அவளைப் பாத்தவுடன்
உடம்பில் ஒரு விதமான
உந்துதல் எனக்குத் தெரிந்தது!!!
இது எப்படி சாத்தியமாகும்
நமக்கும் இவளுக்கு
ஏணி வைத்தாலும் எட்டாதே!!!
எனக்கு 26
அவளுக்கு 56
நடக்குமா
இது அடுக்குமா
கேள்விக்குறியுடன்!!!
இது சாத்தியமில்லை
நாம் தப்பு செய்கிறோம்
இதிலிருந்து வெளியேறு
என்று வாய் சொல்லியது!!!
தப்பு செய்யவில்லை
இதிலிருந்து
வெளியேறப்போவதில்லை
மனது சொல்லியது!!!
அனுதினமும்
போராட்டம்
மனதிலோ
பெரும் ஆட்டம்!!!
பணத்தினால்
வந்த காதலா
இருக்கவே முடியாது
காரணம்
என்னிடம்
பணம் அதிகம்
அவளை ஒப்பிடும்பொழுது!!!
பின் என்ன இது
நடக்கக்கூடாத
விஷயம்
நடக்கவிடக்கூடாது
வாய் சொல்லியது!!!
முடியவே முடியாது
இது
நடந்தே தீரும்
மனது சொல்லியது!!!
இறுதியில்
மனதே வென்றது!!!
துள்ளிகுதித்து சென்றேன்
அவளை நோக்கி!!!
நான்
உன்னுடன்
இறுதிவரை
வாழப்போகிறேன்
சம்மதமா என்றேன்!!!
பதில் சம்மதமென்றே
வரவேண்டும்
மனதில் ஜபித்தேன்
சம்மதம் என்றாள்!!!
சந்தோஷத்துடன்
அவளை
கை கொடுத்து
தூக்கினேன்!!!
அவளும் மெதுவாக எழுந்து
தன் கைத்தடியைப்
ஒரு கையில் பிடித்துக்கொண்டு
இன்னொரு கையை
என் தோள்பட்டையில்
வைத்துக்கொண்டு
நொண்டிக்கொண்டே
நடந்தாள்
ஒரு காலுடன்!!!
Bookmarks