Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: காத்திருக்கிறாள்-சிறுகதை

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0

  காத்திருக்கிறாள்-சிறுகதை

  அதிகாலை நேரம் சூரியன் தனது கதிர்களை விரித்து இருண்ட வானத்திற்கு ஒளிபரப்பிக்கொண்டிருந்தான்.துவண்டிருந்த செடிகள் எல்லாம் தலை நிமிர்ந்தன. நிசப்தமாய் இருந்த உலகம் ஆர்ப்பாரிக்கத் தொடங்கின கீச்சிடும் குருவிகள்,மெட்டுக்கள் பூக்காளாய் மாறி பூக்கள் கனிகளாய் மாற்றம் பெற்றுக்கொண்டிருந்த அழகிய காலை நேரம்.உலகமே விழித்தெழ வீசிய தென்றல் காற்றில் சிலிப்புற்று இன்னும் போர்வையை இறுக்கிப் பிடித்தவாறு கண்கள் திறக்க மனமற்று இன்னும் உறக்கத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தது ஒரு ஜீவன்.

  துறுதுறுவென்ற கண்கள் எப்பொழுதும் எதாவது செய்து கொண்டே இருக்கும் அவளது கரங்கள் ஓய்வின்றி ஓடோடி திரியும் கால்கள் சூரியன் விழிக்கும் முன்னே விழித்திடும் விழிகள் இன்று விடியலைப் பார்க்க மனமின்றி மூடிய போர்வைக்குள் மூடிய விழிகளாய் உறக்கத்தில் கழித்தது காலைப் பொழுதை."காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்" என வானொலியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாடலை காதுகள் செவிமடுக்க அவள் மனமோ கடந்த கால நினைவுகளை நோக்கி படையெடுத்தது...

  ரேகா தாய் தந்தையற்று சிறுவயது முதல் ஓர் ஆசிரமத்தில் படித்து வளர்ந்து இன்று ஒரு நல்ல நிலையில் இருப்பவள். சிறுவயது முதலே அன்பிற்காய் ஏங்கிய அவளின் உள்ளத்திலே குடி கொண்டான் ராகுல்.
  ஒரே இடத்தில் வேலை செய்யும் இருவருக்கும் நட்பு மலர்ந்தது. தான் சிறுவயது முதலே ஏங்கித் தவித்த அன்பு அவனிடத்தில் கிடைக்க நட்பாக இருந்த அவர்கள் உறவு காதலாக உருப்பெற்றது...

  அவனுடைய அன்பில் இந்த உலகையே மறந்து வானில் சிறகடித்துப் பறந்தால் ரேகா.. இந்த பூலோகத்தில் அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மறைந்து போயினர் மாயமாய்.சிறு கற்கள் கூட சிற்பமாய் சிறு கோடுகள் கூட அழகிய ஓவியமாய் உருப்பெற்றது அவள் கண்களுக்கு காதல் தந்த போதையில் வேலையை மறந்தாள் உலகை மறந்தாள் ராகுலே உலமென நினைத்தாள் சிறுவயது முதல் தான் அனுபவித்து வந்த வேதனைகளை இவன் அன்பில் கரைத்தாள்..

  ராகுல் வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியவனாய் அந்த நற்செய்தியை இவளுக்கு தெரிவிக்க காற்றை விட வேகமாய் பறந்தான் இருசக்கர வண்டியில் (மோட்டர் சைக்கிள்) இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!

  முற்றும்

  (என் முதல் கதை என்றோ உருப்பெற்ற கரு இன்று கதையாகி)
  நன்றி
  இனியவள்
  Last edited by அமரன்; 27-09-2007 at 08:02 AM.
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  163,846
  Downloads
  69
  Uploads
  1
  கவிதை பக்கமிருந்து கதை பக்கம் வந்துவிட்டீர்களா..? வாழ்த்துக்கள்!

  "திருட்டுபோன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்"− இப்படிதான் நிறைய காயப்பட்ட உள்ளங்கள் எதார்த்தத்தை ஏற்க மறுத்து ஏங்கி தவிக்கிறது ரேகாவை போல தினம்தினம்... எதிர்பார்ப்புகள் தானே வாழ்வில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.... இருந்தும் இந்த மனிதமனம் ஏனோ அதை ஏற்க மறுக்கிறது...

  ஆரம்பம் அழகாய் இருந்தது... முடிவு கனமாயிருக்கிறது...!
  Last edited by சுகந்தப்ரீதன்; 26-09-2007 at 04:26 AM.
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0
  நன்றி சுகந்

  ஒரு சிறு முயற்ச்சி செய்து பார்த்தேன்

  வாழ்ந்த்துக்கு நன்றி தோழரே
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,495
  Downloads
  151
  Uploads
  9
  இனியவளும் கதைகளத்தில் குதித்தாச்சா...ரசித்துச் சுவைக்கும் அமைதியான சூழ்நிலை இல்லை..கருத்து அப்புறம். இப்போது முதல் கதைக்கு வாழ்த்துகள்..

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,401
  Downloads
  10
  Uploads
  0
  இனியவளே முதல் முதலில் கதை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.. நல்ல முயற்ச்சி. முயற்ச்சிக்கு மட்டுமே பாராட்டுகள். கதைக்கு அல்ல.

  நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

  கவிதையில் இருக்கும் பாராகளை ஒட்டி கதை போல காட்டி விட்டீர்களா? அதுக்கு கூட ஒரு திறமை வேனும். சமாஸ்
  விடாமல் முயற்ச்சியுங்கள்
  Last edited by lolluvathiyar; 26-09-2007 at 12:53 PM.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  13,918
  Downloads
  37
  Uploads
  0
  முத்தான முதல் கதையை அழகாக கொடுத்துள்ளீர்கள்...
  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அன்புத்தோழிக்கு....


  என்ன முடிவு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு....


  நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
  உங்களுக்கும் அப்படி தோணிச்சா....எனக்கும் கொஞ்சம் அதே..
  ஆனால் இயற்கையை நிறைய ரசித்துள்ளதாக தெரியுது..
  துறுதுறுவென்ற கண்கள் ஓடோடி திரியும் கால்கள் சூரியன் விழிக்கும் முன்னே விழித்திடும் விழிகள் என்று ஒவ்வொன்றையும் நல்லா வர்ணனையாகத்தான் கொடுத்தது போல இருக்கு....

  இவனை விட வேகமாய் எமன் இவனைத் தொடர்வதை அறியாமல் அவன் வேகமே அவன் வாழ்வை முடித்திட அவன் மரணித்ததை ஏற்க மறுத்த இவள் இதயம் காத்துக்கிடக்கிறது அவன் வருகைக்காய்...!
  வார்த்தையை கோர்வையாய் கொடுப்பது என்றால் இதுதானோ..
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  இனியவளும் கதைகளத்தில் குதித்தாச்சா...ரசித்துச் சுவைக்கும் அமைதியான சூழ்நிலை இல்லை..கருத்து அப்புறம். இப்போது முதல் கதைக்கு வாழ்த்துகள்..
  நன்றி அமர்
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0
  Quote Originally Posted by lolluvathiyar View Post
  நீங்கள் இந்த கதை எழுதும் போது இன்னும் கவிதை உனர்விலிருன்து கதை உனர்வுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
  கவிதையில் இருக்கும் பாராகளை ஒட்டி கதை போல காட்டி விட்டீர்களா? அதுக்கு கூட ஒரு திறமை வேனும். சமாஸ்
  விடாமல் முயற்ச்சியுங்கள்
  நன்றி வாத்தியாரே

  ஊக்கப்படுத்தும் கருத்துக்கள்
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0
  [QUOTE=மலர்;276569]முத்தான முதல் கதையை அழகாக கொடுத்துள்ளீர்கள்...
  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அன்புத்தோழிக்கு....

  QUOTE]

  நன்றி தோழியே
  உங்கள் ஆக்கப்பூர்வனமா கருத்துக்கும்
  வாழ்த்துக்கும்
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,495
  Downloads
  151
  Uploads
  9
  கவித்துவமான நடையில் ஒரு கதை. படித்து,பார்த்துப் பழக்கப்பட்ட கதை என்றாலும் சுவாரசியமாகவே உள்ளது. சோகமான முடிவு மன பாரத்தை ஏற்படுத்தலாம். இருந்தாலும் எனது மனப்பாங்குக்கு ஒத்தவில்லை. மனதில் இதமாக ஒட்டவுமில்லை. இருக்கும் வரை மகிழ்வாக வாழ்ந்து, மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியமானது..எமது ஒவ்வொரு அடியையும் எதார்த்தம் புரிந்து எடுத்துவைக்க வேண்டும். பாராட்டுகள் இனியவள்.

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
  Join Date
  01 Mar 2006
  Location
  கொழும்பு
  Posts
  3,557
  Post Thanks / Like
  iCash Credits
  12,131
  Downloads
  60
  Uploads
  24
  கதை எழுதும் ஆற்றல் உங்களுக்கு உள்ளது... குறிப்பாக வர்ணனை செய்யும் ஆற்றல் உள்ளது..

  கதை எழுதும் போது.. புதிதாக எழுதுங்கள்... மற்றவர்கள் எதிர்பாராதவாறு திருப்பங்கள் கொடுங்கள், அதைவிட ஒரு சம்பவத்தை பின்னிப் பின்னி எழுதுங்கள்... வாசிப்பவர் மனதில் ஒரு உணர்வுக் கிளறலை உருவாக்குங்கள்...

  இவற்றில் சில உங்கள் கதையில் உள்ளன.. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்!!!

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  50,646
  Downloads
  86
  Uploads
  0
  நன்றி மயூ
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •