மரம் மாதிரி
நிற்கிறாயே
என்றார்கள்!!!
சந்தோஷமாக
இருந்தது
என்னை
பாராட்டுகிறார்களே என்று!!!
காற்று பலமாக அடித்து
அதை சீண்டும்பொழுது
அது தன்னையே அழித்துக்கொள்ளும்
கவரிமான் ஜாதி
என்று மக்களுக்குத்
தெரிந்திருக்கிறதே என்று!!!
மரம் மாதிரி
நிற்கிறாயே
என்றார்கள்!!!
சந்தோஷமாக
இருந்தது
என்னை
பாராட்டுகிறார்களே என்று!!!
காற்று பலமாக அடித்து
அதை சீண்டும்பொழுது
அது தன்னையே அழித்துக்கொள்ளும்
கவரிமான் ஜாதி
என்று மக்களுக்குத்
தெரிந்திருக்கிறதே என்று!!!
காற்றுக் கயவன்
கட்டித் தழுவி
கற்புக்கு பங்கம் விளைவித்தால்
சாய்ந்து... தன்னுயிர் நீத்த மரம்..!
நல்ல கருப்பொருள் ஆரெண். இனிமேல் யாராவது "என்ன மரம்மாதிரி நிற்கிறாயே?" என்றாலும் கவலைப்படவேண்டுடாம் என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே ஆரென்..?
Last edited by ஜெயாஸ்தா; 01-10-2007 at 12:33 PM.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
இங்கே எனக்கு ஒரு சந்தேகம் காற்று வீசுகையில், அதனை கண்மூடித்தனமாக எதிர்த்து வேரோடு சாய்க்கப்படும் மரமா, இல்லை காற்றின் திசை வழி சாய்ந்து பின் நிமிர்ந்து நிற்கும் நாணல் சிறந்ததா...?
என்னை பொறுத்தவரை நம்முடைய எதிர்ப்பு, மற்றும் எதிர்க்கும் பண்பு நம் எதிரியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பலம் பொருந்தியவனிடம் மோதி வீழ்வதிலும் விலகி வாழ்வது நலமானது இல்லையா...???
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஆரென் அண்ணா மற்றூம் ஓவியன் இருவரின் கருத்துமே ஒத்துக்கொள்ளவேண்டிய கருத்துதான்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
கல்லால் அடித்தாலும் கனியைக்கொடுக்கும் மரமாக இருப்பதானால் அது மனிதனுக்குப் பெருமைதான்.காற்றுடன் போராடமுடியாமல் மண்ணில் சாயும் மரமாக வேண்டாம்,ஆணிவேர் அழுந்த மோதடா மோது என நிமிர்ந்து நிற்கும் மரமாக வேண்டும்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நண்பர்கள் ஆரென் ஓவியன் இருவருடைய கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டியவை....
அதே நேரம் நண்பர் சிவாஜியினுடைய கருத்துக்களும் ஒரு விதத்தில் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது....
− ராஜாஜி −
சுவாசத்தோடு பிணைந்தது தமிழ்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks