Results 1 to 9 of 9

Thread: 'நீதானே மனிதன்...!

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0

    'நீதானே மனிதன்...!

    குளிர்ந்த காற்று நனைந்த உடலை நடுங்கச் செய்ய
    மலர்ந்த நிலவு சற்று இருள்விரட்ட...
    எங்கோ சில கடல் படறவைகள் சத்தமிட
    மிதந்த மரத்துண்டில் உயிருக்குபோரடியபடி நான்...!

    கப்பல் கவிழ்ந்து மூன்று நாட்களாகிவிட்டது
    எத்தனை பேர் பிழைத்தனரோ தெரியவில்லை...
    ஆனால் என்னுடன் துணைக்கு யாருமில்லை
    சுற்றிலும் தண்ணீர்.... தாகம் தீர்க்கவில்லை...!


    கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தேசம்தான்....
    பற்றியிருந்த மரத்துண்டு என்னை
    மூழ்கவிடாமல் சாகவிடாமல் சாதித்துக்கொண்டிருந்தது....
    ஏதேனும் அதிசயம் நிகழாதா....?

    ஏக்கப் பெருமூச்சு...திடீரென கடல்கொந்தளிக்க
    என் துக்கம் தாளமல் வானம் அழத்தொடங்கியது...!
    கைகள் மரத்திருக்க...
    மரத்துண்டு நழுவிவிட்டால் என்ன செய்ய?
    மரத்தின் துண்டின் மேலேறி
    அமர்ந்து கிடைத்த கயிறின் உதவியால்
    உடலை மரத்துண்டோடு இருக்கிக்கொண்டேன்...!

    இன்றைய இளைஞன் போல் இலக்கில்லாத பயணம்...
    எப்போது முடியும்....நம்பிக்கை தீ மெல்ல அணைகிறது....!

    சூரியன் மெல்ல உதிக்கிறது...
    இன்றோடு நான்காவதுநாள்...!
    பசிமயக்கம் மெல்ல கண்களை மூட...
    எவ்வளவு நேரம் தெரியவில்லை...
    அருகில் ஏதோவொரு அரவம் கேட்க
    கண்திறந்தால்.... எதிரே ஒரு காகம்...!

    அதன் கண்களிலும் பசி தெரிந்தது...
    பறக்க முடியாமல் அதுவும் சோர்ந்திருந்தது...
    எங்கே விரட்டிடுவேனோ என்று
    என்னை பயத்துடன் பார்த்தது...!

    எனக்கோ ஒரு பேச்சுத்துணை
    கிடைத்த சந்தோசம்...!
    இன்னும் காகம் என்னைநெருங்கியது...!
    சில மணித்துளிகளில் இருவரும்
    நெருங்கிவிட்டோம்...!

    என் உயிரோடு கலந்த மனைவி
    என் உணர்வான குழந்ததைகள்
    பசமான பந்தகங்ள்...நேசமானநண்பர்கள்..
    இவர்களை இனி காண்பேனா..?
    புலம்பினேன் காகத்திடம்....
    புரிந்ததா தெரியவில்லை...!

    தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மிதந்துவர
    அருகில் வந்ததும் கைகளால் பிடித்து பிரித்தேன்...!
    ஏதோவொரு கப்பலிலிருந்து ஏறிந்த சாப்பாட்டின்மிச்சம்...!

    ஆசையோட வேகமாய் பிசைந்து உண்ண எத்தனித்தேன்...
    அருகினில் காகமோ என்னைப் பசியுடன் நோக்க...
    யோசிக்காமல் அதனை நோக்கி நீட்டினேன்...!
    காகம் பாதி தின்றது. மீதி நான் தின்றேன்...
    இருவரின் பசியும் இறந்து போனது...!

    தூரத்தில் ஏதோவோரு கப்பல்...
    கடவுளின் கருணை என்னை நோக்கிவந்தது...
    அது மீட்புக் கப்பல்...!

    உடன் இருந்த காக்கை என்னை
    நோக்கிக் கேட்டது 'நீதானே மனிதன்...!'
    கேட்ட காகம் எங்கோ எழும்பிப் பறக்க....
    நிம்மதியுடன் நான் கப்பலை நோக்கி....
    மிதக்கத் தொடங்கினேன்...!
    Last edited by ஜெயாஸ்தா; 26-09-2007 at 01:50 PM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இது கவிதையில் மலர்ந்த கதை.மனிதம் சொல்லும் மகத்தான கரு.

    இன்றைய இளைஞன் போல் இலக்கில்லாத பயணம்...
    அருமையான வரி.
    கவிதைத்தனம் குறைவாக இருந்தாலும்,கனத்த கருவால் நிறைவான உருவை அடைந்திருக்கிறது.மனிதன்....மனிதனாய் வாழவேண்டும்...அதற்கு முதலில் மனிதம் கற்க வேண்டும்.நல்ல கருத்துள்ள கவிதை ஜே.எம். வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    யதார்த்தத்தை படம்பிடித்துக் காட்டும் ஒரு கவிதை...

    கடவுளின் கருணை போல்.. இன்றைய இளைஞனுக்கும் ஒரு நாள் சரியான இலக்கு கிட்டிவிடும். பணத்தின் பின்னே பேயாய் அலையும் மனிதனுக்கு ஒரு நாள் தன் மூச்சு நின்று விடும் நினைவு வரும்.. அது வரை... பேயாய் திரிவான்...

    பாதி இறந்து விட்ட தருவாயிலும் பகிர்ந்து உண்ணுவது நேயத்தின் உச்சம். உலகில் எத்தனை சதவிகிதம் பேர் நேயமின்றி இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல செய்தி இந்த கவிதை..
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மனிதனை மிதித்து உயர நினைக்கும் மனிதனுக்கு மனிதம் விதைக்கும் கவிதை..பகிர்ந்துண்னும் காக்கை நீதான் மனிதன் என்று கேட்பது சம்மட்டி அடி. எள்ளானாலும் ஏழாகப் பகிர்ந்துண்ண வேண்டும் என்ற பழமொழியை நினைவூட்டிய கவிதை. பாராட்டுகள்...தொடருங்கள் ஜெம்ஸ்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கவிதைத்தனம் குறைவாக இருந்தாலும்,கனத்த கருவால் நிறைவான உருவை அடைந்திருக்கிறது.
    உண்மைதான் சிவாஜி. இதை எழுதும் போது கவிதையாக எழுதுவதா அல்லது கதையாக எழுதுவதான என்ற குழப்பமேற்றப்பட்டதால்தான் இது 'கவிதை மாதிரி' ஆகிவிட்டது. அடுத்த பதிப்புகளில் இந்தக் குறையை களைய முயற்சிக்கிறேன்.

    Quote Originally Posted by மீனாகுமார் View Post
    பாதி இறந்து விட்ட தருவாயிலும் பகிர்ந்து உண்ணுவது நேயத்தின் உச்சம். உலகில் எத்தனை சதவிகிதம் பேர் நேயமின்றி இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நல்ல செய்தி இந்த கவிதை..
    அதுதான் கவிதையின் உச்சமாய் நான் நினைக்கிறேன். சோமாலியா போன்ற வறுமை நிறைந்த மக்களை காணும்போது, இதயம் வலிக்கிறது. இந்தியாவிலும் கூட இன்னும் ஒரு வேளை உணவு கிடைக்காத மக்களை காணும் போது விடுதலை கிடைத்து என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது. இந்நிலை மாற முயற்சிப்போம்.

    Quote Originally Posted by அமரன் View Post
    பகிர்ந்துண்னும் காக்கை நீதான் மனிதன் என்று கேட்பது சம்மட்டி அடி. எள்ளானாலும் ஏழாகப் பகிர்ந்துண்ண வேண்டும் என்ற பழமொழியை நினைவூட்டிய கவிதை. பாராட்டுகள்...தொடருங்கள் ஜெம்ஸ்.
    நன்றி அமரன். கவிதையின் கருத்தை தெளிவாய் எடுத்துரைத்தமைக்கு நன்றி
    Last edited by ஜெயாஸ்தா; 27-09-2007 at 09:35 AM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கவிதை கொண்ட கரு சிறப்பு...
    கவிதை, அந்த சூழலுக்குள் இட்டுச்செல்கின்றது, வாசிப்போரை...

    மிதவையாக மனிதம்...
    நாம் அதில் பிணைந்துகொண்டால்,
    மிருகங்கள் கூட
    வாய்திறந்து வாழ்த்தும்...

    பாராட்டுக்கள் ஜே.எம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கவிதை முயற்ச்சியில் ஒரு அற்புதமான அனுபவம்.
    அதில் சில மனித நேய பாடங்கள், மரனத்தின் அருகில் இருக்கும் ஒரு ஜீவனின் சிந்தனைகள் அருமை ஜெ எம்

    Quote Originally Posted by ஜே.எம் View Post
    அருகில் ஏதோவொரு அரவம் கேட்க
    கண்திறந்தால்.... எதிரே ஒரு காகம்...!
    நடுகடலில் இருக்கும் போது பறவை தென்பட்டால், நிலம் அருகில் இருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்து தான் பறவைகள் பறந்து வர முடியும். நம்பிக்கையும் அருகில் தான் இருகிறது.

    ஆகையால் காக்கைக்கு உனவு தர வேண்டியதில்லை. அது நம்மை காப்பாற்ற நம் நம்பிக்கையை தளராமல் இருக்க வந்த இரைவனாக நினைக்கலாம். அந்த இரைவனுக்கு படைத்த பிரசாதமாகவே கருதலாம்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    நடுகடலில் இருக்கும் போது பறவை தென்பட்டால், நிலம் அருகில் இருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்து தான் பறவைகள் பறந்து வர முடியும். நம்பிக்கையும் அருகில் தான் இருகிறது.
    கூர்ந்து ஆழ்ந்திருக்கின்றீர்கள்...
    பாராட்டுக்கள் வாத்தியாரே...
    அதிலும், நம்பிக்கை அருகில் இருப்பதை, சுட்டிக்காட்டும் நிகழ்வுகளை,
    புத்தி கண்டுகொள்ளாவிட்டால், மீள முடியாது.
    அப்படித்தானே வாத்தியார்...
    நன்றாகவே, உண்மையாகவே உள்ளது உங்கள் பார்வை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    மிதவையாக மனிதம்...
    நாம் அதில் பிணைந்துகொண்டால்,
    மிருகங்கள் கூட
    வாய்திறந்து வாழ்த்தும்...
    நான் பல வரிகளில் சொன்னதை நீங்கள் சிலவரிகளில் சொல்லிவிட்டீர்களே... நன்றி அக்னி.

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    நடுகடலில் இருக்கும் போது பறவை தென்பட்டால், நிலம் அருகில் இருகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அங்கிருந்து தான் பறவைகள் பறந்து வர முடியும். நம்பிக்கையும் அருகில் தான் இருகிறது.

    ஆகையால் காக்கைக்கு உனவு தர வேண்டியதில்லை. அது நம்மை காப்பாற்ற நம் நம்பிக்கையை தளராமல் இருக்க வந்த இரைவனாக நினைக்கலாம். அந்த இரைவனுக்கு படைத்த பிரசாதமாகவே கருதலாம்.


    வாத்தியாரிடமிருந்து யாரும் தப்பவே முடியாதோ...! ரொம்ப நுணுக்கமாக கவிதையை கவனித்திருக்கிறீர்கள். எழுதும் போதே நானும் இதை யோசித்தேன். யாரேனும் இது மாதிரி கேட்டால் அந்தக் காகம் ஏதோ ஒருகப்பலில் வந்திருக்கக்கூடும் என்று பாதிலளித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தங்கள் பதில் அதை விட சிறப்பானதாக உள்ளது. மீண்டும் ஒருமுறை நன்றி.


    பொதுவாக நம் மன்றத்தில் கவிதைகள் படைக்கும்போது, அந்தக்கவிதைகளை விட மன்றத்தாரின் விமர்ச்சனங்களே கவிதைக்கு இன்னும் பலத்தைக் கூட்டுகிறது.
    Last edited by ஜெயாஸ்தா; 28-09-2007 at 02:13 AM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •