Results 1 to 6 of 6

Thread: நினைவு பதிவுகள்.......

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    59,588
    Downloads
    12
    Uploads
    0

    Post நினைவு பதிவுகள்.......

    இது என் முதல் முயற்சி......
    தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்..........

    எத்தனை பதிவுகள் ..
    தேவையெனில்.......
    புத்தகமாய் பதிக்கலாம்...

    ஆனால்,என் மனப்பதிவில்...
    நினைவுகள் நினைக்க......
    உன் பதிவுகள் எத்தனையோ......
    என் மனம் நினைக்கும்.......
    அந்த சந்தோஷ.....
    தருணங்களை மட்டுமே ....
    நீடிக்க ஆசை படும்.......
    ஓர் சாதாரண ஜீவனாய்......

    என் மன குளத்தில்.......
    பாசியாய் படிந்த உன்னை....
    நீக்கிவிட பலரும் முயற்சிக்க......
    உன் நினைவு பாசிகள் அவர்களை ......
    வழுக்கி விழ செய்து......
    தோற்கடித்தாய்.........

    என்றும் என் அருகில் நீக்கம் அற ......
    நிறைந்து இருந்த நீ........
    என்னை தூரமாய் விட்டு சென்றஆய்......

    உன் நினைவு பாசிகளால்.......
    உன் அருகில் இருப்பதாய் நினைக்கும்........
    இந்த ஜீவனை.......

    நீ இல்லா உலகம் தேவை இல்லை........
    என் தேவை ஆசை அறிந்த நீ......
    இல்லாமல் இந்த ஜீவன்......

    என் தோழியாய்........
    என்னை காதலித்த.......
    ஒர் உண்மையான ஜீவனே......

    உன்னை பிரிந்த நாளில் இருந்து.......
    இந்த ஜீவனும் வாழுகிறது.........
    அன்றும் இன்றும் என்றும்.....
    வாழ துடிக்கும் .........

    உன் மகனாய்..................

    உங்களில் ஒருவனாய்.......
    என்றும் அன்புடன்..........
    உங்கள் நண்பன்...........

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    97,266
    Downloads
    97
    Uploads
    2
    உங்கள் முதல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் முதலில் நண்பரே...
    என் மன குளத்தில்.......
    பாசியாய் படிந்த உன்னை....
    நீக்கிவிட பலரும் முயற்சிக்க......
    உன் நினைவு பாசிகள் அவர்களை ......
    வழுக்கி விழ செய்து......
    தோற்கடித்தாய்.........
    ஆகா நேர்த்தியான, அருமையான வரிகள் நண்பரே...
    இந்த வார்த்தையாடல்களில் லயித்தேன் பலமுறை...
    நன்றிகளும் பாராட்டுக்களும்....


    தோழியாய்..
    காதலியாய்....
    தாயாய்....
    நீங்கள் ஏங்கி பெண்மைக்காக வடித்த கவிதை அருமை நண்பரே, தொடர்ந்து உங்கள் கவிதைகளை இங்கே தவழ விடுங்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    41
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    66,865
    Downloads
    100
    Uploads
    0
    மனம்... குளம்.
    பாசியாய் நீ படிந்திருக்கும்வரை...
    மனம்... புத்தகம்.
    பதிவுகளாய் நீ நினைவிலிருக்கும்வரை...

    அனைத்து உறவுகளுக்கும் இவை பொருந்தும்.
    அழகாக கவியுரைத்த வாசன் அவர்களுக்கு (சரிதானே உங்கள் பெயர்) வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
    கன்னிக்கவிதையில் கன்னியைப்பற்றி வடித்துள்ளீர்கள்... விசேட வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்...

    கன்னிமுயற்சிக்காக 200 iCash.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    40
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    309,445
    Downloads
    151
    Uploads
    9
    பாசி படந்த குளத்தில்
    வழுக்கி விழுதல் சகஜம்.
    உலகில் வழுக்காமல் இருக்க
    இழுக்கும் பாசியாக அம்மா..

    வேராய் தண்டாய் கிளையாய்
    இலையாய் தளிராய் கிள்ளைக்கு
    இருந்தவள் விழுதாய் விழுந்தாள்....


    பாராட்டுகள் சீனிவாசன்.

    அம்மாவின் ஆரம்பித்து
    அனைத்தும் அடைவதுபோல்
    அன்னைக்கவியிலிருந்து
    அடுக்கடுக்காக அள்ளித்தாங்க..
    Last edited by அமரன்; 27-09-2007 at 01:08 PM.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    20,910
    Downloads
    61
    Uploads
    0
    நம் மனப்பதிவில் தாயின் பதிப்பே பிரதானமாயிருக்கும் என்பதை பறைசாற்றிய கவி தந்தமைக்கு நன்றி வாசன்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #6
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    6,002
    Downloads
    0
    Uploads
    0
    கன்னிப்படைப்பே மிகவும் நன்றாக உள்ளது தொடரட்டும் உங்கள் கவிதை மலர்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •