Results 1 to 10 of 10

Thread: கலம்பகம்

                  
   
   
 1. #1
  இளையவர்
  Join Date
  14 Sep 2007
  Posts
  52
  Post Thanks / Like
  iCash Credits
  5,965
  Downloads
  0
  Uploads
  0

  கலம்பகம்

  வணக்கத்தின் வரவுகளை வந்த நம் உறவுகளை
  பிணக்கமற்ற மனதுகளை
  இணைக்கவே எழுதுகின்றேன்.

  விந்தியத்தை விலக்கி வந்தோம்
  வீரத்தை விதைத்து நின்றோம்
  தென்னகத் திருமக்கள்
  நாம்
  திராவிட முதுமக்கள்!


  அர்த்த சாஸ்திரத்தின் அஸ்திவாரங்கள்
  அதில்
  மறைக்கப்பட்டன மனித நேயங்கள்

  வேதத்தின் பாதகத்தால் வெறுமையாய் வாழ்ந்திருந்தோம்!
  பாதக வேதத்தால் பலகாலம் பரிதவித்தோம்!
  பகுத்தறிவு பதிலடியில்
  பதுங்கிவிட்ட சாஸ்திரங்கள்
  பண்பறிவு பரிணாமம்
  நமக்கு
  பசியாற்றும் பலகாலம்!

  இமயத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
  இமயத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
  இன்று
  சமயக் கொடியேற்றி சதிவலையில் விழுந்துவிட்டோம்!

  வந்தவர்கள் வாசல் அது ராஜஸ்தான்!
  நம்
  சொந்தங்களின் சொர்க்கமது பலுசிஸ்தான்!

  அறிவியலும் அகவியலு மண்ணியலும் மருத்துவமும்
  இயல் இசை நாடகாய்
  இயற்றிட்டோம் நம் இலக்கியத்தில்!
  அய்வகை நிலங்களையும் கடல் ஓடும் கலங்களையும்
  அயல்தேச அரசுகளை அடக்கியதும் நாமேதான்!

  கணவாயில் வந்தவர்கள் கல்நெஞ்சக்காரர்கள்!
  நம்மை
  பிணவாயின் பற்களுக்கு
  பீடபலியாக்கி
  தஸ்யூக்களை தகர்த்துவிட்டோமென
  தம்பட்டம் தட்டினவர்தான்
  இன்று
  இடஒதுக்கீடு இருக்கவே கூடாதென
  இந்த
  இறுமாப்பு மனிதர்களின் இறுதிதீர்ப்பு!

  ஏற்க மாட்டோமென எந்தவொரு இந்தியனும்
  தீர்க்கமாய் முடிவெடுக்க திடமில்லை நம்மிடையே!

  இவர்களின் வேதங்களோ இதிகாசங்களோ
  மாசுபேற்ற தத்துவங்கள்
  மார்தட்டி மறுக்கின்றேன்!  Last edited by துளித்துளியா; 02-10-2007 at 09:38 AM.

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
  Join Date
  09 Mar 2007
  Posts
  1,073
  Post Thanks / Like
  iCash Credits
  20,930
  Downloads
  61
  Uploads
  0
  கவிதையின் கருத்து பெரிதாய் இருக்கும் போது..... எழுத்தின் வடிவம் இவ்வளவு பெரிதாய் தேவையில்லை நண்பரே.... படிப்பதற்கு சிறிது கடினமாக உள்ளது. எடிட் செய்து சிறிய உருவத்தில் எழுத்துக்களை மாற்றுங்கள்.
  அடிபட்டு துடிக்கும்
  நடைபாதையோர சிறுவனை
  கண்டும் காணாமல்
  அலறி துடித்து
  விரைகிறது ஆம்புலன்ஸ்....!
  உள்ளே உயிருக்குப்போராடும்
  பணக்கார நாய்...!
  (உண்மையிலே நாய்தாங்க)

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
  Join Date
  06 May 2007
  Location
  Tirupur
  Posts
  3,005
  Post Thanks / Like
  iCash Credits
  34,556
  Downloads
  12
  Uploads
  1
  Quote Originally Posted by thulithuliyaa View Post
  இமயத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
  ஈமய்டத்தில் கொடியேற்றி இறுமாந்திருந்தவர் நாம்!
  இன்று
  சமயக் கொடியேற்றி சதிவலையில் விழுந்துவிட்டோம்!

  வந்தவர்கள் வாசல் அது ராஜஸ்தான்!
  நம்
  சொந்தங்களின் சொர்க்கமது பலுசிஸ்தான்!
  இந்த வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தது.

  கவிதையின் கருத்து அழகு..
  Last edited by அமரன்; 02-10-2007 at 09:47 AM.
  " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
  தற்கொலை செய்து கொள். !
  தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
  இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

 4. #4
  இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
  Join Date
  31 Jul 2007
  Location
  நெதர்லாந்து
  Posts
  888
  Post Thanks / Like
  iCash Credits
  6,022
  Downloads
  0
  Uploads
  0
  இன்று
  சமயக் கொடியேற்றி சதிவலையில் விழுந்துவிட்டோம்!


  சமயங்கள் மனிதனை நல்வழிபடுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாடு
  ஆனால் அது இன்று மத வெறியாக மாறிவிட்டது எனக்கு கிருபாணந்த வாரியாரின் ஒரு
  பொன் மொழி நினைவில் வருகிறது உனக்கு ஒரு மதம் வேண்டும் ஆனால் மதவெறி கூடாது. நல்ல கரு தொடருங்கள்

 5. #5
  இளையவர்
  Join Date
  14 Sep 2007
  Posts
  52
  Post Thanks / Like
  iCash Credits
  5,965
  Downloads
  0
  Uploads
  0
  அவ்வளவுதானா விழிப்புற்றவர்களின் விதைப்புகள்
  பதைப்படைந்த பண்ணாடைகள்
  பாதையில் படுத்து மறித்து
  பத்து நாளாய் குத்தம் சொல்லுது!

  பொத்தாம் பொதுவான
  பாமரர்களோ
  இங்கே
  சத்தமில்லா
  நித்திரையில்
  நித்தமாகுது!நித்தமாகுது!
  Last edited by துளித்துளியா; 04-10-2007 at 02:15 PM.

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
  Join Date
  15 Dec 2006
  Location
  சென்னை
  Posts
  4,771
  Post Thanks / Like
  iCash Credits
  34,752
  Downloads
  26
  Uploads
  1
  நல்ல உணர்ச்சி கவிதை! தொடருங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்!
  Email: arpudam79@gmail.com
  Web: www.nisiyas.blogspot.com
  Web: www.shenisi.blogspot.com

  கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
  __________________________________________________

  என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

 7. #7
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,713
  Post Thanks / Like
  iCash Credits
  132,996
  Downloads
  47
  Uploads
  0
  இந்த கவிதையின் தலைப்பை தயவு செய்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இந்த கவிதையை நான் விமர்சிப்பதைவிடவும் மற்ற எவரும் விமர்சிப்பதைவிடவும் இதயம், லொள்ளுவாத்தியார் போன்ற அறிஞர்கள் விமர்சிப்பது நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். காரணம் அவர்களின் எழுத்துக்களில் உங்கள் கவிதையின் விரிவாக்கம் தென்படும்.

  ஒரு நாத்திகக் கவிதையாக என்னால் பார்க்கமுடிகிறது. கடவுள் மறுப்பை சொல்லாமல் சமய வேத மாசுக்களைத் திட்டுவதை மட்டுமே கவிதை காண்பிக்கிறது. திராவிடர்களின் வளர்ச்சிப் படத்தில் நாம் இன்று காணவிருப்பது அதளபாதாளத்தில் செல்லும் அம்புக்குறிகளையே! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே ஒரு மொழியை உருவாக்கி அதற்கு இலக்கண விதிகளை விதித்து மிகச் சரியாக ஆராய்ந்து உலாவிய ஒரு நாட்டில் நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அன்றைய பண்பாடு, நாகரீகம், ஆட்சி ஆகிய அனைத்து அம்சங்களிலும் சிறிதளவேனும் இன்று இருக்கிறோமா என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. வேதங்கள் என்ன சொல்கின்றன என்பது எனக்குத் தெரியாது எனினும் வேதத்தின் மேலே குற்றம் விதிப்பதில் அர்த்தமில்லை. வழி வழியாய் வந்த மனிதர்கள் பல்வேறாக பிரிந்து குற்றம் விதைத்தார்கள் என்பது மட்டுமே வரலாறு சொல்லும். இது நம் நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாட்டிலும் உண்டு. எனினும் நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்தான்..

  எழுத்து அளவை சற்றூ குறைத்துக் கொள்ளுங்கள். படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. (இம்முறை நானே செய்திருக்கிறேன்)

  சொல்லவேண்டிய கருத்து....
  அதை எடுத்துக்கொள்வது அவரவர் மனம் பொருத்து...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 8. #8
  இளையவர்
  Join Date
  14 Sep 2007
  Posts
  52
  Post Thanks / Like
  iCash Credits
  5,965
  Downloads
  0
  Uploads
  0
  திராவிடர்களின் வளர்ச்சிப்படங்களில் இன்று அதலபாதாளத்திற்கு செல்லும் அம்ம்புக்குற்கிள் என உங்கள் கண்ணோட்டத்தில் தெரிவது உங்கள் மனநிலைக்கேற்றவாறு தெரிகிறது.

  அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம்
  சுடச்சுட வெண்மை தரும் சங்கு
  உருக்க உருக்க மின்னும் தங்கம்
  கீழே போகபோக மேலே போவது எவ்வளவு தூரமோ!

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  11 Oct 2004
  Location
  தமிழ்மன்றம்
  Posts
  4,511
  Post Thanks / Like
  iCash Credits
  80,691
  Downloads
  104
  Uploads
  1
  Quote Originally Posted by thulithuliyaa View Post
  திராவிடர்களின் வளர்ச்சிப்படங்களில் இன்று அதலபாதாளத்திற்கு செல்லும் அம்ம்புக்குற்கிள் என உங்கள் கண்ணோட்டத்தில் தெரிவது உங்கள் மனநிலைக்கேற்றவாறு தெரிகிறது.

  அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம்
  சுடச்சுட வெண்மை தரும் சங்கு
  உருக்க உருக்க மின்னும் தங்கம்
  கீழே போகபோக மேலே போவது எவ்வளவு தூரமோ!
  உரைக்கும் உரை கழுத்தை அறுக்காத வரை...
  தெளிக்கும் சொல் மானம் உதைக்காத வரை
  செப்பும் கருத்து திணிக்கபடாத வரை
  நலம்... நலம்.. நலம்...

  தமிழ் கவிதைக்கு வாழ்த்துகள் நண்பரே...
  பென்ஸ்

  என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

 10. #10
  இளையவர்
  Join Date
  14 Sep 2007
  Posts
  52
  Post Thanks / Like
  iCash Credits
  5,965
  Downloads
  0
  Uploads
  0
  உரைகள் மனிதருக்கு மாலைகளாகும்
  ஆனால்
  உண்மை மறைக்கும் மனிதருக்கு
  கழுத்தை அறுக்கவே செய்யும்

  கருத்துக்களை கண்டவருக்கும் திணிப்பதில்லை!
  விருப்புற்றவர்களுக்கே இவை துருப்புகளாகும்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •