Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 52

Thread: மழை வேண்டி!-இன்றைய படம்-மழை வந்தாச்சே!:)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    மழை வேண்டி!-இன்றைய படம்-மழை வந்தாச்சே!:)

    மழை வேண்டி..!!



    மாலை வனப்பில்
    கீழ்வானம் பார்த்து
    மனமும் கொஞ்சம்
    மயங்கும் வேளை..!!

    பறவைக் கூட்டமும்
    கூடு நோக்கி
    துயில்கொள்ள விரையும்
    அந்திசாயும் சமயம்...!!

    காற்றில் ஏதோ
    முனகும் சத்தம்....
    காற்றைக் கொண்டே
    காது தீட்டி
    குரல் வந்த திசை
    நோக்கி
    கூர்மையாக்கினேன்..

    பச்சிளம்பயிர்
    பரவசமின்றி
    எதிர்புறம்..!!

    இமைகலங்க
    அசைவற்றிருந்தது
    இயற்கை மழலை..!!

    பதறித் துடித்து
    ஏனென
    வினவியது என்
    வாஞ்சையுள்ளம்...!!

    விக்கும் குரலில்
    வலி சொல்லியது
    மெல்லிய செடி..!!

    தாகத்திற்கு
    நீரின்றி
    தன்னுடல் கருகும்
    தன்னிலைவிளக்கிற்று...

    உற்றுனோக்கியது என்
    உள்ளக் கண்கள்..
    ஆம்....
    பச்சையுடல்
    பாழ்பட்டுக் கொண்டிருந்தது..
    அழகிழந்து
    காயும் சருகாகி
    காட்சி கொடுத்தது...

    வான்மழையே
    தாய்பாலென
    வேதம் சொல்லி
    தவித்து புலம்பியது
    பச்சிளம்பயிர்...

    வருந்தும் பயிரின்
    விம்மல் நிறுத்தி
    வள்ளலாரைப் போல்
    வெடித்துக் கதறினேன்
    சத்தமின்றி...

    பயிர்மழலை
    பசிபோக்க
    மழை வேண்டி
    மன்றாடியது என்
    மென்னுள்ளம்..!!

    மழையே வா..!!
    வானமுதே வா..!!
    பச்சைப்பட்டாடை
    தரித்து பூமி
    மகிழ்ந்திட
    மடைதிறந்து வா..!!

    வேண்டிமுடித்து
    வெகுநேரம்
    வான் பார்த்திருந்தேன்..!!

    காரிருள் சூழ்ந்தது...
    மின்னல் சொல்லெடுத்து
    கார்மேகங்கள் கலந்துரையாடி - அதன்
    கல்மனம் கரைந்தது..

    மழைத்துளிகள்
    பயிர்தொட்டு
    முத்தமிட்டு
    பசிபோக்கி
    மகிழ்ந்தது..!!

    அடுத்த நாளின்
    அந்திவரும் வேளை
    அதே திசைநோக்கி
    அனிச்சையாய் என்
    அழகுவிழிகள்..!!

    தேடும் முன்னே
    திகைப்பும்
    நகைப்புமாய்
    நனைந்து நின்றது
    பயிரிளம்பிஞ்சு..!!

    நன்றி நவிழ்ந்து
    நல்லாசி கூறி
    தன் கையசத்து
    சாமரம் வீசி
    தென்றலனுப்பியது..!!

    சிலிர்த்து நடுங்கி
    பூரித்த நெஞ்சில்
    கனத்த மழை
    மகிழ்ந்து
    முகிழ்ந்தது..!!

    நிஜ படங்கள்:
    படம் : 1
    படம் : 2

    (இக்கவிதையை நிஜமாகவே என் வீட்டின் அருகில் மழையின்றி வாடிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..!! அதன் தாக்கத்தில் மனம் கனக்க எழுதியதே இக்கவி.)
    Last edited by பூமகள்; 15-10-2007 at 12:59 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிரமாதம்...தங்கையே.....வார்த்தைகளின் வசீகரிப்பின் தாக்கம் இன்னும் குறையாத பிரமிப்பில் நான்....பயிர் வாட உயிர் உருகும் மென்னுள்ளத்தை என்னென்று பாராட்டுவேன்.கருமேகம் உருவாகி வான்மழை பொழிந்ததில்,பயிரோடு நானும் பரவசமானேன்.மனமார்ந்த பாராட்டுக்கள் பூமகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளையவர் பண்பட்டவர் rajaji's Avatar
    Join Date
    04 Jul 2007
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக இருக்கிறது.....

    படமும் கவிதையும் ஒருங்கே இணைந்து படிக்கும் போது கவிதையோடு ஒன்றிட வைக்கின்றது.....

    பாராட்டுக்கள் பூமகள்....

    (கவிதையில் வரும் மழை போலவே நிஜமாகவே மழை வந்து உங்கள் வாடும் பயிர்களுக்கு உயிர் தரட்டும்)
    − ராஜாஜி −

    சுவாசத்தோடு பிணைந்தது தமிழ்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பிரமாதம்...தங்கையே.....வார்த்தைகளின் வசீகரிப்பின் தாக்கம் இன்னும் குறையாத பிரமிப்பில் நான்....பயிர் வாட உயிர் உருகும் மென்னுள்ளத்தை என்னென்று பாராட்டுவேன்.கருமேகம் உருவாகி வான்மழை பொழிந்ததில்,பயிரோடு நானும் பரவசமானேன்.மனமார்ந்த பாராட்டுக்கள் பூமகள்.
    நன்றிகள் சிவா அண்ணா. உங்களின் வாழ்த்து கண்டு மனம் சந்தோசத்தில் கூத்தாடுகிறது.
    அப்படியே மழை வராமல் வாடும் பயிர் உயிர் பிழைக்கவும் பிராத்திப்போம்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by rajaji View Post
    ஒவ்வொரு வரிகளும் உயிரோட்டமாக இருக்கிறது.....
    படமும் கவிதையும் ஒருங்கே இணைந்து படிக்கும் போது கவிதையோடு ஒன்றிட வைக்கின்றது.....
    பாராட்டுக்கள் பூமகள்....
    (கவிதையில் வரும் மழை போலவே நிஜமாகவே மழை வந்து உங்கள் வாடும் பயிர்களுக்கு உயிர் தரட்டும்)
    நன்றிகள் சகோதரர் ராஜாஜி...
    உங்களின் வேண்டுதலும் ஆசியும் உண்மையாய் பலித்து மழை விரைந்து வந்து பயிர் செழிக்கட்டும்..!!
    தினம் தினம் சன்னலின் வழி பார்த்து மனம் வாடும் என் நிலை மாறட்டும்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நான் வேலை நிமித்தம் தங்கி இருப்பதோ ஒன்று மாறி ஒன்றாக மத்திய கிழக்கின் பாலை வன நாடுகள், இங்கே வ்ர முன்னர் நான் நினைத்ததுண்டு பாலையிலே புல் வளராதென்று....!
    ஆனால் வந்த பின்னரே தெரிந்தது பாலையையும் சோலையாக்கலாம் பி.வி.சி பைப்பின் துணையுடன் என்று...
    இங்கெல்லாம் வருடத்தில் மழை பெய்யும் நாட்களை கைவிரல்களைக் கொண்டு எண்ணி விடலாம்...
    எண்ணையைக் கொடுத்த கடவுள் தண்ணீரைப் பறித்ததன் விளைவு இது. ஆனால் இங்கேம் சோலைகள், பூங்காக்கள், தென்றல் வீச வைக்கும் மரங்கள் என மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் எத்தனை எத்தனையோ...

    இதுவெல்லாம் எப்படி சாத்தியமென எண்ணுவோமேயெனின் கிடைக்கும் ஒரே விடை,
    முயற்சி...!!!
    ஆம் முயற்சி இருந்தால் பாலையிலும் சோலை மலரும்...!!!

    வானமிடிந்து ஒரு துளி வராதாவென ஏங்கி நின்ற ஒரு செடிக்கு மழை கொடுத்த பூமகளின் கவிதை...
    வித்தியாசமான சிந்தனை...
    செயற்கையால் அச்செடியை நீரால் குளிப்பாட்ட எத்தனை வழி இருந்தும் மழையை அழைத்து அச்செடியைக் குளிர செய்தமை பூமகளின் நல்லிதயத்தைக் காட்டுகிறது.
    அதனால் தானே அந்த ஒரு செடியின் பொருட்டு எல்லோருக்கும் மழை கிடைத்தது. (நல்லோர் ஒருவர் உள்ளரெனின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை..! ).
    நீளமானது என்பதை விட கவிதையில் குறைகளில்லை, பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பூமகள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீலப்பார்வையின் வீச்சில்
    பச்சைபார்வை அகப்பட்டு
    நாணப்பட்டு சிவக்காமல்
    சபலப்பட்டு சங்கமித்து
    மஞ்சளாகி,
    மஞ்சளாக்கும் காலங்கள்
    கறுப்புக்குள் புகுந்துவிட்டன..
    இல்லை... இல்லை...
    கட்டாயமாக புகுத்தபட்டன..

    இப்போதெல்லாம்
    சூரியக் கதிர்கள் மட்டும்
    கதவுகளைத் தட்ட
    பழம் பார்க்காமலே பழுத்து
    மஞ்சள், செம்மஞ்சளென
    மாற்றங்களைக் கண்டு
    நிறங்களை தொலைத்துவிட்டோம்...

    ஆனாலும்
    மாறவில்லை மனிதன்..

    மாற்றம் மட்டுமே மாறாது என்பதை
    தவறுகளுக்கு மட்டும்
    சரியாக அர்த்தபடுத்திக்கொண்டான் போலும்..

    என்னை பார்த்ததும்
    முனகும் செடிகள்
    சமிக்கையால் சலப்படுத்துகிறன..

    எனக்காக
    வானதேவதையிடம் வேண்டாதே.
    உனக்காக
    உனது கண்ணீருடன்
    பல துளிகளை கலந்து
    என்னை குளிப்பாட்டு

    அதைக்கேட்க
    காதுகளை தீட்டிய நான்
    என்னையே
    கூர்மை ஆக்கிக்கொள்வேன்..

    பலரை அழுவிக்க
    திடசங்கற்பம் பூணுவேன்..

    என்னுடன் இக்கவியும்
    இணைந்து
    பலரை இணைத்தால் மட்டுமே
    வெற்றி கிட்டும்
    எல்லாவற்றுக்கும்...
    Last edited by அமரன்; 06-10-2007 at 11:21 AM.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நீங்கள் படம் பார்த்து கவிதத எழுதுகிறீர்களா? இல்லை கவிதை முடித்து படம் தேடுகிறீர்களா?

    கவிதை தொடங்கி முடிகிறது. ஆரம்பம் முதலே விளக்கப்படுகிறது. அதனால் நீளமும் அதிகமாய்த் தென்படுகிறது.

    கீழ்வானத்தின் மயக்கம், மாலை வேளை. மனக்கிறக்கமும் அதே நேரத்திலே! இரவா பகலா என்றறியாத தருணம் தான் சாயுங்கால வேளை. கீழ்வானத்தை ரசிப்பவர்களுல் நானுமொருவன். கீழ்வானத்தின் போது வெள்ளி" கிரகம் தெரிவதாக சொல்லுவார்கள். அந்த காட்சிக்கு பல நாட்கள் கீழ்வானத்தை மென்றிருக்கிறேன்.அந்திப் பொழுது, ஆதவனின் ஆக்கிரமிப்பை அகற்றும் நேரம். கிறங்கிக் கிடக்கும் பறவைக்கூட்டம் உறங்கச் செல்லும் வேளை. மாலையின் வனப்புக்கு இவ்விரு பாராக்கள் போதாது. ஆனால் இவ்விரு பேராக்களில் அடக்கியிருக்கலாம்....

    அடுத்து, இடி முழக்கம். மேகங்களின் உச்சமுத்தம். காற்றைக் கிழிக்கும் காம சத்தம். கவிஞனின் மூளைக்குள் உடுக்கை அடிக்கும் இயற்கையின் கூத்து. உணரமுடியும் மேக சத்தமானது, மழையரசியின் வருகைக்குக் கொட்டும் முரசு.பயிறை உயிறாய் எழுதியமைக்கு பாராட்டுக்கள். பயிற் என்று சுருக்குவதைக் காட்டிலும் உயிர்பொருள் யாவுமே என்று விரிக்கலாம். விண்ணவன் கண்ணெதிரே காணாவிடில் கலங்காமல் போகாதல்லவா உயிர்களுக்கு.

    விக்கும் குரலில்
    வலி சொல்லியது
    மெல்லிய செடி..!!


    வலி எப்படி சொல்லும்? காய்ந்து போன தேகத்தாலா? பேசமுடியாத அல்லது பாஷையில்லாத பசுமையின் வலிகளை உணர்ந்துகொண்டீர்களா? (வீட்டுக்கு வெளியே உள்ள பயிற்களைப் பார்த்து) தாகம் ஒன்றுதான் அவைகளின் தேகப்பசிக்குத் தீர்வாகும். வந்திட்டானா வானவன்?

    வான்மழையே
    தாய்பாலென
    வேதம் சொல்லி
    தவித்து புலம்பியது
    பச்சிளம்பயிர்...


    வான்மழை- தாய்ப்பால். நல்ல உவமை. நெஞ்சில் புடைத்துச் சொன்ன உண்மை. அளவுக்கு மிஞ்சினால் தாய்ப்பாலும் நஞ்சு. மழைநீர் விஞ்சினால் பயிறின் உயிரும் பறிபோகும்.

    "வாடும் பயிறைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" (விவசாயிகளுக்காக அவர் சொன்னது) வருத்தம் அவருக்கு விவசாயின் மேலே இங்கே கவிதை வருத்தத்தை பயிற்மீது கவிதைப் பாலாய்த் தெளிக்கிறதே! பாசத்தின் உச்சமிது. அனைவரின் மன்றாட்டம் வானத்திடம் செல்வதில்லை. வாவென்று கூவியபோதும்.........

    பச்சைப்பட்டாடை
    தரித்து பூமி
    மகிழ்ந்திட
    மடைதிறந்து வா..!!


    மடை திறந்து வேண்டாம். பச்சை உடை தரித்து வேண்டாம்.... கவிஞரே!

    மடைதிறந்து வெள்ளம் பெருகுமன்றோ! பச்சைப்பட்டாடை வானுக்கெப்படி முடியும்? இங்கே இடித்தாலும் சற்றேனும் வரியமைப்பை மாற்றியிருக்கலாம். பச்சை தரித்த பூமியின் இச்சையை தீர்க்க வாவென்று கதறியிருக்கலாம்.

    ஆதவனை மறைக்கும் திறம் கார்மேகத்துக்குண்டு. ஒருவேளை பூமிக்கு கொடுக்கும் தானம் தன்மேல் பிளந்து நிற்கும் வானுக்குத் தெரியக்கூடாதென்ற உயர்வா? மழையின் முத்தம் எத்தனை வயிற்றின் சத்தத்தை நீக்கியிருக்கிறது!!

    அடுத்த நாளின்
    அந்திவரும் வேளை
    அதே திசைநோக்கி
    அனிச்சையாய் என்
    அழகுவிழிகள்..!!


    அழகு மோனைகள் ஆசைப்படுவது அதிகமென நினைக்கிறேன். நிதமும் கொடுத்து கொடுத்து வாங்கியவன் கையை முறித்துவிடப்போகிறான் குறைவில்லா இயற்கைக் கர்ணன்!. வானுக்கு நன்றி நாவால் சொல்லத்தகா.

    சாமரம் வீசி
    தென்றலனுப்பியது..!!


    தென்றல் என்பது இன்பக்காற்றல்ல.. மென் காற்றுமல்ல. தவறாக நாம் புரிந்துகொள்ளப்படுகிறோம். மாற்றிக் கொள்ளுங்கள். இத்தனை எழுதினீர்களே! மின்னலை மறந்துவிட்டீர்களே! அவள் மேக தம்பதியின் மகளல்லவா! மழை வேண்டுமுன் எத்தனை பேர் பசுமை காக்கிறார்கள் என்பதும் முக்கியம். மழை மனிதர்களின் வாழ்வில் ஓர் அங்கம், கவிஞர்களுக்குத் தாலாட்டு. உழவர்களுக்கு வாழ்க்கை. வேண்டாமென சொல்பவருமில்லை. அதிகம் வேண்டும் என்று சொல்பவருமில்லை.

    பயிறின் வாழ்வு.... அதனை கவிஞையாகிய நீங்கள் கவலைப்பட்ட விதம்..... கவலை வேண்டாம். மழை வரும்... சும்மா அல்ல. மழைக்கு மர'த்தீனி இடுங்கள். வளர்ந்து பொழியும்.

    வாழ்த்துக்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் தென்னவன்'s Avatar
    Join Date
    03 Oct 2007
    Location
    யாதும் ஊரே!!!
    Posts
    209
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    3
    Uploads
    0
    அச்த்தி விட்டீர் பூமகளே!!!
    உமது கவிக்கு செவி மடுத்து தான் இயற்கை அன்னையே மழையாக பொழிந்திருக்கிறாள்
    அருமை!!!
    வாழ்க்கை வாழ்வதற்கே!!!
    வாழ்ந்து காட்டுவோம்!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நீலப்பார்வையின் வீச்சில்
    பச்சைபார்வை அகப்பட்டு
    நாணப்பட்டு சிவக்காமல்
    சபலப்பட்டு சங்கமித்து
    மஞ்சளாகி,
    மஞ்சளாக்கும் காலங்கள்
    கறுப்புக்குள் புகுந்துவிட்டன..
    இல்லை... இல்லை...
    கட்டாயமாக புகுத்தபட்டன..

    இப்போதெல்லாம்
    சூரியக் கதிர்கள் மட்டும்
    கதவுகளைத் தட்ட
    பழம் பார்க்காமலே பழுத்து
    மஞ்சள், செம்மஞ்சளென
    மாற்றங்களைக் கண்டு
    நிறங்களை தொலைத்துவிட்டோம்.
    ..............

    மாற்றம் மட்டுமே மாறாது என்பதை
    தவறுகளுக்கு மட்டும்
    சரியாக அர்த்தபடுத்திக்கொண்டான் போலும்..
    **************************************************************
    என்னை பார்த்ததும்
    எனக்காக
    வானதேவதையிடம் வேண்டாதே.
    உனக்காக
    உனது கண்ணீருடன்
    பல துளிகளை கலந்து
    என்னை குளிப்பாட்டு

    ..
    வர்ணகலப்பைப் வடிவமும் வரிகளும் சொல்லுகின்றன அமரன். வர்ணங்களை இழைத்த இடைவெளி சற்றேனும் அதிகப்படுத்தியிருந்தால் தொடர்பற்ற நிலையை சரிசெய்திருக்கலாம் என்பது எனது எண்ணம். மாற்றம் மாறாததுதான்... மாற்றமும் மாறினால் அது மனிதனே அன்றி வேறென்ன?

    பயிரின் பார்வைக்கவி பலமாகவே இருக்கிறது. விண்ணீரைத் தவர்க்கக் காரணமென்ன புற்களே! கண்ணீரில் உப்பதிகம் என்பதைப் படித்துத் தெரிந்துகொள்ளவில்லையா?

    மேற்படி, கவிதை படிக்க சற்றேனும் சிரமம் தெரிகிறது. வர்ணம் தெளிவில்லை. கொஞ்சம் கருமை கலந்த வர்ணங்களை உபயோகப்படுத்துங்களேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இணைய நண்பன்'s Avatar
    Join Date
    10 Jun 2006
    Location
    ரோஜா கூட்டம்
    Posts
    1,147
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    8
    Uploads
    0
    பருவ காலங்களில் மழை பொழியும் அன்று.இன்று அது தலைகீழாக மாறிவிட்டது.இயற்கை மாறிவிட்ட போதிலும் ஓவியன் சொன்னது போல மனிதன் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை.பூமகள்! நீங்கள் அழகாக கவி வடித்திருக்கிறீர்கள்.இயற்கையை ஒரு செடியின் வேதனையாய் பிரமாதமாக கவி பாடி இருந்தீங்க.வாழ்த்துக்களுடன் 300 இ பணம் அன்பளிப்பு
    இணையத்தில் ஒரு தோழன்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    [QUOTE=ஓவியன்;281683இங்கெல்லாம் வருடத்தில் மழை பெய்யும் நாட்களை கைவிரல்களைக் கொண்டு எண்ணி விடலாம்...
    எண்ணையைக் கொடுத்த கடவுள் தண்ணீரைப் பறித்ததன் விளைவு இது. ஆனால் இங்கேம் சோலைகள், பூங்காக்கள், தென்றல் வீச வைக்கும் மரங்கள் என மனதை கொள்ளை கொள்ளும் இடங்கள் எத்தனை எத்தனையோ...[/QUOTE]

    நீங்கள் சொன்னது உண்மைதான் மனம் வைத்தால் பாலையிலே கூட வண்ண வண்ண மலர்களைப் பூக்கவைக்கலாம் தான்.ஆனால் அந்த வண்ணமலர்க*ளுக்கு வாசத்தை எப்படித் தருவது?உலகத்திலே இருக்கும் அத்துனை நிறங்களிலும் இங்கே ரோஜாக்கள் உண்டு...அனால் நம் ஊரிலே பூக்கும் ஒற்றை மல்லிகை முன்னே அவை அத்தனையும் தோற்றுத்தான் போக வேண்டும்.

    எங்கெங்கு காணிணும் பச்சையடா இங்கே!ஆனால் அவையெல்லாம் நம்மூரின் வேப்பமர குளிர்காற்றையும்,தண்ணிழலையும் தருமா?ஒரு போதும் மன*தோடு ஒட்டுவதில்லை இந்த மரங்கள்,செயற்கைத் தண்ணீர்,செயற்கை மண் இவற்றோடு ஊருக்கேற்ப மாறுவது போல செயற்கை மனமும் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
    Last edited by யவனிகா; 06-10-2007 at 12:50 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •