Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: தேடல்...!!

  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    தேடல்...!!

    காற்றின் சுவாசத்தில்
    மூச்சிரைக்க
    சுகந்த தென்றலின்
    சொச்சம் தேடும்
    நாசிகள் இரண்டும்..!!

    பிம்பத்தின் விளிம்புகளில்
    இடுக்கியிருந்து
    வம்பு செய்யும் காட்சியின்
    மிச்சம் தேடும்
    கண்கள் இரண்டும்..!!

    ஒலியலையின் ஓரத்தில்
    வழிந்து வரும்
    சங்கீத சங்கதிகளில்
    நிசப்தம் தேடும்
    செவிகள் இரண்டும்...!!

    எண்ணங்களின் வழியில்
    எடுத்து வரும் வார்த்தைகளில்
    வண்ணவரிகள் தேடும்
    வடிவிதழ்கள் இரண்டும்...!!

    யௌவன தேசத்தின்
    சந்துகளில் சிருங்காரிக்க
    மோகன யோகம் தேடும்
    இதயங்கள் இரண்டும்...!!

    சிக்காத கணங்களை
    சிறைபிடிக்க எண்ணி
    அகன்ற வெளியில்
    காத்து நின்று தேடும்
    கைகள் இரண்டும்..!!

    பாலைவன பரப்பில்
    பூக்களின் களம் காண
    பாதைகள் தேடும்
    பாதங்கள் இரண்டும்..!!
    Last edited by பூமகள்; 24-09-2007 at 12:22 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    எண்ணங்களின் வழியில்
    எடுத்து வரும் வார்த்தைகளில்
    வண்ணவரிகள் தேடும்
    வடிவிதழ்கள் இரண்டும்...!!

    யௌவன தேசத்தின்
    சந்துகளில் சிருங்காரிக்க
    மோகன யோகம் தேடும்
    இதயங்கள் இரண்டும்...!!
    இதழ்களும் இதயங்களும் இரண்டானதன் அர்த்தம் என்னவோ?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    அழகான தமிழ் வர்ணஜாலம் செய்யும் வரிகள் செதுக்கி தமிழ் சிற்பக்கவி படைத்தீர் வாழ்த்துக்கள் பூமகள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    இதழ்களும் இதயங்களும் இரண்டானதன் அர்த்தம் என்னவோ?

    இதழ் இரண்டின்றி மொழி ஏது?
    இதயங்கள் இரண்டின்றி யௌவனத்தில் மோகனம் ஏது??

    நன்றிகள் அக்னியாரே...!
    Last edited by பூமகள்; 24-09-2007 at 08:54 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் இலக்கியரே..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    இதழ் இரண்டின்றி மொழி ஏது?
    இதயங்கள் இரண்டின்றி யௌவனத்தில் மோகனம் ஏது??
    ஓகோ அப்படியா..?
    கடன்வாங்கப்பட்ட இதயமா..? பரிசாக சேர்ந்த இதயமா..?
    ஆனால் கவிதை முற்றுப்பெறாதது போல ஒரு தோற்றம்.
    எனது விளக்கமின்மையோ...
    மன்ற புயல்கள் வந்து சென்றபின் வருகின்றேன் மைய(ல்)ம் கொள்ள...

    ஆனால், வரிகளின் கோர்வை சந்தம் அழகு...
    பாராட்டுக்கள்...
    Last edited by அக்னி; 24-09-2007 at 09:00 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    கடன்வாங்கப்பட்ட இதயமா..? பரிசாக சேர்ந்த இதயமா..?
    ஆனால் கவிதை முற்றுப்பெறாதது போல ஒரு தோற்றம்.
    அது காதலால் இணைந்த இதயங்கள்..!!
    மனிதரின் தேடல்கள் என்று தான் முற்றுப் பெற்றிருக்கிறது அக்னியாரே...??

    ஆனால், வரிகளின் கோர்வை சந்தம் அழகு...
    பாராட்டுக்கள்...
    மிக்க நன்றிகள் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாவ்... ரொம்ப அழகா இருக்கு....

    வரிகள் எல்லாம் அப்படியே காற்றில் மிதப்பதுபோல் இருக்கிறது பூமகள்..

    முந்தைய கவிதைகளில் இப்படி ஒரு வசீகர வார்த்தைகளை காணவில்லையே.. தொடருங்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    வாவ்... ரொம்ப அழகா இருக்கு....

    வரிகள் எல்லாம் அப்படியே காற்றில் மிதப்பதுபோல் இருக்கிறது பூமகள்..
    மிக்க நன்றிகள் அன்புத் தோழர் ஷீ-நிசி.
    முந்தைய கவிதைகளில் இப்படி ஒரு வசீகர வார்த்தைகளை காணவில்லையே.. தொடருங்கள்!
    அப்போ முந்தைய கவிதைகள் எல்லாம் நல்லாயில்லையா??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    மிக்க நன்றிகள் அன்புத் தோழர் ஷீ-நிசி.

    அப்போ முந்தைய கவிதைகள் எல்லாம் நல்லாயில்லையா??
    அடேங்கப்பா.. எங்கடா சந்து கிடைக்கும்னு மெளஸ வச்சிகிட்டு தேடிட்டு இருப்பீங்களோ!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    அடேங்கப்பா.. எங்கடா சந்து கிடைக்கும்னு மெளஸ வச்சிகிட்டு தேடிட்டு இருப்பீங்களோ!
    பின்னே.. இப்படிச் சொன்னா எப்படி புரிந்து கொள்வதாம் தோழரே..??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"

    பூமகள் படைப்புகள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by பூமகள் View Post
    பின்னே.. இப்படிச் சொன்னா எப்படி புரிந்து கொள்வதாம் தோழரே..??
    உங்கள் வளர்ச்சி என்று புரிந்து கொள்ளலாம்...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •