Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 104

Thread: ஆப்பிரிக்கா அனுபவம்-4

                  
   
   
 1. #1
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0

  ஆப்பிரிக்கா அனுபவம்-4

  ஆப்பிரிக்கா காட்டுபுலி ஆள்தின்னும் வேட்டைப்புலி.....குத்தாட்டம் போட்டுக்கொண்டேதான் ஆப்பிரிக்காவுக்கு வந்தோம்.காடும் காட்டுமனுஷங்களும் இருப்பார்களென்ற எதிர்பார்ப்பில் வந்தால்....நாகரிக உடையில் பூனை நடை போடும் அமீகா(ஸ்பானிஷ்-ல் பெண்கள்) க்களையும்,சூட் அணிந்த அமீகோ(ஆண்கள்)க்களையும் கண்டதில் ஆச்சரியம்.பெட்ரோலியத்துறையிலிருப்பதால் இப்படி
  காட்டுக்கும்,பாலைவனத்துக்கும் வந்து இருக்க வேண்டியிருந்தாலும்.. இப்படிப்பட்ட இடங்களைப் காசுகொடுத்தாலும்பார்க்கமுடியாது.

  இது ஈக்வடோரியல் கினியா(EQUATORIAL GUINEA) மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று....கால்பந்து புகழ் காமரூனுக்கு
  அடுத்துள்ள நாடு. அதன் தலைநகரமான மலாபோ-வில்தான் எங்கள் ப்ரோஜெக்ட் இருந்தது.மலாபோ என்பது ஒரு தீவு.ஒரு நாட்டின் 90 சதவீத நிலப்பகுதி தனியாகவும்,10 சதவீதம் கடலுக்கு நடுவில் தனித்தீவாகவும் இருப்பதை பல இடங்களில் பார்த்திருந்தாலும்...அந்த தீவே தலைநகரமாக இருப்பதைப் பார்த்ததில் ஆச்சர்யமாக இருந்தது.தீவின் நடுநாயகமாக ஒரு இறந்த எரிமலை....என்கவுண்டரில் இறந்தபிரபல ரௌடியைப்போல கைகள் விரித்து தீவின் இரு விளிம்புகளையும் தொட்டுக்கொண்டிருந்தது.அதிலிருந்து ஒரு காலத்தில்வெளியான லாவாவினால் பூமியே செழித்து அடர்ந்த காடாக மாறியிருந்தது.இயற்கை வளத்துக்கு குறைவில்லாத ஊர்.எங்கெங்குகாணினும் பச்சையடா எனப் பரந்து விரிந்த காடுகளைக் கொண்டிருந்தது.அந்த காடுகளின் முடிவில்,தீவின் சுண்டுவிரல் போன்ற முனைப்பகுதியில்தான் நாங்கள் பணிசெய்து கொண்டிருந்த ப்ரொஜெக்ட் இருந்தது..அதையொட்டி வசிப்பிடம்.

  சென்று சேர்ந்ததுமே....வயிறைக்கலக்கும் ஒரு விஷயத்தை காம்ப் பாஸ் சொன்னார். இந்த நாடு மலேரியா அதிகமாக இருக்கும்
  நாடுகளில் ஒன்று,ஆனால் இந்த ஊரின் மலேரியாவை சாதாரனமாக நினைக்கவேண்டாம்,இது செரிப்ரல் மலேரியா எனப்படும் மிக
  மோசமான விளைவுகளை உண்டாக்கும் நோய்,அதனால் இங்கிருக்கும் காலம் வரை Anti malarial Tablets எடுத்துக்கொள்ள
  வேண்டும்,அப்போதுதான் அதன் தாக்கத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றார்.என்னடா இது வம்பாப்போச்சேஎன்று நினைத்துக்கொண்டாலும் அதன் சீரியஸ்னெஸ் அப்போது தெரியவில்லை.தினம் ஒன்றாக உட்க்கொள்ளக்கூடிய ஒருமாத்திரையும்,மாற்றாக வாரம் ஒருமுறை உட்க்கொள்ளும் வேறு ஒரு மாத்திரையும் எங்களிடம் காண்பிக்கப்பட்டு எதை
  எடுத்துக்கொள்ள பிரியப்படுகிறீர்கள் என்று, என்னவோ ராடோ கடிகாரம் ஒரு கையிலும், சீக்கோ கடிகாரம் ஒரு கையிலும்
  வைத்துக்கொண்டு எங்களின் விருப்பம் கேட்பதுபோல கேட்டார்கள்.தினமும் இந்த இழவை யார் சாப்பிடுவது என்று வார மாத்திரையை பிரசாதம் போல வாங்கிக்கொண்டோம்.

  அந்த வாரம் ஒருமுறை சாப்பிடவேண்டிய மாத்திரை இருக்கிறதே(LARIAM)....மகாக் கொடுமையான வஸ்து.முதல் முறை சாப்பிட்டுவிட்டு தூங்கப்போனேன்.தூக்கத்தில்..நம்ம ஊர்ல சொல்லுவாங்களே அமுக்குப்பிசான்னு..அந்த மாதிரி பிசாசுங்க மார்மேல ஒரு குரூப்பா ஏறி \'அப்படிப் போடு..போடு..அசத்திப் போடு\"ன்னு ஆட்டம் போட்டா எப்படி இருக்குமோ அந்த ஃபீலிங்.மூச்சு விட முடியாம..காத்துக்கு..மீன் மாதிரி வாயை பொளந்து பொளந்து முயற்சி பண்றேன்..ம்ஹீம்...கொஞ்ச நேரத்துல சித்திரகுப்தனெல்லாம் புத்தகத்தை தூக்கிட்டு...என் அக்கவுண்டைப் பாக்க பக்கத்துல வந்துட்டான்.அந்த ராத்திரிதான் இந்த அவஸ்தையில போச்சுன்னா...அடுத்தநாள் நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியல.யாராவது சாப்ப்டயான்னு கேட்டா....நேத்துதான் ஊர்லர்ந்து வந்தேன்னு உளர்றேன்.அந்த ஒரு மாத்திரையோட அந்த சனியனுக்குத் தலைமுழுகி விட்டு..சூப்பரான வேற மருந்தை தினமும் சாப்பிடத் தொடங்கியப் பிறகு....என்னைக் கடிச்ச மலேரியா கொசுவெல்லம் மயக்கம் போட்டு விழ ஆரம்பிச்சிடுச்சி...எந்த மருந்தா...அது.. நம்ம ராமரே அருந்தியதா கலைஞர் சொன்ன சோமபானம்தான்.

  ஆப்பிரிக்கா அனுபவங்கள் இன்னும் தொடரும்....நிறைய சுவாரசியமான நிகழ்ச்சிகள் இனிமேத்தான்....
  Last edited by சிவா.ஜி; 16-11-2007 at 08:21 AM.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  19,880
  Downloads
  61
  Uploads
  0
  சொல்லுங்க சிவா... சொல்லுங்க...! இப்படி ஊர்சுற்றின கதை கேட்பதென்றாலே நமக்கு அலாதிப் பிரியம்தான்...!
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 3. #3
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0
  நன்றி ஜே.எம். இன்னும் சொல்கிறேன்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #4
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
  Join Date
  15 Jun 2006
  Location
  கோயமுத்தூர்
  Posts
  1,500
  Post Thanks / Like
  iCash Credits
  15,304
  Downloads
  114
  Uploads
  0
  ஆப்பிரிக்கா போகனும் என்றால் ஆன்டி பயாடிக் ஊசி போட்ட பின்னர் தானே விசாவே கிடைக்கும் ? உங்களுக்கு எப்படி கிடைத்தது ?
  :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

  => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

  http://thangavelmanickadevar.blogspot.com/

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
  Join Date
  27 Jul 2005
  Location
  கனடா
  Posts
  1,999
  Post Thanks / Like
  iCash Credits
  28,929
  Downloads
  53
  Uploads
  5
  என்கவுண்ட்டரில் சுடப்பட்ட ரௌடியைப் போல கைகளை விரித்து..... மீன் மாதிரு வாயைத் திறந்தது....... பிசாசுகள் கும்மாங்குத்து ஆடியது.... என எல்லா உவமைகளையும் ரசித்தேன். கற்குழம்புகளில் வளமும் இருக்குமா? ஆச்சரியமான தகவல். உங்களின் பயண அனுபவத்திற்கான முன்னோட்டமே அழகாய் இருக்கிறது. முழுவதையும் எப்பொழுது பதியப் போகிறீர்கள்.
  ஆர்வத்துடன்,
  முகிலன்.

 6. #6
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0
  Quote Originally Posted by தங்கவேல் View Post
  ஆப்பிரிக்கா போகனும் என்றால் ஆன்டி பயாடிக் ஊசி போட்ட பின்னர் தானே விசாவே கிடைக்கும் ? உங்களுக்கு எப்படி கிடைத்தது ?
  ஆமாம் தங்கவேல் அந்த வைபவமும் நடந்தேறியது.மத்திய அரசாங்கத்தின் சுகாதாரத்துறையின் சான்றிதழ் இருந்தால்தான் விசாவே கிடைக்கும் அதனால் மும்பையில் உள்ள அந்த நிறுவனைதிற்குப்போய் ஊசி போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்ற பிறகுதான் ஆப்பிரிக்கா போனோம்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 7. #7
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0
  நன்றி முகிலன்.வெகுவிரைவில் அடுத்த பாகம் பதிக்கிறேன்.
  Last edited by சிவா.ஜி; 10-10-2007 at 05:06 AM.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 8. #8
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0
  அனுபவம்-2

  இதுக்கு முன்னால இருந்த இடம்தான் ஏடாகூடமான நாடென்றால்(ஏடாகூடமென்றால்...6 மாதம் -40 டிகிரி குளிர்,எப்போதும் சூழ்ந்திருக்கும் அணுக்கதிரியக்க கதிர்கள்,பெயர் தெரியா பூச்சிகள் மில்லியன் கணக்கில்...எல்லாம் இருக்கும் கஜகஸ்தான்)இந்த நாட்டிலும் வேறுமாதிரியான ஏடாகூடங்கள்.முதலாவது ஏற்கனவே சொன்ன மாதிரி மலேரியா...இன்னொன்று 8 மாதங்கள் தொடர்மழைக்காலம். போய் சேர்ந்ததும் ஒரு ரெயின்கோட்டைக் கொடுத்துவிட்டார்கள். எதற்கு என்று அப்போது தெரியவில்லை...பிறகுதான் தெரிந்தது எல்லா வேலைகளும் மழையினூடேதான் நடக்குமென்று.அந்த மழையும் ஒரு காரணம் இந்த நாட்டின் செழிப்புக்கு.

  கடலினுள்ளிருந்து எரிவாயுவும்,எரி எண்ணையும் எடுக்கப்பட்டு அதனை சுத்திகரிக்கும் ஆலைகள் கரையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.வழக்கம்போல இங்கேயும் அமெரிக்கர்கள்தான் பணம் போட்டு பணம் அள்ளுகிறார்கள்.நாங்கள் பணிபுரிந்ததும் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்காகத்தான்.நாங்கள் போனசமயத்தில் ஒரு பக்கம் புதிய ப்ரோஜெக்ட்க்கான கட்டுமானப்பணிகள் நடந்துகொண்டிருந்தது,மறுபக்கம் அதன் விரிவாக்கத்துக்காக தரை சமப்படுத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.
  அந்த பகுதியிலிருந்து ஒரு நாள் ஒரு பாம்பை பிடித்து(அடித்து)க் கொண்டுவந்து எங்கள் அலுவலகம் முன்னால் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அப்படி ஒரு சைஸை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை..குறைந்தது 30 அடி நீளமும் அரையடி சுற்றளவும் கொண்ட மெகா சைஸ் பாம்பு.உள்ளூர் மண்ணின் மந்தனிடம் கேட்டதில்..அது நாகப்பாம்பு வகையைச் சேர்ந்தது என்றும் படமெடுத்தால் ஒரு ஆள் உயரத்துக்கும் கூடுதலாக இருக்குமென்றும், அது கடிக்காது என்றும் சொன்னான்.ஆச்சர்யமாக இருந்தது..இம்மாம் பெரிய பாம்பு கடிக்காதா...ரொம்ப 'நல்லபாம்பா' இருக்கேன்னு நெனைக்கறதுக்குள்ள தொடர்ந்து சொன்னது பீதியைக் கிளப்பியது.படமெடுத்த நிலையில் விஷத்தை துப்பிவிடுமாம்.அது கண்களில் பட்டாலோ அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் பட்டாலோ அன்னைக்கே பால்தானாம்.அந்த பக்கத்தில்தான் எனக்கும் பணி இருந்தது...அங்கு போகும்போதெல்லாம்..யாராவது பின்னாலிருந்து தோளைத் தொட்டாலே துள்ளிக்குதித்து..குப்புற விழுவேன்.ஒரு மாதிரியாக எத்தனைவிதமான பாம்புகள் இருக்கிறது..அவைகளின் குனாதிசியங்களையெல்லாம் தெரிந்துகொண்டு...எங்களைக் காப்பாற்றிக்கொண்டோம்.இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்...வெளி நாட்டிலிருந்து வந்த எங்களில் யாரும் பாம்புக்கடியால் பாதிக்கப்படவில்லை..அதே சமயம் உள்ளுர் ஆட்களில் சிலர் இறந்துவிட்டார்கள்.புரியாமல் விசாரித்துப்பார்த்ததில் இவர்களாகவே அதைப் பிடிக்கும் முயற்சியில் அதன் பாசமான முத்தம் கிடைத்து பரலோகம் போனார்களென்று தெரிந்தது.ஏன் அதைப் போய் பிடிக்கனும் என்று கேட்டால்...மத்தியான சாப்பாட்டுக்கு சில்லி ஸ்னேக் செய்யறதுக்காகவாம்.

  முதன் முதலில் எங்கள் பணியிடத்தை சுற்றிச் சூழ்ந்திருந்த அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைத்தபோது...ரொம்ப பெருமிதமாய் இருந்தது.சின்ன வயதில் பூகோள பாட நோட்டில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நீலக்கலர் பென்சிலால் வண்ணம் அடித்தது நினைவுக்கு வந்தது.அதே பெருங்கடலில் இன்று கால் நனைக்கும் யோகம் கிடைத்ததை நினைத்து, உடம்பெல்லாம் நமீதா தொட்டமாதிரி புல்லரிச்சிப்போயிடிச்சி.பின்னர் வார இறுதிநாட்களில் அதே கடலுக்குள் போய் மீன் பிடித்து கரையில் சுள்ளிகளை எரித்து சுட்டுச் சாப்பிட்டது இப்பவும் நாக்குல நிக்குது.அந்தக்கரையிலிருந்துகொண்டிருந்தபோது ஒரு அமெரிக்கர் சொன்னார்..இப்படியே கோடு போட்டாப்போல நீச்சல் அடிச்சுக்கிட்டுப் போனால் சரியாக டெக்ஸாஸில் போய்க் கரையேறலாம் என்று.அடடா..நாட்டுல நம்ம மக்கள் ராத்திரிபூரா க்யூவுல நின்னு அமெரிக்கா விசாவுக்கு தேவுடு காத்துக்கிட்டிருக்கறதுக்கு பதிலா..நல்லா நீச்சல் கத்துகிட்டு இப்படியே நீந்தி போயிடலாமேன்னு தோணுச்சி...சொன்னா அடிக்க வருவாங்க.  எங்கள் குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த காடு. பெரிய பெரிய மரங்கள்.அதில ஒரு மரம் ரொம்ப செழிப்பா..குண்டா..அழகா இருக்கும்.அதுக்கு ஜெயலலிதான்னு பேர் வெச்சோம்.தினமும் பணிக்குப் போகும்போதும் வரும்போதும் அதைப் பார்க்காமல் இருக்கமாட்டோம்.வாழைமரங்களை அத்தனை உயரமாக எங்கும் பார்க்கமுடியாது.உரமோ,எருவோ எதுவுமே போடாமல்,எந்த பராமரிப்புமில்லாமல்...தன்போக்கில் காட்டில வளரும் அந்த மரங்களின் பழங்கள் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடையில் இருக்கும்.நம்ம ஊர்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பப்போவோருக்கு வெற்றிலையும் பழமும் கொடுப்பார்களே...அங்கே இந்த பழத்தை உபயோகித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கிறுக்கு எண்ணம் தோன்றியது.

  அடுத்து சனியிரவு நாங்கள் விஜயம் செய்த இரவுவிடுதி நிகழ்வை தொடர்கிறேன்.........
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,321
  Downloads
  10
  Uploads
  0
  ஆப்பிரிக்க அனுபவம் மிக அருமையாக இருந்தது. சிவா ஜி
  ஆப்பிரிக்காவை நான் டிவி யில் மட்டுமே பாத்திருகிறேன்.
  பாம்பு வாழை எல்லாமே பெரிசா இருக்கா. ஆனா மனுசங்க மட்டும் சிரிசா இருப்பாங்க போல. நல்லா இருக்கர நாட்ட நாகரீகமாக்கி கெடுத்துருவாங்க நினைகிறேன்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 10. #10
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  19,880
  Downloads
  61
  Uploads
  0
  ஆப்பரிக்காவிலும் உங்களை நமீதா விடவில்லையா சிவா? நல்ல சுவாரசியமான பயண அனுவங்கள்...!
  'சில்லிசினேக்' சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? சுவையாக இருந்ததா?
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,990
  Downloads
  151
  Uploads
  9
  சுவையோ சுவை...சிவாவின் ஆபிரிக்க அனுபவமும் பரிமாறும் பாங்கும்.. இப்படியே உசுப்பெத்தி உசுப்பேத்தி என்னையும் உலகம் சுற்றவைக்கும் சிவாவின் எண்ணம் ஈடேறுமா? ஏறும் என நம்புகின்றேன்..பாம்புக்கறி சூப்பராக இருக்கும்.. நீங்கள் சாப்பிட்டீங்களா..தொடருங்கள் சிவா கட்டுரையை..

  ஆவலுடன்,

 12. #12
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,289
  Downloads
  78
  Uploads
  2
  அட...அற்புதமான அனுபவங்களா இருக்கே... இம்மாதிரி அனுபவங்கள் அனைவருக்கும் கிடைத்து விடாது.. கொடுத்து வைத்தவரைய்யா நீங்கள்..

  அப்புறம்..அங்கிருக்கும் போது என்னென்ன பிராணிகளெல்லாம் சாப்பிட்டீர்கள்..?

Page 1 of 9 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •