Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: நிறம் மாறிய உறவு - சிறுகதை

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,616
  Downloads
  86
  Uploads
  0

  நிறம் மாறிய உறவு - சிறுகதை

  சில்லென்ற குளிர்காற்று மேனியை சிலிர்க்கச் செய்ய கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மேகலா யாருடைய வரவையோ எதிர்பார்த்து. நேரங்கள் ஓடின இவள் மனதோட்டத்தோடு சேர்ந்து.நேரங்கள் கரைய கரைய இவளின் மனதில் இருந்த உற்சாகமும் கரைந்தோடியது.அருகில் இருந்த செடியில் மலர்ந்திருந்த பூவில் ஓன்றிரண்டாய் படர்ந்திருந்த பனித்துளிகளை எறும்புகள் நாடிச் செல்வதை விநோதமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். ஹலோ மேகலா என்ற குரலைக் கேட்டு பார்வையை குரல் வந்த திசையை நோக்கி நகர்த்தினாள்.அங்கே இவளின் நண்பி திவ்யா அன்று மலர்ந்த மலர் போல் இதழோரத்தில் புன்னகை ததும்ப நின்று கொண்டிருந்தாள்..

  தன் தோழியின் முகத்தில் கண்ட புன்னகை இவள் இதழ்களையும் தத்தெடுத்துக் கொண்டது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இரு தோழிகளும் தங்கள் அன்புகளைப் பரிமாறிக் கொண்டார்காள்.என்னடி மேகலா நாங்கள் சந்தித்து இன்றோடு ஒரு வருடம் இருக்கும் எப்படி இருக்கிறாய் உன்னை கடைசியாய் நான் சந்தித்த அந்த நாள் இன்றும் என் கண்முன் நிழாலடிய படியே இருக்கிறது. உன் கண்களின் ஓரத்தில் அன்று வடிந்த கண்ணீர்த்துளிகள் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்து செல்லாமல் சென்ற உன் கண்கள் இன்றும் என் மனதில் படிந்து விட்டது.
  சொல்லுடி எப்படி இருக்கிறாய்.ஹீம் என்று பெரு மூச்சு விட்டாள் மேகலா.

  எனக்கு என்னடி நான் நல்லா இருக்கிறன். புது இடம் புது வாழ்க்கை வேலை என்று என் நாட்களை அழகாய் அமைத்து வாழ்கின்றேன் உன் வாழ்க்கை எப்படி இருக்கு உன் திருமணத்திற்கு கூட என்னால் வரமுடியவில்லை மன்னிச்சுக்கோடி அந்த நேரம் என்னால் லீவு கூட எடுக்க முடியேலை வேலைக்கு சேர்ந்த புதிதில் தரமுடியாது என்று சொல்லிட்டினம்.

  அடிப்போடி அதைப் பற்றி என் கூடை நீ கதைக்க வேண்டாம் கலா எனக்கு என்று இருந்த ஒரு தோழி நீ தான் நீயே வரேலை என்றால் எனக்கு எப்படி இருக்கும் உன்மேல் பயங்கர கோவத்தோட வந்தன் ஆனால் உன் முகம் பார்த்ததும் கோபம் எல்லாம் போன இடம் கூடத் தெரியேலை..இப்படியே இருவரும் பழைய நினைவுகளோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ட்தனர் நேரம் போனதே தெரியாமல். மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா அவளின் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு என்னடி என்று மேகலா கேட்க என் வீட்டுக்காரர் வாறராம் என்னைக் கூட்டிட்டுப் போக நீ அவரைப் பார்த்தது இல்லை கொஞ்ச நேரத்திலை அவர் வந்திடுவார் பார்க்கலாம் என்று முகமலர்ச்சியோடு கூறிக்கொண்டிருந்தால் திவ்யா. அதைக் கேட்டதும் மேகலாவின் முகம் இருண்டது.

  அய்யோ மறந்திட்டன் திவ்யா எனக்கு அவசரமாய் ஒரு வேலை இருக்கு நான் சீக்கிரம் போக வேணும் பார் உன்னோடை கதைச்சுட்டு இருந்ததால் நேரம் போனதே தெரியேலை.இன்னும் 2 நாள் இங்கை தான இருப்பன் அந்த நேரம் உன் அவரை நான் சந்திக்கிறன் இப்ப போய் வரட்டுமா என்று கூறி விடை பெற்ற தயார் ஆனால் மேகலா. ஹீம் சரி நீ போயிற்று வா என்று மனமற்று வழியனுப்பி வைத்தால் திவ்யா..

  மேகலா வேகவேகமாய் நடந்து சென்று ஒரு வாடகை கார் பிடித்து அமர்ந்து கொண்டாள். வேகவேகமாய் பெருமூச்சு விட்டபடி கண்களை மூடிக்கொண்டாள்.கார் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல இவள் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

  மேகலா சிறு வயதுமுதல் அன்னை அன்பின்றி பணத்தில் பாதுகாப்பில் தோழியினதும் அவளது குடும்பத்தினரினதும் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள். இவளின் தனிமையைப் போக்க ஓரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தாள்.இவளின் அமைதி,வேலையில் செலுத்தும் கவனம்,மற்றவர்களோடு பழகும் விதம் இவைகள் அனைத்தும் அவளை தங்களில் ஒருவராக நினைக்க வைத்தது அங்கு வேலை செய்பவர்கள் மத்தியில்.இவளுக்கு தெரியாமல் இவளை ஒரு நிழல் தொடர்ந்தது. மண்ணுக்குள் இருக்கும் விதை என்றாவது செடியாய் வெளிப்படுவது போல் அந்த நிழல் நிஜம் கொண்டு இவள் முன் வந்து தன் காதலை வெளிப்படுத்த அவனின் அன்பில் தன் அன்பையும் பிணைத்து இருவரும் கண்ணியத்தோடு காதலித்து வந்தார்கள்.

  இப்படி இவர்கள் இருவரினதும் காதல் வளர்ந்து வர திவ்யாவிடம் இருந்து வந்த அழைப்பையேற்று மேகலா திவ்யாவின் இல்லம் சென்றாள். ஹேய் கலா வா வா உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன் என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் தனது ஆருயிர் நண்பியை. கலா எனக்கு திருமணம் நிச்சயம் ஆகிட்டு உனக்கு சொல்ல நான் எத்தனை தரம் டீ கோல் பண்றது வேலையிலை மூழிகிட்டியா நீ என்று சொல்லமாய் தோழியை கடிந்த படி தனது வருங்கால கணவனின் புகைப்படத்தை எடுத்து தோழியிடம் காட்டினாள். திவ்யா வெட்கத்தில் அறையை விட்டு ஓடிட அந்த புகைப்படத்தை கண்ட மேகலா கண்களில் கண்ணீர் அருவியாய் வடிந்தோடியது.யாரை உயிருக்கு உயிராய் நினைத்தாளோ யாரோடு தன் வாழ்க்கையென நினைத்தாளோ அவனே தனதுயிர் தோழியின் வருங்கால கணவர் என்பதையறிந்து உயிரோட்டமான அவளிதயம் துடிதுடித்தது வலியில்..

  அம்மா நீங்கள் சொன்ன இடம் வந்திட்டு டிரைவர் பலமுறை உரைத்துக் கூறிய பின் சுய நினைவுக்கு வந்தாள் மேகலா...

  முற்றும்...

  (இந்தக் கதைக்கு பொருத்தமான தலையங்கம் இடத் தெரியவில்லை நண்பர்களே உதவுங்கள் )
  Last edited by இனியவள்; 02-10-2007 at 10:33 AM.
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 2. #2
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  08 Apr 2007
  Posts
  469
  Post Thanks / Like
  iCash Credits
  6,001
  Downloads
  0
  Uploads
  0
  நல்ல கதை .வாழ்த்துக்கள்.

 3. #3
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  135,211
  Downloads
  161
  Uploads
  13
  நம்மூர் பேச்சுவழக்கில் கதை நகர்ந்த விதம் அருமை. பழைய நினைவுகள் வந்து சென்றன. (கதை சம்பந்தமாக அல்ல )

  காதலின் இன்னொரு உணர்வாடலை கதையாக உங்களது 3000 பதிவில் வார்த்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளது இனியவளே.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,668
  Downloads
  89
  Uploads
  1
  மேகத்தை காற்றுக் கலைப்பது போல் இவர்களின் உரையாடலை அலறிய அலைபேசி கலைத்திட கைத்தொலைபேசியை எடுத்து ஹலோ என்றால் திவ்யா
  மிகவும் ரசித்தேன் இந்த வர்ணிப்பு வசனத்தை...!! பாராட்டுகள் இனி..!!
  அருமையான எதார்த்தமான வசன நடை. நன்றாகவே மெருகேறியிருக்கிறது.
  தலைப்பு வைப்பதில் நானும் உமது நிலை தான். மன்றத்து வைரங்களிடம் கேட்போம்.
  என் தோழியை நினைவுறுத்தியது.(கதைப் படியல்ல..)
  வாழ்த்துகள் இனி..!! அசத்திபுட்டீங்க..!!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 5. #5
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  119,664
  Downloads
  4
  Uploads
  0
  இழப்புகளை வெளிக்காட்டி ஆற்றாமல் விட்டால்
  புரையோடிய புண்ணாய், ரணமாய், வடுவாய்.....

  ஆறாத காயம் கொண்ட மனதை
  ஆதரவாய் காலம் ஆற்றட்டும்.


  கதைக்குப் பாராட்டுகள் இனியவள்.
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 6. #6
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,646
  Downloads
  39
  Uploads
  0
  உண்மையிலேயே மிகச் சங்கடமான நிலைதான் நாயகிக்கு.ஒருபக்க்கம் உயிர்த்தோழி மறுபக்கம் தன் காதலன்.அவனை இனி ஒருபோதும் மனதில் சஞ்சலமில்லாமல் பார்க்கவே முடியாது.பரிதாபத்துக்குரியவள்தான் மேகலா என்றாலும்,இல்லையென்றாகிவிட்டதை நினைத்துக்கொண்டிராமல்...இனி தன் வாழ்க்கைப்யணத்தை இனிதே தொடரவேண்டும்.நல்லதொரு சிறுகதை இனியவள்.பாராட்டுக்கள்.
  ( கதைக்குத் தலைப்பு 'நிறம் மாறிய உறவு' என்றிருக்கலாமோ..)
  Last edited by சிவா.ஜி; 02-10-2007 at 05:36 AM.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,616
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by சாராகுமார் View Post
  நல்ல கதை .வாழ்த்துக்கள்.
  நன்றி சாரா அண்ணா
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,616
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by அன்புரசிகன் View Post
  நம்மூர் பேச்சுவழக்கில் கதை நகர்ந்த விதம் அருமை. பழைய நினைவுகள் வந்து சென்றன. (கதை சம்பந்தமாக அல்ல ) காதலின் இன்னொரு உணர்வாடலை கதையாக உங்களது 3000 பதிவில் வார்த்திருக்கிறீர்கள். நன்றாக உள்ளது இனியவளே.
  ஹீ ஹீ அன்பு நினைவுகள்
  வந்து வந்து போறது நல்லதுக்கு தான்

  நன்றி அன்பு
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,616
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by பூமகள் View Post

  மிகவும் ரசித்தேன் இந்த வர்ணிப்பு வசனத்தை...!! பாராட்டுகள் இனி..!!
  அருமையான எதார்த்தமான வசன நடை. நன்றாகவே மெருகேறியிருக்கிறது.
  தலைப்பு வைப்பதில் நானும் உமது நிலை தான். மன்றத்து வைரங்களிடம் கேட்போம்.
  என் தோழியை நினைவுறுத்தியது.(கதைப் படியல்ல..)
  வாழ்த்துகள் இனி..!! அசத்திபுட்டீங்க..!!
  நன்றி தோழியே

  ஹீம் ஒரே ஒரு தலைப்பு வந்து இருக்கு
  சிவாவிடம் இருந்து மற்றவர்களும்
  மண்டையை போட்டு பிச்சுகிட்டு இருக்கினம் போல
  எப்படியோ தலைப்புத் தேட போய் தலைமுடியை
  பிய்க்க போறினம் எல்லாரும்
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,616
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by இளசு View Post
  இழப்புகளை வெளிக்காட்டி ஆற்றாமல் விட்டால்
  புரையோடிய புண்ணாய், ரணமாய், வடுவாய்.....
  ஆறாத காயம் கொண்ட மனதை
  ஆதரவாய் காலம் ஆற்றட்டும்.
  கதைக்குப் பாராட்டுகள் இனியவள்.
  நன்றி இளசு அண்ணா
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 11. #11
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  69,668
  Downloads
  89
  Uploads
  1
  ஆமாம்..இனி...!!
  அ,அ,ஓ எல்லாரும் பாலை வனத்தில் கூட்டம் போட்டு தலைப்பு பற்றி மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளதாக தெரியவந்தது.
  நம்மிடம் சிக்கினால் அது தான் கதி இனி... இனி எல்லாருக்கும்
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 12. #12
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
  Join Date
  20 Feb 2007
  Location
  சென்னை
  Age
  45
  Posts
  1,456
  Post Thanks / Like
  iCash Credits
  35,972
  Downloads
  101
  Uploads
  0
  னிய கதையில் காவியம் படைத்துவிட்டாய்

  ழப்பு எவ்வளவு கொடியது என்று

  வ்வளவு அருமையாக சின்ன கதையில் கவிதை பாடிய

  னியவளே அருமையடா அருமை...
  Last edited by க.கமலக்கண்ணன்; 02-10-2007 at 09:03 AM.
  உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •