சுற்றுகின்ற பூமியிலே நாம்
நிரந்தரம் இல்லை
இதை சிந்திக்க மனிதனுக்கு
நேரமும் இல்லை
சத்தம் போட்டுயாரும் இங்கு
சண்டைபோடத்தேவை இல்லை
நாளை இந்த பூமியில்
நாம் யாரும் இல்லை
உயர்வு தாழ்வு இங்கு
தேவை இல்லை
நாளை நீ போகும் போது
உன் கூடவருவது இல்லை
சாதி மத பேதம் இங்கு
பெரும் தொல்லை
அதனால் தமிழனின் வாழ்வில்
முன்னேற்றம் இல்லை
கறுப்பு வெள்ளை என்று
இங்கு யாரும் இல்லை
இது மாயையின் தோற்றம்தான்
நீ புரிந்து கொள்வது இல்லை
இங்கு வாழ்வதுதான்
வாழ்க்கை இல்லை
இதைப் புரியாத மனிதன்
பூரணமனிதனும் இல்லை
பழய கிறுக்கல் இது
Bookmarks