என் தங்கை தொலை பேசியில்
என்னவளுடன் பேசியதை
ஒட்டுக்கேட்கும் பொருட்டு
காது கொடுத்தேன்!!
சினிமாவிற்கு போக
டிக்கெட் வாங்கவேண்டும்
செய்வதறியாமல் என் தங்கை!!!
நான் டிக்கெட் எடுக்கிறேன்
கூட நானும் வருவேன்!!!
வேண்டா வெருப்பாக
சம்மதித்தாள் தங்கை!!!
சினிமாவிற்கு போகிறேன் என் மங்கையுடன்
நினைப்பே இவ்வளவு சந்தோஷம்
அருகில் அமர்ந்து சினிமா பார்த்தால்!!!
சினிமாவிற்கு சென்றேன்
என் தங்கை மற்றும் என் மங்கையுடன்!!!
முதலில் என் தங்கை
வரிசையில் சென்றாள்
பின்னால் என் மங்கை
அதன் பின் நான்!!!
சந்தோஷமாக இருந்தது
என் மங்கை என்னருகில்!!!
பெரிய தலை என் தங்கையின் முன்னால்
இடம் மாற்றப்பட்டாள் என் மங்கை!!!
ஈடாவில்லை என் முகத்தில்
திரும்பிப் பார்த்தேன் என் மங்கையை
ஒரு அசட்டுச் சிரிப்புடன்
வாழ்த்துக்கள் அடுத்தமுறை என்றாள்!!!
சந்தோஷத்தில்
சிறகடித்துப் பறந்தேன்
இன்னொரு சந்தர்பம் இருக்கிற காரணத்தால்!!!
Bookmarks