரு, போதும்மா, எதுக்கு இத்தனை சோத்த அள்ளிக் கொட்டற என்று கேட்டால் போச்சு.

  "பாவிப்பய முப்பது வருசமா மூச்ச குடித்து வளர்த்தேனே... நேத்து வந்தவ முந்தானைல முடிஞ்சிட்டாலே காலைல பத்து இட்டிலி அவ கையால சாப்பிட்டேயேடா... இப்ப பெத்த தாயி குடுத்தா கசக்குதா...ன்னு ஆரம்பிப்பாங்க ஆத்தா..

  அன்பு நிலையென்றால் தாய்க்கும் தாரத்திற்கும் பொதுவில் வைப்போம்கிற கொள்கை உடையவர் நம்ம அண்ணாத்த. அம்மா போட்ட அத்தனையும் ஆடாம அசங்காம, அத்திப்பூ வாடாம சாப்பிட்டு எந்திருப்பாரு நம்ம வாத்தி.

  இது தான் முருங்கக்காய் போல இருந்த எங்க வாத்தியாரண்ணா பரங்கிக்காயாப் பருத்த கதை. உடலைக் குறைக்க காலை, மாலை இரண்டு வேளை அண்ணன் நடப்பாரு .ரோட்டுல நடந்து விட்ட கலோரிய எல்லாம் வீட்ல அம்மாவும், மனைவியும் போட்டி போட்டுட்டு அண்ணன் உடம்பில நிரப்பி விடுவாங்க.

  அதாகப்பட்டது குழந்தைகளே இந்த கதையால் அறியும் நீதி என்ன? சாப்பிடும் விசயத்தில சென்டிமென்டுக்கு இடம் கொடுக்காதீங்க.

  தொடர்ந்து இளைக்கலாம் வாங்க...
  Last edited by அமரன்; 17-03-2008 at 01:43 PM.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  22,980
  Downloads
  61
  Uploads
  0
  இளைக்கலாம் வாங்க கட்டுரையில் நம்ம வாத்தியார் பத்தின ரகசியத்தை இப்படி பொதுவில் போட்டு உடைத்துவிட்டீர்களே....! கட்டுரையை படித்து உணவு பதார்த்த வகையெல்லாம் படித்ததும் எல்லாத்தையும் அப்படியே சாப்பிடணும்போல இருக்கு...!
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  71,918
  Downloads
  89
  Uploads
  1
  சூப்பர் யவனி அக்கா.. நான் தான் கொஞ்சம் சம்பந்தமில்லாத இடத்துக்கு வந்துட்டேன் போல...!! மன்னிக்கவும்... ஆர்வக் கோளாறுல தான் வந்துட்டேன்...!! (பின்னாடி என்னிக்காச்சும் உபயோகமாகுமோன்னு ஒரு சின்ன பயம் தான்...!! ஆகாது கண்டிப்பான்னு நீங்க சொல்றது தெரியுது அக்கா...)
  என்னை அன்னபூர்ணாவுக்கு கூப்பிட்ட உங்க நல்ல மனசை எப்படி பாராட்டுவேன்..
  ரொம்ப சந்தோசம்...
  அப்படியே அந்த மெனு அதான் வாசிச்சீங்களே....
  காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டல்லுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)
  இந்த எல்லாத்தியும் வாங்கிக் கொடுப்பீங்க தானே.....???!!!
  Last edited by பூமகள்; 07-10-2007 at 05:39 PM.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  11,716
  Downloads
  14
  Uploads
  0
  வாத்தியார் கதை அருமை
  ஆலோசனைகள் மிகவும் நகைசுவையாகவும் இருந்தது
  இது தான் உங்கள் தொழுல் ரகசியமா நன்றி
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  34,908
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by பூமகள் View Post
  காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டலுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)
  இந்த எல்லாத்தியும் வாங்கிக் கொடுப்பீங்க தானே.....???!!!
  கண்டிப்பா கூட்டிட்டுப்போறேன், என்ன வேணா சாப்பிட்டுக்கோ, ஆனா எனக்கும் சேத்து பில்ல நீ கட்டிரு
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  71,918
  Downloads
  89
  Uploads
  1
  Quote Originally Posted by யவனிகா View Post
  கண்டிப்பா கூட்டிட்டுப்போறேன், என்ன வேணா சாப்பிட்டுக்கோ, ஆனா எனக்கும் சேத்து பில்ல நீ கட்டிரு
  நான் சொன்னது புரியலையாக்கா உங்களுக்கு....??
  எனக்கு வாங்கி கொடுங்க என்றால் நீங்க பில் கட்டி வாங்கி கொடுங்க என்று அர்த்தம்..

  சரி... அன்னபூர்ணாவிற்கு பதில் இன்னும் சுவையான ஒரு அசைவ உணவகம் வந்திருக்கு. அங்க கூட்டி போனீங்கன்னா... நான் இன்னும் சந்தோசப்படுவேன்..
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  42
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  361,154
  Downloads
  151
  Uploads
  9
  குளிர்பிரதேசத்தில் நிறைவில் இட்லிக்கு இணையான சுவையில் குறைவான (தமிழனின் கண்டுபிடிப்பு அல்லவா) பிரதிகளை தந்து என் போன்றோர் வயிற்றில் ஆடை நீக்கிய பாலை வார்த்தீர்கள். மிக்க நன்றி. வாத்தியாரை விட நான் உணவு முறையில் அதிஸ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். ஆக்குவோர் இருந்தாலும் பரிமாற யாரும் இல்லை. துரித கதியில் உயரத்தை எட்ட அதை விட துரிதமாக உணவை வாயினூடு வயிற்றுக்குள் எறிந்து விட்டு பலரும் போய் விட ஆற அமர இருந்து ஆறாத உணவை ரசித்து ருசிக்க வகை செய்த என் வேலைக்கு நன்றி சொல்ல வைத்துவிட்டது யவனிகாவின் இளைக்கலாம வாங்க என்று அழைத்து இளையவராக வழி சொல்லும் இத்தொடர்..

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  34,908
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by பூமகள் View Post
  [I][COLOR="Magenta"]சரி... அன்னபூர்ணாவிற்கு பதில் இன்னும் சுவையான ஒரு அசைவ உணவகம் வந்திருக்கு. அங்க கூட்டி போனீங்கன்னா... நான் இன்னும் சந்தோசப்படுவேன்..
  நீ கண்டிப்பா சந்தோசப் படுவே, நான் வருத்தப்படும் படி ஆயிடுமே...சரி வேணா ஒண்ணு பண்ணலாம்,எங்கே வாத்தியார் அண்ணன்?என் பேரைச் சொல்லு...அண்ணன் கண்டிப்பா வாங்கிக் கொடுப்பாரு.

  நன்றி அமரன்.என் பதிப்பை விட உங்கள் பின்னூட்டம் மிகவும் சுவையாக இருக்கிறது.சீக்கிரமே பரிமாறவும் ஒரு வளைகரத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது தானே!

  ஜே.எம் ,மனோஜ் உங்களின் பின்னூட்டத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 9. #9
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  176,696
  Downloads
  39
  Uploads
  0
  ஆஹா யவனிகா...பின்னிட்டீங்க...இட்லியின் பெருமையச் சொன்ன நீங்கள்...அது கிடைக்காத எங்களைப் போன்றோருக்கு(சவுதியில கிடைக்கிற இட்லியை நான் கணக்குலயே சேக்கறதில்ல)நல்ல சமாச்சாரம் சொல்லியிருக்கீங்க.ஆனா நடுவுல அண்ணபூர்னாவைச் சொல்லி நாக்குல ஜொள்ளு வரவெச்சிட்டீங்களே. பாசக்கார அம்மாவுக்கும்,நேசக்கார மனைவிக்குமிடையில் மாட்டிக்கொண்டு வாத்தியார் பரங்கிக்காயாய் ஆனதை சொல்லி அசத்திட்டீங்க...அருமையான நடை.பாராட்டுக்கள்..தங்கையே.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  34,908
  Downloads
  29
  Uploads
  0
  அன்புச் சகோதரர் சிவா...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...விமர்சனங்ளை எதிர்பார்க்கும்
  யவனிகா.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  98,421
  Downloads
  10
  Uploads
  0
  யப்பா சாமி இளைக்கலாம் வாங்க என்று சொல்லி இங்க ஒரு கூட்டத்த வரவச்சு, இட்லி, ப்ரெட், பிசா எல்லாத்தையும் விளக்கி நாக்கில எச்சிலை ஊறவைத்து தொப்பகடீர்னு தள்ளிவிட்ட மாதிரி 4 இட்லி மட்டும் சாப்பிடுங்கனு முடிக்கராரு. அன்னபூர்னாவாவை நினைவு படுத்தி அப்புரம் தடை போட்டா அடுக்குமா? அன்னபூர்னா வேண்டாம் என்றால் பின்ன என்ன சம்பூர்னாவுக்கா போறது. (அங்கயும் வேண்டாம் தானே)

  மெதுவா சாப்பிடனும் என்று நீங்க சொன்னது மிகவும் அவசியமானது, அதை காந்தியடிகள் பலமுரை தனது சுயசரிதையில் வலியுருத்துவார்.

  கடைசியல நம்மளை வம்புக்கு இழுத்து, சம்சாரத்துக்கும் அம்மாவுக்கு இடையே சிக்க வச்சுட்டியே. எல்லாருக்கு என் தொந்தி வியிரின் மேல பொறாமை போல இருக்கு அதான் அந்த அழகான வயிரை குரைக்க படாத பாடு படராங்க. (அது சரி என் உணவு பழக்கவழக்கங்களை பத்தி நான் நீண்ட நாட்களுக்கு முன் வாழ்க சாப்பாடு என்று ஒரு தனி கட்டுரையே எழுதி இருந்தேன் அதை படித்து எனக்கு என் டைட்டில் மாற்றம் ஏதாவது இருந்தால் சொல்லவும். இதோ அதன் லிங்)
  http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11470

  இளைப்பதுக்கு முன்னாடி வரும் முன் காப்போம் என்பதற்க்கு கூட ஒரு டிப்ஸ் வச்சிருக்கேன். அதாவது கல்யானம் ஆன பசங்க அடிகடி மாமனார் வீட்டுக்கு போனால் கட்டாயம் குண்டாயிடுவாங்க. அதனால் கட்டாயம் மாமனார் வீட்டுக்கு போறத குரைச்சுக்குங்க.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  42
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  361,154
  Downloads
  151
  Uploads
  9
  என்னைத் தவிர எல்லாரும் மெலிந்து விட்டார்களோ..
  ஏங்க இந்தபக்கம் கடைக்கண் பார்வையை திருப்பாமல் ஏங்க வைக்கிறீங்களே.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •