Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: விமான இறக்கையில் சிறுவன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    விமான இறக்கையில் சிறுவன்

    விமான இறக்கையின் மீது அமர்ந்து 1,300 கி.மீ. பயணம் செய்த சிறுவன்


    மாஸ்கோ, செப்.26: விமான இறக்கையின் மீது மைனஸ்-50 டிகிரி வெப்ப நிலையில் ஒரு சிறுவன் அமர்ந்து 1,300 கி.மீ. தூரம் பயணம் செய்த அதிசயம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

    அந்த 15 வயது சிறுவனின் பெயர் ஆண்டிரி. இவனது தந்தை குடிபழக்கம் உடையவர். தாயார் தந்தைக்கு ஆதரவாக இருந்தார். அதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஆண்ட்ரி அருகில் உள்ள தனது தாத்தா ஊருக்கு சென்றான். அங்கு இருந்து ஒரு வாகனத்தில் ஏறி 220 கி.மீ. தூரத்தில் இருந்த பெர்ம் நகருக்குச் சென்றான்.
    அங்குள்ள விமான நிலையத்துக்குச் சென்றான். அங்கு மாஸ்கோ புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை மீது யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த போயிங்-737 விமானம் மாஸ்கோ புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் கடுமையான குளிர் வாட்டி எடுத்தது. தண்ணீர் பனிக் கட்டியாக உறையும் வெப்ப நிலை. மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

    காற்றின் வேகத்தையும் குளிரின் கடுமையையும் ஆண்டரி தாங்கிக் கொண்டு விமானத்தின் இறக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் 1,300 கி.மீ. தூரம் பறந்த பிறகு அந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரை இறங்கியது. 2 மணி நேர பயணத்தில் விமானத்தின் இறக்கையோடு ஆண்ட்ரி ஒட்டிக் கொண்டான்.

    விமானம் நின்ற பிறகுதான் அதன் இறக்கை மீது சிறுவன் சுருண்டு கிடப்பதை விமான நிலைய ஊழியர்கள் கவனித்தனர். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்து இருந்தான். அவனை கீழே இறக்கினர். அவன் உடல் ஐஸ் கட்டியாக உறைந்து போய் இருந்தது. அவனது சட்டை, ஷக்களை கூட உடலில் இருந்து பிரிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒட்டி இருந்தது.

    உடலில் பனிக்கடி காயங்கள் இருந்தன. உடனடியாக அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறும்போது, மைனஸ்-50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 2 மணி நேரம் தாக்குப் பிடித்து உயிரோடு இருப்பது மருத்துவ உலகில் அதிசயம் என்றார்.

    அவனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் மாஸ்கோ வந்தனர். சிறுவன் ஆண்டரி யாருக்கும் தெரியாமல் எப்படி விமானத்தின் இறக்கை மீது ஏறி அமர்ந்தான், மைனஸ்-50 டிகிரி குளிர் நிலையை எப்படி தாங்கினான் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

    − தினகரன்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்பப்பா ஆச்சர்யம் மட்டுமல்ல அதிசயமாகவும் இருக்கிறது.-50 டிகிரி என்பது மிகக்கடுமையான குளிர்.அதுவுமில்லாமல் 900 கி.மீ.வேகத்தில் பறந்த விமானத்தின் மீதென்றால்.....மிக மிக ஆச்சர்யம்தான்.
    சில வருடங்களுக்குமுன் ஒரு செய்தித்தாளில் போட்டிருந்த படத்தைப்பார்த்தே அதிசயித்தேன்.மைனஸில் இருந்த கடுங்குளிரில் மேல் சட்டையில்லாமல் ஒரு ரஷ்யன் வீதியில் படுத்திருப்பதை படமாகப் போட்டிருந்தார்கள்.அவனாவது வோட்காவின் துணையோடு தாக்குப்பிடித்தானென்றாலும்...இந்த சிறுவன் எப்படித்தான் தாங்கினானோ...
    தகவலுக்கு நன்றி அறிஞரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    பாதுகாப்பு ஓட்டை

    சிறுவன் பிழைத்தது விந்தையிலும் விந்தை.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Superman இன் அவதாரமோ..?
    இளங்கன்று பயமறியாது என்று அறியாமலா சொல்லிவைத்தார்கள்..?
    நல்லவேளை.., உயிராபத்து இல்லாமல் சென்றடைந்த வரையில் கொடுத்துவைத்த சிறுவன்...
    விமானநிலையப் பாதுகாப்பு, மற்றும் புறப்படும் முன்னரான முற்காப்புக்கள் 100% சரியாக இருக்கவேண்டும் என்பதற்கு இதை ஒரு அனுபவமாகக் கொள்ள வேண்டும்.

    தகவலுக்கு நன்றி அறிஞரே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மைனஸில் இருந்த கடுங்குளிரில் மேல் சட்டையில்லாமல் ஒரு ரஷ்யன் வீதியில் படுத்திருப்பதை படமாகப் போட்டிருந்தார்கள்.அவனாவது வோட்காவின் துணையோடு தாக்குப்பிடித்தானென்றாலும்...இந்த சிறுவன் எப்படித்தான் தாங்கினானோ...
    தகவலுக்கு நன்றி அறிஞரே.
    சிவா.ஜி...
    புலம் பெயர்ந்து ஐரோப்பா நோக்கி வரும்பொழுது, அதே மைனஸ் குளிரால், இரு உறவுகள் உயிரைத் தொலைத்தன, கண்முன்னே...
    அவர்களுக்கு அர்ப்பணித்த கவிதை கூட மன்றத்தில் எழுதி வைத்துள்ளேன். அப்படியான பயணத்தின் கடுமைகளை "பசுமை நாடிய பயணங்கள்" என்ற திரியில் எழுதத் தொடங்கினேன். நேரப் பிரச்சினையால் அதனை தொடர முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்தும் எழுதி முடிப்பேன்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நம்பமுடியாத அதிசயங்கள் சில சமயம் நடைபெறும், அது இப்பொழுது நடந்திருக்கிறது.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அதிசயமான செய்தி, ஆனால் அந்த சிறுவன் அந்தக் குளிரிலே எப்படித் தாக்குப் பிடித்திருப்பான்...?
    எவ்வளவு சிரமத்தை அவன் தாங்கியிருப்பான்....?
    ஆனாலும் கீழே எங்கும் விழாமல் சிறுவன் காப்பாற்றப் பட்டமை சந்தோசமே....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    செய்தியைப் படிக்கும் போது ஒரு பக்கம் வியப்பு ஏற்ப்பட்டாலும், இன்னொரு பக்கம் அவனை பொறுப்புடன் கவனிக்காத அவனுடைய தந்தை, பாதுகாப்பு குறைபாடுஉள்ள விமானநிலைய ஊழியர்கள் மீது வெறுப்புதான் வருகிறது.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    எனக்கு இந்த செய்தியை படித்ததும் ஆச்சரியம் தான்... மேலும் தகவல் திரட்டமுடியுமா எனப்பார்ப்போம்.. படம் கிடைத்தால் போடுங்கள்..

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ஆதாரமாக ரஷ்ய நாட்டு செய்திதாள்

    http://www.en.rian.ru/russia/20070924/80694850.html

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஆச்சரியமாக விசயமாக உள்ளது 1300கீ.மீ எப்படிதான் அந்த சிறுவன் தாங்கினானோ? அதிசயம்தான்...
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by சூரியன் View Post
    ஆச்சரியமாக விசயமாக உள்ளது 1300கீ.மீ எப்படிதான் அந்த சிறுவன் தாங்கினானோ? அதிசயம்தான்...
    உங்களை வேணா ஏத்திவிட்டுருவோமா....

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •